897. நான் ஆறு வயதுடையவளாக இருந்தபோது நபி (ஸல்) அவர்கள் என்னை மணந்து கொண்டார்கள். பிறகு நாங்கள் மதீனா வந்து ஹாரிஸ் இப்னு கஸ்ரஜ் வீட்டில் தங்கினோம். அங்கு எனக்கு நோய் கண்டு விடவே என் முடிகள் உதிர்ந்து விழுந்தன. பிறகு (என்) முடி வளர்ந்து அதிகமாகி விட்டது. நான் என் தோழிகள் சிலருடன் ஊஞ்சலாடிக் கொண்டிருந்தபோது என் தாயார் உம்மு ரூமான் (ரலி) என்னிடம் வந்து என்னைச் சத்தம் போட்டு அழைத்தார்கள். நான் அவர்களிடம் சென்றேன். அவர்கள் என்னிடம் எதை நாடி வந்திருக்கிறார்கள் என்று எனக்குத் தெரியாது. அவர்கள் என் கையைப் பிடித்து (அழைத்துச் சென்று) வீட்டின் கதவருகே என்னை நிறுத்தி விட்டார்கள். நான் (வேகமாக வந்ததால்) எனக்கு மூச்சிறைக்கத் தொடங்கிடவே, அவர்கள் சிறிது தண்ணீரை எடுத்து என் முகத்தையும் தலையையும் துடைத்துப் பிறகு என்னை வீட்டினுள் கொண்டு சென்றார்கள். அங்கு வீட்டில் சில அன்சாரிப் பெண்கள் இருந்தார்கள். அவர்கள், ‘நன்மையுடனும் அருள் வளத்துடனும் வருக! (அல்லாஹ்வின்) நற்பேறு உண்டாகட்டும்” என் தாய் என்னை அப்பெண்களிடம் ஒப்படைக்க, அவர்கள் என்னை அலங்கரித்து (வீடு கூடுவதற்காகத் தயார்படுத்தி) விட்டார்கள். இறைத்தூதர் (ஸல்) அவர்கள் முற்பகல் வேளையில் திடீரென வந்தார்கள். அவர்களிடம் அப்பெண்கள் என்னை ஒப்படைத்தனர். நான் அன்று ஒன்பது வயதுடையவளாக இருந்தேன்.
சிறுமியை அவளின் தந்தை திருமணம் செய்து வைத்தல்.
புஹாரி : 3894 ஆயிஷா (ரலி).