100- நான் நடந்து கொண்டிருக்கும்போது வானத்திலிருந்து ஒருக் குரலைக்கேட்டு என் பார்வையை உயர்த்திப் பார்த்தேன். அப்போது ஹிரா குகையில் என்னிடம் வந்த அதே வானவர் வானத்துக்கும் பூமிக்கும் இடையே ஒரு ஆசனத்தில் அமர்திருக்கக் கண்டு அச்சமுற்றேன். (வீட்டிற்குத்) திரும்பி வந்து (கதீஜாவிடம்) என்னைப் போர்த்துங்கள் என்றேன். அப்போது போர்வை போர்த்தியவரே எழுவீராக! (மக்களுக்கு) எச்சரிக்கை செய்வீராக! (74:1) என்பது தொடங்கி அசுத்தங்களை விட்டு ஒதுங்கி விடுவீராக! என்பது வரை ஜந்து வசனங்களை இறைவன் அருளினான் என நபி (ஸல்) கூறினார்கள். வஹீ நின்று போயிருந்த இடைக்காலத்தைப் பற்றிக் கூறும் போது ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி) இதை அறிவித்தார். அவர் மேலும் அதன் பின் வஹீ அடிக்கடி தொடர்ந்து வரலாயிற்று என்று கூறினார்.
போர்வை போர்த்தியவரே எழுவீராக!
புகாரி-4: ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி)