மக்களிடையே பரவலாக வழக்கத்திலுள்ள பெரும்பாலான விளையாட்டுகள் ஹராமான காரியங்களை உள்ளடக்கியுள்ளன. அதில் ஒன்று Backgam Mon எனும் ஒருவகை விளையாட்டாகும். இதை விளையாட ஆரம்பித்தால் இது போன்ற பல விளையாட்டுகளுக்கு இது இட்டுச் செல்லும். பல சூதாட்டங்களுக்கு வழி திறந்து விடுகின்ற Backgam Mon எனும் இந்த விளையாட்டு குறித்து நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு எச்சரித்துள்ளார்கள்: ‘யார் Backgam Mon எனும் விளையாட்டை விளையாடுகின்றாரோ அவர் பன்றியின் இறைச்சியிலும் இரத்தத்திலும் கையை நுழைத்தவராவார். அறிவிப்பவர்: புரைதா (ரலி), நூல்: முஸ்லிம்.
‘Backgam Mon விளையாட்டை விளையாடியவர் அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் மாறு செய்து விட்டார்’ என்பதும் நபிமொழி. அறிவிப்பவர்: அபூமூஸா (ரலி), நூல்: அஹ்மத்