மணமகன் – மணமகள் தெரிவில் மார்க்கமே அளவுகோலாக இருக்கட்டும்!
அஸ்மா பின்த் அபீபக்ர் (ரழியழ்ழாஹு அன்ஹா) அவர்கள் கூறுகின்றார்கள்:
“(மக்காவில் இருக்கும்போதே) என்னை ஸுபைர் இப்னுல் அவ்வாம் (ரழியழ்ழாஹு அன்ஹு) அவர்கள் மணந்து கொண்டார்கள். இந்தப் பூமியில் அவருக்குத் தண்ணீர் இறைக்கும் ஓர் ஒட்டகத்தையும், அவரின் குதிரையையும் தவிர வேறு எந்த சொத்துபத்துகளும், அடிமைகளும், உடைமைகளும் இருக்கவில்லை!”.
(நூல்: புகாரி – 5224)
இஸ்லாமியப் பேரறிஞர் இமாம் குர்துபீ (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் பின்வருமாறு இதற்கு விளக்கம் கூறுகின்றார்கள்:
“திருமணப் பொருத்தம் பார்க்கும் விடயத்தில் (நபித்தோழர்களான) இவர்களிடம் கவனிக்கப்படும் அம்சமாக இருந்ததெல்லாம் மார்க்கமும் (இதனால் கிடைக்கப்பெற்ற) சிறப்பும்தான். சொத்துபத்துகளோ, பணமோ அல்ல!. ‘மார்க்கப் பற்றுள்ளவளையே மணந்து கொள்ளுமாறு உமக்கு நான் பணிக்கின்றேன்!’ என்ற நபிகள் நாயகம் (ஸல்லழ்ழாஹு அலைஹி வசல்லம்) அவர்களின் கூற்றும் இதையே எமக்கு வலியுறுத்துகிறது.
மார்க்கத்தில் ஒருவருக்கொருவர் உதவி ஒத்தாசையாக இருத்தலும், இறுதி நபி முஹம்மத் (ஸல்லழ்ழாஹு அலைஹி வசல்லம்) அவர்களின் உம்மத்தைப் பெருக்கிக்கொள்ளலுமே அந்த ஸஹாபா சமூகத்தில் காணப்பட்ட திருமணத்தின் நோக்கங்களாக இருந்தன. காரணம், இந்த சொத்துபத்துகள் எல்லாம் நீங்கிப் போகும் நிழல் என்றும், மாற்றமடைந்து செல்லும் மேகம் என்றும், (மார்க்கப்பற்றுடன் இருப்பதால் கிடைக்கும்) சிறப்புத்தான் மறுமை நாள் வரைக்கும் எஞ்சிருயிருக்கும் என்றும் இவர்கள் உறுதியாகவே அறிந்து வைத்திருந்தனர். ஆனால் இன்றோ நிலைமை தலைகீழாக மாறிவிட்டது; மக்களும் கடமையை விட்டுவிட்டு சாத்தியமற்ற விடயத்தின்பால் சாய்ந்தும் விட்டார்கள்!”
{ நூல்: ‘அல்முFப்ஹிம் லிமா அஷ்கல மின் கிதாபி தல்ஹீஸி முஸ்லிம்’, 05/516 }
عن أسماء بنت أبي بكر رضي الله عنها قالت: [ تزوّجني الزبير وما له في الأرض من مال ولا مملوك ولا شيئ غير ناضح وغير فرسه ] (البخاري – ٥٢٢٤)
قال الإمام القرطبي رحمه الله تعالى: “هذا يدلّ على أن المعتبر عندهم في الكفاءة إنما كان الدين والفضل؛ لا المال والغنى كما قال صلّى الله عليه وسلم: ‘فعليك بذات الدين’ !
وإنما ذلك لأن القوم كانت مقاصدهم في النكاح التعاون على الدين وتكثير أمة محمد خاتم النّبيّين، ولأنهم علموا أن المال ظلّ زائل وسحاب حائل، وأن الفضل باق إلى يوم التلاق. فأما اليوم فقد انعكست الحال وعدل الناس عن الواجب إلى المحال ]
{ المفهم لما أشكل من كتاب تلخيص مسلم – ٥/٥١٦ }
தமிழில்: அஷ்ஷெய்க் N.P.ஜுனைத்(காஸிமி,மதனி)
புதிய சாளம்பைக்குளம்,வவுனியா