1)பாராட்டப் படவேண்டியவை:
நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக பலர் அனர்த்தங்களுக்குள் அகப்பட்டுகொண்டிருக்கும் இவ்வேலை பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவோம் என்ற ஒரே எண்ணத்தில் அவர்களை மீட்கும் பணியிலும் அவர்களுக்கான அன்றாட தேவைகளை நிவர்த்திசெய்யும் பணியிலும் அல்லாஹ்விடம் கூலியை எதிர்பார்த்தவர்களாக பாதிக்கப்பட்டவர்களை தம் உறவாக எண்ணி பல இயக்கங்களும் நிறுவனங்களும் தனிநபர்களும் உடலாலும் பொருளாலும் பல உதவிகளை செய்து தமது பணியை தொடர்கின்றனர் அல்ஹம்துலில்லாஹ் அல்லாஹ் இவர்களின் இஹ்லாஸுக்கு கூலி வழங்க வேண்டும்…
2) தவிர்கப்பட வேண்டியவை:
புகைப்படம் பிடிப்பது: காரணங்கள்
>உங்களது இஹ்லாஸுக்கு பாதிப்பு வரலாம்
உதாரணம்: மற்றவர் என் சேவைகளை காணவேண்டும் புகழவேண்டும் என்பதற்காக போட்டோ பிடிப்பது வேலை செய்யாமலே வேலை செய்வது போல் போஸ் கொடுப்பது
>அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டோர் முன்னர் சுய கௌரவத்துடன் வசதியாக இருந்தவர்களாக இருந்திருக்கலாம். இப்படி பட்டோர் நீங்கள் வழங்கும் ஒரு சாப்பாட்டு பார்சளுக்காக தலை குனிந்தவராக இன்னும் சோகமடைந்த நிலையில் போஸ் கொடுக்க வேண்டிவரும் அதை நீங்கள் உலகெங்கும் பரப்புவீர்கள்.
> பாதிக்கப்பட்ட பெண்கள் அணிய ஒழுங்கான ஆடைகள் கூட இல்லாத நிலையில் இருக்கும் நிலையில் அவர்களை படம் பிடித்து மீடியாக்களில் பரப்புவது.
இப்படி இன்னும் பல போட்டோ பிடிக்கவே கூடாது என்று நான் கூறவில்லை பாதிக்கப்பட்டோரின் நிலைமைகளை உணர்வுகளை மதித்து நடந்து கொள்ளுங்கள். நீங்கள் பிடிக்கும் படங்கள் ஆதாரத்துக்கான ஒரு தொகுப்பாக இருப்பபதில் தவரு கிடையாது .
இன்னும் நீங்கள் மக்களிடம் வசூலித்த பணத்தை பாதிக்கப்பட்டோரிடம் கொண்டுபோய் சேர்த்தீர்கள் என்பதை சான்றாக காண்பிக்க போட்டோ பிடிப்பதாக இருந்தால் பெண்களை தவிர்த்து ஆண்கள் மற்றும் சிறுவர்களை படம்பிடித்து அதை வெளியிடும் போது அவர்களின் முகத்தை மறைத்து வெளியிடுங்கள்.
அல்லாஹ் நம்மை பாதுகாக்க வேண்டும் நாளை இதே நிலை நமக்கு வந்தால் நான் கூறுகின்றவை புரியும்.
3) நானா? நீயா? போட்டி (தற்பெருமை)
நன்மையான காரியங்களில் அல்லாஹ்விடம் மாத்திரம் கூலியை எதிர்பார்த்து போட்டி போடுவதை இஸ்லாம் வரவேற்கின்றது
ஆனால் கவலைக்குரிய விடயம் என்னவெனில் இங்கே நடக்கும் போட்டி அதுவில்லை
> எனது இயக்கத்தை / எனது நிறுவத்தை போல் உதவி செய்வோர் உண்டா?
> எனது தலைவரை போல் / எமது ஜமாஅத் தொண்டர்களை போல் அற்பணிப்புடன் செயல்படுவோர் உண்டா?
> நான் இன்ன இன்ன உதவிகளை செய்தேன் நீங்கள் செய்தவை என்ன?
இப்படி அடுக்கடுக்காக பெருமையான வார்த்தைகளை பேசி பெரு மூச்சு விடுவோர் படிப்பினை பெற நபிகளார் (ஸல்) அவர்கள் கூறிய முன்னைய சமுதாயத்தில் இருந்த ஒரு நபிக்கும் அந்த சமூகத்துக்கும் நிகழ்ந்த நிகழ்வை நினைவூட்டுகின்றேன்…
ஹதீஸின் சுருக்கம்
ஸுஹைப் (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள், ஹுனைன் யுத்தத்திற்கு சென்ற போது பஜ்ர் தொழுதபின்னர் நபியவர்கள் எதையோ மெதுவாக கூறினார்கள். அப்போது ” மெதுவாக எதையோ கூறுகிறீர்களே” என்று கேட்டோம். அப்போது அவர்கள் “பெரும்படை பட்டாளம் வழங்கப்பட்ட ஒரு நபி தனது சமூகத்தைப் பார்த்து ” இவர்களுக்கு நிகராக யார் இருப்பர்? ” என்று கூறினார்கள்.
அப்போது அவருக்கு “மூன்று விடயங்களில் ஒன்றை உமது மக்களுக்கு தெரிவு செய்யுங்கள்.
1. விரோதிகளைச் சாட்டி விடுவது.
2. பசி
3. மரணம்
என்று (அல்லாஹ்வினால்) கூறப்பட்டது.
தனது மக்களுடன் ஆலோசித்துவிட்டு தொழ ஆரம்பித்தார்.
நபிமார்களுக்கு ஏதாவது அதிர்ச்சி ஏற்பட்டால், தொழுகையின் பக்கம் விரைவார்கள்.
இறுதியாக மரணத்தை தெரிவு செய்கிறார். மூன்று நாட்களில் எழுபதாயிரம் பேர் மரணமடைந்தார்கள். என்று நபியவர்கள் கூறிவிட்டு (அதனால்தான்) மெதுவாக பின்வரும் துஆவை ஓதினேன். என்றார்கள்.
اللهم بك أحاول وبك اصاول ولا حول ولا قوة الا بك.
இந்த செய்தியை ஸுஹைப் (ரழி) அவர்கள் வழியாக இமாம்களான இப்னு அபீஷைபா, மர்வஸீ, ஸர்ராஜ், அஹ்மத்,இஸ்மாயீலீ, ழியாஉ, நஸாயீ, இப்னு ஹிப்பான், பைஹகீ, ஆகியோர் ஒரு சம்பவத்துடன் பதிவு செய்துள்ளனர்.
ஒரு நபி இப்படி சொன்னதற்கே இந்த சோதனை என்றால் தம்முடைய கொஞ்ச அமல்களை, அறிவை வைத்து பெருமூச்சு விடுவோரின் நிலை என்னவாகும்…?
பெருமையடித்தல், மற்றவர்களை இழிவாக கருதுதல் போன்றவற்றுக்கு இது ஒரு சிறந்த உதாரணமாகும்.
அல்லாஹ் என்னையும் உங்களையும் இவ்வாறன விடயங்களிலிருந்து பாதுகாப்பானாக..