அரச கொடுப்பனவு ஒன்றுக்கான ஆட்கள் தெரிவு அந்த இடத்தில் நடைபெற்றது.
பொதுமகன் ஒருவர்:-
“ஆட்டோவும் வைத்துக் கொண்டு தினமும் உழைக்கிறார்…
இந்தாளுக்கு எப்படி சேர் நிவாரணம் கொடுப்பீங்க…”
மற்றவர்:-
“வாகனம் என்கிட்ட இருக்குறது உண்மைதான்…
ஆனா, அது என்ட பெயர்ல இல்லயே…”
இரண்டு பொது மகன்களுக்கிடையிலும் சிக்கிக்கொண்டு முழிக்கிறார் அரச உத்தியோகத்தர்.
அரச நிவாரணங்கள் வீடுதேடிப் போனாலும், என்னைவிடத் தகுதியானவர்கள் பலர் இருக்கின்றார்கள். எனக்கூறி, பெற்றுக் கொள்ள மறுத்த இஸ்லாமிய வரலாறுகள் நிறைய உண்டு. ஆனால் கடின வார்த்தைகளை முதலீடு செய்து, சட்டம்பேசி, சப்தமிட்டுப் பெறும் நிவாரணங்கள் அவரின் பொருளில் இலாபத்தைக் கொடுத்திருக்கலாம். ஆனால், மறுமை வாழ்வில் பெரும் நஷ்டத்தைக் கொடுக்கப் போகின்றது என்ற கவலையுடன் நகர்ந்தேன்.
– பர்சானா றியாஸ்