பாவியென்று நிரூபனமானதால் பீஜேயின் (ஹதீஸ் மறுப்பு) கொள்கையை ஏற்றுக் கொள்ள வேண்டாமென்று நாம் சொல்லவில்லை.
பொய்யரென்று நிரூபனமானதால் அவரின் (ஹதீஸ் மறுப்பு) கொள்கையை ஏற்றுக் கொள்ள வேண்டாம் என்றே நாம் சொல்கிறோம்.
பாவத்திலிருந்து தப்பிய மனிதன் எவனுமே இல்லை. ஆதி பிதா ஆதம் நபியே பாவியாக இருந்தாரென்று மார்க்கம் தெளிவாகக் கூறிய பின், பாவம் செய்ததற்காக ஒருவன் கருத்தை நிராகரிக்கச் சொல்லி நாம் எப்படி கூற முடியும்?
ஒருவரை பாவியெனும் கண்ணோட்டத்தில் பார்ப்பதற்கும், பொய்யர் எனும் கண்ணோட்டத்தில் பார்ப்பதற்கும் அடிப்படையிலேயே வித்தியாசம் உண்டு.
ஆதம் நபி (அலை) தவறுதலாகப் பாவியானார்; ஆனால் அவர் பொய்யராக இருக்கவில்லை.
பீஜேயின் பாவம் அவர் அல்லாஹ்வோடு பார்த்துக் கொள்ள வேண்டியது. அதை நாம் பேசவில்லை.
அவர் பச்சையாக இது வரை பொய் சொல்லி வந்தார் என்பது நிரூபனமாகி விட்டதே, அந்தப் பொய்யைத் தான் இப்போது நாம் பூதாகரப் படுத்துகிறோம்.
ஏனெனில், பொய்யன் சொல்லும் செய்திகளை ஏற்றுக் கொள்ள வேண்டாமென்று மார்க்கம் தெளிவாகச் சொல்லி விட்டது.
பீஜே பொய்யர்; எனவே பொய்யரின் கூற்றுக்களால் உருவான அவரது கொள்கையிலும் நிறையவே பொய்கள் உள்ளன. அவரது ஹதீஸ் விளக்கங்களிலும் நிறைய பொய்கள் உள்ளன.
அந்தப் பொய்களைத் தான் இங்கு ஏற்க வேண்டாமென்கிறோம்.
இதைப் புரிந்தும் புரியாதது போல் சில ஷைத்தான்கள், நாம் என்னவோ “பாவிகள் சொன்னதையெல்லாம் ஏற்க வேண்டாம்” என்று சொன்னது போல் மறுபடியும் பொய்யாக சித்தரிக்க ஆரம்பித்துள்ளார்கள்.
பீஜே எனும் பொய்யருக்கு சாதகமாக இயங்கிய இவர்களும் பொய்யர்களே என்பதற்கு இவர்களது இந்தத் திசைதிருப்பல் பிரச்சாரமே ஓர் ஆதாரம்.
பொய்யின் அடிப்படையிலேயே இவர்கள் மொத்தப் பிரச்சாரமும் அமைந்துள்ளது என்பதற்கும் இவர்களது இந்தப் பொய்ப் பிரச்சாரமே இன்னோர் ஆதாரம். மக்கள் விழித்துக் கொள்ளுங்கள்.
– அபூ மலிக்