Featured Posts

PJTJ TNTJ SLTJ சகோதரர்களுக்கு அன்பான வேண்டுகோள்!

நபி ஸல் அவர்களும் நபித்தோழர்களும் இருந்த கொள்கை நீங்கள் தற்போது இருக்கும் சடவாத கொள்கை கிடையாது “கண்ணால் காண்பது கூட பொய்யாக இருக்கலாம் வஹீயின் கூற்று பொய்யாகாது ” என்ற கொள்கையில் தான் அவர்கள் இருந்தார்கள் அந்த கொள்கையை வாழ்கைநெறியாக கொள்ளுங்கள்.

உங்கள் தலைமைகள் நேர்மை அற்றவர்கள் பொய் பேசக்கூடியவர்கள் என்பதை தெளிவாக அறிந்து கொள்ளும் வாய்ப்பை அல்லாஹ் உங்களுக்கு ஏற்படுத்தி தந்துள்ளான் இந்த மார்க்கம் நேர்மையாளர்கள் வழியே பாதுகாக்கபட்டு எமக்கு கிடைத்த தூய்மையான மார்கம் அதை நேர்மையாளர்களிடம் இருந்தே கற்றுக்கொள்ள முயற்சி செய்யுங்கள் விவாதகங்களில் மறுக்கபட்ட ஹதீஸ்களின் நிலையை பிறை விடயத்தில் இன்று TNTJ நடந்து கொண்ட முறையைவைத்து முடிவு செய்துகொள்ளவும்.

மறுமை வாழ்கையை இலக்காக கொண்டு அமைப்புக்களையும் தனி நபர் வழிபாட்டையும் விட்டு மீண்டு கொள்கையை மீளாய்வு செய்ய முயற்சி செய்யுங்கள்.

✍நட்புடன்
இன்திகாப் உமரீ

One comment

  1. சையத் ஹஜ்ஜி ஆபிதீன்

    அனைவர்களுக்கும் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹமத்துல்லாஹி வபர்ரகாத்தஹு – எல்லாவற்றிர்க்கும் காரணம் திருகுரானின் நிஸா அத்தியாயத்தில் அல்லாஹ் கூரும்
    وَإِنْ خِفْتُمْ أَلَّا تُقْسِطُوا فِي الْيَتَامَىٰ فَانكِحُوا مَا طَابَ لَكُم مِّنَ النِّسَاءِ مَثْنَىٰ وَثُلَاثَ وَرُبَاعَ ۖ فَإِنْ خِفْتُمْ أَلَّا تَعْدِلُوا فَوَاحِدَةً أَوْ مَا مَلَكَتْ أَيْمَانُكُمْ ۚ ذَٰلِكَ أَدْنَىٰ أَلَّا تَعُولُوا
    3. அனாதைகள் விஷயத்தில் நேர்மையாக நடக்க மாட்டீர்கள் என்று அஞ்சினால்393 உங்களுக்குப் பிடித்த பெண்களை இரண்டிரண்டாக, மும்மூன்றாக, நான்கு நான்காக மணந்து கொள்ளுங்கள்!106 (மனைவியரிடையே) நீதியாக நடக்க மாட்டீர்கள் என்று அஞ்சினால் ஒருத்தியை அல்லது உங்களுக்கு உடைமையாக உள்ள அடிமைப் பெண்களை107 (போதுமாக்கிக் கொள்ளுங்கள்!). இதுவே நீங்கள் வரம்பு மீறாமலிருக்க நெருக்கமான வழி. திருக்குர்ஆன் 4:3
    106 – ன் விளக்கம் 106. பலதார மணம் இவ்வசனம் (4:3) நான்கு மனைவியர் வரை திருமணம் செய்ய ஆண்களுக்கு அனுமதி வழங்குகிறது. இது பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதி எனப் பரவலாகக் கருதப்படுகிறது. இது பற்றி சரியாக ஆய்வு செய்தால் இஸ்லாம் இவ்வாறு அனுமதித்திருப்பதன் நியாயத்தை உணர முடியும். முதல் மனைவி பாதிக்கப்படுகிறாள் என்பதால் இது பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதி என்று கருதப்படுகிறது. முதல் மனைவி பாதிக்கப்படுவாள் என்பது உண்மை தான். இன்னொரு பெண்ணை இரண்டாவதாக மணப்பதால் மட்டும் முதல் மனைவி பாதிக்கப்படமாட்டாள். மணக்காமல் வைப்பாட்டியாக வைக்கும் போதும், கணவன் பல பெண்களிடம் விபச்சாரம் செய்யும் போதும் முதல் மனைவி பாதிக்கப்படுகிறாள். இன்னொரு பெண்ணை மணப்பதால் ஏற்படும் பாதிப்பை விட இது அதிகப் பாதிப்பை ஏற்படுத்தும். பல பெண்களிடம் தொடர்பு வைத்துக் கொண்டு அவர்கள் மூலம் நோயைப் பெற்று முதல் மனைவிக்குப் பரிசளிக்கும் கூடுதலான பாதிப்பு இதனால் முதல் மனைவிக்கு ஏற்படுகிறது. இரண்டாம் திருமணத்தை எதிர்ப்பவர்கள் வைப்பாட்டி வைப்பதையும், விபச்சாரத்தையும் சட்டப்பூர்வமாகத் தடுக்க வேண்டும். பலதார மணத்தை மறுக்கும் எந்த நாட்டிலும் (நமது நாடு உள்பட) விபச்சாரத்துக்கோ, வைப்பாட்டி வைத்துக் கொள்வதற்கோ தடை இல்லை. அது குற்றமாகவும் கருதப்படுவதில்லை. பெண்ணுரிமை பாதிக்கிறது என்பதுதான் பலதார மணத்தை எதிர்க்கக் காரணம் என்றால் சின்ன வீட்டையும், விபச்சாரத்தையும் சட்டப்பூர்வமான குற்றம் என்று அறிவிக்க வேண்டும். சின்ன வீடு வைத்துக் கொள்ளும் ஆண்களையும், விபச்சாரம் செய்யும் ஆண்களையும் தடுக்க முடியவில்லை. இன்னொருத்தியின் கணவன் என்று தெரிந்தும் அவனைக் கைக்குள் போடும் பெண்களையும் தடுக்க முடியவில்லை என்பதால்தான் “சட்டப்பூர்வமான மனைவி என்ற தகுதியை வழங்கிவிட்டு குடும்பம் நடத்து” என்று இஸ்லாம் கூறுகிறது.
    இந்த அல்லாஹ் வின் கட்டளைகளை அலட்சியப் படுத்தியதால் வந்த வினையாக பேரறிஞ்சர்கள் பிஜே,அல்தஃபி, இப்ராஹிம் ஏன் பாக்கர் அவர்களையும் இழந்து நிற்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம் ஆகவே – த த ஜ வில் இருப்பவர்கள் மலாயிக்கா இல்லை – நான் உள்பட எல்லோருக்கும் பணத்தாசை மற்றும் பதவிஆசை, ஆண் என்றால் பெண்ணை ஆசைப்படுபவர்களாக உள்ளவர்கள்தான். இந்த இயற்கைக்கு வயப்பட்டு உலகத்திற்கே உண்மை மார்க்க சிந்தனையை தரவல்ல பேரறிஞர்களை இங்கே இழந்து நிற்கின்றோம் இதனால் மற்ற பெண்களைப் போல் போலிகளாக நீங்களும் ( தறபோது உள்ள TNTJ நிர்வாகிகளின் மனைவிகளே {௭ன் மரியாதைக்குரிய சகோதரிகளே}) இருக்காமல் – மறுமைதான் உண்மை முஸ்லிம்களின் இலக்கு என எண்ணை விட அதிகமாக மார்க்கம் தெரிந்த ஆண்களை கணவர்களாக பெற்று இருக்கும் எனது அருமை சகோதரிகளே தயவு செய்து மறுமைக்கு அஞ்சி தாங்களின் கணவர்களின் தேவைகளை [அல்லாஹ் இட்ட கட்டளைகளின் படி மனமுவந்து] நிறைவேற்றிட முயற்சி செய்யுங்கள். (இன்னும் இங்கே விளக்கி சொல்ல வேண்டிய பொறுப்பு எனக்கு ஏற்பட்டிருக்கிறது) உங்களிடம் அவர்கள் திருப்தியாக இல்லை என்று தெரிந்தால் இரண்டாம் திருமணம் செய்து கொள்ள அனுமதியுங்கள். மேலும் உங்களின் கணவர்களின் காதலர்கலளான எண்னை போன்றவர்களின் நேரத்தை வீனடிக்காதீர்கள் – அன்புடன் சகோதரன் சையத் ஹஜ்ஜி ஆபிதீன் புதுப்பேட்டை பண்ருட்டி 9385529705

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *