இமாம் இப்னு குதாமா அல்மக்திஸீ (ரஹிமஹுல்லாஹ்) கூறுகின்றார்கள்:-
“அறிந்து கொள்ளுங்கள்! மக்கள் பழிப்பார்கள் என்று பயந்ததாலும், அவர்களின் புகழ்ச்சியை விரும்பியதாலுமே மனிதர்களில் அதிகமானோர் அழிந்து போனார்கள். இவர்களின் அசைவுகள் அனைத்தும் மக்களின் திருப்திக்கு உடன்பட்டதாகவே மாறிவிட்டது. புகழை எதிர்பார்த்தும், பழிப்பைப் பயந்துமே இவ்வாறு இவர்கள் நடந்து கொள்கின்றனர். இது, அழிவுக்கு இட்டுச் செல்லும் விடயங்களில் உள்ளதாகும். இதற்குச் சிகிச்சை செய்யப்பட வேண்டியது அவசியமாகும்!”
{ நூல்: ‘முஹ்தஸரு மின்ஹாஜில் காஸிதீன்’, பக்கம்: 212 }
قال الإمام إبن قدامة المقدسي رحمه الله تعالى:-
[ واعلم! أن أكثر الناس إنما هلكوا لخوف مذمة الناس، وحب مدحهم. فصارت حركاتهم كلها على ما يوافق رضى الناس، رجاء المدح وخوفا من الذم. وذلك من المهلكات فوجبت معالجته! ]
{ مختصر منهاج القاصدين ، ص – ٢١٢ }
தமிழில்:
அஷ்ஷெய்க். N.P.ஜுனைத்(காஸிமி,மதனி)