Featured Posts

ஒரு பயணியின் குழப்பம்

நீண்ட பயணத்திற்கான வாகனம் மெதுவாக நகரத்தொடங்கியது. அருகே சில வாகனங்களும் சென்று கொண்டிருந்தன. பயணிகள் தங்கள் இருக்கையில் அமர்ந்திருந்தனர். சிலர் ஜன்னலோரம் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தனர். சிலர் இருக்கையை சரி செய்து தூங்குவதற்கு தயாராகினர். ஒருவர் மட்டும் ஓடும் வண்டியிலிருந்து இறங்கினார்.

சாலையில் சற்று நிலை தடுமாறியவர், சற்றே நிதானித்தார். சாலையில் நின்று கொண்டிருந்த போக்குவரத்துக் காவலர் அவரின் அருகில் வந்து காரணம் கேட்டார். உரையாடல் இதோ:

காவலர்: ஓடும் வண்டியிலிருந்து இறங்குவது ஆபத்து தெரியுமில்லையா?

பயணி: தெரியும்தான். இருந்தாலும் இந்த வண்டி நான் போகும் ஊருக்குச் செல்லாது.

காவலர்: பிறகு ஏன் அந்த வண்டில ஏறினீர்கள்?

பயணி: நானாக ஏறவில்லை. எல்லோரும் ஏறினார்கள் அப்போது நானும் தவறி ஏறிவிட்டேன். என் பெற்றோரும் அதில் பயணம் செய்தவர்கள்தான். அதற்காக நான் அதே வாகனத்தில் போக முடியுமா? அவர்கள் போன வண்டியிலேயே என்னையும் வரச்சொல்லக் கூடாது.அவர்கள் ஒருவேளை செல்லவேண்டிய ஊருக்கு செல்லாமல் இருந்திருக்கலாம். நானும் என மகனை இதே மாதிரி என் வாகனத்தில் வரச்சொல்லி நிர்ப்பந்திக்க மாட்டேன்.

காவலர்: ஓஹோ. சரி அடுத்த வண்டியிலாவது ஒழுங்காப் பார்த்து உன் ஊருக்கு போகுமா என்று கேட்டு ஏறுங்கள்.

பயணி: ம்ஹூம். நான் அடுத்த வண்டியிலும் போக மாட்டேன். நான் வாகனத்தில் பயணம் செய்ய விரும்பவில்லை. மற்றவர்களும் அவர்கள் ஊருக்குச் செல்லவில்லை என்றே நினைக்கிறேன். முடிந்தால் இனி எந்த வாகனமுமே இல்லாமல் நான் செல்ல வேண்டிய ஊருக்குச் சென்று விடுவேன். இந்த வண்டியில் பயணம் செய்யும் போதே, பக்கத்தில் சென்று கொண்டிருந்த காரையும், ஆட்டோவையும் பார்த்தேன். எதுவுமே பிடிக்கவில்லை. அதனால் என் வாகனத்திலிருந்து இறங்கி விட்டேன்.

காவலர்: நீர் பயணித்தது பஸ். கார்,ஆட்டோ,லாரி இவற்றிலும் பயணம் செய்யலாம். ஆனால் பஸ்ஸில் இருக்கும் சவுகரியத்தை இவற்றில் எதிர்பார்க்கக் கூடாது. இந்த வித்தியாசம் உமக்குத் தெரியாதா?

பயணி: தெரியும்தான். ஆனால் என் பிரச்னை உங்களுக்குத் தெரியாது. ஆட்டோவுக்கு மூன்று வீல்தான் உள்ளது. மேடு பள்ளங்களில் குலுங்கும். அவ்வளவு பாதுகாப்பு இல்லை. ஜாதிவாரியாகத்தான் பயணம் செய்ய வேண்டுமாம். நாலு பேர் உள்ள இடத்தில் ஒரு குறிப்பிட்ட ஒருவரை மட்டும் இலவசமாக அழைத்துச் செல்வாராம். கேட்டால் ஆட்டோவைப் பற்றி புகழ்ந்து பேசுவதால் அவருக்கு முன்னுரிமையாம்.எல்லாவற்றையும் விட கொடுமை ஆட்டோவைக் கண்டு பிடித்தவருக்கு நெருங்கிய சொந்தமாம்.அதனால் இலவசமாக பயணம் செய்வாராம்.

R.C புக், டிரைவிங் லைசன்ஸ்,இன்ஷூரன்ஸ் எதுவுமே இல்லை. RC புக் எங்கேன்னு கேட்டால் ரேசன் கார்டை எடுத்துக் காட்டுறார். டிரைவிங் லைசன்ஸ் ஏன் இல்லை என்றால், லைசன்ஸ் இருந்தால்தான் வாகனம் ஓட்டலாம் என்பது சகிப்புத்தன்மையின்மை என்கிறார். பிறக்கும் போதே லைசன்ஸோடதான் பிறந்தாராம். இந்த உலகமே இவர் குடும்பத்திற்காகப் படைக்கப் பட்டதாம். இவரின் தந்தையும் தாத்தாவும் டிரைவர்தானம். அதனால் தனக்கு லைசன்ஸ் தேவை இல்லை என்கிறார். இதை அவரின் தந்தை எழுதி வைத்ததைக் காட்டி இதுவே எல்லாம் என்கிறார். இன்ஷூரன்ஸ் அவருக்கு மட்டும்தான் உண்டாம். இதெல்லாம் நமக்குச் சரியாக வராது.

காவலர்: சரி! காரில் போகலாமே?

பயணி: இல்லை. காரில் போவதும் சரி
யாகப் படவில்லை. எதிரில் வேகமாக வரும் லாரியின்மேல் மோதினால், கார் நசுங்கி விடும். அதற்கு பெட்ரோல் ஊற்ற வேண்டும். ஏசியை பராமரிக்க வேண்டும். அடிக்கடி கியர், ஆக்ஸிலேட்டர் மாற்ற வேண்டும். மேலும் அடிக்கடி காரைச்சுத்தமாக வைத்துக் கொள்ளச் சொல்கிறார். ஜன்னல் வழியாக கையைத் தொங்கப் போட்டு சுதந்திரமாக இருக்க அனுமதிக்க மாட்டேன் என்கிறார். வழியில் எதேனும் சந்தேகம் வந்தால் சாலைவழிகாட்டிக் குறிப்புடன் ஒப்பிட்டு வண்டியை ஓட்டுகிறார்.

காவலர்: ஒரு சில அசவுகரியங்கள் இருந்தாலும் நமக்கு இலக்குதானே முக்கியம். ஆரம்பத்தில் கொஞ்சம் கஷ்டப்பட்டாலும் மற்றவர்களை விட சொகுசாகப் பயணம் செய்யலாம்தானே?

பயணி: செய்யலாம் தான். கார் டிரைவர் முன்பு பழுதடைந்து ஒட்டிக் கொண்டிருந்த வாகனங்களை ஓவர்டேக் செய்து வந்ததாகச் சொல்கிறார்.அந்த வாகனங்களில் இருந்தவர்கள் இவரின் பாதையை மறைத்தபோது சிலருடன் சண்டை கூட போட்டுள்ளார். இதையும் அவரே சொன்னார். சாலையை மறைத்தவர்களும் அதில் பயணம் செய்தவர்களும் சொன்னார்கள்.

காவலர்: ஒருவர் சரியான பாதையில் போய்க்கொண்டிருக்கும் போது அவரின் பாதையை மறைப்பதும், உன் வண்டியை விட்டு எங்கள் வண்டியில் ஏறிக்கொள் என்று வற்புறுத்துவதும், இல்லாவிட்டால் கொலை செய்வேன் என்பதும் தவறுதானே?

பயணி: தவறுதான். கார் டிரைவர் சரியில்லை. அப்படி அவருடன் சண்டை போட்டவர்கள் கொல்லப்பட்டதும், எதிர் வாகனத்தில் அசவுகரியமாக பயணம் செய்து வந்த பெண்களில் சிலரை தன் வாகனத்தில் சில சலுகைகளைக் காட்டி ஏற்றிக் கொண்டார். இது கொடுமைதானே?

காவலர்: அசவுகரியமாக வைத்திருக்காவிட்டால் அவர்கள் அந்த வாகனத்திலேயே பயணம் செய்திருப்பார்கள் தானே? மேலும் சலுகை கிடைக்கும் இடத்திற்கு போவதில் என்ன தவறு? ஆண் பயணிகள் மட்டும் சலுகையுடன் பயணம் செய்யும் போது, பெண்களுக்கும் சலுகை கொடுக்காதது தவறுதானே?

பயணி: கொஞ்சம் தவறு அவர்கள் மீது இருக்கிறது. பழுதான பழைய வாகனத்தில் பயணித்தால் அப்படி இப்படி சில அசெளகரியங்கள் இருக்கத்தான் செய்யும். இதைப் பெரிசாக எடுத்துக் கொள்ளக் கூடாது. அவர்களுக்கு முன் பயணம் செய்த பெண்கள் இதைவிட கொடுமைப் படுத்தப் பட்டுள்ளார்கள். சிலரை பெண்களாகவே கூட மதிக்கவில்லை. இருந்தாலும் அவர்கள் கஷ்டப்பட்டு பயணம் செய்தார்கள்தானே?

காவலர்: குழப்புறீங்களே. சரி. முன்னால் சென்ற வாகனம் பழையது அதில் பெண்கள் கஷ்டப்பட்டார்கள் என்று சொல்கிறீர்கள். உமது மனிதாபிமானத்தையும் பெண்கள் மீது உள்ள பரிவும் உம்மீது எனக்கு மரியாதையை அதிகரிக்கிறது. யாரும் தயாராக இல்லாத போழ்து கஷ்டபடுபவர்களுக்கு உதவுவதும் மனிதாபிமானம்தானே?

பயணி: மனிதாபிமானம்தான். மறுக்கவில்லை. ஆனால் அந்த டிரைவருக்கு இருக்கக் கூடாது. வேண்டுமானால் காரில் இருந்த வேறு யாராவது மனிதாபிமானமாக இருந்திருக்கலாம். மேலும் கார் டிரைவர், அவருக்கு முந்தைய பயணிகளுடன் ஒழுங்காகவும் நடந்து கொள்ள வில்லையாம். அவரின் கார், அவர்களின் பழைய Outdated மாடல் வாகனங்களைவிட Latest என்கிறாராம். இது மற்றவர்களின் மனதைப் புண்படுத்தும்தானே? ஏனிந்த வன்மம்?

காவலர்: நீங்க சொல்றதுல நியாயம் இருக்கிற மாதிரி எனக்குத் தெரியவில்லை. காரும் பழுதில்லை. செல்லும் பாதையும் சரியாக இருக்கிறது. அதை ஓட்டி வந்த டிரைவர் முன்பு நடந்து கொண்ட அணுகுமுறையில் உங்களுக்கு கொஞ்சம் வருத்தம் இருக்கிறதை அறிகிறேன். கார் டிரைவர் சரியில்லைன்னு உங்களுக்கு யார் சொன்னார்?

பயணி: கார் டிரைவரால் பழைய மாடல் என்று சொல்லப்பட்ட வாகனத்தில் இருந்தவர்கள்தான் சொன்னார்கள். மேலும் நல்ல வாகனம் வரும் என்று காத்திருப்பவர்களும் சொன்னார்கள். வேண்டுமானால் காரி பயணம் செய்ய விரும்பாதவர்களிடம் கார் பயணத்தை பற்றி கேட்டுப் பாருங்கள். நான் கூட டீக்கடை வைத்திருப்பவரிடம் கூல் டிரிங்ஸ் விற்பவரைப் பற்றி கேட்டுதான் இனி எதுவுமே குடிப்பதில்லை என முடிவு செய்தேன்.

காவலர்: நீங்கள் எதுவுமே அருந்துவதில்லை என்று முடிவு எடுத்தபிறகு யார் எதைப்பற்றிச் சொன்னாலும் உங்களுக்கென்ன? இப்படிதான் சில பயணிகள் குழம்பி விடுவார்கள். சரி அவர்களின் (பழைய வாகங்களை ஓட்டி வந்த) டிரைவர், கார் டிரைவரைப்பற்றி ஒன்றுமே சொல்லவில்லையா?

பயணி: சொன்னாராம். அவர்களின் வாகனம் குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே. இதற்குப் பிறகு நல்ல காரும், டிரைவரும் வருவார். நீங்கள் அவர் சொல்வதேயே கேட்கவேண்டும்.நம் வாகனத்தைப் பற்றி சொல்பவை கொஞ்சம் மனவருத்தமாக இருந்தாலும், நம் வாகன உரிமையாளரின் மன திருப்திக்காகவும் செல்ல வேண்டிய இலக்கை கருத்தில் கொண்டும், நாம் அவற்றைப் ஒத்துக் கொள்ளவேண்டும் என்றெல்லாம் சொல்லியதோடு நோட்டில் எழுதி வைத்திருந்தாராம்.

இதைச் சொல்லிதான், தன் பழைய வாகனத்தில் ஏற்றினார். ஆனால் பயணம் செய்தவர்களில் சிலர் அவ்வாறு டிரைவர் எழுதி வைத்ததை மாற்றி புதிதாக எழுதி விட்டார்கள். தாங்கள் எழுதியதுதான் உண்மையானது என்றும் சொல்கிறார்கள்.

காவலர்: ஆக, டிரைவர் சரியாக எழுதியதை மாற்றி விட்டதால், தவறு மாற்றியவர்கள் மீதுதான். ஒரு பழைய மாடல் வாகன டிரைவரே இன்னொரு டிரைவரைப் பற்றி நல்ல விதமாகச் சொல்லி இருக்கும் போது, நிச்சயம் அந்த புது கார் டிரைவரரும் அவரின் வண்டியும் நல்லதாகத்தான் இருக்க வேண்டும்!

பயணி: உங்கள் கருத்தோடு ஓரளவு ஒத்துப் போகிறேன். இருந்தாலும் முன்பு காரில் பயணம் செய்தவர்கள் தீவிரமாக, அவர்களுக்கு முன்பு பயணம் செய்தவர்களை எதிர்த்திருக்கிறார்கள். காரில் பயணம் செய்யும் சிலர், கார் டிரைவருக்குத் தெரியாமல் சில பொருட்களையும் கூட எடுத்து வந்து பயணம் செய்திருக்கிறார்கள்.

இதை கார் டிரைவர் கண்டித்திருக்க வேண்டும். இதுமாதிரி செய்யக்கூடாது என்று. கார் டிரைவர் பொதுவாக சொன்னதோடு வாகனத்திலும் கண்னில் படுமாறு ஒப்புக்கு எழுதி வைத்திருக்கிறார்.அதை பயணம் செய்தவர்கள் கவனிக்கவில்லை.

காவலர்: கார் டிரைவருக்குத் தெரியவில்லை என்கிறீர்கள். எப்படி கண்டிக்க முடியும்? மேலும் வாகனத்தில் வேறு எழுதி வைத்துர்க்கிரார் என்கிறீர்கள். இதை பயணிப்பவர்கள் கவனிக்காதது கார் டிரைவரின் தவறு இல்லைதானே? ஒரு வாகனத்தில் பயணம் செய்பவர்களில் பல்வேறு தரப்பினரும் இருக்கலாம் தானே?

இலக்கை அடைவதே பயணத்தின் நோக்கமாக இருக்கும் போது, கார் டிரைவரையும் வாகனத்தையும் பயணிகளின் செயலால் குறை சொல்வது நியாயமா? சரி. அந்தக் காரில் பயணம் செய்பவர்கள் இதைப் பற்றி ஒன்றுமே சொல்லவில்லையா?

பயணி: சும்மா ஒப்புக்குத்தான் சொல்கிறார்கள்.அதுவும் இவர்கள் காரில் பிரச்னை வரும் என்றால்தான் சொல்கிறார்கள். மேலும் அவர்களில் சிலர் அவ்வாறு பயண ஒழுங்கை கடை பிடிக்காதவர்களை காரிலிருந்து இறங்கச் சொல்லி ஃபத்வா கொடுக்கிறார்கள். இப்படி ஒருவரின் சுதந்திரத்திற்கு எதிராக ஃபத்வா கொடுப்பது அடிப்படைவாதம்தானே?

காவலர்: சில ஒழுங்குடன் வந்தால்தான் எல்லோரும் இலக்கை அடைய முடியும் என்று ட

12 comments

  1. ஊமைப்புலவர்

    கிணற்றுக்குத் தப்பித் தீயிலே பாய்ந்தான்.

  2. அப்துல் குத்தூஸ்

    நல்லடியாரே ஆரம்பத்தில் படிக்கும்பொழுது மிகவும் குழப்பமாகத்தான் இருந்தது ஆனால், இந்த கடைசிவரி அதாவது தருமியின் பெயரைப் படித்ததும்தான் விளங்கியது. இந்த குழப்பத்திற்கெல்லாம் காரணம் தருமிதான் என்று. ஆம் மதத்தைப்பற்றி விமர்சிப்பதாக நினைத்துக் கொண்டு குழம்பித்தான் போனார். இதைக் கூட ஒரு பதிவாக இட நினைத்தேன் நேரம் இன்மையால் விட்டுவிட்டேன். இதற்கென்று ஒரு தலைப்பிட்டார் அதில் தடுமாறினார். வலைப்பதிவிலும் பல்வேறு தடுமாற்றங்கள். அவருடைய ஒரு பதிவை பார்வை இட பலதடவை ரீப்ரெஸ் பண்ணவேண்டி உள்ளது. கடைசியாக அவருடைய கூற்றில் நான் விளங்கியது இதுதான்.

    தருமிக்கு எதையாவது சார்ந்து வாழவேண்டிய கட்டாயம். அதனால் வீட்டிலோ மனைவிச் சொல்லே மந்திரம். வெளியில் ஒவ்வொரு காரியத்திலும் யாரையாவது சார்ந்து வாழவேண்டிய கட்டாயம். இதிலோ பெரும்பான்மை இந்து, நாமோ கிருஸ்டின். கிருஸ்தவ நாட்டில் வாழ்ந்திருந்தால் இப்படி ஒரு தடுமாற்றம்,மழுப்பல்,விழுங்கல்,வெளியேற்றம் போன்றவைகள் ஏற்பட்டிருக்காது. ஆனால் என்ன செய்ய எங்கிருந்து ஏற்பட்ட அழுத்தமோ தெரியவில்லை. இப்படி ஒரு விளக்கம்.

  3. //This is an machine-controlled detector from Net Police Program.Our database noted the ill-bred comment in your blog from the following terminal:

    Entry Page Time:20th September 2005 13:49:09
    Location:Sabah, Kota Kinabalu, Malaysia
    Hostname:(219.92.243.36) //

    Fundamentalists please note.

  4. நல்லடியார்

    சமுத்ரா,

    இணையத்தில்தானே இருக்கிறோம் என அநாகரிகமாக செயல்படாமல், மாற்றுக் கருத்து இருந்தால் வைக்கலாம். துவேசமாக எழுதி உங்களை நீங்களே தாழ்த்திக் கொள்ள வேண்டாமே!

    அன்புடன்,
    நல்லடியார்

  5. ayyah! Nalladiyaare!

    Yeppadi Ayyah Ethai yelutha porumai yeduthu kondeer. Ada peria Aalthan Ayyah Neer.

    asalamone
    Bahrain

  6. ayyah nalladiyaare

    Nan tamil type panna yenna ayyah saiyya vendum. yenakum konjam solli thaarum ayyah.

    Nandiyudan
    asalamone

  7. நல்லடியார்

    அஸ்லம் ஒன் ?

    நீங்கள் ஈகலப்பை 2.0 என்ற இலவச மென்பொருளை பதிவிறக்கம் செய்து கொண்டால் தமிழில் டைப்பண்ணலாம்.

  8. /Nan tamil type panna yenna ayyah saiyya vendum. yenakum konjam solli thaarum ayyah.
    /

    http://www.thamizmanam.com/xblog/

  9. Aarokkiyam உள்ளவன்

    நல்லடியார்….வணக்கம்!!!

    தருமியை தனி நபராக நினைத்து நீங்கள் எழுதி இருப்பது போல் தெரிகிறது.நான் அவதானித்த வகையில் தருமியும் டோண்டுவும் ஒரே நபர்.தருமி எழுதிய காலங்களில் டோண்டு எழுதவில்லை.

    தருமிக்கு உண்மையில் உங்களவர்கள்மேல் மட்டுமே காழ்ப்பு.இது பற்றி போகப்போகத் தெரிந்து கொள்வீர்கள்.

  10. குழலி / Kuzhali

    //தருமியை தனி நபராக நினைத்து நீங்கள் எழுதி இருப்பது போல் தெரிகிறது.நான் அவதானித்த வகையில் தருமியும் டோண்டுவும் ஒரே நபர்.தருமி எழுதிய காலங்களில் டோண்டு எழுதவில்லை.
    //
    நீங்கள் தவறாக புரிந்து கொண்டதாக நான் நினைக்கின்றேன், தருமி அவர்களின் மொத்த கொள்கைகளுக்கும் டோண்டுவின் கொள்கைகளுக்கும் பெரிய வேறுபாடு உள்ளது, மேலும் தருமி தான் யார் எந்த ஊரை சேர்ந்தவர் என்பதையும் தெளிவாக குறிப்பிட்டுள்ளார், தருமி போன்றவர்கள் சிலரின் மீது மட்டும் துவேஷமாகமோ, காழ்ப்புணர்ச்சியோடு எழுதுவதில்லை என நம்புகின்றேன்.

    //தருமிக்கு உண்மையில் உங்களவர்கள்மேல் மட்டுமே காழ்ப்பு.இது பற்றி போகப்போகத் தெரிந்து கொள்வீர்கள்.
    //
    அவர் கருத்தில் உங்களுக்கு ஒப்புமையில்லை என்றால் இந்த இந்த இடங்களில் முரண்படுகின்றேன் என கூறுங்கள் பொத்தாம் பொதுவாக இப்படி குற்றம் சாட்டாதீர்கள், வேறு சில அனுபவமிக்க வலைப்பதிவர்களிடம் அவர்கள் முன் மாதிரியாக இருப்பார்கள், அவர்களின் அரை நூற்றாண்டு அனுபவம் ஒரு புதிய பார்வையை காண்பிக்கும் என நான் எதிர்பார்த்து ஏமாந்து இருந்த போது தான் தருமியின் பதிவுகள் அதை ஓரளவிற்கு தீர்த்துவைத்தன, வழக்கமான வலைப்பூ சர்ச்சைகளில் அவரை சிக்க வைத்து அவருடைய எழுத்துக்கள் என் போன்றவர்களுக்கு கிடைக்காமல் போய்விடுமோ என அஞ்சுகின்றேன்.

    நன்றி

  11. Aarokkiyam உள்ளவன்

    /தருமி அவர்களின் மொத்த கொள்கைகளுக்கும் டோண்டுவின் கொள்கைகளுக்கும் பெரிய வேறுபாடு உள்ளது, மேலும் தருமி தான் யார் எந்த ஊரை சேர்ந்தவர் என்பதையும் தெளிவாக குறிப்பிட்டுள்ளார்/

    குழலி….

    நானும் தருமியை நடுநிலையாளராகத்தான் எதிர்பார்த்தேன். போகபோக அவரின் எழுத்தின் வித்தியாசதை அவதானிக்க ஏண்டது.முதலில் அனைத்து மதங்களையும் சாடுவார் என எதிர்பார்த்தேன்.ஆனால் ஒரு சில பதிவுகளிலேயே அவரின் முகமூடி கிழிந்து விட்டது.

    கிறிஸ்தவ மதத்திலிருந்து வெளியேறுவதற்கான காரணங்கள் நியாயமானவையாகப்படவில்லை. மேலும் இந்து மதத்தில் சாதி,சதி போன்றவையே அவருக்கு பிரதானமாகத் தெரிந்ததாகவும் அதனால் இந்து மதத்தில் ஏற்பில்லை என்றும் சப்பைக் கட்டியுள்ளார்.

    பிராமனீயம் என்று ஒப்புக்கு 1% சதவீத மக்களைச்சாடி? மற்ற இந்து மத அமைப்புகளைச் சாடாமல் சென்றுள்ளார். நியாயமாக இந்து மதத்தில் அவர் வெருப்பவற்றை இசுலாம் நிவர்த்தி செய்யவில்லையா?

    சாலமன் ருஷ்டிக்கு சாபம் கொடுத்த கோமேனியை தொடர்பு படுத்தி ஒட்டு மொத்த இசுலாமியர்களையும் குறை சொல்லும் அவரால் மோடி,அத்வானி ஜோஷி,தொகடியாவெல்லாம் கண்ணுக்குத் தெரியவில்லையா?

    சதாம் உசேன் என்ற அரசியல்வாதியின் காரணத்தால் இலட்சக் கணக்கான மக்களை கொல்ல உத்தரவிட்ட கிறிஸ்தவர்களான ஜார்ஜ் புஸ்,பிளேரெல்லாம் இவர் கண்ணுக்கே தெரியவில்லையா?

    இணைய தளங்களில் ஒருவர் தன்னை எப்படியும் அடையாளம் காட்ட முடியும். ஆரோக்கியம் எண்ட பெயரில் எழுதும் நேசகுமாரை நம்மில் பெரும்பாலோர் அடையாளம் காண முடிகிறதா அதுபோல்தான் தருமியும்.தருமி கிறிஸ்தவர் என்பதற்கு அவர் மட்டுமே சாட்சி.

    குழலி என்பதுகூட ஒரு பெண் என்றுதான் நான் நினைத்துக் கொண்டிருக்கிறேன்?! வாய்ப்புகளை வைத்து பிறரை நம்பச்செய்யும் பிம்பங்கள் என்பதை நான் மனபூர்வமாக நம்புகிறேன்.

    தருமிக்கும் டோண்டுவுக்கும் உள்ள பொதுவான ஒற்றுமைகள்:

    1) தன்னை வயதானவர்களாகக் காட்டுவதன் மூலம் அனுபவசாலிகள் என்ற சலுகையை அனுபவிப்பது.

    2)ஆங்கிலம் கலந்து எழுதுவதன் மூலம் மேதாவிகள் என்ற மாயையை உருவாக்குவது.

    3) இருவருக்குமே யூதர்கள் மேல் பரிவு உண்டு.

    4) எழுத்து நடை.

  12. பகுத்தறிவாளன்

    //கிறிஸ்தவ மதத்திலிருந்து வெளியேறுவதற்கான காரணங்கள் நியாயமானவையாகப்படவில்லை.//

    Arokkiyam உள்ளவரின் கூற்றில் முழு உண்மையுள்ளதாகவே நான் கருதுகின்றேன்.

    அவர் கிறிஸ்தவ மதத்திலிருந்து மாறியதற்கு கூறிய மிக முக்கிய காரணங்களில் ஒன்று:

    கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை யூதர்கள் சிலுவையில் அறைந்து கொன்ற சம்பவமாகும். இவ்வாறு பைபிளில் வருவதை நம்ப இயலவில்லை எனவும், கர்த்தரின் மகனாகிய இயேசுவை அவரின் அனுமதியின்றி எப்படி யூதர்களால் கொல்ல முடிந்தது என்றும், தன்னையே காப்பாற்றிக் கொள்ள இயலாதவரால் மற்றவர்களை எப்படி இரட்சிக்க முடியும் எனவும் கேள்வி எழுப்பி அதனால் கிறிஸ்தவத்திலிருந்து மாறியதாக கூறினார்.

    இதனை எதிர்த்து பைபிளில் அவ்வாறு இல்லை எனவும், அதற்கு மாறாக பைபிளில் இயேசுவை கர்த்தர் காத்து இரட்சித்ததாகத் தான் வருகிறது எனவும், எனவே நீங்கள் கிறிஸ்தவத்திலிருந்து வெளியேற கூறிய காரணங்களில் இந்த காரணம் முழுக்க அபத்தமானது எனவும் கூறி அந்த நாட்களில் இருந்தே அவரிடம் நான் கேள்வி கேட்டு வருகிறேன்.

    இதுநாள் வரை அவர் அதனை கண்டுகொண்டதாக தெரியவில்லை.

    உண்மையிலேயே தனது வாதங்களில் நியாயம் உள்ளவராக இருந்தால், குறைந்தபட்சம் தான் ஒரு பேராசிரியர்(அவர் கூறிக் கொள்வது) எனவே பொய், பித்தலாட்டம் செய்யக் கூடாது என்ற எண்ணம் உள்ளவராக இருந்தால் எனது அந்த கேள்விக்கு அவர் பதில் கூற வேண்டுமா இல்லையா?

    நண்பர் குழலி கூறுவது போன்று உண்மையிலேயே அரை நூற்றாண்டு அனுபவம், அதிலும் பைபிளை கரைத்துக் குடித்த அனுபவம் உள்ளவர் என்பது உண்மையானால் எனது ஆந்த கேள்விக்கு பதில் கூற தயங்குவது ஏன்?

    இப்பொழுது கேள்வி ஒன்று தான்.

    * தருமி கூறுவது போன்று இயேசுவை சிலுவையில் அறைந்து கொன்றதாக மட்டும் தான் பைபிளில் வருகிறதா?

    * இல்லை நான் கூறுவது போன்று இயேசுவை கர்த்தர் சிலுவையிலிருந்து காத்து இரட்சித்ததாக பைபிளில் வருகிறதா?

    நான் என் கூற்றில் உறுதியாக இருக்கின்றேன்.

    பைபிளில், இயேசுவை கர்த்தர் சிலுவையிலிருந்து காத்து இரட்சித்ததாக தெளிவாக வருகின்றது. அதனை என்னால் பைபிளை வைத்து நிரூபிக்க இயலும்.

    இல்லை. அவ்வாறு பைபிளில் கிடையவே கிடையாது என அரை நூற்றாண்டு(50 வருட) பைபிள் அனுபமுடைய முன்னாள் கிறிஸ்தவரான, பேராசிரியரான தருமியால் உறுதியாக கூறி அவ்வாறு இல்லை என நிரூபிக்க இயலுமா?

    50 வருடமாக பைபிளோடு ஒட்டி உறவாடிய பேராசிரியர் அனுபவஸ்தர் தருமி அவர்களின் மதம் மாற்றத்திற்கான இந்த காரணம் என்னால் உடைக்கப்பட்டால், ஏதோ அனைத்து மதங்களையும் கரைத்துக் குடித்தது போன்று மற்ற மதங்களின் மீது அவர் வைக்கும் வாதங்கள் அனைத்தும் குழப்பமானவையே என்பது உடைபட்டு போகும் என்பதனால் தான் நல்ல அனுபவஸ்தரான, பேராசிரியர் அவர்கள் என் கேள்வியை கடந்த அரை ஆண்டுகளாக சட்டையே செய்யாமல் திரும்பத் திரும்ப இஸ்லாத்தின் மீது கேள்விகளை சுட்டி வருகிறார்.

    அவருக்கு முழுமையாக பைபிளைக் குறித்தே போதிய அறிவு இல்லை என என்னால் நிரூபணமானால் நண்பர் குழலி போன்று, அவர் மீது மதிப்பும் மரியாதையும் நம்பிக்கையும் வைத்துள்ள வலைப்பதிவர்களுக்கு முன்னிலையில் தந்து முகத்தை எங்கே கொண்டு அவர் வைத்துக் கொள்வார்? அதனால் தான் என் கேள்வியை இதுவரை அவர் திரும்பிப் பார்க்கவே இல்லை.

    நண்பர் குழலி அவர்களுக்கு நான் விரும்பிக் கேட்டுக் கொள்வது ஒன்றே. தாங்கள் நினைப்பது போல் இவருக்கு உண்மையிலேயே அரை ஆண்டு அனுபவம்(முக்கியமாக பைபிளில்) இருப்பது உண்மையானால், அவரது கருத்துக்கள் அனைத்தும் நிதர்சனமானவை, உண்மையானவை என்றால் என் கேள்விக்கு முதலில் அவர் பதில் சொல்லட்டும். என்னோடு அவர

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *