Featured Posts

Imrana on video – no rape

பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டாரா இம்ரானா? அவரிடமே கேட்டுவிடலாமே.
http://www.milligazette.com/dailyupdate/2005/20050724b.htm

வீடியோ கோப்பை உங்கள் கணினியில் சேமிக்க, வலது சொடுக்கி Save target as என கொடுக்கவும் [in Internet Explorer].
http://www.milligazette.com/dailyupdate/2005/imrana-no-rape-video.wmv

2 comments

  1. டெல்லியில் இருந்து “முஸ்லிம் பொலிட்டிகல் கவுன்சில் ஆப் இந்தியா” என்ற அமைப்பின் சார்பில் ஒரு உண்மை அறியும் குழு டெல்லியில் இருந்து 130 கி.மீ. தொலைவில் உள்ள சர்தவால் கிராமத்திற்கு ஜூன் 23 அன்று சென்று பலதரப்பட்டவர்களை பேட்டி எடுத்து அதனை வீடியோவில் பதிவுச் செய்தது. இம்ரானாவை தனியாக வீடியோவில் பேட்டி கண்டது. ஜூன் 25 அன்று தனது அறிக்கையை இந்த குழு பத்திரிகைகளுக்கு அளித்தது.

    “அனைத்திந்திய முஸ்லிம் தனியார் சட்ட வாரியம்” சார்பாக ஜூன் 30 அன்றும், “ஜமாஅத்தே இஸ்லாமி” சார்பாக ஜூலை 2 அன்றும், இதன் பிறகு “மில்லி கவுன்சில்” மற்றும் “மஜ்லிசே பிக்ர் அவ்ர் அமல்” ஆகிய அமைப்புகள் சார்பாகவும் உண்மை அறியும் குழுக்கள் “சர்தவால்” கிராமத்திற்கு சென்றன. இந்த குழுக்கள் அனைத்தும் நேரடியாக சர்தவால் கிராமத்தில் நடத்திய ஆய்வுகளின் அடிப்படையில் பாலியல் பலாத்காரம் (கற்பழிப்பு) நடைபெறவில்லை என்று ஒருமித்து தமது அறிக்கையில் கூறியுள்ளன. ஆனால் பெரும்பாலான செய்தி ஊடகங்கள் தாங்கள் கட்டிவிட்ட கதை இந்த அறிக்கைகளினால் அம்பலமாகி விடக்கூடாது என்பதினால் முஸ்லிம் அமைப்புகளின் ஆய்வு அறிக்கைகளை பிரசுரிக்காமல் பார்த்துக்கொண்டன. இதனை அவுட்லுக் எக்ஸ்பிரஸ் மற்றும் தி ஹிந்து பத்திரிகைகள் பாலியல் பலாத்காரம் நடந்திருப்பது சந்தேகமே என்ற தொனியில் சிறிய செய்தியோடு நிறுத்திக்கொண்டது.

    சர்தவால் கிராமத்திற்கு முதலில் சென்ற முஸ்லிம் குழுவின் சார்பில் டெல்லியில் ஒரு செய்தியாளர் கூட்டம் நடத்தப்பட்டது. இந்த கூட்டத்தில் மூன்று மணி நேரம் ஓடக்கூடிய வீடியோ ஒளிபரப்பப்பட்டது. இந்த வீடியோவில் இம்ரானாவின் பேட்டியும் இடம்பெற்றது. உருது மொழியில் உள்ள இந்த வீடியோ பதிவிலிருந்து இம்ரானா பேசிய துண்டை மட்டும் மில்லிகெஸட்.காம் தளத்தில் பாக்கலாம்.

    1) அதில் அவர் கற்பழிப்பு நடைபெறவில்லை என்று சொல்லும் காட்சியும் இடம்பெறுகின்றது. “நான் அலறியவுடன் அவர் ஓடிவிட்டார்… அவர் தன் முயற்சியில் வெற்றிப் பெறவில்லை இது தான் உண்மை” என்கிறார்.)

    2) ஒரு பெண் அமைப்பு தனக்கு ஐந்தாயிரம் ரூபாய் அளித்ததையும் இந்த பேட்டியில் இம்ரானா குறிப்பிடுகிறார். “அவர்கள் எனக்கு பணம் தந்தார்கள். நான் அவர்களிடம் பணம் கேட்கவில்லை. முதலில் ஐந்தாயிரம் தந்தார்கள். அதன் பின் ஆயிரம் தந்தார்கள். அதன் பிறகு மூன்றாவது முறையாக இரு நூறு ரூபாய் தந்தார்கள். இவையெல்லாம் பத்திரமாக உள்ளன.” என்கிறார்.

    3) “எனக்கு தவறாக வழிகாட்டுகிறார்கள். நான் ஷரியத் சட்டத்தை பின்பற்றுவேன்” என்கிறார்.

  2. சர்தார்

    //”ஆனால் பெரும்பாலான செய்தி ஊடகங்கள் தாங்கள் கட்டிவிட்ட கதை இந்த அறிக்கைகளினால் அம்பலமாகி விடக்கூடாது என்பதினால் முஸ்லிம் அமைப்புகளின் ஆய்வு அறிக்கைகளை பிரசுரிக்காமல் பார்த்துக்கொண்டன.”//

    முன்பு ஒரு முறை இல்லாத ஆயிஷாவை தீவிரவாதி பெண்ணாக சித்தரித்து, பின்பு உண்மைகளை போலீஸ் உயர் அதிகாரிகளே ஒப்புக்கொண்டபின் வெட்கித் தலைகுனிந்த சில பிரபல செய்தி ஊடகங்கள் ஏனோ நினைவுக்கு வருகிறது.

    முஸ்லிம் அல்லாத ஒருவர் தவறிழைத்தால் அது தனிமனித பிரச்னையாகவும், முஸ்லிம் ஒருவர் அதே தவறைச் செய்துவிட்டால் அவரின் சமூகத்தையே சாடுவதிலும் ஊடங்களின் பங்களிப்பு அதிகம் என்பது மறுக்க முடியாத உண்மை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *