1192. நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் ஒரு போருக்காகச் சென்றோம். எங்களில் ஆறு பேருக்கு ஓர் ஒட்டகம் தான் இருந்தது. அதில் நாங்கள் முறைவைத்து சவாரி செய்தோம். (வாகனம் கிடைக்காமல் சவாரி செய்தோம். (வாகனம் கிடைக்காமல் நடந்தே செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டதால்) எங்களுடைய பாதங்கள் தேய்ந்துவிட்டன. என்னுடைய இரண்டு பாதங்களும் தேய்ந்து என் கால் நகங்கள் விழுந்துவிட்டன. அப்போது நாங்கள் எங்களுடைய கால்களில் கிழிந்த துணிகளைச் சுற்றிக் கொள்பவர்களாக இருந்தோம். இவ்வாறு கிழிந்த துணிகளை நாங்கள் கால்களில் கட்டியிருந்ததனால் தான் அந்தப் போருக்கு ‘தாத்துர் ரிகாஉ – ஒட்டுத் துணிப்போர்’ என்று பெயர் சூட்டப்பட்டது. இந்த ஹதீஸை அறிவித்த பின் அபூ மூஸா (ரலி), தாம் இதை அறிவித்ததைக் தாமே விரும்பாமல், ‘நான் இதை (வெளியே) சொல்ல விரும்பாமல் தான் இருந்தேன்” என்றார்கள். தம் நற்செயல் ஒன்றைத் தாமே வெளியே சொல்லிவிட்டதை அன்னார் விரும்பவில்லை போலும்.
தாத்துர் ரிகாப் போர்.
புஹாரி :4128 அபூ புர்தா இப்னு அபீ மூஸா (ரஹ்).
அஸ்ஸலாமு அலைக்கும் அண்ணா,
தங்கள் வலை சுட்டி அருமையாக உள்ளது. நானும் புதிதாக வலை சுட்டியை ஆரம்பித்து உள்ளேன். என்னுடைய நோக்கம், ஆங்கிலத்தில் உள்ள அருமையான படைப்புக்களை அழகு தமிழில் நம் சமூகத்திற்கு வாசித்து பயனுற வாய்ப்பு தரவேண்டும் என்பதே. இன்ஷா அல்லாஹ், முயற்சிகள் எடுத்துக் கொண்டு வருகின்றேன். என் தமிழாக்கத்தில் ஏதேனும் பிழை இருந்தால் கூறவும். இன்னும் என் தளத்தை மேம்படுத்த மற்றும் சமூகத்தில் அதிக அளவில் சென்றடைய என்ன செய்ய வேண்டும் என்று கூறவும் / உதவவும். அல்லாஹு முஸ்த’ஆன். அவனிடம் மட்டுமே உதவி தேடுகிறேன். உங்களின் தளம் அருமையாக உள்ள்தால் அதனை என் வலைப்பதிவில் தொடர்பு படுத்தி உள்ளேன்.
ஜஸாகல்லாஹு கைரான் ஃபித் துனியா வல் ஆகிரத்.
அ யூனூஸ்