997. ”எங்களுக்கு உதவியாக இருந்த ஒன்றைக் கூடாது என்று இறைத்தூதர் எங்களைத் தடுத்தார்கள்” என்று (என் தந்தையின் சகோதரர்) ளுஹைர் (ரலி) கூறினார். (உடனே), ‘இறைத்தூதர் சொன்னதே சரியானது” என்று கூறினேன். (அதற்கு) அவர் சொன்னார்; ஒரு முறை என்னை இறைத்தூதர் (ஸல்) அவர்கள் அழைத்து, ‘நீங்கள் உங்கள் வயல்களை என்ன செய்கிறீர்கள்?’ என்று கேட்டார்கள். நீரோடைகளின் கரைகளின் ஓரமாக விளைபவற்றை எங்களுக்குக் கொடுத்து விட வேண்டும் என்னும் நிபந்தனையின் பேரில் அல்லது சில வஸக்குகள் பேரீச்சம் பழங்களை அல்லது வாற்கோதுமையை எங்களுக்குக் கொடுத்து விட வேண்டும் என்னும் நிபந்தனையின் பேரில் அவற்றைக் குத்தகைக்கு விட்டு விடுகிறோம்” என்று நான் பதிலளித்தேன். அதற்கு அண்ணலார், ‘அவ்வாறு செய்யாதீர்கள். நீங்களே அவற்றில் வேளாண்மை செய்யுங்கள்; அல்லது பிறருக்கு இலவசமாக (கைம்மாறு பெறாமல்) பயிரிடக் கொடுத்து விடுங்கள்; அல்லது பயிரிடாமல் அப்படியே விட்டுவிடுங்கள்” என்றார்கள். (இதைக் கேட்ட) நான், ‘நாங்கள் செவியேற்றோம்; கீழ்ப்படிந்தோம்” என்று கூறினேன்.