Featured Posts

அல்லாஹ்வின் அத்தாட்சிகள்

தேன் உற்பத்தியாகும் முறை
இந்த உலகத்தில் படைக்கப்பட்ட எல்லாமே அல்லாஹ்வின் அத்தாட்சிகளாகும். அவைகளை அடிக்கடி மனிதன் சிந்தித்து பார்க்க வேண்டும், அதன் மூலம் இன்னும் அல்லாஹ்வின் மீதுள்ள நம்பிக்கை அதிகரிக்க வேண்டும் என்பதற்காக பல விதமான அத்தாட்சிகளை உலகில் அல்லாஹ் அமைத்துள்ளான்.

நபிமார்களின் உள்ளங்களை அமைதிப் படுத்துவதற்காக முஃஜிஸாத்துகள் என்ற பெயரில் ஒவ்வொரு நபிக்கும் ஒவ்வொரு விதமான அத்தாட்சிகளை அல்லாஹ் கொடுத்தான்.

நபிமார்களை ஏற்றுக் கொண்ட தோழர்களின் உள்ளங்களை அமைதிப் படுத்துவதற்காக அந்தந்த நபிமார்கள் மூலம் சில அற்புதங்களை நிகழ்த்திக் காட்டி, தோழர்களின் உள்ளங்களை அல்லாஹ் சந்தோசப் படுத்தினான்.

நபியவர்களுக்குப் பின்னால் வரக் கூடிய மக்களுக்காக குர்ஆனையும். ஹதீஸையும். மாபெரும் அத்தாட்சிகளாக அல்லாஹ் வழங்கியுள்ளான்.அந்த குர்னிலும், ஹதீஸிலும் ஈமானை அதிகரிக்கச் செய்யக் கூடிய பல அத்தாட்சிகளை அல்லாஹ் நமது சிந்தனைக்கு தந்துள்ளான்.

குறிப்பாக குர்ஆனில் சொல்லப்பட்ட விஞ்ஞானம் சம்பந்தமான அத்தாட்களின் மூலம் முஃமின்களின் உள்ளங்கள் அமைதி பெறுவதோடு, மாற்று மத சகோதர்களுக்கு அல்லாஹ்வை உண்மைப் படுத்தக் கூடிய நிறைய சான்றுகளை நாம் அவர்களுக்கு எடுத்துக் காட்டலாம்.

அந்த வரிசையில் முதலாவதாக தேனைப் பற்றியும், தேன் உற்ப்பத்தியாகும் விதத்தைப்பற்றியும் நாம் கவனிப்போம்.

பின் வரும் குர்ஆன் வசனத்தை சற்று ஆழமாக உங்கள் சிந்தனைக்கு எடுத்துக் கொள்ளுங்கள்.

உம் இறைவன் தேனீக்கு அதன் உள்ளுணர்வை அளித்தான். “நீ மலைகளிலும், மரங்களிலும், உயர்ந்த கட்டடங்களிலும் கூடுகளை அமைத்துக்கொள் (என்றும்),

“பின், நீ எல்லாவிதமான கனி(களின் மலர்களிலிருந்தும் உணவருந்தி உன் இறைவன் (காட்டித் தரும்) எளிதான வழிகளில் (உன் கூட்டுக்குள்) ஒடுங்கிச் செல்” (என்றும் உள்ளுணர்ச்சி உண்டாக்கினான்). அதன் வயிற்றிலிருந்து பலவித நிறங்களையுடைய ஒரு பானம் (தேன்) வெளியாகிறது; அதில் மனிதர்களுக்கு (பிணி தீர்க்க வல்ல) சிகிச்சை உண்டு; நிச்சயமாக இதிலும் சிந்தித்துணரும் மக்களுக்கு ஓர் அத்தாட்சி இருக்கிறது. (16 -69)

முதலாவது தேனை உற்ப்பத்தி செய்வதற்காக தேனீக்கள் தெரிவு செய்யும் இடங்களை அல்லாஹ் நினைவுப்படுத்துகிறான்.மலைகள், மரங்கள், கட்டிடங்கள். உண்மையில் தேனீக்கள் மேற்ச் சொல்லப்பட்ட இடங்களை தான் கூடு கட்டுவதற்கு தெரிவு செய்கின்றன.

இரண்டாவது அந்த தேனீக்கள் எதன் மூலம் தேனை உற்பத்தி செய்கின்றன என்பதை அல்லாஹ் நமது சிந்தனைக்கு கொண்டு வருகிறான். அதாவது கனிகளிலிருந்து சாப்பிடு என்பதன் மூலம் தேனுடைய ஆரம்பம் கனி வர்க்கங்கள், பூக்கள் மூலம் உண்டாக்படுகின்றன். அவைகளிலுள்ள குளுக்கோஸ் போன்ற இனிப்பு பதார்த்தங்களை தேனீக்கள் ஊறிஞ்சி எடுத்து முதலில் தன் வயிற்றில் சேமித்து வைக்கின்றன.

முன்றாவது தேனீக்களின் வயிறுகளிலிருந்து தேன் வெளிவருகின்றன என்ற மாபெரும் விஞ்ஞான உண்மையை முன்னரே அல்லாஹ் அன்றே குர்ஆனின் மூலமாக உறுதிப்படுத்தி விட்டான். அல்ஹம்து லில்லாஹ்!

நான்காவது இதில் மனிதர்களுக்கு நிவாரணம் உள்ளது என்று அல்லாஹ் அன்றே உறுதிப் படுத்திவிட்டான்.

ஐந்தாவது சிந்திக்கக் கூடிய மக்களுக்கு இதில் படிப்பினை உள்ளது என்று அல்லாஹ் நினைவுப் படுத்துகிறான்.

இந்த வசனத்தை பொருத்த, வரை ஒரு முஃமின் இந்த வசனத்தைப் படித்தவுடன் அவனது உள்ளத்தில் ஈமான் என்கின்ற இறையச்சம் அதிகரித்துச் செல்லும். ஏன் என்றால் விஞ்ஞானம் இன்று உண்மைப் படுத்தியுள்ள மாபெரும் உண்மையை அல்லாஹ் அன்றே குர்ஆனில் சொல்லி விட்டான் என்ற சந்தோசம்!

அடுத்தது மாற்று மத சகோதர, சகோதரிகளுக்கு இந்த வசனத்தை தெளிவுப் படுத்துவதன் மூலம் குர்ஆனை உண்மைப்படுத்த முடியும். மேலும் குர்ஆனை வழங்கிய அல்லாஹ்வை உறுதிப்படுத்த முடியும்.! அதாவது தேன் எப்படி உற்பத்தியாகிறது என்பதை இன்று தான் விஞ்ஞான உலகம் தெளிவுப்படுத்தியுள்ளது.ஆனால் எங்களது குர்ஆனோ அன்றே தெளிவுப் படுத்தி விட்டது என்பதை எடுத்து காட்டி நமது மார்க்கம் உண்மையானது என்ற விளக்கத்தை கூறலாம். அல்லாஹ் நாடினால் இந்த வசனத்தை விளங்கப் படுத்திய உங்கள் மூலம் ஒருவருக்கு நேர்வழி கொடுத்து விடலாம். முயற்ச்சி செய்யுங்கள். அல்லாஹ் உங்களுக்கு அந்த ஆற்றலை தந்தருள்வானாக!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *