நான் ஏன் உங்களை நேசிக்கின்றேன் தெரியுமா?
“அல்லாஹ்வின் நிழலைத் தவிர வேறு எந்த நிழலுமே இல்லாத மறுமை நாளில், அவனின் நிழலுக்குக் கீழே உங்களுடன் எனக்கும் அல்லாஹ் நிழல் தர வேண்டும் என
- உறுதியாக நான் பிரார்த்தித்துக் கொள்கின்றேன்.
- கடும் உஷ்ணமும், கடும் வியர்வையுமுள்ள அந்நாளில்……
- சூரியன் தலைகளுக்குச் சமீபமாக இருக்கும்…
- கடும் நெரிசல் காணப்படும்….
அதிகமான பாவங்களும் இருந்து கொண்டிருக்கும்….
அப்போது, “என் மகத்துவத்தின் மூலம் ஒருவருக்கொருவர் நேசம் வைத்துக்கொண்டவர்கள் எங்கே?
எனது நிழலைத் தவிர வேறு நிழல் ஏதும் இல்லாத இன்றைய நாளில் எனது நிழலில் அவர்களுக்கு நான் நிழலளிக்கின்றேன்!” என்று அழைக்கும் சப்தம் ஒன்றை நீ பெற்றுக்கொள்வாய்.
அது, அரசுக்கெல்லாம் அரசனாக இருக்கின்ற அடக்கியாளும் வல்லமையுடைய, யாவற்றையும் மிகைத்த அல்லாஹ்வின் சப்தமாகும்!
நபி (ஸல்லழ்ழாஹு அலைஹி வசல்லம்) அவர்கள் கூறினார்கள்:
“அல்லாஹ்வின் நிழலைத் தவிர வேறெந்த நிழலுமற்ற அந்நாளில், அவன் ஏழு நபர்களுக்கு மாத்திரம் தன் நிழலிலே நிழலளிப்பான்!” அந்த ஏழு நபர்களில் “அல்லாஹ்வுக்காக நேசம் கொண்ட இரு மனிதர்கள்!” உள்ளடங்குவார்கள் என்றும் குறிப்பிட்டார்கள். அவ்விரு மனிதர்களும் அல்லாஹ்வுக்காக நேசம் கொண்டார்கள் என்பதைத் தவிர வேறெந்த உலக நன்மையும் அவர்களுக்கிடையில் இருக்கவில்லை.
இறுதியாக……
அல்லாஹ்வுக்காக நீ ஒருவரை நேசித்துவிட்டால் அவரிடம் நீ, “அல்லாஹ்வுக்காக உம்மை நான் நேசிக்கிறேன்!” என்று கூறுவது சுன்னத்தான வழிமுறையாகும்.
- எனவே, “அல்லாஹ்வின் விடயத்தில் உங்களை நான் நேசிக்கிறேன்!” என்று என்னைக்கொண்டு ஆரம்பித்துக் கூறுவதற்கு எனக்கு நீங்கள் அனுமதி தாருங்கள்!
யா அல்லாஹ்! இந்த நேசத்தின் மூலம், உனது நிழலைத் தவிர வேறெந்த நிழலுமில்லாத அந்த மறுமை நாளில் உனது அர்ஷின் நிழலில் எமக்கு நீ நிழல் தருவாயாக! - சகோதரர்களே! உங்களை நான் நேசித்து விட்டேன்; உங்களை ஞாபகப்படுத்திப் பார்க்கும்போதெல்லாம் புன்னகைத்துவிட்டேன்; உங்களைப் போன்றவர்களை இந்தப் பூமி சுமந்திருக்கும் காலமெல்லாம் இவ்வுலகம் நலவிலேயே இருந்துகொண்டிருக்கும் என்றும் நான் புரிந்து கொணடு் விட்டேன்.
- அல்லாஹ்வின் விடயத்தில் உங்களை நான் நேசிக்கிறேன்! ஒவ்வொரு நேரமும், ஒவ்வொரு பொழுதிலும் உங்களுக்காக நான் பிராத்திக்கிறேன்!!
மகத்துவமும் உயர்வுமிக்க அல்லாஹ்விடம் இவ்வுலகிலும், மறுமையிலும் உங்களுக்கு அவன் அருள்புரிந்து மகிழ்ச்சிப்படுத்த வேண்டும் என்றும், கனிகள் அண்மித்து, சுவர்க்கவாதிகளும் ஒருவரையொருவர் முன்னோக்கியவர்களாகக் கட்டில்கள் மீதிருக்கும் சுவர்க்கத்தில் ஒன்று சேர்க்கும்படிக் கேட்போம்!!
என் உள்ளத்தின் சமர்ப்பணம்
{ மக்காவில் வசிக்கும் இலங்கையைச் சேர்ந்த மதிப்பிற்குரிய அறிஞர் அஷ்ஷெய்க் محمدريال السيلاني அவர்கள், JASM Media Unit வட்ஸ்அப் குரூப்பில் பதிவிட்டது }
هل تعلمون لماذا أحبّكم؟!
لأنّي أدعو أن يظلّني الله معكم تحت ظلّه يوم لا ظل إلا ظله!
في يوم شديد الحرارة….
شديد العرق….
تقترب الشمس من الرؤوس…
زحام شديد….
وذنوب كثيرة……
تجد صوتا ينادي: “أين المتحابّون بجلالي؟ اليوم أظلّهم في ظلّي يوم لا ظلّ إلا ظلّي”
إنه صوت العزيز الجبار سبحانه مالك الملك!
قال رسول الله صلّى الله عليه وسلم: « سبعة يظلّهم الله في ظلّه يوم لا ظلّ إلا ظله….» وقال منهم: « ورجلان تحابّا في الله ». ليس بينهم مصلحة دنيوية سوى أنهما تحابّا في الله.
وأخيرا……..
إذا أحببت أحدا في الله فمن السنة أن تخبره أنك تحبّه في الله.
واسمحوا لي أبدأ بنفسي « أحبّكم في الله!»
اللهم أظلّنا بهذا الحب في ظلّ عرشك يوم لا ظلّ إلا ظلّك…
أحببتكم وكلما تذكرتكم إبتسمت وعرفت أن الدنيا ما زالت بخير مادامت الأرض تحمل أمثالكم.
أحبّكم في الله وأدعو لكم في كل وقت وكل حين.
أسأل الله العلي القدير أن يسعدكم في الدنيا والآخرة وأن يجمعنا في جنة قطوفها دانية على سرر متقابلين……آمين
إهداء من قلبي
தமிழில்…
அஷ்ஷெய்க் N.P.ஜுனைத்(காஸிமி,மதனி)