குர்ஆனைப் படித்தவர்களெல்லாம் சிந்தனையாளர்களல்ல; ஆனால் சிந்தனையாளர்கள் குர்ஆனைப் பற்றி அறியாமலிருக்க முடியாது. ஆகவே தான் குர்ஆனின் கூப்பாடுகள் சிந்திப்பீராக/சிந்திக்க மாட்டீர்களா? என்று சிந்தனையாளர்களை நோக்கியே இருக்கின்றன. குர்ஆன்-003:058 என்ற திருக்குர்ஆன் வரிகளுக்கேற்ப சுஜாதாவும் திருக்குர்ஆனின் நறுமணத்தை நுகர்ந்தவர்களில் ஒருவர் என்ற தகவல் பலருக்குத் தெரிந்திருக்கக் கூடும்.
பொதுவாக அறிவுஜீவிகளாக இருப்பவர்கள் திறந்த மனதுடனே எதையும் அணுகுவார்கள். தமிழ்கூறும் நல்லுலகில் அறிவு ஜீவிகளில் ஒருவராக அறியப்பட்ட எழுத்தாளர் சுஜாதா ரங்கராஜன் திருக்குர்ஆன் பற்றியும் அது மக்களிடம் எடுத்துச் செல்லப்பட்டது (வஹி) குறித்து “வஹி எனும் வேத வெளிப்பாட்டைப் பற்றிய குறிப்புகளையும் தகவல்களையும் வைத்துப் பார்க்கும் போது, குர்ஆன் வசனங்களும் அதன் வெளிப்பாடும் தனிமனித சாத்தியமற்றவை” என்பதை அதன் மொழியியல் முறைமையை (Linguistic Context) ஆராய்ந்தறிந்தவர்களால் எளிதில் உணர முடியும்” என்று குர்ஆன் வெளிப்பாட்டிற்கு சுஜாதாவும் நிகழ்காலச் சான்று பகர்ந்ததாக நண்பர் ஒருவர் சொல்லக் கேட்டிருக்கிறேன்.
சுஜாதா ரங்கராஜன் அவர்கள் தினமணி (2003) ரம்ஜான் மலருக்காக குர்ஆன் குறித்து எழுதிய கட்டுரையிலிருந்து ஒரு பகுதியை வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ளக் கடமைப்பட்டுள்ளேன். திரு.சுஜாதாவின் நேர்மையான மற்றும் வெளிப்படையான இந்தக் கட்டுரை அவர்மீதான நன்மதிப்பைக் கூட்டுகிறது. அண்ணாரின் இழப்பால் வாடும் குடும்பத்தினருக்கு இறைவன் மன அமைதியை தரட்டுமென்று கூறி நன்றியுடன் மீள்பதிவு செய்கிறேன்.
———
“திருக்குர்ஆனுடன் என் முதல் பரிச்சயம் என் தந்தை மூலம் ஏற்பட்டது. அவருக்கு நான் நாலாயிர திவ்யப் பிரபந்தப் பாசுரங்களை பெங்களூரில் படித்துக் காட்டிக்கொண்டு இருக்கும்போது, திடீரென்று ‘குர்ஆன் படிக்கலாம். அதில் என்னதான் சொல்லியிருக்காங்கன்னு பார்க்கலாம்டா’ என்றார்.
நான் உடனே புத்தகக் கடைக்குப் போய், ‘தி மீனிங் ஆஃப் தி க்ளோரியஸ் குர்ஆன்’ என்ற ஆங்கிலப் புத்தகத்தை வாங்கி வந்தேன். சில நாள்கள் நாலாயிர திவ்யப் பிரபந்தத்தைத் தள்ளிப்போட்டு, திருக்குர்ஆனை முழுவதும் படித்தோம். அதில் சொல்லியிருக்கும் கடவுள் கருத்துக்கள் நம்மாழ்வாரின் திருவாய்மொழியில் இருப்பதைப் போல் உணர்ந்தோம்.
‘வாழ்வுக்கான நடைமுறைக் குறிப்புகளும், எவரும் ஒப்புக்கொள்ளும்படியாக இருக்கிறதே! எந்த நாட்டுக்கும், எந்தச் சமயத்துக்கும் ஆட்சேபம் இருக்க முடியாதே! இதில் வெறுப்பதற்கு என்ன இருக்கிறது!’ என்று வியந்தோம்.
அதன்பின், பல்வேறு சந்தர்ப்பங்களில் ஜாஃபர்தீன் போன்ற நண்பர்கள் அனுப்பிய புத்தகங்களைப் படித்து வந்திருக்கிறேன். இஸ்லாமிய ட்ரஸ்ட் நிறுவனம் வெளியிட்டிருக்கும் ‘அண்ணல் நபிகளார் வாழ்வினிலே’ போன்ற புத்தகங்கள் தெளிவாக எழுதப்பட்டுள்ளன.
மலேசியப் பிரதமர் டாக்டர் மஹாதீர் முஹம்மதின் சொற்பொழிவுகளின் தொகுப்பான ‘இஸ்லாமியச் சிந்தனைகள்’, நவீன உலகத
‘தி மீனிங் ஆஃப் தி க்ளோரியஸ் குர்ஆன்’
இதே புத்தகத்தை என் தந்தையும் வாங்கி பாராயணம் செய்வது போல வாசித்திருக்கிறார். அவர் குரல் டென் கமாண்ட்மெண்ட்ஸில் கடைசியில் பத்து கட்டளைகளை மூசா நபிக்கு கடவுள் அருளால் கல்லில் சொல்லுடன் கூடவே செதுக்கப்படும் காட்சியில் வந்தது போல இருக்கும்.
புதுக்கல்லூரியில் எந்த பொது நிகழ்ச்சியானாலும் குர்-ஆனிலிருந்து ஒரு மாணவர் ஓதுவார். நிசப்தமான நேரத்தில் இனிய அரபி மொழியில் அதைக் கேட்டது இன்னும் நினைவில் உள்ளது.
அன்புடன்,
டோண்டு ராகவன்
நல்ல இடுகை. நன்றி நல்லடியார். நன்றி திரு. ரவிபிரகாஷ்.
I remember Sujatha, in one of writings, mentioned about Bible. Now, I came to know about his thoughts about Islam…
Thanks Nalladiar.
Siva
//புதுக்கல்லூரியில் எந்த பொது நிகழ்ச்சியானாலும் குர்-ஆனிலிருந்து ஒரு மாணவர் ஓதுவார். நிசப்தமான நேரத்தில் இனிய அரபி மொழியில் அதைக் கேட்டது இன்னும் நினைவில் உள்ளது.//
அப்போது முதல் வரிசையில் விழி பிதுங்க போண்டா தின்றதும் நினைவில் உள்ளது. தகர நெடுங்குழை காலன் எல்லாவற்றையும் பார்த்துக் கொள்வான்.
//அதன்பின், பல்வேறு சந்தர்ப்பங்களில் ஜாஃபர்தீன்//
ஒருமுறை சுஜாதா கற்றதும் பெற்றதும் பகுதியில், ஜம் ஜம் தண்ணீரைப் பற்றி எழுதும் போது பாலைவனத்தில் 1400 ஆண்டுகளாக தண்ணீர் ஊற்றெடுப்பது என்பது கேள்விக்குறியான விஷயம் எங்கிருந்தோ ‘பம்ப்’ செய்து கிணற்றில் விட்டு ஏமாற்றுகிறார்கள் என எழுதிவிட்டார். ஜாஃபர்தீன் அவருக்கு தொலைபேசியில் ஜம் ஜம் கிணற்றை பற்றி சொல்லிவிட்டு கூடவே சுஜாதாவிற்கு ஜம் ஜம் தண்ணீர் ஒரு பாட்டிலும் அனுப்பி வைத்தார். விளக்கத்தை கேட்டுக் கொண்ட சுஜாதா அடுத்த வாரமே ஆ.வியில் அதற்கு தான் எழுதியதற்கு மன்னிப்பு கேட்டுக்கொண்டார். அதான் சுஜாதா
கூத்தாநல்லூரான்,
//விளக்கத்தை கேட்டுக் கொண்ட சுஜாதா அடுத்த வாரமே ஆ.வியில் அதற்கு தான் எழுதியதற்கு மன்னிப்பு கேட்டுக்கொண்டார். அதான் சுஜாதா //
அறிந்தோ அறியாமலோ இஸ்லாம் குறித்து விமர்சனம் வைப்பவர்களும் சுஜாதாவைப் பின்பற்றினால் தமிழ் வலைப்பூக்களில் அருமையான கருத்துப் பரிமாற்றங்கள் நடந்திருக்கும். ஏனோ விமர்சிப்பவர்களுக்கு இவற்றில் ஆர்வமில்லை. நிற்க,
திரு.சுஜாதா அவர்கள் இஸ்லாம் & குர்ஆன் என்ற தலைப்பில் தொடர் எழுதப் திட்டமிட்டிருந்ததாக நண்பரொருவர் சொன்னார்; உறுதியாகத் தெரியவில்லை. யாரேனும் அறிந்திருதால் பின்னூட்டலாமே.
SIVA,
தகவலுக்கு நன்றி. சுஜாதாவின் பைபில் குறித்தக் கண்ணோட்டத்திற்கான சுட்டி கிடைத்தால் தயவு செய்து மறுமொழியிடவும்.
போண்டா மாதவன்,
நகைச்சுவையாகக் கருதுவதால் பின்னூட்டத்தை அனுமதிக்கிறேன். எங்கள் சீனியர் டோண்டு கேட்டுக்கொண்டால் நீக்கப்படும்.(நியூகாலேஜ் பசங்க இதுக்கெல்லாம் பயப்படுறவங்க இல்லே மாமே:-)))