1138. நபி (ஸல்) அவர்கள் பங்கெடுத்த புனிதப் போர்களில் ஒன்றில் பெண்ணொருத்தி கொல்லப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டாள். அப்போது இறைத்தூதர் (ஸல்) அவர்கள் பெண்களையும் குழந்தைகளையும் கொல்வதைக் கண்டித்தார்கள்.
1139. ‘அப்வா’ என்னுமிடத்தில் அல்லது ‘வத்தான்’ என்னுமிடத்தில் நபி (ஸல்) அவர்கள் என்னுடன் நடந்து வந்து கொண்டிருந்தார்கள். அப்போது, ‘இணைவைப்போரான எதிரி நாட்டினரின் பெண்களும் குழந்தைகளும் (போரில் சிக்கிச்) சேதமடையும் (வாய்ப்பு உண்டு என்னும்) பட்சத்தில் அவர்களின் மீது இரவு நேரத்தில் தாக்குதல் நடத்தலாமா?’ என்று அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், ‘அவர்களும் (எதிரிகளான) அவர்களைச் சேர்ந்தவர்களே” என்று பதிலளித்தார்கள்.