327– இரவு உணவு உங்களுக்கு முன் வைக்கப்பட்டுக் கொண்டிருக்கத் தொழுகைக்கு ‘இகாமத்’ சொல்லப்பட்டால், முதலில் உணவை உண்ணுங்கள். (பிறகு தொழச் சொல்லுங்கள்) என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
328– இரவு நேர உணவு தயாராகி விடுமானல் மஃரிபுத் தொழுகையைத் தொழுவதற்கு முன்னால் இரவு உணவை அருந்துங்கள். உங்கள் உணவை(த் தொழுகையை விட) முற்படுத்துங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
329– இரவு நேர உணவு வைக்கப்பட்டுத் தொழுகைக்காக இகாமத்தும் சொல்லப் படுமானால் நீங்கள் உணவை முதலில் அருந்துங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
330– உங்களில் ஒருவருடைய இரவு உணவு வைக்கப்பட்டு, (மஃரிபுத்) தொழுகைக்கு இகாமத்தும் சொல்லப்பட்டு விடுமானால் முதலில் உணவை அருந்துங்கள். உணவை உண்டு முடிவது வரை (தொழுகைக்காக) அவசரப்பட வேண்டாம் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
இஸ்லாம்கல்வி.காம் islamkalvi.com for online Islamic Tamil Library