Featured Posts

பீ.ஜே கடந்து வந்த பாதை முடிவு ⁞ இஸ்லாமா? தடுமாற்றமா? நாஸ்தீகமா?

பீ.ஜே. கடந்து வந்த பாதை முடிவு

இஸ்லாமா? தடுமாற்றமா? நாஸ்தீகமா?

அண்ணன் என்று தொண்டர்களால் அன்பாக அழைக்கப்படும் பீ.ஜே.(P.ஜைனுல்ஆபிதீன்) என்பவர் கூத்தாநல்லூர் மதரஸாவில் பாடம் பயின்று “உலவி” என்ற மவ்லவி பட்டம் பெற்றவர். அங்கு அவர் இமாம் ஷாஃபி (ரஹ்) அவர்களின் பெயரில் எழுதப்பட்ட பல முரண்பாடுகள் உள்ள மத்ஹபு சட்டங்களையும் அத்தோடு சேர்த்து அன்று மக்கள் மத்தியில் பிரபல்யமாக இருந்து “கத்தம் ஃபாத்திஹா” “மவ்லிதுகளையும்” சேர்த்தே படித்து வெளியேறினார்.

பீ.ஜே.யும் P.அலாவுதீனின் அவர்களும்:
பீ.ஜே.-யின் உடன் பிறந்த சகோதரர் (அண்ணன்) P. அலாவுதீனின் அன்னாரின் அறிவுத்தாக்கம் இவர் மீது தாக்கம் செலுத்தியது என்றால் மிகையல்ல. பீ.ஜே உடைய அண்ணன் அலாவுதீன் (ரஹ்) அவர்கள் சிறந்த பேச்சாளராகவும், அரபு மொழியில் சிறந்த தேர்வைப் பெற்றவராகவும் விளங்கி உள்ளார் என்பது செய்யிது குதுபின் “ஜுஸ்வு அம்ம” கான அவரது மொழிமாற்றம் சொல்கின்றது

மளிகை கடை வியாபாரி:
பீ.ஜே. பள்ளித் தொழிலை விட்டும் ஓய்வாகி மலிகைக் கடை வியாபாரியாக சொற்ப காலம் இருந்ததோடு கறுப்புச் சட்டைப் பகுத்தறிவு இயக்கத்தோடும் (கடவுள் மறுப்பு கொள்கையை கொண்ட  திக) தொடர்பு வைத்துள்ளனர் என்பது அவரது உரைகள் மூலம் விளங்கக் கிடைத்தது.

திருச்சி அபூ அப்தில்லாஹ்வோடு
அபூ அப்தில்லாஹ் என்பவரோடு இணைந்து அந்நஜாத் பத்திரிக்கை வெளியிட்டு பணியில் இருந்து பின்னர் அவரோடு ஏற்பட்ட கருத்து முரண்பாடு காரணமாக விலகி ஜாக்கில் இணைந்து தஃவா செய்தார். அத்தோடு அல்-ஜன்னத் என்ற மாத இதழின் ஆசிரியர் பணியும் செய்த வந்தார். (அப்போது அல்ஜன்னத்தில் எழுதியவைகளும், அவர் கொண்டியிருந்த கொள்கைகளுக்கும் நேர் எதிரான சிந்தனையில் தான் தற்போது உள்ளார் என்பது கூடுதல் செய்தி) இவரோடு இருந்த காலப்பகுதியில் மத்ஹபு நூல்களில் காணப்படும் முரண்பாடுகளை விமர்சனம் செய்த அபூ அப்தில்லாஹ் அவர்களிடம், தான் (பீ.ஜே.) படித்த மத்ஹபுக்காக வாதாடினார் என என்னிடம் அபூ அப்தில்லாஹ் அவர்கள் ஒரு சந்தர்ப்பத்தில் மதுரையில் வைத்து கூறினார்கள். ( الله شاهد ) இவர் மிகவும் சிரமப்பட்டுத்தான் ஃபஜ்ர் தொழுகைக்கு எழுந்து செல்வாராம்.

