“உங்கள் மகனோ அல்லது மகளோ ஏன் அவர்களை நீங்கள் சுற்றுலாவுக்காக அழைத்துச் செல்லவில்லை என்றோ, அல்லது எலக்ட்ரானிக் சாதனங்களை ஏன் அவர்களுக்கு நீங்கள் ஏற்பாடு செய்து கொடுக்கவில்லை என்றோ, அல்லது உடற்பயிற்சி கிளப்களில் அவர்களை நீங்கள் ஏன் சேர்த்துவிடவில்லை என்றோ, அல்லது மார்க்கெட்டுகளுக்கு ஏன் அவர்களை நீங்கள் கூட்டிச்செல்லவில்லை என்றோ நாளை மறுமையில் அல்லாஹ்வின் முன்னிலையில் உங்களைப் பற்றி முறைப்பாடு செய்யவேமாட்டார்கள். என்றாலும் அவர்கள், அல்லாஹ்விடம் தமது முறைப்பாடுகளை இப்படிக் கொண்டு வருவார்கள்:
- அல்லாஹ்வை எப்படி நான் வணங்க வேண்டும்? அவனுடன் நான் எவ்வாறு தொடர்பை ஏற்படுத்தியிருக்க வேண்டும் என எனக்கு ஏன் நீங்கள் கற்றுத்தரவில்லை?
- கஷ்டமான நேரங்களில் அல்லாஹ்வின் பக்கம் எப்படி விரைந்திருக்க வேண்டும்? மகிழ்ச்சியான நேரங்களில் அவனது கண்காணிப்பு உணர்வுடனும், அவனின் நினைவுடனும் எவ்வாறு நான் வாழ்ந்திருக்க வேண்டும் என எனக்கு ஏன் நீங்கள் கற்றுத் தரவில்லை?
- குர்ஆனையும் சுன்னாவையும், அதைக்கொண்டு செயல்படும் விடயத்தையும் ஏன் எனக்கு நீங்கள் கற்றுத் தரவில்லை?
- fபஜ்ர் தொழுகைக்கு ஏன் என்னை நீங்கள் எழுப்பவில்லை? அதற்காக எழும்ப வேண்டும் என ஏன் எனக்கு நீங்கள் சொல்லித் தரவில்லை?
- fபர்ழுகளை நிறைவேற்றுவதில் அலட்சியம் மற்றும் பொடுபோக்கு, சந்தேகத்திற்கிடமானவற்றில் மூழ்குதல், மார்க்கத்திற்கு முரணான காரியங்களைச் செய்தல், தீய நண்பர்களுடனான நட்பு, அல்லாஹ்வை வணங்குவதையும் அவனுக்கு வழிபடுவதையும் விட்டுவிட்டு வீண் விளையாட்டில் ஈடுபடல் ஆகியவற்றை விட்டும் ஏன் என்னை நீங்கள் தடுக்கவில்லை?
பெற்றோர்களே! உங்களிடம் உங்கள் பிள்ளைகள் அல்லாஹ்வுக்கு முன்னால் கேட்கும் இந்தக் கேள்விகளுக்கான பதில்களை தயார்படுத்தி வைத்துக் கொள்ளுங்கள்! உங்கள் பிள்ளைகள் உங்கள் மீது சுமத்தப்பட்டிருக்கும் அமானிதங்கள்!!”.
{ முகநூல் – سعيد إسماعيل }
[ لن يشكوك إبنك أو إبنتك يوم القيامة أمام الله لأنك لم تسافر بهم للسياحة، أو لأنك لم توفر لهم أجهزة الكترونية، أو أنك لم تلحقهم بنوادي رياضية، أو لم تلبسهم ماركات. لكنهم سيتقدمون برفع شكواهم إلى الله:-
1. لماذا لم تعلّمني كيف أعبد الله وأتعلق به؟
2. لماذا لم تعلّمني أن أفزع إليه في الشدائد وأراقبه وأذكره في الرخاء؟
3. لماذا لم تعلّمني القرآن والسنة والعمل بهما؟
4. لماذا لم توقظني لصلاة الفجر وتعلّمني الإستيقاظ لها؟
5. لماذا لم تنهني عن التهاون والتفريط في الفرائض والإنخراط في الشبهات وفعل المنكرات ومصاحبة أصدقاء السوء والّلهو عن عبادة الله وطاعته؟
أعدّوا جوابا لهذه الأسئلة أمام الله، فأبنائكم أمانة في أعناقكم ] « منقول »
{سعيد إسماعيل في فيس بوك }
அல்லாஹ் கூறுகிறான்: “நம்பிக்கை கொண்டோரே! நிச்சயமாக உங்கள் மனைவிமார்களிலும், உங்கள் பிள்ளைகளிலும் உங்களுக்கு விரோதிகள் இருக்கின்றனர்!” (அல்குர்ஆன், 64:14)
தமிழில்:
அஷ்ஷெய்க். N.P.ஜுனைத்(காஸிமி,மதனி)