தொடர்-02
பரக்கத் செய்யப்பட்ட பூமியில் வாழும் சபிக்கப்பட்ட மனிதர்கள்.
உலகில் உள்ள பல பிரதேசங்கள் பரகத் நிறைவான இறையருள் செய்யப்பட்ட பிரதேசங்களாகும்.
அவற்றில் ஷாம், பாலஸ்தீனம், மக்கா, மதீனா போன்ற பிரதேசங்கள் இடம் பெற்றுள்ளன என்பதை நாம் அறிவோம்.
அக்ஸாவையும் அதைச் சூழவுள்ள பகுதிகளையும் அல்லாஹ் இதில் உள்ளடக்கியும் சபிக்கப்பட்ட யூதர்களை வாழ வைத்துள்ளான். அது அவனது நியதி!
بَارَكْنَا حَوْلَهُ (الإسراء/ ١)
நாம் அதனை (அக்ஸாவை)ச் சூழவுள்ள சுற்றுப் புறங்களில் பரகத் செய்திருக்கிறோம்.
(அல்குர்ஆன் : 17:1)
وَلِسُلَيْمَانَ الرِّيحَ عَاصِفَةً تَجْرِي بِأَمْرِهِ إِلَى الْأَرْضِ الَّتِي بَارَكْنَا فِيهَا ۚ وَكُنَّا بِكُلِّ شَيْءٍ عَالِمِينَ (الأنبياء/٨١)
ஸுலைமானுக்கு வேகமான காற்றையும் நாம் (வசப்படுத்திக் கொடுத்திருந்தோம்). அது அவருடைய உத்தரவின்படி மிக்க பாக்கியம் பெற்ற ஊருக்கு (ஷாம்- பாலஸ்தீனுக்கு) அவரை அது எடுத்து)ச் செல்லும். (அல்அன்பியா-81)
وَنَجَّيْنَاهُ وَلُوطًا إِلَى الْأَرْضِ الَّتِي بَارَكْنَا فِيهَا لِلْعَالَمِينَ ( الأنبياء/ ٧١)
அவரையும் (இப்ரஹீமையும்) (அவருடைய சகோதரர் மகன்) லூத்தையும் நாம் பாதுகாத்து, உலக மனிதர்களுக்கு பெரும் பாக்கியம் அடையக் கூடியதாக நாம் செய்திருக்கும் (பைத்துல் முகத்தஸ் என்னும்) ஊரளவில் கொண்டு வந்து சேர்த்தோம்.(அல்அன்பியா-71)
يَا قَوْمِ ادْخُلُوا الْأَرْضَ الْمُقَدَّسَةَ الَّتِي كَتَبَ اللَّهُ لَكُمْ وَلَا تَرْتَدُّوا عَلَىٰ أَدْبَارِكُمْ فَتَنقَلِبُوا خَاسِرِينَ
[المائدة/٢١]
“என் சமுதாயமே! அல்லாஹ் உங்களுக்கு விதித்த தூய்மையான இப்பூமியில் நுழையுங்கள்! உங்கள் முதுகுக்குப் பின் புறங்காட்டி ஓடாதீர்கள்! (அவ்வாறு ஓடினால்) நட்டமடைந்தவர்களாவீர்கள்!” (என்றும் மூஸா கூறினார்) (அல்மாயிதா :21)
போன்ற குர்ஆன் மற்றும் ஹதீஸ் வசனங்கள் பாலஸ்தீன மண்ணின் சிறப்பை எடுத்துக் கூறுகின்றன.
இந்த பூமியில் வாழப் பாக்கியம் பெற்ற யூதர்கள் அல்லாஹ்வையும் அவனது தூதரையும் இறைவிசுவாசிகளையும் நோவித்ததன் விளைவாக சபிக்கப்பட்டனர் என குர்ஆன் மற்றும் ஹதீஸ்கள் குறிப்பிடுகின்றன.
இருந்தும் யூதர்கள் பரகத் செய்யப்பட்ட பூமியில் வாழவைக்கப்பட்டும் பின்வரும் நிலையில் வாழ்வதே இதன் கொடுமை!
யூத, கிரிஸ்தவர்கள் தம்மை
وَقَالَتِ الْيَهُودُ وَالنَّصَارَىٰ نَحْنُ أَبْنَاءُ اللَّهِ وَأَحِبَّاؤُهُ ۚ قُلْ فَلِمَ يُعَذِّبُكُم بِذُنُوبِكُم ۖ (المائدة/١٨)
அல்லாஹ்வின் ஆண்மக்கள், அவனது நேசர்கள் எனக் கூறிய போது அப்படியானால் அல்லாஹ் உங்களை
உங்கள் பாவத்திற்காக
ஏன் தண்டிக்க வேண்டும்? (அல்மாயிதா-18) எனக் குர்ஆன் கேட்டது.
நபிமார்களையும் இறை விசுவாசிகளையும் கொலை செய்த கொலைகாரக் கூட்டம் என்பதை குர்ஆன் ஹதீஸ்களில் தெளிவாக கூறப்பட்டுள்ளது.
يقتلون الأنبياء بغير حق (آل عمران/١١٢)
எந்தவிதமான ஆதாரமும் இன்றி நபிமார்களைக் கொலை செய்வார்கள்,
يأكلون الربا
வட்டியை உண்ணுவார்கள்,
وَأَخْذِهِمُ الرِّبَا وَقَدْ نُهُوا عَنْهُ وَأَكْلِهِمْ أَمْوَالَ النَّاسِ بِالْبَاطِلِ [النساء:160-161]
அவர்கள் வட்டிக் கொடுக்கல் வாங்கலில் இருந்து தடுக்கப்பக்டும் அதனை எடுத்ததாலும் மனிதர்களின் பணத்தை தவறான வழியில் உண்பதாலும் (சபிக்கப்பட்டனர்) ( அந்நிஸா- 160-161).
ليأكلون أموال الناس بالباطل
அவர்கள் மக்களின் பணங்களைத் தவறான வழியில் உண்பார்கள்,
لعنهم الله
அல்லாஹ் அவர்களை சபித்தான்,
قُلْ هَلْ أُنَبِّئُكُم بِشَرٍّ مِّن ذَٰلِكَ مَثُوبَةً عِندَ اللَّهِ ۚ مَن لَّعَنَهُ اللَّهُ وَغَضِبَ عَلَيْهِ وَجَعَلَ مِنْهُمُ الْقِرَدَةَ وَالْخَنَازِيرَ وَعَبَدَ الطَّاغُوتَ ۚ أُولَٰئِكَ شَرٌّ مَّكَانًا وَأَضَلُّ عَن سَوَاءِ السَّبِيلِ (المائدة/٦٠)
அல்லாஹ்விடம் அதைவிடக் கெட்டவனை உமக்கு அறிவிக்கட்டுமா ? அவன்தான் அல்லாஹ் அவனை சபித்து, அவன் மீது கோபித்துக் கொண்டவன்…
(பார்க்க- அல்மாயிதா- 60).
وجعل منهم القردة والخنازير
அவர்களில் உள்ளோரை குரங்குகள், பன்றிகளாக அல்லாஹ் மாற்றினான்,
“وَلَقَدْ عَلِمْتُمُ الَّذِينَ اعْتَدَوْا مِنكُمْ فِي السَّبْتِ فَقُلْنَا لَهُمْ كُونُوا قِرَدَةً خَاسِئِينَ” {البقرة:65}
சனிக்கிழமை தினத்தில் உங்களில் அத்துமீறியோரைப் பற்றி நீங்கள் அறிவீர்கள். இழிவடைந்த குரங்குளாக மாறுங்கள் என நாம் அவர்களுக்கு கூறினோம். (அல்பகரா-65 )
ஈஸா நபியைக் கொலை செய்ய முயற்சித்து அதில் படுதோல்வி கண்டவர்கள் போன்ற பல்வேறுபட்ட செய்திகளோடு நபிமார்களின் நாவினால் சபிக்கப்பட்ட மறுமையிலும் உருப்படாத கூட்டம் என்பதை பின்வரும் குர்ஆனிய வசனத்தின் மூலம் அறிந்து கொள்ளலாம்.
لُعِنَ الَّذِينَ كَفَرُوا مِن بَنِي إِسْرَائِيلَ عَلَىٰ لِسَانِ دَاوُودَ وَعِيسَى ابْنِ مَرْيَمَ ۚ ذَٰلِكَ بِمَا عَصَوا وَّكَانُوا يَعْتَدُونَ . (المائدة/٧٨)
இஸ்ரேலிய சந்ததிகளில் உள்ளவர்கள் (நபிமார்களான) தாவூத் மற்றும் மர்யமின் மகன் ஈஸாவின் நாவினால் சபிக்கப்பட்டனர். (அது) அவர்கள் செய்த பாவத்திற்காகவும் அத்துமீறியதற்காவும் ஆகும். (அல்மாயிதா- 78.)
فبما نَقْضِهِم مِّيثَاقَهُمْ لَعَنَّاهُمْ وَجَعَلْنَا قُلُوبَهُمْ قَاسِيَةً ۖ يُحَرِّفُونَ الْكَلِمَ عَن مَّوَاضِعِهِ ۙ وَنَسُوا حَظًّا مِّمَّا ذُكِّرُوا بِهِ [المائدة/١٣]
அவர்கள் தமது உடன்படிக்கைகளை முறித்துக் கொண்டதாலும் நாம் அவர்களை சபித்தோம். மேலும் அவர்களின் இதயங்களை இறுக்கமானதாகவும் ஆக்கினோம். அவர்கள் வேத வசனங்களை அதன் சரியான இடத்தில் இருந்து திரிபுபடுத்திக் கூறுவார்கள். அவர்களுக்கு எதைக் கொண்டு ஞாபகமூட்டப்பட்டதோ அதை (இறைகட்டளையை) மறந்து செயல்பட்டனர்.(அல்மாயிதா- 13)
யூதர்களைப் புரிய இதை விட வேறு வசனம் வேண்டியதில்லை.
