Featured Posts

[03] அல்அக்ஸா (பைத்துல் மக்திஸ்) வரலாறும் அதன் வெற்றி வேண்டி நிற்கும் தகைமைகளும், ஆளுமைகளும், நிகழ்வுகளும்

தொடர்-03

உமர் (ரழி) அவர்களின் ஆட்சியில் வெற்றி கொள்ளப்பட்ட بيت المقدس

https://m.facebook.com/story.php?story_fbid=10219918576178414&id=1341973556

https://m.facebook.com/story.php?story_fbid=10219925307506693&id=1341973556

மறுமை நாளின் 6 அடையாளங்கள் பற்றிய ஹதீஸ் குறித்து சமூக வலைதளங்களில் பரவி வரும் தவறான விளக்கமும், அதற்குரிய சரியான தெளிவும்!

பரப்பப்படும் ஹதீஸின் வாசகம் :
‘இறுதி நாள் வருவதற்கு முன்பு (அதற்குரிய) ஆறு அடையாளங்கள் நிகழும். அவற்றை எண்ணிக் கொள்:

  1. என்னுடைய மரணம்.
  2. பைத்துல் மக்திஸ் வெற்றி கொள்ளப்படுதல்.
  3. ஆடுகளுக்கு வருகிற (ஒரு வகை) நோயைப் போன்று கொள்ளை நோய் ஒன்று வந்து உங்களைப் பீடிக்கும் (அதனால் ஏராளமானவர்கள் இறந்து போய் விடுவார்கள்)
  4. பிறகு செல்வம் பெருகிவழியும். எந்த அளவிற்கென்றால் ஒருவருக்கு நூறு தீனார்கள் கொடுக்கப்பட்ட பின்பும் (அதனை அற்பமாகக் கருதி) அவர் அதிருப்தியுடனிருப்பார்.
  5. பிறகு தீமையொன்று தோன்றும். அரபுகளின் வீடுகளில் அது நுழையாத வீடு எதுவும் இருக்காது.
  6. பிறகு (ரோமர்களுக்கும்) உங்களுக்குமிடையே சமாதான ஒப்பந்தம் ஒன்று ஏற்படும் (அதை மதிக்காமல்) அவர்கள் (உங்களை) மோசடி செய்து விடுவார்கள். பிறகு உங்களை எதிர்த்துப் போரிடுவதற்காக எண்பது கொடிகளின் கீழே (அணி வகுத்து) அவர்கள் வருவார்கள். ஒவ்வொரு கொடிக்கும் கீழே பன்னிரண்டாயிரம் போர் வீரர்கள் இருப்பார்கள்.

?ஆதாரம் : புகாரி 3176

முதலாவதாக ஸஹீஹுல் புகாரியில் வரும் இந்த ஹதீஸ் ஆதாரப்பூர்வமானது என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.
ஆனால் பின்வரும் தவறான விளக்கமொன்றை சமூக வலைதளங்களில் பரப்பி கொண்டு வருகின்றனர்.

தவறான விளக்கம் :

ஃபலஸ்தீனில் இன்று நடக்கும் போராட்டம், கொரோனா நோய் என்பற்றையே இந்த ஹதீஸ் குறிக்கின்றது. மற்றும் சில உலக நாடுகளைக் குறிப்பிட்டு அந்நாட்டின் நடவடிக்கைகளையே அரபுகளின் வீடுகளில் நுழையும் தீமை என்பதாகும்.

சரியான விளக்கம் :
ஸஹிஹுல் புகாரியில் உள்ள இந்த ஹதீஸிற்கு விளக்கம் அளித்த அறிஞர்கள், பைத்துல் முகத்தஸ் வெற்றி என்பது உமர் (ரழி) காலத்தில் பெறப்பட்ட வெற்றியையே குறிக்கும் என விளக்கமளித்துனர். கூறியுள்ளார்கள்.

மேற்கூறியவாறு தவறான விளக்கத்திற்கான பிரதான காரணம் மறுமை நாளின் அடையாளங்கள் நபியவர்களின் மரணத்திற்கு நீண்ட காலத்திற்குப் பின் நடைபெறும் என்ற நம்பிக்கையாகும். ஆனால் அது தவறாகும். சில அடையாளங்கள் நபியவர்களின் மரணத்தைத் தொடர்ந்தும் நடைபெறலாம். ஏனெனில் நபியவர்களின் மரணம் கூட மறுமையின் ஒரு அடையாளமே. அதற்கு இந்த நபிமொழியே சிறந்த ஆதாரமாகும்.
எனவே நபிகளாரின் மரணத்தை தொடர்ந்து நடைபெறக்கூடிய அனைத்து விஷயங்களும் இதில் உள்ளடங்கும். இப்போது நடந்து கொண்டிருக்கும் போரின் மூலம் இன்ஷா அல்லாஹ் வெற்றி கிடைத்தால் இது தான் நபிகளார் கூறிய வெற்றி எனக் கூற எவ்வித ஆதாரமும் ஹதீஸில் இல்லை, மாற்றமாக நபிகளாரின் மரணத்தை தொடர்ந்து உமர் ரழி காலத்தில் பெறப்பட்ட பைத்துல் முகத்தஸ் வெற்றியைக் குறிக்கும் என்பதுதான் மிகப் பொருத்தமான விளக்கமாக அமையும்.
உமர் ரழி அவர்களின் காலத்தின் பின்னர் ஸலாஹுத்தீன் அய்யூபி ரஹ் அவர்களின் மூலம் மீண்டுமொரு முறையும் அது வெற்றிகொள்ளப்பட்டது.
இந்த இரண்டு சந்தர்ப்பங்களில் முஸ்லிம்களால் வெற்றி கொள்ளப்பட்டுள்ளது.
ஹதீஸில் இந்த இரண்டையும் கூறாமல் நபிகளார் மூன்றாவது வெற்றியை கூறியிருப்பார்கள் என்பது ஆதாரமற்ற, சாத்தியமில்லாத ஒன்று. அதுமட்டுமின்றி அந்த ஹதீஸில் நபிகளாரின் மரணம் குறித்த அறிவிப்பு, தற்காலத்தில் இவர்களின் விளக்கம் பிழை என்பதற்கு துணைச் சான்றாக உள்ளது. நபியவர்களின் காலத்தில் அந்நிய ஆதிக்கத்தில் காணப்பட்ட பைதுல் முக்கத்தஸை உமர் ரழி அவர்களின் காலத்தில் வெற்றிகொள்ளப்படும் என்பதைக் கூறுவதே நபியவர்களின் நோக்கமாகும் என்பதை இதன் மூலம் புரியலாம்.

மூன்றாவதாக கொள்ளை நோய், இந்த நோயைப் பொறுத்த வகையில் இதுவும் உமர் (ரழி) காலத்தில் பைத்துல் முக்கதஸ் வெற்றி கொள்ளப்பட்ட பின்பு ஷாம் தேசத்தில் தோன்றிய ஒரு வகையான நோய். தாவூன் அம்வாஸ் என கூறப்பட்ட அந்த நோய் தான் ஹதீஸில் கூறப்பட்ட நோயாக இருக்கின்றது. இந்த கொரோனா என்ற நோயை நாம் அவ்வாறு கூற முடியாது ஏனெனில் இது கொள்ளை நோயாக அறிஞர்களால் அடையாளப்படுத்தப்படவில்லை. மாறாக இது ஒரு தொற்று நோயாகத்தான் கருதப்படுகிறது.
ஏனெனில் எங்களுக்கு தெரியும் “மதீனாவிற்குள் எந்த கொள்ளை நோயும் நுழைய முடியாது” என்பது தெளிவான நபிமொழி. ஆனால் கொரோனாத் தொற்று மதீனாவிலும் நுழைந்துவிட்டது. எனவே மேலே உள்ள ஹதீஸ் அதனைக் கூறவில்லை என்பதை மிகத் தெளிவாக அறியலாம்.

நான்காவதாக செல்வம் பெருகி வழியும் என்பதற்கு, உஸ்மான் (ரழி) காலத்தில் பல நாடுகள் வெற்றி கொள்ளப்பட்டு மக்கள் மத்தியில் பணப் புழக்கம் அதிகமாக இருந்ததைத்தான் அதிகமான அறிஞர்கள் கூறுகின்றனர். சில அறிஞர்கள் இது உஸ்மான் (ரழி) காலத்தையும் குறிக்கும், மறுமையின் நெருக்கத்தில் நடக்கும் காலத்தையும் குறிக்கும் என கூறுகின்றனர். ஆனால் Digital Currency என கூறுவது ஹதீஸில் இல்லாததை வலிந்து திணிப்பதாகும்.

ஐந்தாவது: தீமை ஒன்று தோன்றும் அரபுகளின் வீடுகளில் அது நுழையாத வீடு இருக்காது என்பதன் விளக்கம்,

நபித்தோழர்களின் இறுதி காலத்தில் அவர்களுக்குள் ஏற்பட்ட பிரச்சினைகளால் அவர்களுக்குள்ளாகவே சில போர்கள் ஏற்பட்டன. இந்த பித்னாவைத்தான் இது குறிப்பதாக அறிஞர்கள் குறிப்பிடுகின்றார்கள்.

இதில் சொல்லப்பட கூடிய ஆறாவது அம்சம்தான் இன்னும் நடைபெறவில்லை. இன்ஷா அல்லாஹ் எதிர்காலத்தில் நடக்கும் என அறிஞர்கள் விளக்கம் அளித்துள்ளார்கள்.அது எப்படி நடக்கும் என்பதைப் பற்றி வேறு ஹதீஸ்களை வைத்து விளக்கம் அளித்துள்ளார்கள்.

எனவே சமூக வலைத்தளங்களில் உலாவரும் வதந்தியை வைத்து யாரும் பதட்டப்பட வேண்டிய அவசியம் இல்லை. இது தற்காலத்தில் நடைபெறக் கூடிய விஷயத்தைத்தான் குறிக்கிறது என்பதை நாம் சிந்தித்து குழம்பி கொள்ள அவசியம் இல்லை. மேலும் சமூகவலைதளங்களில் பகிரப்படும் விளக்கமானது எவ்வித ஆதாரமும் அடிப்படையும் இல்லாத ஒரு தனிமனிதரின் சுயவிளக்கமாகும். குறித்த ஹதீஸுக்கு விரிவுரை வழங்கிய அறிஞர்களின் விளக்கங்களுக்கும் முரண்பட்டது என்பதையும் புரிந்துகொள்வோம்.

இது போன்ற தவறான விளக்கங்களால் குழப்பமடையாமல், தெளிவாக இருக்க கூடிய மக்களாக அல்லாஹ் நம் அனைவரையும் ஆக்குவானாக…

அல்லாஹ் மிக அறிந்தவன்…

  • அஷ்ஷெய்க் அப்துல்லாஹ் உவைஸ் மீஸானி (M.A., Ph.D – King Saud University, Riyadh -KSA)

மேலுள்ள இணைப்பில் பைத்துல் மக்திஸ் வெற்றி தொடர்பாக முன்னறிவிப்பு செய்யப்பட்ட ஸஹீஹான ஹதீஸின் பிழைமான விளக்கத்திற்கு ரியாத் மன்னர் சவூத் பல்கலைக்கழகத்தில் கலாநிதி கற்கை மேற்கொள்ளும் இலங்கையைச் சேர்ந்த மாணவர் ஷேக் அப்துல்லாஹ் உவைஸ் மீஸானியின் சரியான விளக்கத்தை அறிந்து கொள்ளலாம்.

மறுமை நாளுக்கு முன்னால் நிகழவிருக்கும் ஆறு முக்கிய நிகழ்வுகள் என்ற ஒரு ஹதீஸின் தொடரில் فتح بيت المقدس பைத்துல் மக்திஸ்) வெற்றி கொள்ளப்படுவதும் ஒன்று” என நபி (ஸல்) அவர்கள் கூறிய செய்தியானது தனது காலம் கூட அதற்கான பலத்தை எட்டவில்லை, தனது தோழர்களின் காலம் அதை எட்டும் என்ற பொருளில்தான் என்பதை அறிந்து கொள்ள வேண்டும்.

இறைத் தூதரின் காலத்தில் முன்னறிவிப்பு செய்யப்பட்டு இரண்டாம் கலீஃபா உமர் (ரழி) அவர்களின் ஆட்சியில் ஹிஜ்ரி 16ம் ஆண்டு (கி.பி. 636) அந்த முன்னறிவிப்பு நடந்தேறியது.

அந்த நிகழ்வு நடந்ததும்
கலீஃபா அவர்கள் தானே முன்வந்து அங்கு வாழ்ந்த கிரிஸ்தவ சமய மக்களோடு சிநேகபூர்வமாக உரையாடி அவர்களின் உயிருக்கும் உடைமைக்கும் உத்தரவாதமளித்து, அவர்களோடு சமாதான பாதுகாப்பு உடன்படிக்கை செய்த பின்னால் பைத்துல் மக்திஸின் திறப்பை பெற்றுக் கொண்டார்கள்.

பின் கலீஃபா அவர்கள் பைத்துல் மக்திஸின் கிப்லாத் திசையில் பள்ளிவாசல் ஒன்றையும் அமைத்தார்கள் என்றும்
யூதர்களிடம் இருந்து பைத்துல் மக்திஸை கிரிஸ்தவர்கள் கைப்பற்றிய பின் அவர்களிடம் இருந்து இரண்டாம் கலீஃபா அவர்கள் அங்கு வாழ்ந்த கிரிஸ்தவ மக்களின் உயிர்களுக்கு உத்தரவாதம் தருவதாக உறுதியளித்தும் ஜிஸ்யா வரிவிதித்தும் அதனைக் கைப்பற்றினார்கள் என்றும் இமாம் இப்னு கஸீர் ரஹி அவர்கள் தனது
البداية والنهاية
வில் குறிப்பிடுவதை
பார்க்கின்றோம்.
இந்த உடன்படிக்கையானது இஸ்லாமிய வரலாற்றில்
العهده العمرية
“உமரிய உடன்படிக்கை சாசனம்” என அறியப்படுகின்றது.

பைத்துல் மக்திஸின் வெற்றியை உறுதி செய்வதில் பிரதான தளபதியாக அம்று பின் ஆஸ் (ரழி) அவர்களின் பெயர் குறிப்பிடப்பட்டாலும்
தனது போர் யுக்திகளால் ஷாம் தேசத்தையே சுருட்டிய மாவீரரான
أمين هذه الأمة
“இந்த உம்மத்தின் நம்பிக்கை நட்சத்திரம்” என்ற சிறப்பு பெயருக்குரிய
أبو عبيدة عامر بن الجراح
(ரழி) அவர்களின் தலைமையில் காலித் பின் வலீத், யஸீத் பின் அபீசுஃப்யான், ஷுரஹ்பீல் பின் ஹஸனா போன்ற முக்கிய படைத் தளபதிகளின் பங்கு பற்றுதலோடு 35.000. முப்பத்தி ஜயாயிரம் எண்ணிக்கையிலான முஸ்லிம் படை வீரர்களோடு சென்று அபூ உபைதா (ரழி) அவர்கள் குத்ஸைக் கைப்பற்றினார்கள் என்ற வரலாற்றுக் குறிப்பும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

குறிப்பு:
☝️தெளிவானதும் ஆதாரபூர்வானதுமான இந்த வராலாற்றை அடிப்படையாகக் கொண்டு நோக்குகின்ற போது உமர் (ரழி) அவர்கள் உட்பட அனைத்து ஸஹாபாக்களும் சொர்க்கவாதிகள் என்பதை நபித் தோழர்களை நேசிக்கின்ற ஒரு முஸ்லிமால் மீண்டும் உறுதி செய்ய முடியுமாக இருக்கின்ற அதே வேளை, அவர்களை சாபமிடுகின்ற, கலீஃபாவையும் ஸஹாபா பெருமக்களையும் மதம் மாறியோராக, ஆட்சி அபகரிப்பாளர்களாக,
கொடியவர்களாக பாடம் போதிக்கின்ற வழிகெட்ட ஷீஆக்களாலோ
மண்ணறைகளை வாங்கிக் கொண்டு அவர்களின் நம்பிக்கை வழியில் பயணிப்போராலோ பாலஸ்தீன மண்ணில் நிலையான வெற்றியைப் பெறவோ பெற்ற வெற்றியைத் தக்க வைத்துக் கொள்ளவோ முடியாது என்பதே யதார்த்தமாகும்.

இரண்டாம் கலீஃபா உமர் (ரழி) அவர்களை நரகவாதியாக சித்தரிக்கின்ற ஷீஆக்களால் பாலஸ்தீனம் மீட்டப்படும் என்ற வாய்ச்சவடால்களால் ஷீஆ விளம்பரப் பலகை மாத்திரம் நிரம்பிக் காணப்படும் என்பதில் ஐமில்லை.

இந்த வெற்றியைத் தக்கவைக்க வக்கில்லாத, குத்ஸ் பற்றி அக்கறையில்லாத யூதப் பரம்பரையில் வந்தவர்களான நான்கு நூற்றாண்டுகளாக இஸ்லாமிய ஆட்சியை சீரழித்த ஃபாதிமிய்யா என்ற ஷீஆ குழுக்களின் ஆட்சி காலத்தில் பிரஞ்சு, மற்றும் தாத்தாதாரிய சிலுவை வணங்கிகளிடம் எழுபதாயிரம் முஸ்லிம்களின் உயிர்த்தியாகத்தோடு பைத்துல் மக்திஸ் 1099ல் பறிகொடுக்கப்பட்டு 88 ஆண்டுகள் சிலுவைப் போராளிகளின் ஆதிக்கத்தில் இருந்த குத்ஸை மாவீரர் சுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபீ (ரஹி) அவர்கள் ஷீஆக் கயவர்களை ஒழித்துக் கட்டிய பின்னால் கி.பி. 1187ல் பாலஸ்தீனம் மீண்டும் கைப்பற்றப்பட்டது.

தொடரும் இன்ஷா அல்லாஹ்

எம்.ஜே.எம். ரிஸ்வான் மதனி
21/05/2021

One comment

  1. JAFFER SIDIQUE J

    assalamu alaikkum .pls continue the article regarding Masjithul aksha.very clear explanation.Alhamdulillah.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *