– அல் ஹாபிழ் இன்திகாப் உமரி
1) முஃஜிஸா என்றால் என்ன..?
நபிமார்கள் அல்லாஹ்வின் அனுமதி கொண்டு நுபுவ்வத்தை உண்மைப்படுத்தும் முகமாக அவ்வப்போது செய்து காட்டிய அற்புத நிகழ்வுகள் முஃஜிஸாவாகும்.
இதை பொறுத்த வரை எந்த நபியும் சுயமாக எந்த அற்புதத்தையும் செய்ய வில்லை அவ்வாறு அவர்களால் சுயமாக செய்யவும் முடியாது அதே சமயம் தன்னால் அற்புதங்களை நிகழ்த்த முடியும் என்று எந்த ஒரு நபியும் வாதிடவுமில்லை அல்லாஹ்வின் கட்டளை வரும் போது அவ்வப்போது செய்து கிண்பித்தார்கள் .
அல்லாஹ் கூறுகின்றான்
وَلَقَدْ اَرْسَلْنَا رُسُلًا مِّنْ قَبْلِكَ وَ جَعَلْنَا
لَهُمْ اَزْوَاجًا وَّذُرِّيَّةً وَمَا كَانَ لِرَسُوْلٍ اَنْ يَّاْتِىَ بِاٰيَةٍ اِلَّا بِاِذْنِ اللّٰهِ لِكُلِّ اَجَلٍ كِتَابٌ
(நபியே!) நிச்சயமாக உமக்கு முன்னரும், நாம் தூதர்களை அனுப்பி வைத்தோம்; அவர்களுக்கும் மனைவியரையும், சந்ததிகளையும் நாம் ஏற்படுத்தியிருந்தோம்; மேலும், எந்தத் தூதரும் அல்லாஹ்வின் அனுமிதியில்லாமல் எந்த அத்தாட்சியையும் கொண்டுவந்ததில்லை; ஒவ்வொரு தவணைக்கும் ஒரு (பதிவு) ஏடு உள்ளது.
(அல்குர்ஆன் :? 13:38)
நபிமார்களின் வாழ்வில் அல்லாஹ் பல அற்புத நிகழ்வுகளை அவ்வப்போது ஏற்படுத்தி இருந்தும் கூட அவர்கள் தங்களுக்கு வந்த நெருக்கடிகளின் போது சுயமாக அற்புதங்களை வெளிக்காட்டி தப்பிக்க முடிய வில்லை காரணம் நபியாக இருந்தால் கூட அவரால் சுயமாக எதையும் செய்ய முடியாது இதற்கு நபிமார்களின் வாழ்வில் நிகழ்ந்த சோதனைகள் சான்று
?உதாரணங்கள் சில?
நபி நூஹ் அலை அவர்களுக்கு தனது மகனை வெள்ள பெருக்கில் இருந்து காத்து கொள்ள முடிய வில்லை.
நபி யூனுஸ் அலை அவர்களால் தன்னை மீன் விழுங்கி விடாது காத்துக் கொள்ள முடிய வில்லை.
நபி அய்யூப் அலை அவர்களுக்கு ஏற்பட்ட நோயை தன்னால் குணப்படுத்தி கொள்ள முடிய வில்லை.
நபி முஹம்மத் ஸல் அவர்களால் தனது பல்லை எதிரிகளை விட்டு உஹதில் காத்துக் கொள்ள முடிய வில்லை.
அற்புதங்களுக்கு சொந்தக்காரர்களான நபிமார்களால் கூட தங்களை காத்துக் கொள்ள முடிய வில்லை என்பதற்கு சான்றாக
இப்படி பல சம்பவங்களை அடுக்கி கொண்டே போகலாம்.
2) கராமத் பற்றிய சமூக பார்வையும் தெளிவும்
கராமத் என்றால் சங்கை மரியாதை என்று பொருள்.
கராமத் என்ற ஒன்று உள்ளதா என்று கேட்டால் ஆம் உள்ளது என்பதுவே நம் பதில்
கராமத் என்றால் என்ன.?
கராமத் என்பது நல்லடியார்களின் வாழ்வில் அவர்கள் எதிர்பார்க்காது அல்லாஹ் நிகழ்த்திக் காட்டும் சில உதவிகள் ,
முஹ்ஜிஸாவுக்கும் கராமத்துக்கும் உள்ள வித்தியாசம்
முஹ்ஜிஸா என்றால் நபிமார்கள் சவாலாக அல்லாஹ்வின் நாட்டப்படி செய்து காண்பித்தவை.
கராமத் என்றால் எதிர்பாராது நல்லடியார்களின் வாழ்வில் அல்லாஹ்வின் நாட்டப்படி நிகழ்ந்தவை.
உதாரணம்:
மர்யம் (அலை) அவர்களின் வாழ்வில் நிகழ்ந்தவை அவர்கள் ஒரு நபியில்லை அல்லாஹ்வின் பொறுத்தத்தை பெற்ற முஃமினான பெண்களின் முன்மாதிரி.
فَتَقَبَّلَهَا رَبُّهَا بِقَبُوْلٍ حَسَنٍ وَّاَنْبَتَهَا نَبَاتًا حَسَنًا ۙ وَّكَفَّلَهَا زَكَرِيَّا كُلَّمَا دَخَلَ عَلَيْهَا زَكَرِيَّا الْمِحْرَابَۙ وَجَدَ عِنْدَهَا رِزْقًا قَالَ يٰمَرْيَمُ اَنّٰى لَـكِ هٰذَا قَالَتْ هُوَ مِنْ عِنْدِ اللّٰهِ اِنَّ اللّٰهَ يَرْزُقُ مَنْ يَّشَآءُ بِغَيْرِ حِسَابٍ
அவளுடைய இறைவன் அவள் பிரார்த்தனையை அழகிய முறையில் ஏற்றுக் கொண்டான்; அக்குழந்தையை அழகாக வளர்த்திடச் செய்தான்; அதனை வளர்க்கும் பொறுப்பை ஜகரிய்யா ஏற்றுக்கொள்ளும்படி செய்தான். ஜகரிய்யா அவள் இருந்த மிஹ்ராபுக்குள் (தொழும் அறைக்குப்) போகும் போதெல்லாம், அவளிடம் உணவு இருப்பதைக் கண்டார், “மர்யமே! இ(வ்வுணவான)து உனக்கு எங்கிருந்து வந்தது?” என்று அவர் கேட்டார்; “இது அல்லாஹ்விடமிருந்து கிடைத்தது – நிச்சயமாக அல்லாஹ் தான் நாடியவர்களுக்குக் கணக்கின்றி உணவளிக்கின்றான்” என்று அவள்(பதில்) கூறினாள்.
(அல்குர்ஆன் : 3:37)
இது போல் இன்னும் பல உதாரணங்கள் உள்ளது
பார்க்க :
“ஹுபைப் ரழி அவர்களின் வாழ்வில்
நடந்த சம்பவம் (புகாரி)”
“ஜுரைஜ் என்பவரின் வாழ்வில் நடந்த சம்பவம் (புகாரி)”
இவர்கள் அனைவரும் அல்லாஹ் நல்லடியார்கள் என்று அடையாள படுத்தியோர் இன்று ஒரு சிலர் அவ்லியா என்று நம்பி இருப்போர் அவ்வாறானவர்கள் இல்லை.
நபிகளார் ஸல் அவர்களுக்கு கூட மறைவான வற்றை அறியும் அறிவை அல்லாஹ் கொடுக்க வில்லை இதை நபி ஸல் அவர்களே கூறி இருக்க இன்று சமூகத்தால் அவ்லியாவாக பார்கப்படுவோர் யார் ? நபியை விட மேலானவர்களா ???
அல்லாஹ் கூறுகின்றான்
قُلْ لَّاۤ اَقُوْلُ لَـكُمْ عِنْدِىْ خَزَآٮِٕنُ اللّٰهِ وَلَاۤ اَعْلَمُ الْغَيْبَ وَلَاۤ اَقُوْلُ لَـكُمْ اِنِّىْ مَلَكٌ اِنْ اَتَّبِعُ اِلَّا مَا يُوْحٰٓى اِلَىَّ قُلْ هَلْ يَسْتَوِى الْاَعْمٰى وَالْبَصِيْرُ اَفَلَا تَتَفَكَّرُوْنَ
(நபியே!) நீர் கூறும்: “என்னிடத்தில் அல்லாஹ்வின் பொக்கிஷங்கள் இருக்கின்றன என்று நான் உங்களிடம் கூறவில்லை. மறைவானவற்றை நான் அறியமாட்டேன்; நிச்சயமாக நான் ஒரு மலக்காக இருக்கின்றேன் என்றும் நான் உங்களிடம் சொல்லவில்லை; எனக்கு (வஹீயாக) அறிவிக்கப்பட்டதைத் தவிர (வேறு எதையும்) நான் பின்பற்றவில்லை.” இன்னும் நீர் கூறும்: “குருடனும் பார்வையுடையவனும் சமமாவாரா? நீங்கள் சிந்திக்க வேண்டாமா?”
(அல்குர்ஆன் :? 6:50)
وَعِنْدَهٗ مَفَاتِحُ الْغَيْبِ لَا يَعْلَمُهَاۤ اِلَّا هُوَ وَيَعْلَمُ مَا فِى الْبَرِّ وَالْبَحْرِ وَمَا تَسْقُطُ مِنْ وَّرَقَةٍ اِلَّا يَعْلَمُهَا وَلَا حَبَّةٍ فِىْ ظُلُمٰتِ الْاَرْضِ وَلَا رَطْبٍ وَّلَا يَابِسٍ اِلَّا فِىْ كِتٰبٍ مُّبِيْنٍ
அவனிடமே மறைவானவற்றின் திறவு கோல்கள் இருக்கின்றன. அவற்றை அவனன்றி எவரும் அறியார். மேலும் கரையிலும் கடலிலும் உள்ளவற்றையெல்லாம் அவன் அறிவான்; அவன் அறியாமல் ஓர் இலையும் உதிர்வதில்லை. பூமியின் (ஆழத்தில் அடர்ந்த) இருள்களில் கிடக்கும் சிறு வித்தும், பசுமையானதும், உலர்ந்ததும் (எந்தப் பொருளும்) தெளிவான (அவனுடைய) பதிவேட்டில் இல்லாமலில்லை.
(அல்குர்ஆன் : ?6:59)
உண்மையில் ஒருவரின் வாழ்வில் காராமத் ஒன்று நிகழ்ந்து விட்டது என்றால் அவர் அதை வெளியே கூறி பெருமைப்பட மாட்டார் அதன் பின் அவரின் இறையச்சம் அதிகரிக்கவே செய்யும் அதை மக்களிடம் சொல்லி மக்களை ஷிர்க்கை நோக்கி அழைக்க மாட்டார்.
ஆனால் இன்று சிலர் பொய்யான பல அற்புதங்களை தனக்கு நிகழ்ந்ததாக கூறி அல்லது தான் விரும்பும் மதிக்கத்தக்க நபருக்குநிகழ்ததாக கூறி மக்களை வழிகேட்டின் பால் அழைப்பதை பார்கின்ரோம்.
இதில் பெரும் வேடிக்கை என்னவெனில் கராமத்தை முஃஜிஸாவை போல் இதோ பாருங்கள் என்று சொல்லி விட்டு செய்யும் ஒரு செயலைபோன்று காண்பிப்பது என்பது இவர்களின் அறிவீனத்தை இவர்களே வெளிச்சம் போட்டு காண்பிக்கும் செயலாகும்.
முஹ்ஜிஸாக்களை அல்லாஹ்வின் அனுமதி கொண்டு வெளிப்படுத்திய நபி ஸல் அவர்களுக்கு கூட காஃபிர்கள் கூறுவதை செய்து காட்ட முடியவில்லை
- அல்லது தங்கத்தால் உமக்கு ஒரு வீடு இருக்க வேண்டும். அல்லது வானத்தில் நீர் ஏற வேண்டும். நாங்கள் வாசிக்கும் விதமாக எங்களிடம் ஒரு புத்தகத்துடன் இறங்கினால் தவிர நீர் ஏறிச் சென்றதை நம்ப மாட்டோம் (எனவும் கூறுகின்றனர்) “என் இறைவன் தூயவன்.10 நான் மனிதனாகவும், தூதராகவுமே இருக்கிறேன்” என்று269 (முஹம்மதே!) கூறுவீராக!
திருக்குர்ஆன் ? 17:93
ஒருவரின் வாழ்வில் அற்புதங்கள் நிகழ்வது தான் அவர் அவ்லியா என்பதற்கு சான்று எனில் தஜ்ஜால், ஸாமிரி போன்ரோர் தான் மிகப்பெரிய அவ்லியா என்று கூற வேண்டும்
ஒருவரின் வாழ்வில் கராமத் வெளிப்பட்டால் கூட அது அவருக்கும் அல்லாஹ்வுகும் மத்தியில் உள்ள ஒருவிடயம் அதற்காக நாம் அவரை பின்பற்ற வேண்டியதில்லை.
இன்று சாதாரண விடயங்களுக்கு எல்லாம் ஒரு சிலரை அவ்லியா என்று பின்பற்றி வணங்குவோர் தஜ்ஜால் வரும் காலத்தில் இருந்தால் இவர்களின் ஈமான் என்னவாகும் என்பதை பற்றி நான் சொல்லித் தான் நீங்கள் விளங்க வேண்டியதில்லை.
رَبَّنَا لَا تُزِغْ قُلُوبَنَا بَعْدَ إِذْ هَدَيْتَنَا وَهَبْ لَنَا مِن لَّدُنكَ رَحْمَةً ۚ إِنَّكَ أَنتَ الْوَهَّابُ
எங்கள் இறைவா! எங்களுக்கு நேர்வழி காட்டிய பின் எங்கள் உள்ளங்களைத் தடம் புரளச் செய்து விடாதே..! எங்களுக்கு உன் அருளை வழங்குவாயாக.! நீ மாபெரும் வள்ளல்.
அல் குர்ஆன் 3:8
✍இவன்
அல் ஹாபிழ் இன்திகாப் உமரி
அட்டுலுகம
2019/04/13