Featured Posts

முஸ்லிம்லீக் மதவாதக் கட்சியா?

சமீபத்தில் ஊடகங்களில் தயங்கித் தயங்கி வினாக்குறியுடன் “மாலேகான் குண்டு வெடிப்புகளுக்கு இந்து அமைப்பு காரணம்?” என்று தலைப்பிட்ட செய்தியைப் பற்றி அதிகம் சொல்லத் தேவையில்லை. அதன் தொடர்ச்சியாகக் கடந்த வருடமும் மாலேகான் மசூதியில் குண்டு வைத்தது “ஹிந்து” ஜாக்ரான் மஞ்ச்சின் இந்துத்துவா ‘குண்டர்’கள் என்ற செய்தியைக் குறித்து இவ்வாரக் குமுதத்தில் ஞானி, “பயங்கரவாதத்தின் நிறம் காவி” என்ற தலைப்பில் ஒரு கட்டுரையை எழுதியிருந்தார்.

மதரீதியில் மக்களைப் பிளவுபடுத்தி பாமரர்களிடம் மதவெறியூட்டி, அரசியல் இலாபம் கண்ட அமைப்புகளைப் பற்றி விளக்கமாகவே ஞானி எழுதி இருந்தார். அக்கட்டுரை அவரது நியாயமான உள்ளக் குமுறலாக இருப்பினும் “மதவெறி பயங்கரவாதம் பல வருடங்களாக இந்தியாவில் இருந்து வருகிறது. மேலை நாடுகளில் மதவெறி என்பது அரசியல் ஆட்சி நிர்வாக அமைப்பிலிருந்து பிரிக்கப்பட்ட பின்னர்தான் அங்கே இன்று காணப்படும் பொருளாதார, வாழ்வியல் மேம்பாடுகள் ஏற்பட்டன. இந்தியாவில் அரசியலுடன் மதத்தைப் பிணைப்பதையே கோட்பாடாகக் கொண்டு இயங்கிய ஹிந்து மகாசபாவின் தொடர்ச்சியாகவே ஆர்.எஸ்.எஸ், பி.ஜே.பி.முதல் முஸ்லிம் லீக், அல் உம்மா வரை பார்க்க வேண்டும்.

தமிழ்நாட்டில் இந்து முன்னணியும் பிள்ளையார் ஊர்வலங்களும் 90களில் வருவதற்கு முன்னால் அல்-உம்மா இல்லை. ஒரு மதத்தில் இயங்கும் மதவெறி அமைப்புதான் இன்னொரு மதத்தின் மதவெறி அமைப்பை போஷித்து வளர்க்கும் சத்துணவு.” என்று மிகச் சரியாக ஞானி குறிப்பிட்டிருந்தார்.

ஆர்.எஸ்.எஸ், பி.ஜே.பியுடன் அல்-உம்மாவைச் சேர்த்திருப்பதிலாவது ஓரளவு நியாயமுண்டு. இராம கோபாலனின் துவேஷப் பேச்சுக்களின் விளைவே பழனி பாபா போன்றவர்களைக் கொதிந்தெழச் செய்தது. இவர்களுடன் முஸ்லிம் லீக்கையும் சேர்த்து மதவாத அமைப்பாகச் எழுதியிருப்பது ஏனென்று புரியவில்லை! கட்சியின் பெயரில் “முஸ்லிம்” என்று இருப்பதால் அவ்வாறு எழுதியிருக்கக்கூடும்.எழுத்தாளர் ஞானி, முஸ்லிம் லீக்கின் நூற்றாண்டுச் செயல்பாடுகளை அறியாத “அஞ்ஞானி”அல்லர்; லீக்-வீக் ஆனதை அறியாமல் எழுதி இருப்பதற்கும் வாய்ப்பில்லை. ‘அந்தப் பக்கம் ரெண்டு பேரு; இந்தப் பக்கம் ரெண்டு பேரு’ என்ற ஜனநாயக-மதசார்பற்ற முத்திரையைத் தக்கவைக்க முஸ்லிம் லீக்கையும் இணைத்திருக்கக் கூடும்.

முஸ்லிம் லீக்கை பி.மு/பி.பி என்று இரண்டு கட்டங்களாகப் பிரிக்கலாம். அதாவது பிரிவினைக்கு முன், பிரிவினைக்குப்பின் என்று வகைப்படுத்தலாம். பி.மு.வில் இந்தியா சுதந்திரம் பெறுவதையே குறிக்கோளாகக் கொண்டு முஸ்லிம் லீக் செயல்பட்டது. இந்திய தேசியக் காங்கிரஸுடன் இணைந்து, முஸ்லிம்களை ஒருங்கிணைத்து சுதந்திரத்திற்காகப் போராடத் தூண்டியது. பிரிவினைக்கு முந்தைய முஸ்லிம் லீக்கின் சுதந்திரப் போராட்டப் பங்களிப்பு மகத்தானது என்பதை யாரும் மறுக்க முடியாது.

சுதந்திரம் பெறுவதற்குச் சிலவருடங்களுக்கு முன்பே, முஸ்லிம்களுக்கெனத் தனிநாடு கோஷம் அவர்கள் மீது திணிக்கப் பட்டு, பிரிவினைவரை தள்ளப்பட்டது. இந்திய தேசியக் காங்கிரஸில் உயர்மட்டத் தலைவர்களாக இருந்த சிலரோடு ஆங்கிலேயரின் பிரித்தாளும் சூழ்ச்சியும் தேசப் பிரிவினைக்கு முக்கியக் காரணங்களாக இருந்தன.

பிரிவினைக்குப் ப

4 comments

  1. muslim league is one and one of the islamic political party,alhamdulillah till going with imaan,insha allah this party will stand untill end of the world.

  2. //மீலாது விழா இஸ்லாத்தில் இல்லாத ஒன்று// என்று சொல்லும் தாங்கள் //பாபர் மசூதி இடிப்பைக் கண்டிக்கும் வருடாந்திர சடங்கு// ஏதோ இஸ்லாத்தில் உள்ள ஒரு சடங்கு போலவும் //அதில் கூட முஸ்லிம் லீகினர் எழுச்சியுடன் கலந்து கொண்டதாக அறிய முடிய வில்லை// என்று எழுதி இருப்பது
    ஒரு வேளை இந்த வருடாந்திர சடங்கு மட்டும் இஸ்லாத்தில் உள்ள ஒன்று போல தெரிகின்றதே?
    உண்மையான் முஸ்லிம்களாக நடந்து மற்றவர்களுக்கு வழி காட்டவில்லை என்றால் ஒரு முஸ்லிம் முஸ்லிமாக நடக்கின்றானா என்பதை அல்லாஹ் அறிவானா அல்லது எதிரொலி தான் சான்றளிக்க வேண்டுமா?

  3. நல்லடியார்

    //மீலாது விழா இஸ்லாத்தில் இல்லாத ஒன்று// என்று சொல்லும் தாங்கள் //பாபர் மசூதி இடிப்பைக் கண்டிக்கும் வருடாந்திர சடங்கு// ஏதோ இஸ்லாத்தில் உள்ள ஒரு சடங்கு போலவும் //அதில் கூட முஸ்லிம் லீகினர் எழுச்சியுடன் கலந்து கொண்டதாக அறிய முடிய வில்லை// என்று எழுதி இருப்பது ஒருவேளை இந்த வருடாந்திர சடங்கு மட்டும் இஸ்லாத்தில் உள்ள ஒன்று போல தெரிகின்றதே?

    கடந்த 17 ஆண்டுகளாக நடந்து வரும் பாபர் மசூதி மீட்புப் போராட்டங்களை ஒருசில இயக்கங்கள் ஏதோ வருடாந்திர சடங்குபோல் மாற்றிவிட்டார்கள்.
    ஆண்டுதோறும் மீலாது விழா என்ற பெயரில் மார்க்கத்தில் இல்லாத விழா நடத்துவதில் காட்டும் ஆர்வத்தை, பாபர் மசூதி மீட்புப் போராட்டங்களை அகில இந்திய அளவில் காட்டியிருந்தால் போராட்டத்தின் வீரியம் அதிகார வர்க்கத்தின் கவனத்தை ஈர்த்திருக்கும்.

    இந்திய முஸ்லிம்களின் அரசியல் பேரியக்கம் என்று சொல்லிக்கொள்ளும் லீக், தேசிய அரசியல் பிரச்சினை ஆகிவிட்ட பாபர் மசூதி மீட்பில் கூடுதல் ஆர்வம் காட்டியிருக்கலாம் என்று சொல்ல வந்ததைப் புரிந்து கொள்ளவும்.

    //உண்மையான் முஸ்லிம்களாக நடந்து மற்றவர்களுக்குவழிகாட்டவில்லை என்றால் ஒரு முஸ்லிம் முஸ்லிமாக நடக்கின்றானா என்பதை அல்லாஹ் அறிவானா அல்லது எதிரொலி தான் சான்றளிக்க வேண்டுமா? //

    இங்கு தனிமனிதரின் ஈமானைப் பற்றிப் பேசவில்லை. முஸ்லிம்களுக்கான அகில இந்திய அரசியல் அமைப்பாகச் சொல்லிக் கொள்ளும் ஒரு அமைப்பு இஸ்லாத்தின் அடிப்படைகளை 100% சரிவரப் பேண வேண்டும் என்று எதிர்பார்ப்பது தவறல்லவே சகோதரரே!

  4. //கட்சியின் பெயருடன் மத அடையாளத்தை வைத்துக் கொண்டு அம்மதத்தைச் சார்ந்தவர்களுக்காக எதுவுமே செய்யாத ஒரே மதசார்புடையக் கட்சி முஸ்லிம் லீக் மட்டுமே!//
    — well said matey..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *