Featured Posts

இறைமறை ஓதலில் இன்பம் கண்டவருக்கு… [உங்கள் சிந்தனைக்கு… – 043]

இறைமறை ஓதலில் இன்பம் கண்டவருக்கு அதைச் சிறையில் ஓதுவது சிரமமாகவே இருக்காது!

“ஷைகுல் இஸ்லாம் இப்னு தைமிய்யா (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் தன் வாழ்வின் இறிதிக்காலப் பகுதியில் கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் சிறைவைக்கப்பட்டார்கள். அதில், 80 தடவைகள் முழுக் குர்ஆனையும் ஓதி முடித்தார்கள். 81-வது தடவை அல்குர்ஆனை அவர் ஓத ஆரம்பித்து, ‘நிச்சயமாக பயபக்தியாளர்கள் சுவனச் சோலைகளிலும், ஆறுகளிலும் இருப்பார்கள்.? வலிமைமிக்க அரசனிடம் உண்மையான இருப்பிடத்தில் அவர்கள் இருந்து கொண்டிருப்பார்கள்’.
(அல்குர்ஆன், 54: 54,55) என்ற இரு வசனங்கள் வரைக்கும் ஓதி முடித்து மரணித்துவிட்டார்கள். அல்லாஹ் அவருக்கு அருள் புரிவானாக!”.
{ நூல்: ‘தைலு தபகாதில் ஹனாbபிலா’, 04/25 }

[ سجن شيخ الإسلام إبن تيمية رحمه الله تعالى في آخر حياته قرابة سنتين، ختم فيها القرآن ثمانين ختمة! وبدأ في الختمة الحادية والثمانين فانتهى إلى قوله تعالى : « إن المتّقين في جنّات ونهر?في مقعد صدق عند مليك مقتدر » (سورة القمر ، الآية : ٥٤ ، ٥٥)
{ ذيل طبقات الحنابلة ، ٤/٢٥

தமிழில்: அஷ்ஷெய்க் N.P.ஜுனைத்(காஸிமி,மதனி)

2 comments

  1. எத்தனை படிப்பினைகள் ? வல்ல ரஹ்மான் நாம் அது போன்ற முயற்சிகளை எடுக்கக்கூடியவர்களாகவும், அவனுக்காகவே வாழ்ந்து மரணிக்கும் நல்ல மக்களின் பட்டியலில் சேர்த்து அருள் புரிவானாக.

  2. Ma sha allah

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *