இஸ்லாமிய இளைஞர்களைக் கவனத்தில் கொண்டு எழுதப்பட்ட ஆக்கம் “வெளியில் சென்றால் வீட்டிற்கு திரும்புவது நிச்சயமில்லாததாகி விட்டது” என்று சொல்லுமளவிற்கு இன்று சாலை விபத்துகள் நாளொருமேனியும் பொழுதொரு வண்ணமுமாக அதிகரித்துக்கொண்டே செல்கின்றன. நாளுக்கு நாள் வாகனங்களும் பெருகிக்கொண்டே செல்கின்றன. மக்களின் அன்றாடத் தேவைகளில் வாகனமும் ஒன்றாகிவிட்டது. அரசும் அதிகாரிகளும் சாலை விபத்துகளை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டாலும் சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு கூட்டங்களை மேற்கொண்டாலும் அது சம்பந்தமான பிரசுரங்களை விநியோகித்தாலும் சாலை விபத்துகளை கட்டுப்படுத்த முடியவில்லை. சாலை விபத்துக்களுக்கான காரணங்களை கண்டறிந்து அதற்கான இஸ்லாம் தரும் தீர்வுகளை நடைமுறைப்படுத்தாவிட்டால் எவ்வளவு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டாலும் சாலை விபத்துகளை தடுக்கமுடியாது.
சாலை விபத்துகள் சம்பந்தமான ஓர் புள்ளி விபரம்:
நம் இந்தியத் திருநாட்டில் 2011ஆம் ஆண்டில் நடற்த சாலை விபத்துகளில் 1.36 இலட்சம் பேர் பலியாகியுள்ளனர். தமிழகத்தில் மட்டும்15,422 இறந்துள்ளனர் என தேசிய போக்குவரத்து திட்டம் மற்றும் ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. 2020 ஆம் ஆண்டில் இந்தியா போன்ற வளரும் நாடுகளில் மக்களின் இறப்பிற்கு 4 ஆவது காரணியாகவும் சுகாதாரக் குறைவிற்கு 3ஆவது காரணியாகவும் சாலைவிபத்துக்களே அமையும் என உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கிறது. பல்வேறு தொற்றுநோய் மற்றும் மற்ற நோய்ப்பாதிப்புகளில் இறப்பவர்களைவிட சாலைவிபத்துகளில் இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என எச்சரிக்கின்றது இன்னொரு அதிர்ச்சித்தகவல். இப்படி பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது. புள்ளிவிபரம் சொல்வது நமது நோக்கமல்ல (விரிவஞ்சி சுருக்கி விட்டோம்.)
இன்ஷா அல்லாஹ் சாலை விபத்துகளுக்கான காரணங்களை அடுத்த தொடரில் பார்ப்போம்……
ஆக்கம்: காஜா ஃபிர்தவ்ஸி
(ஆசிரியர்,அல்ஜாமியத்துல் ஃபிர்தௌஸிய்யா அரபிக் கல்லூரி)