பகுத்தறிவு சிந்தனை எப்படி இவரிடம் வருகின்றது?
இவர் ஜாக் என்ற அமைப்பில் அல்-ஜன்னத் பத்திரிக்கைக்கு பொறுப்பாக இருந்தார். அந்த அமைப்பில் இக்பால் மதனி, அப்துல் ஜலீல் மதனி, செய்யித் முஹம்மத் மதனி, கமாலுத்தீன் மதனி போன்ற நல்ல ஆலிம்கள் இருந்தனர். இவர்களிடம் இருந்து தனது அரபு மொழிப் புலமையை வளர்ப்பதில் கவனம் செலுத்திய அளவு ஹதீஸ் கலையைப்படிப்பதிலோ அல்லது இமாம்களின் சேவைகள் பற்றி படிப்பதிலோ தனது கவனத்தை செலுத்தாது அல்-ஜன்னத் பத்திரிக்கை மற்றும் பேச்சில் மட்டும் கவனம் செலுத்தியதோடு ஷேக் நாஸிருத்தீன் அல்பானி (ரஹ்) அவர்களின் ஹதீஸ் ஆய்வில் காணப்பட்ட முடிவில் அதிகம் தங்கி நின்றதோடு இமாம் இப்னு தைமிய்யாவின் ஃபதாவாவிலும் தங்கி நின்று காரியமாற்றினார் என்பது புலப்படுகின்றது.

ரஷீத் ரிழாவின் சிந்தனை மாறியது:
ரஷீத் ரிழாவின் தஃப்ஸீர் மனாரில் தங்கி சறுக்கலைத் தொடக்குகின்றார். இவர் இப்னு இமாம் ஹஸ்ம் மற்றும் ரஷீத் ரிழா போன்ற அறிஞர்களின் கிரந்தங்களில் இருந்து தனது ஆக்கங்களை அதிகம் முன்வைத்திருக்கின்றார் என்பது அவரது எழுத்துக்கள் மூலம் சான்று பகர்கின்றன.

ஏனெனில் இவர் لحم الخنزير பன்றியின் மாமிசம் தொடர்பான சர்ச்சைக்குரிய கட்டுரையை வெளியிட்டு பன்றியின் மாமிசம் என்றே குர்ஆன் குறிப்பிடுகின்றது. எனவே! அதன் ஏனைய பாகங்கள் தொடர்பாக அது எதையும் பேசாது விட்டுள்ளது. அதைப் பேணுதலுக்காகவே தவிர்ந்து கொள்ள வேண்டும். ஏனெனில் சில போது பன்றியின் இதயம் மட்டும் மனிதனுக்குப் பொருத்தமாக இருப்பதற்காக அல்லாஹ் இப்படி சொல்லி இருக்கலாமே என்று தனது வாதத்தை நிறுவி பலரை வாத நோயில் போட்டார்.

இவர் இதில் இருந்து முழுமைமாக வாபஸாகினார் என்று கூற முடியாத அளவுக்கு பிற்பட்ட காலங்களில் இன்னும் பல அம்சங்களில் கைவைத்தார்.

உதாரணமாக “பன்றித்தோல்” வியாபாரம் ஆகுமானது என ஆன்லைன்பீ.ஜே.-வில் எழுதி இருக்கிறார்.
அபாபீல் பறவைகள் என்பன அணுகுண்டைத்தான் சொண்டுகளில் சுமந்து வந்து வீசின என்று இவர் ரஷீத் ரிழாவை அல்லது முஹம்மத் அப்துஹு-வை காப்பி செய்து வெளியிட்டதைப் புதுமையாக பேசிக் கொண்ட அக்கால தவ்ஹீத் தக்லீத் வாதிகள் பலர் இந்த தவறான விளக்கம் அல்லாஹ்வின் அபரிமிதமான அற்புதமான ஆற்றலை மறைமுகமாக மறுப்பது பற்றி கொஞ்சம் கூட யோசிக்காமல் இது பீ.ஜே.-யின் பெரிய ஆய்வு போல கிழித்துக் கொண்டிருந்தனர்.

காதியானிகளோடு விவாதம்
காதியானிகள் விவாதத்தில் ஈஸா (அலை) அவர்கள் பூமிக்கு வருவார்கள் என்ற ஸஹீஹான ஹதீஸ் குர்ஆனுக்கு முரண்படுகின்றது என்று பீ.ஜே யின் 2004 புதிய கோட்பாட்டை அன்று 1990 களில் முன்வைத்த போது. பீ.ஜே. தற்போது ஸலஃபிகள் சொல்கின்ற விளக்கத்தை கூறி அவர்களுக்கு எதிராக வாதம் செய்தவர் என்று எத்தனை பீ.ஜே.யின் அபிமானிகள், குஞ்சுகள் மற்றும் பிஞ்சுகளுக்கு தெரியும். அன்று காதியானிகளிடம் காணப்பட்ட முரண்பாட்டு நோய் பின்னர் பீ.ஜே.யிடம் தொத்திக் கொண்டது என்பது உள்ளங்கை நெல்லிக்கனி போன்றதாகும். அன்றைய காதியானிகள் ஹதீஸ் மறுப்புக்கு வைத்த பெயர்தான் குர்ஆனுக்கு முரண்படாத ஹதீஸ்கள், அதனை அப்படியே உள்வாங்கியுள்ளார் என்பது அன்று முதல் இன்று வரை பீ.ஜே.-யின் நடவடிக்கைகளை அவதானிப்பவர்களால் அறிய முடியும்.

ரஷீத் ரிழாவைக் காப்பி பேஸ்ட் (copy-paste) செய்தல்
இவர் சூனியத்தை மறுப்பதற்காக ஹாரூத் மாரூத் ஆகிய இருரையும் மனித ஷெய்தான்கள் என்றார். குர்ஆனுக்கு முரண்படுவதாகக் கூறி இவர் சூனியம் தொடர்பான புகாரியில் இடம் பெற்றுள்ள ஸஹீஹான ஹதீஸை மறுப்பதற்கு என்ன ஆதாரங்களை முன்வைக்கின்றாரோ அந்த அனைத்து வாதங்களையும் ரஷீத் ரிழா அதற்கு முன்னர் “அல்-ஜஸ்ஸாஸ்” போன்றோர் முன்வைத்துள்ளனர். அதற்கு தெளிவாக மறுப்பும் எழுதப்பட்டுள்ளது என்பதைக் கூடப்படிக்காமல் மக்களை இன்னும் வழிகெடுத்துக் கொண்டே இருப்பது இவரது அகங்காரத்தையும் ஷைதானிய பண்பையும் விளங்கப் போதுமான சான்றாகும். இதற்கு தலையாட்டிகள் களத்தில் இன்னும் இருக்கின்றனர்.

நபித்தோழர்களை பின்பற்றுதுதல்:
நபித்தோழர்களின் விளக்கங்களை, நடைமுறைகளை தேவையின் போது துணைக்காக ஆதாரமாக எடுப்பதையும் நக்கலும் நையாண்டியும் செய்யும் இவர் அடித்த காப்பிகள் எழுத்தால் எழுத முடியாதவை.

ஒரு உதாரணம்.
இலங்கையில் உமர் அவர்கள் தனக்கு பைஅத் செய்யாதவர்களைக் காபிர்கள் என்று பேசினார். அவரோடு விவாதத்தில் கலந்து கொண்ட P.J தனது வாதத்தை நிறுவ ஃபாத்திமா (ரழி) அவர்கள் அபூபக்கர் சித்தீக் (ரழி) அவர்களுக்கு பைஅத் செய்தார்களா? பைஅத் ஹதீஸ் அறிவிப்பாளாவது பைஅத் செய்தார்களா? என்றெல்லாம் கேள்வி கேட்டு ஆதாரம் காட்டியவர் இப்போது காதியானிகள் போன்று பிரச்சாரம் செய்வது பற்றி சிந்திக்க வேண்டும்.

நபி ஈஸா (அலை) அவர்களின் முஃஜிஸாவை விஞ்ஞானமாக மாற்றிய பீ.ஜே. இதுவரை தட்டிக் கேட்காத குருட்டுத் தம்பிகள்.

இவர் நபிமார்கள் வரலாறு தொடரில் நபி ஈஸா (அலை) அவர்கள் குளோனிங் முறையில் பிறந்த குழந்தை என்று பேசிய விஞ்ஞானப் பொய்யை பீ.ஜே அடிமைகள் வாசிக்காமல் அப்படியே அதைக் காப்பி அடித்து குடிக்கின்றனர். அந்த விளக்கம் மட்டுமே பீ.ஜே தாத்தாவை வழிகேடர்களின் பட்டியலில் சேர்க்க போதுமான சான்றாகும். தம்பிகளுக்கு அது (புத்தியில் பட்டால்) பத்தினால் இந்த நவீன ஹதீஸ் மறுப்பாளனுக்குப் பின்னால் போவார்களா?

தஃவாப் பாதையில் பொய் உரைப்பதை ஹலாலாக்கிய அஞ்சாநெஞ்சன்:
இந்த பீ.ஜே என்ற பொய்யர் ஹதீஸ் துறையில் போதிய அறிவற்றவர், ஹதீஸ்கலை அறிஞர்கள் ஒரு ஹதீஸ் ஸஹீஹானதுதான் என்பதை நிரூபிக்க இட்டுள்ள நிபந்தனைகளில் இவர் புதிய சில நிபந்தனைகளை இணைத்து ஸஹீஹான பல ஹதீஸ்களை தனது மனோ இச்சைக்கு – இஷ்டத்திற்கு மறுக்கின்றார்.

உண்மை என்னவெனில் இட்டுக்கட்டப்பட்ட செய்திகளை இனம் காண நடைமுறைச் சாத்தியம், குர்ஆனுக்கு முரண்படுதல் என்ற கோட்பாடு கொண்டு வரப்பட்டு பொய்யான செய்திகள் ஆதாரபூர்வமான செய்திகள் என இனம் காணப்பட்டன. இந்த விதிகளை கொண்டு வந்தவர்களே புகாரியில் முஸ்லிம்கள் இடம் பெறும் செய்திகளில் முஆல்லகாத் தவிர்த்து மற்ற ஹதீஸ்களை ஆதாரபூர்வமான செய்திகள் என தீர்ப்பளித்தனர்.

இவர் இந்த நூற்றாண்டில் மறுக்கப்படும் ஹதீஸ்கள் உண்மையில் மறுக்கப்படும் நிலையில் இருப்பின் இவரை விட அறிவில் தேடலில் அதி திறமைசாலிகளான முன் சென்ற இமாம்கள் இது பற்றி பேசி இருப்பார்கள் அல்லது அதுபற்றிய செய்திகளாவது கிடைத்திருக்கும்.

இந்த ஆக்கத்தின் சுருக்கமும், தம்பிமார்களுக்கான செய்தி இவர் கடந்து வந்த பாதை என்பது பல படி நிலைகளைக் கொண்டது

1) மத்ஹபு ஆதரவு

2) குர்ஆன் ஹதீஸ் இஜ்மா, கியாஸ்

3) குர்ஆன் ஹதீஸ் ஸஹபாக்களின் கூற்றுக்கள் நடைமுறைகள்

4) குர்ஆன் ஹதீஸ் மட்டும்

5) குர்ஆன் மற்றும் அதற்கு முரண்படாத ஹதீஸ்.

இன்ஷா அல்லாஹ் எதிர் வரும் காலங்களில் குர்ஆன் மட்டும் நாஸ்தீக வழிமுறையில் அல்லாஹ் மார்க்கத்தில் விளக்கம் என்ற புதிய கோட்பாட்டை முன்வைக்கலாம் அதனை அண்ணனின் அன்புத்தம்பிமார்கள் இலங்கை இந்திய மட்டுமின்றி உலகளாவில் கொண்டு செல்ல காத்திருக்கலாம் (அல்லாஹ் நம்மை பாதுகாப்பானாக…)

அல்லாஹ் மார்க்கத்தில் விளக்கத்தை தருவானாக!

ரிஸ்வான் மதனி (இலங்கை)
04-02-2018

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *