Featured Posts

எரிகிற வீட்டில் பீடிக்கு நெருப்பு தேடுபவர்கள் – 2

தமிழ்மணம் திரட்டியின் தளக்கட்டுப்பாடுகளால் சிறிது காலம் அடங்கி இருந்த மதத் துவேசப் பதிவுகள் அவ்வப்போது தலை தூக்கவே செய்கின்றன. இக்கட்டுப்பாடுகள் மத/தனி மனிதத் தாக்குதல் நோக்கத்தோடு எழுதும் தனிப்பதிவுகளுக்கு மட்டுமே பொருந்தும் என்பதால் குறைந்த பட்சம் பின்னூட்டங்களிலாவது முஸ்லிம் வலைப்பதிவர்களை வம்புக்கு இழுக்காவிட்டால் சிலருக்குத் தூக்கமே வராது போலும்!

தமிழ் வலைப்பூவில் இஸ்லாமிய எதிர்ப்பைத் தனிப்பதிவாக பதிவது அல்லது பெயருக்குச் சிலவரிகளை எழுதி விட்டு, சம்பந்தப்பட்டச் செய்தியின் சுட்டியைக் கொடுப்பது அல்லது எதுவும் இல்லாத பட்சத்தில் பின்னூட்டம் வழியாக முஸ்லிம்களை விமர்சித்து நிஜமாகவே பின்னூட்டம் (!) இட்டுச் செல்வது . இவையே சில தமிழ் வலைப் பதிவர்களின் யுக்தியாக இருந்து வருகின்றது. சுருங்ககக் கூறின் பின்னூட்டமின்றி அல்பாயுசில் காணமல் போகும் வலைப்பதிவுகள், இஸ்லாமிய எதிர்ப்புவாதம் கலந்து எழுதினால் சில நாட்கள்/வாரங்கள் காலம் தள்ள முடியும் அல்லது பிரபலமாக முடியும் என்பது எழுதப் படாத விதியாகி விட்டது.

முன்பெல்லாம் (தற்போதும்கூட) அவதூறாகவும் அநாகரிகமாகவும் முஹம்மது நபியைத் திட்டித் தீர்ப்பதை முழுநேரத் தொழிலாகக் (?!) கொண்டுள்ள நேசகுமார், ஆரோக்கியம் போன்றவர்கள் தவிர்த்து படித்த பண்பாளராகக் சொல்லிக் கொண்ட கால்கேரி சிவா கூட, தான் அரேபிய நாடுகளில் (சவூதி மற்றும் அமீரகம்) பட்ட கஷ்ட நஷ்டங்களாகச் சொன்ன பதிவில் வெகு திறமையாக இஸ்லாத்தையும் இணைத்து விமர்சிக்கத் தவறவில்லை. தனி அனுபவங்களைக் கூட இப்படி காழ்ப்பாக எழுத யார்தான் பயிற்சி கொடுக்கிறார்களோ? (இவ்வளவையும் செய்துவிட்டு தனக்கு இஸ்லாமியர்கள் மீதோ இஸ்லாத்தின் மீதோ கோபமில்லை என்ற டிஸ்க்ளைய்மர் வேறு!)

அவரின் அரேபிய அனுபவ்ங்கள் பதிவில் நான் பின்னூட்டமிட்ட போது என் முகவரியும் முகமும் காட்டச் சொன்னவர், பிறகு அனாணிமஸ் பெயரில் துவேசமாகவும், அநாகரிகமாகவும் (முஸ்லிம்களை முக்கால்!? பசங்க, துளுக்கன்கள் என்ற வசைகளுடன்) ஏளனப் பின்னுட்டங்களை அனுமதித்தது அவரின் பெருந்தன்மையா அல்லது சம்பந்தப்பட்டவர்களின் முகவரியும் முகமும் அறிந்தவரா என்பது அவருக்கே வெளிச்சம்!

இஸ்லாமிய எதிர்ப்புவாதங்களில் அடிக்கடி விவாதிக்கப்படும் விடயங்களில் முக்கியமானவையாகத் தீவிரவாதம், தலாக், பெண்ணுரிமை ,பலதாரமணம் ஆகியவற்றைச் சொல்லலாம். இவற்றில் தீவிரவாதம் தவிர்த்து மற்றவற்றால் பிற மதத்தவருக்கு இஸ்லாமிய வழிகாட்டல்கள்/கலாச்சாரம் எந்தவிதத்தில் தீங்காக இருக்கின்றன என்பதை அறிவார்ந்தச் சான்றுகளுடன் விவாதிக்க யாரும் முன் வருவதில்லை.

தீவிரவாதத்தை மட்டும் முஸ்லிம்களுடன் இணைத்துச் சொல்வதில் அப்படி என்ன சுகம் காண்கிறார்களோ தெரியவில்லை! தீவிரவாதம் என்பது முஸ்லிம்களின் குலச்சொத்தா என்ன ? தீவிரவாதத்திற்கு அளவுகோல் அதனைச் செய்பவன் முஸ்லிம் பெயர் தாங்கியாக இருக்க வேண்டும் என்ற வரைமுறை வகுத்த மனிதநேயக் காவலர்கள் எவரோ? இவர்களால் எங்காவது முஸ்லிம் அல்லாத எவராவது ஒருவர் கொல்லப்பட்டால் அதற்கு இஸ்லாமிய மதத் தீவிரவாதம் என்று குதிப்பவர்கள், உலகின் பிற பகுதிகளில் அமெரிக்க-பிரிட்டன் இராணுவத்தால் கும்பல் கும்பலாகக் கொல்லப் படுவதற்கும் குஜராத்தில் முதலமைச்சரின் பூரண ஆசியுடன் இனச் சுத்திகரிப்பு செய்யப்படுவதற்கும் என்னவகைத் தீவிரவாதம் என்று விளக்கினால் நன்றாக இருக்கும்!

பெரும்பாலும் நேர்மையாக எழுதும் சிலரின் பின்னூட்டங்களில் கூட ஒட்டு மொத்த முஸ்லிம் வலைப்பதிவர்களும் இப்படுகொலையை கண்டிக்கவில்லை என்பது போல் ஒரு குற்றச்ச
ாட்டு இருந்தது. இதுபோன்ற சம்பவங்களின் போழ்து முஸ்லிம்களில் பலர் மவுனம் காப்பது அதனை ஆதரிப்பதாக அர்த்தமாகுமா? பின்னூட்டமிட்ட சிலர் தவிர்த்து மற்றவர்கள் எல்லாம் அச்செயலை ஆதரிக்கிறார்கள் என்று அர்த்தமா? எப்படியாவது முஸ்லிம் வலைப்பதிவர்களைத் தனிமைப்படுத்தி தீவிரவாதத்துடன் இணைத்து அழகு பார்த்து விட வேண்டும் என்ற சிலரின் நப்பாசையின் வெளிப்பாடே அவ்வகைப் பின்னூட்டங்கள்!

சமீபத்தில் ஆந்திரப் பொறியாளர் சூரியநாராயணாவை ஆப்கான் தீவிரவாதிகள் படுகொலை செய்தததைக் கண்டித்து நண்பர் ஆசிப் மீரான் எழுதிய பதிவின் பின்னூட்டங்களில் விசித்திரமான சிலவற்றைக் காண நேர்ந்தது. அதில் சூரிய நாராயனாவின் படுகொலையைக் கண்டிப்பதோடு முந்தைய தாலிபான் அரசினால் ஆப்கன் மக்களுக்குத் தேவையில்லை என்று இடிக்கப்பட்ட பாமியான் சிலை இடிப்பையும் இணைத்து அதுபற்றி எழுதிய என்னையும் கண்டிக்க வேண்டி இருந்தார் ஒருமுற்போக்குச் சிந்தனை கொண்ட வலைப்பதிவர்! (பாமியான் சிலை இடிப்புக்கும் சூரிய நாராயணாவின் படுகொலைக்கும் என்ன சம்பந்தம் என்று அவருக்கே வெளிச்சம். இது பற்றி எழுதியது கூட இஸ்லாம் பிற மத வழிபாட்டுத் தளங்களை இடிக்கச் சொல்வதாக அவதூறாக ஒருவர் எழுதியதற்கு பதிலாகத்தான் என்று நினைக்கிறேன்.)

சூரிய நாராயனாவைக் கொல்வதால் தாலிபான்களுக்கு என்ன இலாபம்? ஆப்கனில் பல்வேறு நாட்டுப் பணியாளர்களும் வாழும்போது இந்தியர்களை மட்டும் குறிவைத்துத் தாக்குவதன் நோக்கம் என்னவாக இருக்கும் என்பதை ஆராயாமல் அரைகுறைச் செய்திகளை வைத்துக் கொண்டு ஒருதலைப் பட்சமாகவும் இஸ்லாத்தை விமர்சிப்பதும் எந்த வகை நியாயம்?

சகோதரர் ஆசிப் மீரான் இப்படுகொலையைக் கண்டித்து எழுதிய பதிவில் பின்னூட்டமிட்ட நேசகுமார்,

ஒரு அனானிமஸ் முஸ்லிம் இங்கு எழுதியுள்ளார், சூரிய நாராயணன் ஒரு சி.ஐ.ஏ ஏஜன்ட் என்று. எவ்வளவு நாட்கள் தான் இப்படிப்பட்ட ஊகங்களைப் பரப்பி, மக்களை முட்டாளாக்குவீர்கள் சகோதரர்களே? ஒவ்வொரு முறை படுபாதகச் செயல்களில் ஈடுபடும் போதும், அதற்குப் பின்னால் யூதச் சதி இருக்கிறது, அவர்கள் தாங்களே குண்டு வைத்துக் கொண்டார்கள், இது கிறித்துவ – அமெரிக்க சதி என்றெல்லாம் வதந்திகளை பரப்பி, பாதகர்களுக்கு வக்காலத்து வாங்காதீர்கள்!”

(“அனாணிமஸ்” பெயரில் பின்னூட்டமிட்டவர் முஸ்லிம் என்பதை அவர் மட்டுமே குறிப்பிட்டுள்ளார். தனது வாதத்திற்கு வலு சேர்க்க ஏன் அவரே கூட அனாணிமஸாக எழுதி இருக்கலாம்! ) அனானிமஸ் யாராகவாவது இருந்து விட்டுப் போகட்டும். இதே யூகத்தைச் சொல்லியுள்ள செய்திகளைச் சில தமிழ் ஊடகங்களில் வெளியானவற்றை இங்குக் குறிப்பிட்டாக வேண்டும்.

குமுதம் ரிப்போர்ட்டரில் ( 07-05-2006) “தலையை வெட்டிய தாலிபான்கள்!” என்ற கட்டுரையில்,

“சூரியநாராயணாவை ஓர் அறையில் அடைத்து வைத்திருந்தோம். அவர் காவலாளியைத் தாக்கிவிட்டு தப்பி ஓட முயன்றார். அப்போது அவரைச் சுட்டுவிட்டோம் ” என்று தாலிபான் சார்பாக பேசிய ஒருவர் கூறினாலும் சூரியநாராயணாவின் தலையை வெட்டியது யார் என்பதற்கோ, அவர் உடலில் துப்பாக்கிக் குண்டுகள் பாய்ந்தற்கான அறிகுறியே இல்லை என்பதற்கோ விளக்கங்கள் இல்லை.

ஏன் இந்தியர்களைக் குறிவைத்து ‘எல்லோரும் வெளியேறுங்கள் ‘ என்று தாலிபான் தீவிரவாதிகள் சொல்கிறார்கள்? இதற்குப் பல்வேறு காரணங்கள் இருந்தாலும் ஆப்கானிஸ்தானில் தாலிபான்களை ஓடஓட விரட்டி அவர்களின் பிடியிலிருந்து அந்த நாட்டை மீட்ட அமெரிக்காவைப் பழிவாங்கத் தாலிபான்கள் துடிக்கிறார்கள் . அந்நாட்டுடன் இந்தியா நட்பு பாராட்ட
ுவது தாங்க முடியாமல்தான் இந்தியர்களைக் குறிவைக்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது.

ஆப்கானிஸ்தானில் போருக்குப் பிறகு அந்நாட்டைச் சீரமைக்க இந்தியா பல்வேறு விதங்களில் உதவி வருகிறது. சுமார் 55 கோடி அமெரிக்க டாலர்கள் பண உதவியும், அங்கே சாலைகளைச் சீரமைப்பது போன்ற பணிகளையும் செய்த இந்தியாதான், அந்நாட்டுக்கே புதிய பாராளுமன்றக் கட்டடத்தையும் கட்டிக் கொடுத்தது . அங்கு ஜாஹிர்ஷா பள்ளிவாசலைச் சீரமைத்து சுமார் 12000 மாணவர்கள் படிக்க வழி செய்தது. சுமார் 8000 பேர் பயன்பெறும் வகையில் இந்திரா காந்தி பெயரில் குழந்தைகள் மருத்துவமனை ஒன்றைக் கட்டிக் கொடுத்தது, 400 பேருந்துகள், தொலைத்தொடர்புத் துறைக்கு சாட்டிலைட்டுகள் என்று நிறைய ஆக்கப்பணிகளை இந்தியா செய்துவருகிறது.

இவ்வளவும் மனிதாபிமானமுறையில் செய்யப்படுவதாகச் சொல்லப் பட்டாலும்,பக்கத்து நாடான பாகிஸ்தானுக்கு செக் வைக்கவே இப்படி இந்தியா செயல்படுகிறது என்ற கருத்தும் உள்ளது. பாகிஸ்தானிலோ தன் நாட்டுக்குள் தீவிரவாதத்தை விதைக்கவே இந்திய அரசு ஆப்கானிஸ்தான் மூலம் முயல்கிறது என்ற எண்ணம் உண்டு . ஆகவே இந்தியாவுக்கு எதிராக தாலிபான்களை மறைமுகமாக பாகிஸ்தானின் உளவு அமைப்பே தூண்டிவிடலாம் என்ற கருத்தும் உள்ளது.”

மேலும் ஜூனியர் விகடனில் ( 07-05-2006) “தாலி அறுக்கும் தலிபான்கள்” என்ற கட்டுரையில்,

“இந்தக் கடத்தலின் பின்னணியில் பல்வேறு ஊகங்கள் இருக்கின்றன . இந்தியாவுகு எதிராக உள்ள பாகிஸ்தான் தீவிரவாதிகள் ஆப்கான் எல்லையில் உள்ள தலிபான்களுடன் சேர்ந்து நடத்தும் நாடகம் இது என்பது ஒரு யூகம். அடுத்ததாக ‘நாட்டை நவீனப்படுத்தினால் அடிப்படைவாதம் தகர்ந்துவிடும் (!) என்ற கொள்கையுடைய தலிபான்கள், நவீனத்துவத்தைக் கொண்டுவரும் இந்தியப் பணியாளர்களைக் குறிவைக்கிறார்கள் என்றும் யூகிக்கப்படுகிறது.

இவை எல்லாவற்றையும் விட மிக முக்கியமான யூகம் ‘இந்தியர்கள் பலர் அமெரிக்காவின் கைக்கூலிகளாகப் பணி புரிகிறார்கள். அவர்கள் வந்த வேலையை விட்டுவிட்டு உளவு பார்க்கிறார்கள் ‘ என்று தாலிபான்கள் உறுதியாக நம்புகிறார்கள் என்பதுதான்.

தலிபான்கள் எப்படியாவது இருந்து விட்டுப் போகட்டும். உயிருக்கு உத்திரவாதமில்லாத நாட்டில் வேலை பார்க்கும் இந்தியர்களை நாம் ஏன் திரும்பப் பெறக்கூடாது? என்ற கோஷம் தற்போது வலுப்பெற ஆரம்பித்துள்ளது. ஏனென்றால் சூரிய நாராணயனன் முதல் பலி அல்லர். கடந்த நவம்பர் மாதம் கேரளாவைச் சேர்ந்த மணியப்பன் குட்டி என்பவர் இதே மாதிரி கடத்தப்பட்டுக் கோரமாகக் கொ ல்லள்ளப்பட்டார் . அப்போதும் இந்தியாவிடம் தலிபான்கள் வைத்த கோரிக்கை ‘உடனடியாக இந்தியர்கள் வெளியேற வேண்டும் ‘ என்பதுதான் . இந்த விஷயத்தில் நம் அரசு தொடர்ந்து மவுனம் சாதித்து வருகிறது.

‘தலிபான்களுடைய கோரிக்கையை ஏற்றுக் கொள்வது, அவர்களை அங்கீகாரம் செய்வதாக மாறிவிடும்’ என அமெரிக்கா நிர்ப்பந்தம் தருவதால்தான் இந்தியா தொடர்ந்து வாய்மூடிக் கிடப்பதாகப் பேச்சுக்கள் கிளம்பி விட்டன . இந்நிலை தொடர்ந்தால் ‘பாகிஸ்தானைப்போல அமெரிக்காவின் அடிமையாக மாறிக் கொண்டிருக்கிறது இந்தியா ‘ என்ற இழிசொல் தவிர்க்க முடியாதாத ஆகி விடும், ஜாக்கிரதை! ”

தீவிரவாதத்தை வேதக் கட்டளையிட்டு தீவிரமாக எதிர்ப்பதோடு மட்டுமின்றி அதனால் பாதிக்கப் பட்டவருக்குத் தகுந்த பரிகாரத்தையும் வழங்கும் ஒரே மார்க்கம் இஸ்லாம் மட்டும்தான்! இதைத் தெரிந்தும் இன்னும் ஏன் பிதற்றி வருகிறார்கள் இவர

8 comments

  1. //சூரிய நாராயனாவைக் கொல்வதால் தாலிபான்களுக்கு என்ன இலாபம்? ஆப்கனில் பல்வேறு நாட்டுப் பணியாளர்களும் வாழும்போது இந்தியர்களை மட்டும் குறிவைத்துத் தாக்குவதன் நோக்கம் என்னவாக இருக்கும் என்பதை ஆராயாமல் அரைகுறைச் செய்திகளை வைத்துக் கொண்டு ஒருதலைப் பட்சமாகவும் இஸ்லாத்தை விமர்சிப்பதும் எந்த வகை நியாயம்?
    //
    என்ன சொல்ல வ்ருகிறீர்கள். பல பேர் இஸ்லாமை சான்ஸ் கிடைத்த போதல்லாம் தூற்றுகிறார்கள் என்பது உண்மையே .ஆனால் இந்த சூர்யகுமார் விசயத்தில் நீங்கள் தலீபன்களை ஆதரிக்கிறீர்களா.இந்தியர்கள் ஆப்கானில் கொல்லப்படுவதின் அரசியல் இருந்தாலும்.இந்தியா ஆப்கானில் வேலைச் செய்யக்கூடாது என்பது போல் உள்ளது உங்களின் கருத்து.கொலைகாரர்களின் நோக்கம் என்பது என்ன என்பதை நீங்கள் சொல்லுங்களேன்.கொலையே நீங்கள் நைசாக நியாப்படுதுவது போல் உள்ளது.
    ஆப்கான் தலீபானாலும் அமெரிக்க /பாகிஸ்தான் /இரச்ய அரசியலால் தான் இந்த அளவிற்கு மோசமாக்யது ..அதில் இந்திய அரசிற்கும் சிறு பங்கு உண்டு.ஆனால் பாகிஸ்தான் பண்ணிய அளவிற்கு மோசம் இல்லை.தலீபன்களின் அசிங்க அரசியல் இஸ்லாமின் பெயரைக் கெடுத்தௌதான் அதிகம்.தலீபான்களை உங்களை போன்றோர் வக்காலத்து வாங்குவது தான் இசுலாம் என்பதை தலீபான் வழியாகப் பார்க்கிறார்கள் ,தலீபான்களை ஆதரித்து விட்டு யாரும் அமைதியைப் பற்றிப் பேச முடியாது.

  2. அழகாய் சொன்னீர்கள் அடியாரே, நானும் சில காலங்காளாய் வலைப்பதிவுகளை கூர்ந்து கவணித்து வருகிறேன்.ஒரு கூட்டம் எழுதப்படாத ஒப்பந்தத்தோடு ஒருவருக்கொருவர் பின்னூட்டம் இடுவதற்காகவே, ஒருவர் சொல்லுவதில் இமியளவேனும் உண்மை
    இல்லை எனினும் ஒரு ‘சிங்குசாங்’
    அடித்து விட்டு செல்கிறார்கள்.

    உங்கள் தேர் முன்னோக்கி செல்லட்டும்,
    புழுதிகள் பின்னால் தன்னால் அடங்கும்.

    அழகு தமிழில் அல்-குரானை MP3 வடிவில் செவியுற click this link.
    http://www.geocities.com/akseemar@sbcglobal.net/

    athaps

  3. நல்லடியார், நேரடியாக தாக்கி எழுதுவது மட்டுமே மத துவேச பதிப்புகளல்ல. எங்கள் மதம் தான் சிறந்தது என்று சப்பைக்கட்டு கட்ட அடுத்த மதத்தை ஆங்காங்கே குறைத்து மதிப்பிட்டு எழுதுவது தான் மகா கேவலமான மத துவேச பதிப்பு. புரிந்து கொள்ளுங்கள்.

  4. நல்லடியார்

    கூத்தாடி,

    //இந்த சூர்யகுமார் விசயத்தில் நீங்கள் தலீபன்களை ஆதரிக்கிறீர்களா. இந்தியர்கள் ஆப்கானில் கொல்லப்படுவதின் அரசியல் இருந்தாலும்.இந்தியா ஆப்கானில் வேலைச் செய்யக்கூடாது என்பது போல் உள்ளது உங்களின் கருத்து.//

    “சக மனிதனை அநியாயமாகக் கொலை செய்பவன் ஒட்டுமொத்த மனித இனத்தையும் கொலை செய்தவனுக்குச் சமம்” என்று சொல்லி இருக்கும் போது மீண்டும் மீண்டும் இப்படுபாதகச் செயலை ஆதரிக்கிறீர்களா? என்பதால் சலிப்புத்தான் வருகிறது.

    //தலீபான்களை உங்களை போன்றோர் வக்காலத்து வாங்குவது தான் //

    தாலிபான்களை நான் ஆதரிக்க வேண்டிய அவசியமில்லை. மேலும் நம் உயிருக்கு பாதுகாப்பில்லாத இடத்தில் வேலை செய்வதை தவிர்க்க முடிந்தால் தவிர்ப்பதை அறிவார்ந்த செயல். இதையே ஜூ.வியிலும் குமுதம் ரிப்போர்ட்டரிலும் சொல்லியுள்ளதை மேற்கோலிட்டேன்.

  5. நல்லடியார்

    //நேரடியாக தாக்கி எழுதுவது மட்டுமே மத துவேச பதிப்புகளல்ல. எங்கள் மதம் தான் சிறந்தது என்று சப்பைக்கட்டு கட்ட அடுத்த மதத்தை ஆங்காங்கே குறைத்து மதிப்பிட்டு எழுதுவது தான் மகா கேவலமான மத துவேச பதிப்பு. புரிந்து கொள்ளுங்கள்.//

    அனானி,

    ஆப்பில் சாப்பிடுபவர் திராட்சை சாப்பிடுபவரைப் பார்த்து “ஆப்பில்” நன்றாக இருக்கிறது என்றால் திராட்சை நன்றாக இல்லை என்றா அர்த்தம். ஒவ்வொருவரும் தத்தம் மதங்களின்/கொள்கைகளின் நல்ல பக்கங்களை பகிர்ந்து கொள்ளலாம். முடிந்தால் நீங்களும் உங்கள் மதத்தின் நல்ல பக்கங்களைச் சொல்லுங்களேன்.

    விதண்டாவாதம் செய்பவர்களிடம் “எல்லா காக்கையும் கருப்பு” என்றால், நீ எல்லாக் காக்கையையும் பார்த்திருக்கிறாயா என்று குதர்க்கம் செய்வார்கள். (நன்றி:சாலமன் பாப்பையா) அதுபோல்தான் இருக்கிறது உங்கள் “கேவல” மதிப்பீடு!

  6. சல்மான்

    நல்லடியார்,

    கடவுளின் அமைதி உங்கள் மேல் உண்டாக!

    கால்கேரி சிவா என்றெல்லாம் தனியாக எழுத வேண்டாம். ஒரு அஜெண்டாவோடு எதை செய்ய புறப்பட்டார்களோ, அதை இவர்கள் செய்து கொண்டிருக்கிறார்கள். அரேபியாவில் ஆரம்பித்து, அரிவுசீவிகளை புகழ்ந்து, இஸ்லாமிய துவேஷத்தில் இணைந்து, ஜாதிக்கு ஜல்லியடித்து, பார்ப்பணர்களில் வெயிட் பண்ணுபவர்களை இங்கு பெரும்பாலோர் அடையாளம் கண்டிருக்கிறார்கள்.

    அதை விடுங்கள். எனக்கு ஒரு கேள்வி உண்டு. கணிசமான அரேபியர்கள் நல்லவர்களாக இல்லை என்பது பற்றி என்ன நினைக்கிறீர்கள். எல்லா சமூகத்திலும், அப்படி ஒரு கூட்டம் உள்ளதென்றாலும், இஸ்லாத்தின் சுவடில் வளர்ந்தும் இவர்கள் மேல் ஏன் இஸ்லாமுடைய தாக்கம் இல்லை? அப்படி தாக்கத்தை ஏற்படுத்தாத ஒரு கொள்கையை, அதுதான் உலக பிரச்சினைகளுக்கு தீர்வு என்று எப்படி சொல்கிறீர்கள்

    நட்புடன்,
    சல்மான்

  7. கால்கரி சிவா

    //படித்த பண்பாளராகக் சொல்லிக் கொண்ட கால்கேரி சிவா கூட, தான் அரேபிய நாடுகளில் (சவூதி மற்றும் அமீரகம்) பட்ட கஷ்ட நஷ்டங்களாகச் சொன்ன பதிவில் வெகு திறமையாக இஸ்லாத்தையும் இணைத்து விமர்சிக்கத் தவறவில்லை. தனி அனுபவங்களைக் கூட இப்படி காழ்ப்பாக எழுத யார்தான் பயிற்சி கொடுக்கிறார்களோ? (இவ்வளவையும் செய்துவிட்டு தனக்கு இஸ்லாமியர்கள் மீதோ இஸ்லாத்தின் மீதோ கோபமில்லை என்ற டிஸ்க்ளைய்மர் வேறு!)

    அவரின் அரேபிய அனுபவ்ங்கள் பதிவில் நான் பின்னூட்டமிட்ட போது என் முகவரியும் முகமும் காட்டச் சொன்னவர், பிறகு அனாணிமஸ் பெயரில் துவேசமாகவும், அநாகரிகமாகவும் (முஸ்லிம்களை முக்கால்!? பசங்க, துளுக்கன்கள் என்ற வசைகளுடன்) ஏளனப் பின்னுட்டங்களை அனுமதித்தது அவரின் பெருந்தன்மையா அல்லது சம்பந்தப்பட்டவர்களின் முகவரியும் முகமும் அறிந்தவரா என்பது அவருக்கே வெளிச்சம்! //

    திரு நல்லடியார்அவர்களே,

    மீண்டும் மீண்டும் என சொல்லி மீண்டும் என்ற அடைமொழியை எனக்குக் கொடுத்து விட்டனர்.

    எனக்கு எழுத்து திறமையெல்லாமில்லை எனக்கு யாரும் பயிற்சியும் அளிக்கவும் இல்லை. பயிற்சிக்கு நேரமோ அவசியமோ எனக்கில்லை. அரேபியர்களின் கயமையை சுட்டிக் காட்டுவது இஸ்லாமை இகழ்வதாகாது. இந்த விஷயத்தில் சுவனப்ரியன் மிகத் தெளிவாக உள்ளார். இஸ்லாமை தவறாகப் புரிந்தவர்களின் செய்கையால் இஸ்லாமிற்கு கெட்டப் பெயர் வருகிறது என்பது சுவனப்ரியனின் வாதம். அதுவே சரி. இஸ்லாமை தவறாக புரிந்தவர்களின் செய்கைகளுக்கு நீங்களும் வக்காலத்து வாங்கினால் உங்களை என்னவென்றழைப்பது.

    ஆம் என்னுடைய வலைப்பதிவிற்கு வருபவர்கள் அவர்களின் முகம் காட்டசொன்னது உண்மை. பிறகு மத்திய கிழக்கில் வாழும் நண்பர்களின் வேண்டுக்கோளுக்கிணங்க என் முடிவை மாற்றிக் கொண்டேன். அதை நிங்கள் பார்கவில்லையா

    முஸ்லிம்களை கடுமையான வாத்தைகளால் திட்டியவரை கண்டிக்கவும் அவர்களுடைய் கடுமையான பின்னூட்டங்களை மறுத்தும் உள்ளேன். மேலும் என்னை மிகக் கேவலமாக திட்டி வந்த பதிவுகளையும் வெளியுட்டுள்ளேன். என்னை மிருகம் என்று அழைத்த பின்னூட்டத்தையும் அனுமதித்துள்ளேன்.

    பொது இடத்தில் எழுத ஆரம்பித்தால் சிலர் திட்டவும் பலர் புகழவும் செய்வார்கள். அதை எல்லாம் எதிர்ப்பார்த்துதான் நான் எழுத முற்பட்டேன்.

    மீண்டும், மீண்டும், “மீண்டும்” என்ற வார்த்தையை சொல்கிற கால்கரி சிவா மீண்டும் சொல்வது என்னவென்றால் நான் எழுதுவது அரேபிய அனுபவங்களை பற்றிதான். அதில் பொருட் குற்றமிருந்தால் சுட்டிக் காட்டுக. சொர்குற்றம் நிறையவே உள்ளது. என்ன செய்வது என்னுடைய மொழி அறிவு அவ்வளவுதான்

  8. //சுருங்ககக் கூறின் பின்னூட்டமின்றி அல்பாயுசில் காணமல் போகும் வலைப்பதிவுகள், இஸ்லாமிய எதிர்ப்புவாதம் கலந்து எழுதினால் சில நாட்கள்/வாரங்கள் காலம் தள்ள முடியும் அல்லது பிரபலமாக முடியும் என்பது எழுதப் படாத விதியாகி விட்டது.
    /////

    நன்றாக சொன்னீர்கள்; நல்லடியார் அவர்களே, இந்த நிலை இங்கு என்று மட்டுமில்லை, உலகம் முழுவதும் இதே தான். ஒரு கூட்டம் தாங்கள் பிரபலமாக வேண்டும் அல்லது தம் கைக்குள் அதிகாரம் வர வேண்டும் என்பதற்காகவே முஸ்லீம் எதிர்ப்பு நிலையை மேற்கொள்கிறார்கள். சிலர் இஸ்லாம் கொண்டுள்ள சிறந்த கொள்கை மேலுள்ள பொறாமையால் எதிர்க்கிறார்கள். ஆனால் உண்மை நிலை, இதையும் மீறி, இஸ்லாம் தான் இன்று அதிகதிகம் மக்களால் தழுவிக் கொள்ளும் அல்லது ஏற்றுக்கொள்ளும் அல்லது நேசிக்கும் மார்க்கமாக உள்ளது.

    //முன்பெல்லாம் (தற்போதும்கூட) அவதூறாகவும் அநாகரிகமாகவும் //முஹம்மது நபியைத் திட்டித் தீர்ப்பதை முழுநேரத் தொழிலாகக் (?!) கொண்டுள்ள நேசகுமார், ஆரோக்கியம் போன்றவர்கள் தவிர்த்து படித்த பண்பாளராகக் சொல்லிக் கொண்ட கால்கேரி சிவா கூட, தான் அரேபிய நாடுகளில் (சவூதி மற்றும் அமீரகம்) பட்ட கஷ்ட நஷ்டங்களாகச் சொன்ன பதிவில் வெகு திறமையாக இஸ்லாத்தையும் இணைத்து விமர்சிக்கத் தவறவில்லை.
    /////////////////

    குர்ஆன், கதீஸ்கள் கிட்டதட்ட உலகிலுள்ள எல்லா மொழிகளிலும் மொழி பெயற்க்கப்ப்பட்டு, எளிய நடையிலும், புத்தகமாகவும், இணைத்தளத்தின் மூலமாகவும் தாராளமாகவும் கிடைக்கின்றது. இவை அனைத்தையும் ஆராய்ந்து படிக்கும் எவருக்கும் அது கூறும் உண்மையை மறுக்க முடியாததாக உள்ளது. அதனால் தான் நேசகுமார், ஆரோக்கியம் போன்றவர்களின் தான்தோன்றித்தனமான வாதங்கள் எடுபடாமல் போகிறது. இவர்கள் உண்மையானவர்கள் என்றால், அவர்கள் ஏற்றுக்கொண்டுள்ள கொள்கைகளையும், கோட்பாடுகளையையும் இணைத்தளத்தில் ஏற்றற்றுமே, வாருங்கள் எல்லோரும் விவாதிக்கலாம், அல்லது இவர்கள் மொழி பெயர்ப்பு இருக்கின்ற இணைத்தளத்தையாவது சொல்லலாமே? எங்களிடம் ஒளிவு மறைவு இல்லை. பழுத்த பழம் தான் கல்லடி படும்.

    நண்பர் கால்கேரி சிவா எழுதிய என் அரேபிய அனுபவங்கள் தொடரை நானும் படித்துள்ளேன், ஆனால், இவர் தனிப்பட்ட அனுபுவத்தைக் கொண்டு ஒட்டுமத்த சழூகத்தை சாடுவது அபத்தம், நன்றிககெட்டத்தன்மையாகும்.

    பகவானை மனசில நினைசுசுண்டு ஆரம்பிங்க என்று நம்மூரில் ஆரம்பிப்பதற்கும், இன்ஷாஅல்லாஹ் என்று சொல்லி ஆரம்பிப்பதற்கும் என்ன வித்தியாசம் என்று கால்கேறி சிவா விவரிப்பாரா?. அமெரிக்கா ஈhரக்கை தாக்கும் போது செந்தில் ஞாபகம் வந்தது போல், நான்கு நூற்றாண்டுகள் அரேபியர்கள் ஐரோப்பா முதற்க்கொண்டு உலகே ஆண்டார்களே அப்பொழுது யார் ஞாபகம் வந்தது என்று விளக்கியருக்கலாமே? .

    நமக்கும் அரேபியர்களுக்கும் இன, மொழீ, கலாச்சாரரிதியாக எவ்வளவோ வேற்றுமையுள்ளது உண்மை தான், அதற்காக இவ்வளவு கீழ்தரமாக எழுதுவது எந்த விதத்தில் நியாயம்.

    இவர் வேலைப்பார்த்ததாக சொல்லும் கம்பெனியில் இவர் இனத்தைச்சார்ந்த பலரும் எனக்கு நண்பர்களாகவே உள்ளனர். ஆனால் அனைவருமே இவர் எழுதுவதைப் பார்த்து முகம் சுளிப்பவர்களாகவே உள்ளனர். இவர்களில் பலருக்கும் இங்கே குழந்தைகள் பிறந்து, இங்குள்ள இந்திய பள்ளிகளில் குழந்தைகனை படிக்க வைத்து, பின்பு காலேஜுக்கு வெளியில் படிக்க அனுப்பும் பருவம் வரை 10 ஆண்டுகக்கும் மேல் வேலை செய்யும் எவ்வளவோ பேர் இங்கு இருக்கத்தான் செய்கிறார்கள். அப்பவும் என்னச்செய்வார்கள் தெரியுமா, இந்தியாவிற்கு குழந்தைகளை படிக்க அனுப்பினால் கெட்டுப்போய் விடுவார்கள் என்று மேற்கத்திய நாடுகளுக்கு தான் அனுப்புவார்கள். பல நேரங்களில

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *