998. நான் தாவூஸ் (ரஹ்) அவர்களிடம், ‘(விளைச்சலில் ஒரு பகுதியைப் பெற்றுக்கொண்டு) நிலத்தைக் குத்தகைக்கு விடுவதை நீங்கள் விட்டுவிட்டால் நன்றாயிருக்கும். ஏனென்றால், நபி (ஸல்) அவர்கள் நிலத்தைக் குத்தகைக்கு விட வேண்டாமென்று மக்களைத் தடுத்தார்கள் என்று சிலர் எண்ணுகிறார்கள்” என்றேன். இதைக்கேட்ட தாவூஸ் (ரஹ்) (என்னிடம்) சொன்னார்கள்: அம்ரே! (என்னுடைய நிலத்தை அவர்களுக்குக் குத்தகைக்கு விடுவதால்) அவர்களுக்கு நிலத்தைக் கொடுத்து நான் உதவுகிறேன். ஏனெனில், ‘நபி (ஸல்) அவர்கள் அதைத் தடை செய்யவில்லை. மாறாக, ‘உங்களில் ஒருவர் தன் நிலத்தைக் குத்தகைக்குவிட்டு, அதிலிருந்து குறிப்பிட்ட குத்தகைத் தொகையை வாங்கிக் கொள்வதை விட, தன் சகோதரனுக்கு (இலவசமாகப் பயன்படுத்திக் கொள்ளும் படி அதைக்) கொடுத்து விடுவது சிறந்ததாகும்’ என்றே இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்” என்று மக்களில் பேரறிஞரான இப்னு அப்பாஸ் (ரலி) என்னிடம் தெரிவித்தார்கள்.
பிறருக்கு குத்தகை நிலத்தை தானமாக வழங்குதல்.
புஹாரி :2330 அம்ர் (ரலி).