سَمَّاعُونَ لِلْكَذِبِ أَكَّالُونَ لِلسُّحْتِ (المائدة/٤٢)
பொய்களையே முழுமையாக செவிமடுப்பார்கள், ஹராமான வழியில் உண்ணுவார்கள்.(அல்மாயிதா-42)
யூத மதகுருவாக இருந்து இஸ்லாமைத் தழுவிய அப்துல்லாஹ் பின் ஸலாம் (ரழி) அவர்கள் :
قَالَ يَا رَسُولَ اللَّهِ إِنَّ الْيَهُودَ قَوْمٌ بُهُتٌ ( البخاري)
அல்லாஹ்வின் தூதரே! யூதர்கள் பொய்யில்திலைத்த சமூகம் என சாட்சியம் கூறினார்கள். (புகாரி)
அல்லாஹ்வின் தூதரின் மரண வேளையில்:
«لَعْنَةُ اللَّهِ عَلى اليَهُودِ والنَّصارى اتَّخَذُوا قُبُورَ أنْبِيائِهِمْ ((وفي رواية “وصالحيهم)) مَساجِدَ» يُحَذِّرُ ما فَعَلُوا (متفق عليه).
தமது நபிமார்கள் , மற்றொரு அறிவிப்பில்: நபிமார்கள், மற்றும் நல்லடியார்களின் மண்ணறைகளை- சுஜூத்- சாஷ்டாங்கம்- செய்யும் இடமாக எடுத்துக் கொண்ட யூத, கிரிஸ்தவர்கள் மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டுமாக என அவர்களின் இந்த செயலை கண்டித்துக் கூறினார்கள் என அன்னை ஆயிஷா (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். (புகாரி, முஸ்லிம்)
இது போன்ற பல்வேறுபட்ட சான்றுகள் யூதர்கள் அல்லாஹ்வின் சாபத்தையும் இறைத் தூதர்களின் சாபத்தையும் பெற்ற எத்தனைக்கும் ஆகாத, கேடு கெட்ட கூட்டம் என்பதை நமக்கு உணர்த்துகின்றன.
மனிதர்களின் சாபத்தால் நாசமாகிப் போன பலரை கேள்விப்பட்டுள்ளோம் .
அப்படியானால் அல்லாஹ்வுடைய சாபம், நபிமார்களின் சாபத்தை பெற்றவன் நல்லவனாக இருப்பானா? என நாம் சிந்திக்க வேண்டும்.
வாலிபர்களே உங்களைத்தான்!
உங்கள் வணக்கம், ஆடை, முடி அலங்கார அமைப்பு, நடைமுறைப் பழக்க வழக்கம், கொடுக்கல் வாங்கல், திருமண முறை என வாழ்வியல் சார்ந்த நடைமுறைகளில் நீங்கள் யூத கிரிஸ்தவர்களை பின்பற்றுவோராக இருப்பின் தயவு செய்து பாலஸ்தீன முஸ்லிம்கள் பற்றிப் பேசாதீர்கள்.
ஏனெனில் அல்லாஹ் தனது திருமறையில்:
لا تتولوا قوما غضب الله عليهم
அல்லாஹ் கோபித்துக் கொண்ட
இவ்வாறானவர்களை நீங்கள் உற்ற தோழர்களாக எடுத்துக் கொள்ள வேண்டாம் எனக்
குறிப்பிடுகின்றான்.
நீங்கள் மண்ணறையில் அடங்கப்பட்டோரிடம் மன்றாடுபவரா? அது யூதப் பழக்கமாச்சே! அதில் இருந்து முதலாவது விடுபடுங்கள்.
நீங்கள் திருடுபவரா? பிறர் மீது அவதூறு கூறி, மார்க்கத்தின் பெயரிலோ மக்கள் பெயரிலோ பொய்யுரைப்பவரா?
பிறரின் சொத்துக்களை அபவகரிப்பவரா?
ஐவேளைத் தொழுகைகள் உட்பட ஏனைய கடமைகளை பாழ்படுத்துபவரா?
அப்படியானால் உங்கள் பிரார்த்தனை ஏற்கப்படும் முஸ்லிம்களாக முதலில் நீங்கள் மாறுங்கள்.
பின்னர் பாலஸ்தீன முஸ்லிம்களின் விடுதலைக்காக பேசுங்கள்.
தொடரும் இன்ஷா அல்லாஹ்!
எம்.ஜே . எம். ரிஸ்வான் மதனி
20/05/2021