“பாரதி இஸ்லாமிய அடிப்படைவாத வட்டங்களில் எப்பொழுதுமே இழிவு படுத்தி பேசப்படுபவர்தாம்…பாரதியைக்கூட நம்மால் அவமானப் படுத்தப் படுவதிலிருந்து தடுக்க முடியவில்லை என்றால் தமிழர் என நம்மை சொல்வதிலேயே பொருள் இல்லை.” – உணர்வுகள் என்ற வலைப்பதிவரின் பதிவில் இப்படி ஒரு அபாண்டத்தைச் சுமத்தியிருப்பவர், இதையே முழுநேரத் தொழிலாகக் கொண்டிருக்கும் அரவிந்தன் நீலகண்டன்.
“நம்மால் அவமானப் படுத்தப் படுவதிலிருந்து தடுக்க முடியவில்லை“
எங்கிருந்தய்யா வந்தது இந்தத் திடீர் “நம்மால்” பாசம்? 3000 ஆண்டுகளுக்கு முன்வந்திருக்கக் கூடாதா! தேவையில்லாத போதெல்லாம் தமிழ் மொழியை நீசமொழியென்றும், தமிழர்களை அசுரர்களென்றும் இழிவுபடுத்தி வந்த பார்ப்பன பெருந்தகைகள், பாரதியார் மீதான விமர்சனங்களை மேற்கோளிட்டு “நம்மால்” என்ற போர்வைக்குள் தமிழர்களையும் தமிழ் முஸ்லிம்களையும் பிரித்தாள எத்தனித்ததை,நீலகண்டன் வகையறாக்களின் காவிப்பற்று ஏற்கனவே நன்கு அறியப்பட்டுள்ளதால் யாரும் அவரின் கூப்பாட்டை சீரியசாக எடுத்துக் கொள்ளவில்லை. எனினும், பாரதியின் பெயரால் தமிழர்களை ஒன்றிணைக்கும் தகுதி நீலகண்டன் சார்ந்த மதவெறிக் கும்பலைவிட தமிழ் முஸ்லிம்களுக்கு மட்டுமே இருக்கிறது என்பதை உரக்கச் சொல்லவே இப்பதிவு.
இந்திய சுதந்திரப் போரில் கவிதைகளால் தேசபக்தி எழுச்சியூட்டியதிலும், சாதி-மத-இனங்களால் பிளவுண்டிருந்த இந்தியர்களை ஒன்றிணைப்பதிலும், மூடநம்பிக்கை நீக்கி சமத்துவத்தையும் ஒற்றுமையையும் வளர்க்க தன் கவிதைகளால் பாடுபட்ட கவிஞர்களில் பாரதியாரும் ஒருவர் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.
ஆங்கிலேயரிடம் அடிமைப்பட்டுக் கிடந்த முப்பதுகோடி இந்தியர்களின் சுதந்திர தாகத்திற்கு கவிதைகளால் தீணிட்ட பாரதியார் புரட்சிக்கவி என்று போற்றப்பட்டார். பாரதியைவிட 14 நூற்றாண்டுகளுக்கு முன்பே அத்தகைய புரட்சி முழக்கத்தை முஹம்மது நபி (ஸல்) செய்து, இன்று உலகில் மூன்றிலொரு பங்குக்கும் மேற்பட்ட மனிதர்களை தலை நிமிர்ந்து வாழச் செய்துள்ளார்.
“சாதிகள் இல்லையடி பாப்பா! – குலத்
தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்!”
“ஜாதி மதங்களைப் பாரோம் – உயர்
ஜன்மம்இத் தேசத்தில் எய்தின ராயின்
வேதிய ராயினும் ஒன்றே – அன்றி
வேறு குலத்தின ராயினும் ஒன்றே”
என நூறாண்டுகளுக்குமுன் புரட்சிக் கவிபாடிய பாரதியின் முழக்கங்கள் ஆயிரத்து நானூறு ஆண்டுகளுக்கு முன்பே பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. மட்டுமின்றி,
“கருநிறங் கொண்டு பாற்
கடல் மிசைக் கிடப்போன்;
மகமது நபிக்கு மறையருள் புரிந்தோன்;
ஏசுவின் தந்தை; எனப்பல மதத்தினர்
உருவகத் தாலே உணர்ந்துண ராது
பலவகை யாகப் பரவிடும் பரம்பொருள் ஒன்றே”
“தெய்வம் பலபல சொல்லிப் – பகைத்
தீயை வளர்ப்பவர் மூடர்;உய்வ தனைத்திலும்
ஒன்றாய் – எங்கும்ஓர்பொருளானது தெய்வம்”
“யாரும் பணிந்திடும் தெய்வம் – பொருள்
யாவினும் நின்றிடும் தெய்வம்,
பாருக்குள்ளே தெய்வம் ஒன்று; – இதில்
பற்பல சண்டைகள் வேண்டாம்”
என்று முஹம்மது நபி வலியுறுத்திய “லாஇலாஹ இல்லல்லாஹ்” வணக்கத்திற்குறியவன் இறைவன் ஒருவனே என்ற ஏகத்துவ இறைக் கொள்கையைத்தான் பாரதியும் “பாருக்குள்ளே தெய்வம் ஒன்றே” என வழிமொழிந்துள்ளார். மட்டுமின்றி,
“இனியொரு விதிசெய் வோம் – அதை
எந்த நாளும் காப்போம்,
தனியொரு வனுக் குணவிலை யெனில்
ஜகத்தினை அழித்திடு வோம்”
“பாதகஞ் செய்பவரைக் கண்டால் – நாம்
பயங்கொள்ள லாகாது பாப்பா!
மோதி மிதித்துவிடு பாப்பா! –
சமய நல்லிணக்கத்தை தன் பாடல்களில் வலியுறுத்திய பாரதியார் மேல் உரிமை கொண்டாட அதற்கு நேர் மாற்றமான கொள்கையை உடைய இந்துத்துவாக்களுக்கு எந்த தகுதியும் கிடையாது என்பது என் அபிப்ராயம்.
இந்த பதிவையும் பாருங்கள்..
பாரதியும் இஸ்லாமும்
// எங்கிருந்தய்யா வந்தது இந்தத் திடீர் “நம்மால்” பாசம்? 3000 ஆண்டுகளுக்கு முன்வந்திருக்கக் கூடாதா! தேவையில்லாத போதெல்லாம் தமிழ் மொழியை நீசமொழியென்றும், தமிழர்களை அசுரர்களென்றும் இழிவுபடுத்தி வந்த பார்ப்பன பெருந்தகைகள், பாரதியார் மீதான விமர்சனங்களை மேற்கோளிட்டு “நம்மால்” என்ற போர்வைக்குள் தமிழர்களையும் தமிழ் முஸ்லிம்களையும் பிரித்தாள எத்தனித்ததை,நீலகண்டன் வகையறாக்களின் காவிப்பற்று ஏற்கனவே நன்கு அறியப்பட்டுள்ளதால் யாரும் அவரின் கூப்பாட்டை சீரியசாக எடுத்துக் கொள்ளவில்லை //
WHO IS GOING TO TAKE AS SERIOUS. THEIR AIM IS ONLY ATTACK AGAINST MUSLIM. THIS IS THE ONLY AGENDA IN THEIR LIFE.
KEEP IT UP. BROTHER NALLADIAR
பாரதியாரை அமவமித்தது அவமதித்துக் கொண்டிருப்பது, போவது எல்லாமே பார்ப்பனர்கள்தான்.
அவரை சாதியில் இருந்து ஒதுக்கி வைத்தவர்கள் ஆயிற்றே!
//வாருங்கள் சூத்திரர்களே ஒன்றாக இறைவனைத் தொழுது ஒரே தட்டில் கூடியுண்போம் என்று சொல்ல முஸ்லிம்களுக்குத் திராணியுண்டு; நீலகண்ட வகையாறாக்களுக்கு உண்டா? என்று கேட்கிறார்கள் மீனாட்சிபுரம் மக்கள்!//
Keep it up Mr nalladiyar.