Featured Posts

பொய் சத்தியம் செய்து விற்றல்..

பெருமைக்காக ஆடையை கரண்டைக்குக் கீழ் அணிதல், கொடுத்த தான தர்மங்களைச் சொல்லிக் காட்டுதல், பொய் சத்தியம் செய்து பொருட்களை விற்றல் போன்றவற்றுக்கு மறுமையில் கடுந்தண்டனை குறித்து..

68- மூன்று பேரை மறுமை நாளில் அல்லாஹ் ஏறெடுத்துப் பார்க்கவும் மாட்டான், அவர்களைத் தூய்மைப் படுத்தவும் மாட்டான். மேலும் அவர்களுக்குத் துன்பமிக்க வேதனையும் உண்டு. ஒருவன்,(மக்களின் பயணப்)பாதையில்-தேவைக்கு மிஞ்சிய தண்ணீரைப் பெற்றிருந்தும் வழிப்போர்கள் அதைப் பயன்படுத்த விடாமல் தடுத்து விட்டவன். இன்னொருவன், தன்(ஆட்சித்)தலைவரிடம் உலக ஆதாயத்திற்காகவே விசுவாசப் பிரமாணம் செய்து கொண்டவன், அவர் கொடுத்தால் (மட்டுமே) திருப்தியடைந்து, கொடுக்காமல் விட்டால் கோபம் கொள்பவன். மற்றொருவன், அஸர் தொழுகைக்குப் பிறகு(மக்கள் கடைவீதியில் திரளும் போது)தன் வியாபாரப் பொருளைக் காட்டி, எவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறெவனும் இல்லையோ அவன் மீது சத்தியமாக! இந்தப் பொருளுக்காக(இதைக் கொள்முதல் செய்யும் போது) நான் இன்ன(அதிக) விலையைத் தந்தேன். என்று கூறி, அதை ஒரு மனிதர் உண்மையென நம்பும்படி செய்தவன் (இப்படி வாடிக்கையாளரிடம் பொய் கூறி அவரை ஏமாற்றி, சொன்ன விலைக்கு அதை விற்றவன்) ஆவான்.

இதைக் கூறி விட்டு,எவர் அல்லாஹ்வுடன் செய்து கொண்ட உடன்படிக்கையையும் தம் சத்தியங்களையும் அற்ப விலைக்கு விற்று விடுகின்றார்களோ.. என்னும் இந்த(3:77) இறைவசனத்தை நபி(ஸல்) அவர்கள் ஓதினார்கள்.

புகாரி-2358: அபூஹூரைரா(ரலி)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *