1739. திரிகை சுற்றுவதால் தாம் அடையும் வேதனை குறித்து (என் மனைவி) ஃபாத்திமா முறையிட்டார். (இந்நிலையில்) நபி (ஸல்) அவர்களிடம் போர்க் கைதிகள் சிலர் கொண்டு வரப்பட்டனர். உடனே, ஃபாத்திமா அவர்கள் (நபி – ஸல் – அவர்களிடம் வீட்டு வேலைக்காகக் கைதி எவரையாவது கேட்டு வாங்கி வரச்) சென்றார். ஆனால், நபி (ஸல்) அவர்களைக் காணவில்லை. ஆயிஷா (ரலி) அவர்களைத் தாம் அங்கே கண்டார். எனவே, (தாம் வந்த நோக்கத்தை) ஆயிஷா (ரலி) அவர்களிடம் ஃபாத்திமா தெரிவித்தா. நபி (ஸல்) அவர்கள் (வீட்டிற்கு) வந்தபோது ஆயிஷா (ரலி) ஃபாத்திமா வந்ததைத் தெரிவித்தார்கள். உடனே, நபி (ஸல்) அவர்கள் எங்களிடம் வந்தார்கள். அதற்குள் நாங்கள் எங்கள் படுக்கைக்குச் சென்று விட்டிருந்தோம். நபி (ஸல்) அவர்களைக் கண்டவுடன்) நான் எழுந்து நிற்கப் போனேன். அப்போது நபி (ஸல்) அவர்கள், ‘நீங்கள் (இருவரும்) உங்கள் இடத்திலேயே இருங்கள்” என்று சொல்லிவிட்டு எங்களுக்கிடையே (வந்து) அமர்ந்தார்கள். எந்த அளவுக்கென்றால் அவர்களின் கால்களின் குளிர்ச்சியை நான் என் நெஞ்சின் மீது உணர்ந்தேன். பிறகு, ‘நீங்கள் இருவரும் என்னிடம் கோரிய (உதவி) தனை விடச் சிறந்த ஒன்றை உங்கள் இருவருக்கும் நான் கற்றுத் தரட்டுமா? நீங்கள் இருவரும் உங்கள் படுக்கைக்குச் செல்கையில் முப்பத்து நான்கு முறை ‘அல்லாஹு அக்பர் – அல்லாஹ் மிகப் பெரியவன்’ என்று சொல்லுங்கள்; முப்பத்து மூன்று முறை ‘சுப்ஹானல்லாஹ் – அல்லாஹ் தூயவன்’ என்று சொல்லுங்கள்; முப்பத்து மூன்று முறை ‘அல்ஹம்துலில்லாஹ் – அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்’ என்று சொல்லுங்கள். அது ஒரு பணியாளை விட உங்கள் இருவருக்கும் சிறந்ததாகும் என்று கூறினார்கள்.
களைப்பு நீங்க திக்ர்.
புஹாரி :3705 அலீ (ரலி).