210- நான் குளிப்புக் கடமையான நிலையில் மதீனாவின் ஒரு தெருவில் நின்று கொண்டிருந்த சமயம் நபி (ஸல்) அவர்கள் என்னைச் சந்தித்தார்கள். அப்போது நான் நழுவி விட்டேன். குளித்து விட்டுப் பின்னர் வந்தேன். நபி (ஸல்) அவர்கள் அபூஹூரைரா! எங்கு நழுவி விட்டீர்? என்று கேட்டார்கள். குளிப்புக் கடமையாகி இருந்தேன். எனவே நான் சுத்தமில்லாமல் உங்கள் அருகே அமர்வதை வெறுத்தேன் எனக் கூறினேன். அப்போது ஸூப்ஹானல்லாஹ்! நிச்சயமாக ஒரு முஸ்லிம் அசுத்தமாக மாட்டான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
புகாரி-283: அபூஹூரைரா (ரலி)