Featured Posts

பைபிள் இறைவனால் அருளப்பட்டதா?

Article (Article in Malayalam by: M.M. AKBAR)

ஒரு ஒரு இறைதூதர் அல்லது தீர்க்கதரிசியின் வாழ்வுடன் தொடர்புடைய மூன்று அடிப்படை விஷயங்களை இஸ்லாம் அங்கீகரிக்கிறது.

  1. அவருக்கு ஏற்பட்ட வெளிப்பாடுகளின் தொகுப்பு
  2. அவர் மொழிந்தவையும் அவரின் செயல்பாடுகளும்
  3. அவரைக் குறித்து அவரது சமகால அல்லது பிற்கால மக்கள் பதிவு செய்த குறிப்புகள். 

இதில் முதலில் கூறப்பட்டது மட்டுமே வேதம் என்ற அந்தஸ்தை அடைகிறது. வேத நூல்களில் இறைதூதருக்கு உண்டாகிய வெளிப்பாடுகள் மட்டுமே இடம் பெறும்.

இத்தகைய வெளிப்பாடுகளின் ஒவ்வொரு சொல்லும் முழுக்க முழுக்க இறைவனால் அருளப்பட்டதாக இருக்கும். அதில் கூறப்பட்ட கருத்துக்கள் முற்றிலும் தவறுகளுக்கு அப்பாற்பட்டதாக இருக்கும். இறைதூதர் மொழிபவை முற்றிலும் இறை வழிகாட்டுதல்களுக்கு உட்பட்டது தான் என்றிருப்பினும் இறைதூதரின் மொழிகளும் வேத வரிகளும் நடையில் மாறுபட்டதாக இருக்கும். இறைதூதரின் மொழிகளைப் பொறுத்தவரை அதில் கருத்துக்களுக்கே முக்கியத்துவம் வழங்கப்படும். இறைதூதரைக் குறித்து பிறர் எழுதியவற்றைப் பொறுத்த வரையில் அது ஆய்வுக்கு உட்படுத்தப் பட்டு சரியானவை என்று அறிந்த பின்னரே உண்மை என்று கொள்ளப் படும்.

மேற்குறிப்பிடப் பட்டவற்றில் குர்ஆன் முதல் தரத்திலும் ஹதீஸ்கள் இரண்டாம் தரத்திலும் சரித்திர புத்தகங்கள் மூன்றாம் தரத்திலும் வந்து விடுகிறது.

இறை வசனங்கள் தீர்க்கதரிசிகளின் கூற்றுகள் வரலாறுகள் ஆகிய மூன்று அடிப்படையில் இருந்து பல்வேறு மனிதர்களால் தொகுக்கப்பட்ட புத்தகங்களின் தொகுப்பே பைபிள். பைபிளின் முதல் அத்தியாயமான ஆதியாகமத்தில் இந்த மூன்று அடிப்படைகளையும் கொண்ட வசனங்களை உதாரணத்திற்குக் கொள்வோம்.

1. வெளிப்பாடுகள்: கர்த்தர் ஆபிராமை நோக்கி, நீ உன் தேசத்தையும், உன் இனத்தையும், உன் தகப்பனுடைய வீட்டையும் விட்டுப் புறப்பட்டு, நான் உனக்குக் காண்பிக்கும் தேசத்துக்குப் போ. . நான் உன்னைப் பெரிய ஜாதியாக்கி, உன்னை ஆசீர்வதித்து, உன் பேரைப் பெருமைப்படுத்துவேன்; நீ ஆசீர்வாதமாய் இருப்பாய்” (ஆதியாகமம்: 12: 1)

2. தீர்க்கதரிசிகளின் கூற்றுகள்: “அவன் எகிப்துக்குச் சமீபமாய் வந்தபோது, தன் மனைவி சாராயைப் பார்த்து, நீ பார்வைக்கு அழகுள்ள ஸ்திரீ என்று அறிவேன். எகிப்தியர் உன்னைக் காணும்போது, இவள் அவனுடைய மனைவி என்று சொல்லி, என்னைக் கொன்றுபோட்டு, உன்னை உயிரோடே வைப்பார்கள்”. (ஆதியாகமம் 12: 11-13)

3. தொகுப்பாளர்களின் கூற்றுகள்: ஆபிராமும், அவன் மனைவியும், அவனுக்கு உண்டான யாவும், அவனுடனே லோத்தும், எகிப்தை விட்டு, தென்திசையில் வந்தார்கள்”. (ஆதியாகமம் 12: 11-13)

உண்மையில் பைபிள் என்பது இறைவசனங்களையும் தீர்க்கதரிசிகளின் கூற்றுக்களையும் ஆதாரமாகக் கொண்டு பிற்காலத்தில் வந்த பல்வேறு ஆசிரியர்களால் தொகுக்கப்பட்ட ஒரு நூலாகும். குர்ஆனின் அடிப்படையில் வேதம் என்பது இறைதூதர்களுக்கு இறைவன் அருளிய வெளிப்பாடுகளை மட்டும் கொண்டதாகும். எனவே பைபிளை ஒரு இறைவேதம் என்று சொல்வதை விட பல புத்தகங்களின் தொகுப்பு என்று சொல்வதே சரியாகும்.

இன்ஷா அல்லாஹ் தொடரும்.

6 comments

  1. i want a message for bible

  2. நன்றி.. என்னதொரு அருமையான விளக்கம்.
    நீங்களே Answer எழுதி விட்டு Question எங்களிடம் வினவுகிறீர்கள்.. .
    நான் குரான் பற்றி தவறு சொல்ல வரவில்லை.. because அது என்னுடைய வேலை அல்ல. பைபிள் ல் கூறப்பட்டுள்ள விஷயங்கள் ஏறக்குறைய 40 நபர்களுக்கு மேல் எழுதப்பட்டவை. ஆனால் அது முரண்பாடு அற்றதாக காணப்படுகிறது.. ஏனனில் அது பரிசுத்த ஆவியின் எவுதனினால் பல்வேறு காலங்களில் அருளப்பட்டது.. இறை வசனம் என்பது வரலாற்று சம்பத்தப்பட்டது தான். இறைவசனம் மனிதனுக்கு அருளப்படும் போது
    அது வரலாற்று சம்பந்தம் படத்தான் வேண்டும். இல்லை எனில் அதற்க்கான ஆதாரத்தினை நீங்கள் கேட்டாலும் கேட்கலாம்.

    சென்னை வானொலி மையம் கூறுவது போல் நடக்கலாம் அல்லது நடக்காமலும் இருக்கலாம். அப்படி அல்ல பைபிள் கூறுவது நடந்தது , நடக்கின்றது… , நடக்கபோவது இதுதான் பைபிள் நிலை..

  3. பைபிள் இறை வேதமா என்ற தலைப்பில் பல விவாதங்கள் நடைபெற்றுள்ளது ஆனால் இது வரை கிறித்துவ உலகம் எந்த கேள்விகளுக்கும் பதில் அளிக்காமலேயே, முஸ்லிம்களை மதமாற்றம் செய்யும் முயற்சியிலே இஸ்லாத்தை பற்றியும் முஹம்மது நபி (ஸல்) அவர்களை பற்றியும் அவதூறுகளை பரப்பி முஸ்லிம்களை வழி கெடுக்க பல வழிகளிலே திட்டம் தீட்டுவதில் முனைப்போடு இருக்கிறார்கள்.

    கீழே உள்ள வீடியோவை பாருங்கள்

    http://www.youtube.com/watch?v=dY9jaxUkWT4&feature=PlayList&p=9618F5B3F1D1C105&index=0&playnext=1

  4. Tamil Selvan Bin Jonas

    your article is not good.

  5. NALLA KARPANAI….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *