இந்தியாவை உலுக்கிய பெஸ்ட் பேக்கரி படுகொலைகள்:
வெறியர்களுக்கு ஆயுள் தண்டனை மும்பை நீதிமன்றம் தீர்ப்பு
காவி கேடிகளால் குஜராத் இனப்படுகொலையில் 14 பேர் கொளுத்தி கொல்லப்பட்ட பெஸ்ட் பேக்கரி நிகழ்வை யாராலும் மறக்க முடியாது.
அந்த வழக்கு குஜராத் மாநில வடோதரா விரைவு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு குற்றம்சாட்டப்பட்ட 21 பேரும் விடுவிக்கப்பட்டனர். இது இந்திய அளவில் கடும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது.
உறவினர்களை கொழுந்து விட்டு எரிந்த நெருப்பில் பரிகொடுத்த அபலைப் பெண் ஜஹீரா ஷேக்கின் பிறழ் வாக்குமூலமே குற்றவாளிகள் தப்ப காரணம் என்பதை மனித உரிமை போராளி தீஸ்தா செதல்வாட் ஜஹீரா ஷேக்கை தேசிய மனித உரிமை ஆணையத்திடமும் அன்றைய தலைமைத் தேர்தல் ஆணையர் ஜேம்ஸ் லிங்டோவிடம் ஆஜர் படுத்தி உண்மை வாக்குமூலத்தை வெளியிடச் செய்தார். அந்த வாக்குமூலத்தில் “தன்னையும் தனது குடும்பத்தைச் சேர்ந்த 37 சாட்சிகளையும் பாஜகவின் எம்.எல்.ஏ மது ஸ்ரீவத்ஸவா அச்சுறுத்தியதாகவும் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்ற அச்சத்தினாலேயே தானும் தனது தரப்பினரும்..
பெஸ்ட் பேக்கரி கொடூரக் கொலைகள் குறித்து நீதி மறு விசாரணைக்கு ஏற்பாடுகள் செய்ய வேண்டும் எனவும் உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது.
முறையீட்டினை ஏற்றுக் கொண்ட உச்சநீதிமன்றம் மும்பையில் பெஸ்ட் பேக்கரி நெருப்புக் கொலைகள் குறித்து மறு விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று வழிகாட்டும் உத்தரவைப் பிறப்பித்தது.
2002 பிப்ரவரி மாதம் நிகழ்ந்த குஜராத் இனப்படுகொலைகளின் கொடூரங்களில் ஒன்றான பெஸ்ட் பேக்கரி படுகொலைகள் தொடர்பான தீர்ப்பினை மும்பை அமர்வு நீதிமன்ற நீதிபதி நீதியரசர் அபய் திப்சே வழங்கியுள்ளார்.
இந்த வெறிச் செயலின் காரணகர்த்தாக்களாக குற்றம் சாட்டப்பட்ட 17 பேரில் 9 பேருக்கு ஆயுள் தண்டனையும் மீதம் உள்ள 8 பேரின் மீது போதுமான ஆதாரங்கள் இல்லாததால் விடுவிக்கப்பட்டும் தீர்ப்பு வழங்கப்பட்டது.
1. ராஜுபாய் தாமிர்பாய் பரியா
2. பங்கஜ் விரேந்தர் கிர் கோஸை
3. பகதூர் என்ற ஜிட்டு
4. சந்திர சிங் சவுகான்
5. ஜக்தீஷ் சுனிலால் ராஜ்புத்
6. தினேஷ் பூல் சந்த் ராஜ்பர்
7. சானாபாய் சிமன்பாய் பரியா
8. சுரேஷ் என்ற லாலு தேவ்ஜிபாய் வாசவா
9. சைலேஷ்
என்ற காவி பயங்கரவாதிகள் ஒன்பது பேருக்கும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
அவர்கள் ஆயுள் தண்டனை அனுபவிக்கும் முன்பாக இந்திய தண்டனைச் சட்டம் 143, 147, 324, 326 மற்றும் 148 என்ற பிரிவுகளின் கீழ் சட்டவிரோதமாகக் கூடுதல், தீய நோக்குடன் தீயிடல், கொடுங்காயம் விளைவிக்கும் எண்ணத்துடன் பயங்கர ஆயுதங்களை பயன்படுத்துதல் என்ற கடும் தண்டனைக்குரிய குற்றங்களை இழைத்துள்ளதால் ஆயுள் தண்டனையை அனுபவிக்கும் முன்பாக அவர்கள் முதல் 10 ஆண்டு கடுங்காவல் தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று நீதிபதி தனது தீர்ப்பில் கூறியிருக்கிறார்.
இந்த வழக்கு குஜராத் வடோதரா விரைவு நீதிமன்றத்திலிருந்து மாற்றப்பட்டு மும்பை அமர்வு நீதிமன்றத்திற்கு மறு விசாரணைக்கு வந்தபோது கூட ஜஹீரா ஷேக் மீண்டும் பிறழ் சாட்சி அளித்தார். இது தொடர்பாக ஜஹீரா ஷேக் மற்றும் அவரது தாயார் ஹைருன் னிஸா, ஜஹீராவின் சகோதரர்கள் நுத்ஃபுல்லாஹ், நஸீபுல்லாஹ், ஜஹீராவின் சகோதரி ஸாஹிராவுக்கும் நீதியரசர் திப்சே விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.
ஜஹீரா வேண்டுமென்றே தவறான பொய்யான தகவல்களை, சாட்சியங்களைக் கூறி தீஸ்தா செடல் வாட்டின் நற்பெயருக்கு களங்கம் கற்பிக்க முயற்சித்ததாக குற்றம்சாட்டியும் இந்த நோட்டீஸ் அனுப்பப் பட்டுள்ளது.
இதற்கு ஜஹீராவும் அவரது தரப்பினரும் இரண்டு வாரத்திற்குள் பதில் அளிக்க வேண்டும் என்றும் உத்தரவிடப் பட்டுள்ளது.
ரூ.500 முதல், 10,000 வரை அபராதம் குற்றவாளிகளுக்கு விதிக்கப்பட்டது.
கொளுத்திக் கொல்லப்பட்டு இன்று வரை உடல் கூட கண்டுபிடிக்கப்படாத ஜஹீராவின் மாமா கவுசரின் மனைவி ஷாஜகானுக்கு 50,000 ரூபாய் இழப்பீட்டு தொகையாய் குற்றவாளிகள் வழங்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முதலில் ரூபாய் இரண்டு லட்சம் இழப்பீடாக தங்களுக்கு வழங்க வேண்டும் என்று பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் நீதிமன்றத்தில் கோரிக்கை வைக்கப் பட்டது. ஆனால் அந்த கொலைகாரப் பரதேசிகள் தங்களுக்கு அவ்வளவு தொகை கொடுக்க இயலாது என நீதிபதியிடம் கெஞ்சிய பிறகு 50,000 வழங்க நீதிபதி உத்தர விட்டார். நீதி மெல்ல கண் விழித்து பார்க்கிறது. மனித மிருகங்கள் வெலவெலத்து போயிருக்கின்றனர். அனைத்து இனப்படுகொலை யாளர்களையும் நீதியின் முன் மண்டியிட வைக்க வேண்டும் என்பதே நாட்டிலுள்ள நல்லோரின் விருப்பமாகும்.
நீதியின் வெற்றி
பெஸ்ட் பேக்கரி வழக்கின் தீர்ப்பு குறித்து தேசிய மனித உரிமை ஆணையத்தின் தலைவர் நீதியரசர் ஆனந்த் கூறும்போது இது நீதிக்கு கிடைத்த பெரும் வெற்றி என்றார்.
ஜஹீரா ஷேக்கிற்கு நோட்டீஸ் அளிக்கப்பட்டதை சுட்டிக்காட்டிய ஆனந்த் இதன் மூலம் சாமானிய மக்களுக்கு நீதித்துறையின் மீது நம்பிக்கை ஏற்பட வழி பிறக்கும் என்றார்.
இந்த தீர்ப்பின் மூலம் வலுவற்றவர்களின் (சிறுபான்மை சமூகம்) மீது தாக்குதல் தொடுப்பவர்களுக்கு சரியான பாடம் கற்பிக்கப்பட்டுவிட்டது என்றார் முன்னாள் உச்சநீதிமன்ற வி.என்.காரே. ஒரு மாநிலத்தில் அரசுத் தரப்பே குற்றவாளிகளை தப்ப விட வழக்கு மாற்றப்பட்டு மற்றொரு மாநிலத்தில் விசாரித்து முடிக்கப்பட்டது வரலாற்று நிகழ்வு என மேலும் குறிப்பிட்டார்.
மறக்க முடியாத கண்ணீர் நினைவுகள்
2002 பிப்ரவரி 27ல் குஜராத் வடோதராவில் உள்ள ஹனுமான் தெஹ்ரியில் பெஸ்ட் பேக்கரி என்ற சிறுபான்மை இன நிறுவனம் தீயிட்டு கொளுத்தப்பட்டது. ஆயுதம் தாங்கிய காவி குண்டர்களின் இந்த வெறிச் செயலால் இந்தியாவே கொதிப்பில் ஆழ்ந்தது.
காவி பயங்கரவாதத்தின் கோர முகத்தை உலகம் அன்று கண்டது. 14 பேர் (இரண்டு குழந்தைகள்) உள்பட தாங்கள் எதற்காக கொல்லப்படுகிறோம் என்பதையே உணராமல் துடிதுடித்து இறந்தது இளகிய நெஞ்சங்களால் மறக்க முடியாத நிகழ்வல்லவா?
நீதியின் பயணம்
குஜராத்திலிருந்து பெஸ்ட் பேக்கரி நெருப்பு கொலை வழக்கை வேறு மாநிலத்திற்கு மாற்ற வேண்டும் என்று தேசிய மனித உரிமை ஆணையமும் ‘சிட்டிஸன் ஃபார் ஜஸ்டீஸ் அன்ட் பீஸ்’ இயக்கமும் சேர்ந்து ஒரு சிறப்பு மனுவை உச்சநீதிமன்றத்தில் சமர்ப்பிக்கிறது. 2004 ஏப்ரல் 12 அன்று தெற்கு மும்பையில் நீதி மறு விசாரணை செய்ய ஒரு தனி நீதிமன்றம் மும்பையில் அமைக்கப்படுகிறது.
அந்த தனி நீதிமன்றம் ஒவ்வொரு நாளும் விசாரணை நடத்தி 2004 டிசம்பர் 31 தேதிக்குள் நடத்தி முடிக்கப்பட வேண்டும் என்று கட்டளை பிறப்பிக்கிறது. தெற்கு மும்பையின் மஜ்கான் பகுதியில் அமைக்கப்படும் இந்த நீதிமன்றத்திற்கு கூடுதல் அமர்வு நீதிபதி அபய் திப்சே நியமிக்கப்படுகிறார். இதன் பணி இறுதிக்காலம் நான்கு முறை நீடிக்கப்படுகிறது.
மறு விசாரணைப் பணிகள் செப்டம்பர் 22ல் தொடங்கப்பட்டு 2004 அக்டோபர் 4லிருந்து 75 சாட்சிகள் விசாரிக்கப்பட்டு 7 பேர் எதிர் சாட்சி அளித்து வாக்குமூலங்கள் 3000 பக்கங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளன.
குஜராத் வடோதரா விரைவு நீதிமன்றத்தில் விசாரணை நடத்தப்பட்டபோது 73 பேர் மட்டுமே விசாரிக்கப்பட்டனர். பேக்கரியில் உள்ள மற்ற இரு தொழிலாளர்களின் சாட்சியங்களை பதிவு செய்யவில்லை என்பதை விசாரணை அதிகாரி பி.பி. கனானி கூறியபோதும் குஜராத் கொடுங்கோல் அரசு கண்டு கொள்ளவில்லை.
இப்போது மறு விசாரணையில் ஜஹீராவும் அவரது தாயாரும் முரண்பாடான தகவல்களைக் கூறத் தொடங்கினர். நவம்பர் 2-ஆம் தேதி இதற்கென ஜஹீரா அன்ட் கோ பிரத்தியேக செய்தியாளர் சந்திப்பையும் நடத்தினர். தீஸ்தா செதல் வாட் தன்னை கத்திமுனையில் மிரட்டி வாக்குமூலம் கொடுத்ததாகவும் மற்றும் அவரது தொடர் மிரட்டல்கள் எல்லை மீறியதாகவும் ஜஹீரா வகையறாக்கள் புகார் கூறினர். மனித உரிமை ஆர்வலர்கள் என்ற பெயரில் போலி பேர்வழிகள் உலாவுகிறார்கள் பார்த்தீர்களா என காவிக் கூட்டம் கூத்தாடியது.
ஜஹீராவின் பல்டிகளின் பின்னணி குறித்து விசாரிக்க உச்சநீதிமன்றம் ஒரு தனி குழுவை ஏற்படுத்தியது. அதன் மூலம் ஜஹீரா காவி கேடிகளின் கருவியாக செயல்பட்டது கண்டுபிடிக்கப்பட்டு சங்கும்பல் அம்பலப்படுத்தப்பட்டது.
பத்திரிகையாளர்கள் அண்ட முடியாத அளவுக்கு ஜஹீராவுக்கு பாதுகாப்பு போடப்பட்டு இந்துத்துவா வீரர்களின் (?) கட்டுப்பாட்டில் ஜஹீரா வைக்கப்பட்டார். சீப்பை ஒளித்து வைத்து விட்டால் திருமணத்தையே நிறுத்தி விடலாம் என்பதைப் போல சீப்பாக செயல்பட்ட ஹிந்துத்துவ கும்பலின் செயல் இன்று சிரிப்பாய் சிரிக்கிறது.
நன்றி: www.tmmkonline.org
இடுகைக்கு நன்றி அபூ உமர்.
இன்னமும் இந்த நாட்டில் நீதி நிலைத்திருக்கிறது என்று சற்றே ஆறுதல் கிடைத்தாலும், இந்தப் படுகொலையை முன்னின்று நடத்திய மோடி போன்ற கயவர்கள் இன்னமும் ஆட்சிக்கட்டிலில் அமர்ந்து உலாவருவதைப் பார்க்கும் போது மனம் பொருமுவதையும் தவிர்க்க இயலவில்லை.
இது போன்ற திட்டமிட்டப் படுகொலைகளை நிகழ்த்துவோர் நீதிக்கு முன் நிறுத்தப் பட்டுத் தண்டனை பெற்றால் தான் இந்திய நீதிமன்றங்கள் மீது மக்களுக்கு முழு நம்பிக்கை வரும்.
தாமதமானாலும் சட்டம் தனது கடமையை செய்திருக்கிறது.
வரவேற்க வேண்டிய செய்தி. இதே போன்ற நியாயமான தீர்ப்பு கோவை குண்டுவெடிப்பு வழக்கிலும் கிடைக்கும் என்று எதிர்பார்ப்போமாக…
Dear Abu Omar
Well Done. Now we have little bit hope about our judicial proceedings.
What is our Gujarat Modi doing now? Is he make any another master plan to Attack Muslim poor people in Gujaraat. Our Tamil Nadu Chief minister Jayalalitha was also appreciated Modi once a time. We still remember.
Anpudan
AsalamOne