يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا ارْكَعُوْا وَاسْجُدُوْا وَ اعْبُدُوْا رَبَّكُمْ وَافْعَلُوْا الْخَيْرَ لَعَلَّكُمْ تُفْلِحُوْنَ۩
ஈமான் கொண்டவர்களே! நீங்கள் ருகூஃ செய்யுங்கள்; இன்னும் ஸஜ்தாவும் செய்யுங்கள்; இன்னும் உங்கள் இறைவனை வணங்குங்கள்; மேலும்: நீங்கள் வெற்றி பெரும் பொருட்டு, நன்மையே செய்யுங்கள்.
(அல்குர்ஆன் : 22:77)
—
இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹுமா கூறுகின்றார்கள்:
ஒருவருக்கு அருட்கொடைகளை அல்லாஹ் வழங்கி அதைவைத்து அவர் மக்களின் தேவையை பூர்த்தி செய்யவில்லையெனில் அல்லாஹ் அந்த நிஃமத்தை அவனை விட்டும் நீக்கிவிடுவான்.
தூதர் (ஸல்) அவர்களின் உபதேசங்கள்:
- ஒருவரின் சிரமத்தை நீக்கினால் அவன் சிரமத்தை அல்லாஹ் நீக்குகிறான்
- நோய் பட்டால் அவனை சந்தித்தல்
- அறியாமையை நீக்கி ஒருவருக்கு அறிவை வழங்குவது
- கடனை நீக்க உதவி செய்தல்
- முடியாதவர்களுக்கு உதவி செய்வது ஸதகா
- இயலாதவர்களின் சுமையை ஏற்றுவதும், சுமையை இறக்குவதும் ஸதகா
- வழி தெரியாதவர்களுக்கு வழியை காட்டுவது ஸதகா
- ஒருவரின் கவலையை போக்க ஆறுதல் சொல்லுவதும் ஸதகா
- அநாதைகளை பொறுப்பெடுத்தல்
- விதவைகளுக்கு உதவி செய்தல்
- நற்காரியங்களை ஏவுதல், துர்காரியங்களை தடுத்தலும் ஸதகா தான்
- பாதைக்கு இடையூறாக இருக்கும் கற்கள், முட்கள், மரங்களை அகற்றுவதும் தர்மம்
- முடியாதவர்களுக்கு பாத்திரத்தில் தண்ணீர் பிடித்துக் கொடுப்பதும் தர்மமாகும்
- கண்ணுத் தெரியாதவருக்கு பாதையை கடக்க வைத்து அவருக்கு உதவி செய்வதும் ஸதகா
இப்படி பல பணிகளை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்களுக்கு ஏவி இருக்கிறார்கள்.
— அப்துல் காதிர் மன்பஈ