122- ஒவ்வோர் இறைத்தூதரும் ஒரு (பிரத்தியேக) வேண்டுதல் செய்து விட்டனர். அல்லது ஒவ்வோர் இறைத்தூதரும் தம் சமுதாயத்தாருக்கும் (தம் சமுதாயத்தார் தொடர்பாக) ஒரு (விசேஷப்) பிரார்த்தனை உண்டு. அதனை அவர்கள் (இம்மையிலேயே) கேட்டு விட்டனர். அது ஏற்றுக் கொள்ளப்பட்டும் விட்டது. நான் எனது பிரார்த்தனையை, மறுமை நாளில் என் சமுதாயத்தாருக்காகப் பரிந்துரை செய்ய வைத்துள்ளேன் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
புகாரி-6305: அனஸ்(ரலி)
இஸ்லாம்கல்வி.காம் islamkalvi.com for online Islamic Tamil Library