திருமணம் என்ற சொல்லுக்கு அரபு பாிபசையில் நிகாஹ் (النِّكَاح) மற்றும் ஸவாஜ் ( الزَّوَاج) என்ற பதங்கள் பயன்படுத்தப்படுவதுண்டு. என்றாலும் இரண்டு சொற்களுக்கிடையில் வேறுபாடு இருக்கின்றன. அந்த அடிப்படையிலேயே அல்குா்ஆனிலும் பயன்படுத்தப்பட்டுள்ளன.
அஸ்ஸவாஜ் ( الزَّوَاج) என்ற சொல் திருமண ஒப்பந்தம் நடைபெற்று, கணவன் மனைவி இருவருக்கு மத்தியிலும் தாம்பத்திய உறவு நடைபெற்று, திருமணவாழ்வு என்பது உறுதியாக நிலைபெற்றதையே குறிப்பதற்கு அல்குா்ஆனில் பயன்படுத்தப்பட்டுள்ளது.
இந்த அடிப்படையில் அல்லாஹுத்தஆலா தன்திருமறையில் பின்வருமாறு கூறுகிறான் :
كَذَلِكَ وَزَوَّجْنَاهُمْ بِحُورٍ عِينٍ [الدخان : 54]
பொருள்:
இவ்வாறே (அங்கு நடைபெறும்); மேலும் அவர்களுக்கு ஹூருல் ஈன்களை நாம் மண முடித்து வைப்போம். (அத்தியாயம் அத்துஹான் , வசனம் 54)
மேலும் கூறுகிறான்;
فَلَمَّا قَضَى زَيْدٌ مِنْهَا وَطَرًا زَوَّجْنَاكَهَا [الأحزاب : 37]
பொருள்:
ஆகவே ஸைது அவளை விவாக விலக்கு செய்துவிட்ட பின்னர் நாம் அவளை உமக்கு மணம் செய்வித்தோம்; (அத்தியாயம் அல்அஹ்ஸாப் , வசனம் 37)
——–
அந்நிகாஹ் (النِّكَاح) என்ற சொல் திருமணத்தின்பால் இருக்கின்ற விருப்பத்தையும், நாட்டத்தையும் பற்றி குறிப்பிடப் பயன்படுத்தப்பட்டுள்ளது. அதுவும் அது (திருமணம்) உறுதி செய்யப்பட முன்னா்.
அந்த அடிப்படையில் அல்லாஹ் தன்திருமறையில் பின்வருமாறு கூறுகிறான் :
قَالَ إِنِّي أُرِيدُ أَنْ أُنْكِحَكَ إِحْدَى ابْنَتَيَّ هَاتَيْنِ [القصص : 27]
பொருள்:
(அப்போது அவர் மூஸாவிடம்) கூறினார்: “என்னுடைய இவ்விரு பெண்களில் ஒருவரை உமக்கு மணமுடித்துக் கொடுக்க நிச்சயமாக நான் நாடுகிறேன்.” (அத்தியாயம் அல்கஸஸ் , வசனம் 27)
மேலும் கூறுகிறான்;
وَلَا تَنْكِحُوا مَا نَكَحَ آبَاؤُكُمْ مِنَ النِّسَاءِ [النساء : 22]
பொருள்:
(இனிமேல்) நீங்கள் உங்களுடைய தந்தையர் மணமுடித்துக் கொண்ட பெண்களிலிருந்து எவரையும் விவாகம் செய்து கொள்ளாதீர்கள்.” (அத்தியாயம் அந்நிஸா , வசனம் 22)
———–
எனவே, நிகாஹ், ஸவாஜ் ஆகிய இரு சொற்களுக்கும் தமிழில் திருமணம் என்று மொழிபெயா்த்தாலும் அவைகளுக்கு மத்தியில் நுணுக்கமான வேறுபாடுகள் காணப்படுகின்றன.
யாவும் அறிந்தவன் அல்லாஹ் ஒருவன் மாத்திரமே!
(03/10/2017)
தமிழில்: றஸீன் அக்பர் (மதனி)
அழைப்பாளர்: தபூக் அழைப்பு நிலையம், சவுதி அரேபியா.