பெண்ணுரிமை அமைப்புக்களின் அடிப்படை நோக்கம் மேற்கத்திய நாடுகளில் வழக்கத்தில் இருந்த ஊதியப் பாகுபாட்டைக் களைய வேண்டும் என்பதாகவே இருந்தன. அதாவது ஒரே அலுவலைச் செய்யும் ஆணுக்கும்-பெண்ணுக்கும் வெவ்வேறு விகிதமான ஊதியம் வழங்கப்பட்டது. இந்த அநீதியிலிருந்து பெண்களை மீட்டெடுக்கப் போராடுவதற்காகவே பெண்ணுரிமை அமைப்புகள் ஏற்படுத்தப்பட்டு போராட்டங்கள் மூலம் சமநீதி பெற வேண்டிய சூழல் உருவானது. இதில் ஓரளவு வெற்றிகண்ட அமைப்புகள் இன்னும் சில ஆணாதிக்கச் சிந்தனைகளிலிருந்து பெண்களை முற்றிலும் விடுவிக்கத் தொடந்து போராடி வருகின்றன.
அனைத்துப் பெண்ணுரிமை அமைப்புகளின் உலகளாவிய பொதுவான கோரிக்கைகள் எவையெனில் ஆண்-பெண் பாகுபாட்டைக் களைதல், பெண்களுக்கெதிரான சமூக மற்றும் இல்லறக் கொடுமைகளிலிருந்து அவர்களை விடுவித்தல், வாழ்வுரிமை ஆகியவையே.
இஸ்லாத்தில் பெண்ணுரிமை இல்லையென்பவர்கள் மேற்சொன்னவற்றில் எவற்றை இஸ்லாம் வழங்கவில்லை என்பதைச் சொல்வதில்லை.
மாறாக பர்தா,பலதாரமணம் என்று அடிப்படைப் பெண்ணுரிமைகளுக்குச் சம்பந்தம் இல்லாதவற்றைச் சொல்லி அவர்களை அழகையும் உடலையும் சந்தைப் பொருளாக்குவதில்தான் பெண்ணுரிமைகள் இருப்பதாகத் தவறாகத் திசை திருப்பி வருகின்றனர். முதலாளியச் சிந்தனையின் எதிர்காலம் சந்தைப் பொருளாதாரத்தை முன்னிருத்தி இருப்பதால் அவர்களுக்கு பெண்ணுரிமைகளை விட பெண்ணுரிமைச் சுரண்டலிலேயே அதிக ஆர்வம் காட்டுகின்றனர் என்பதற்கு அழகிப் போட்டிகளும், இன்ன பிற ஆபாசப் போட்டிகளுமே சான்றாக உள்ளன.
இஸ்லாமியச் சமூகத்தில் பெண் தாயாக, மகளாக, மனைவியாக, சகோதரியாக, தோழியாக என்று தனித்தனி பரிணாமத்தில் பார்க்கப்படுகிறாள். ஒவ்வொரு கட்டத்திலும் பெண்களை இஸ்லாம் கண்ணியப்படுத்துவது போல் மற்ற மதங்கள் கண்ணியப் படுத்துவதில்லை.
“தாயின் காலடியில் சுவர்க்கம்” என்பது முதல் தாய்மையைப் போற்றி பல்வேறு ஹதீஸ்களும் குர்ஆன் வசனங்களும் நிறைந்துள்ளன. பொருள் சார்ந்த கடமைகள் பெண்ணை விட ஆணுக்கு அதிகமாகச் சுமத்தப் பட்டிருப்பதாலேயே, பாகப்பிரிவினையில் பெண்ணை விட ஆணின் பங்கு அதிகம். இதன் மூலம் சகோதரியாக இஸ்லாமியப் பெண் பாதுகாக்கப் படுகிறாள்.
இன்றைய மகளிர் அமைப்புகள் போராடிக் கொண்டிருக்கும் உரிமைகளை இஸ்லாம் 1400 வருடங்களுக்கு முன்பே வழங்கி விட்டது. ஆயினும் இவை எந்த நபித்தோழியருமோ அல்லது மாதர் அமைப்புகளோ போராடிப் பெற்றதல்ல. இஸ்லாமிய வரலாற்றில் எந்தக் காலகட்டத்திலும் பெண்கள் உரிமைகளுக்காகப் போராடியதாகக் காண முடியாது. அதற்குக் காரணம் இறைக் கட்டளை மூலம் அவர்கள் கேட்காமலேயே அவர்களுக்கான உரிமைகள் படைத்தவனால் வழங்கப்பட்டன. நபிகளாரின் காலந்தொட்டே பெண்கள் சமத்துவமாக நடத்தப்பட்டு அவர்களின் வாழ்வுரிமைகளும் கண்ணியமும் காக்கப்பட்டன என்பதற்கு எண்ணற்ற சான்றுகள் உள்ளன. அவற்றைப் பட்டியலிடும் முன்னர் இஸ்லாம் அல்லாத மற்ற மதங்கள் பெண்களை எப்படி அடக்கி ஆள்கின்றன என்பதைப் பார்த்தால் இஸ்லாத்தின் மீதான இவர்களின் குற்றச்சாட்டுகள் காழ்ப்புணர்வன்றி வேறில்லை என்பது புலப்படும்.
ஆரிய இந்து மதத்தில் பெண்களின் நிலை:
1) சிசுக்கொலை:இந்து மத திருமணங்களில் வரதட்சணை வேதகாலந்தொட்டே இருந்து வருகின்றது. ஆரிய இந்துக்களின் ரிக் வேதத்தில், “பசுக்களையும் பொருட்களையும் மணப்பெண்ணின் தந்தை திருமண ஊர்வலத்தின்போது எடுத்துச் சென்று மணமகனுக்கு கொடுக்கவேண்டும்” (ரிக் X.85);
“திருமண வைபவத்தின் போது 10 தேர்களையும், 1060 குதிரைகளையும் வரதட்சினையாகப் பெற்றதால் தான் செல்வந்தனானேன்” (ரிக் I-126);
கன்யாதானத்தின் போ
து, மணப்பென்னின் தந்தை மணமகளுடன் நகைகளையும், ஆடைகளையும் இன்னும் பிற பொருட்களுடன் மணமகன் வீட்டுக்கு அனுப்புவது மரபாகும். பெண்ணாய்ப் பிறப்பதே பெரும்பாவம் என ஒருபக்கம் போதிக்கப்பட்டாலும், மீறிப் பிறந்தாலும் அவர்களின் மீதான வன்கொடுமைகளைக் கட்டவிழ்த்துவிடுவதை ஆரிய இந்து மதம் நியாயப்படுத்துகிறது.
“Tasmat striyam jatam parasyanti ut pumamsam haranti” [Taitt. Samh. VI.5.10.3] அதாவது,
பெண்குழந்தை பிறந்தால் நிராகரியுங்கள்; ஆண் குழந்தையை சுவீகரியுங்கள்” என யஜூர் வேதத்தில் சொல்லப்பட்டுள்ளது. (மாதவ ஆச்சார்யாவின் “தைத்திர்ய யஜூர் வேதம்”)
சமீபத்திய ஆய்வுகளின்படி பெண்சிசுக்கொலை மற்றும் கருச்சிதைவுகள் மூலம் சுமார் ஐம்பது மில்லியன் குழந்தைகள் கொலை செய்யப் பட்டுள்ளனர்.
1921 ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின் படி ஆண்-பெண் விகிதாச்சாரம் 100:97 என்பது அடுத்த 70-80 ஆண்டுகளில் 100:92.7 ஆகக் குறைந்துள்ளது. [சோனாலி வர்மாவின் “Indian women still awaiting Independance’, Reuter.12 Aug. 1997, New Delhi]
2) குழந்தைத் திருமணம்:
ஆரிய இந்து மதத்தின் அங்கீகரிக்கப்பட்ட சட்டபுத்தகமான மநு ஸ்மிரிதியில் மணப்பெண்ணின் வயதை விட மூன்று மடங்கு வயதுடையவனே மிகச்சிறந்த மணமகன் என்கிறது. அதாவது 10 வயது சிறுமிக்கு 30 வயது வாலிபனும், எட்டு வயது சிறுமிக்கு 24 வயது வாலிபனும் கணவனாக இருப்பதை வலியுறுத்துகிறது. (மநு ஸ்மிருதியின் சட்டம் IX.94)
சுதந்திரத்திற்கு முந்தைய இந்தியாவில் அதிக வரதட்சணை மற்றும் அவப்பெயர்களிலிருந்து தப்பிக்க பெண் குழந்தைகளை 5-6 வயதில் திருமணம் செய்து வைப்பது வட இந்தியர்களிடம் பரவலாகக் காணப்பட்டது. (`Women in Delhi Sultanate’ – L.C.Nand Vohra Publishers and Distributors Allahabad 1989, `Society and Culture in Northern India in 12th century’, B.N.S.Yadav Allahabad 1973, `The Position of Women in Hindu Civilization’, Delhi 1973, A.S.Altekar மற்றும் `Some Aspects of the Postion of Women in Ancient India’, G.R.Banerjee)
எஸ்.ஷேத் தனது ‘Religion and Society in The Brahma Purana’ – Sterling Publishers Pvt. Ltd. N.Delhi 1979 என்ற நூலில் “மநுவின் படியான பால்ய விவாகத்தின் மூலம் மணப்பெண்ணின் குறைப்பாடுகள் மறைக்கப்படுகின்றன” என்கிறார்.
வரதட்சணைக் கொடுமைகள்:
வரதட்சணைக் கொடுமைகள் மூலம் ஆண்டு தோறும் சுமார் 5-6ஆயிரம் மணப்பெண்கள் எரித்துக் கொல்லப்படுகிறார்கள். நாளொன்றுக்கு ஒரு டஜன் மணமகள்கள் எரித்துக் கொல்லப்படுகிறார்கள் என்கிறது இன்னொரு அறிக்கை. இவற்றில் ஒரு சில வழக்குகளில் மட்டுமே சட்ட ரீதியான தண்டனைகள் கொடுக்கப்பட்டுள்ளன. (`Kitchen fires Kill Indian Brides with Inadequate Dowry, July 23, 1997, New Delhi, UPI )
அக்னிப் பரீட்சை:
விரும்பியோ அல்லது நிர்பந்தமாகவோ ஒரு பெண் கற்பிழந்தால் அவளுக்கு மரண தண்டனை வழங்கப்படுவது ஆரியர்களின் வழக்கமாக இருந்தது. ஆரிய இந்துக்களில், ஒருவன் தன் மனைவியின் நடத்தையில் சந்தேகம் கொண்டு குற்றம் சுமத்தும் போது, அந்த அபலைப்பெண் தன் கற்பை நிரூபிக்க அக்னிபரீட்சை செய்ய வேண்டும். அக்னிப்பரீட்சையின் போது தீயினால் எரிவது மட்டுமின்றி சிறு காயம் ஏற்பட்டாலும் அவள் கற்பிழந்ததற்கான தண்டனையை அனுபவிக்க வேண்டும். (Encyclopedia Brittanica ‘trial by ordeal’)
இராமன் தன் மனைவி சீதை இராவணனால் சிறை பிடிக்கப்பட்டு மீண்ட போது அக்கினிக் குண்டம் ஏறியே தன் கற்பு நிலையை நிரூபிக்க நிர்ப்பந்தப்படுத்தப் பட்டாள் என்பதை இந்துக்களின் வேத காவியமான இராமயணம் சொல்கிறது.
சதி மற்றும் உடன்கட்டை:
போரில் ஈடுபடும்போது தங்கள் மனைவிகளும் பெண் குழந்தைகளும் எதிரிகளிடம் அகப்பட்டு கொடுமைகளுக்குள்ளாகக் கூடாது என்பதற்காக ஒட்டு மொத்தமாக குடும்பம் குடும்பமாக எரியும் தீயில் குதித்து உயிரை மாய்ப்பதை ‘ஜவுஹர்’ என்றழைத்தனர். கணவன் இறந்த பிரகு அவனின் சிதையில் மணைவியை பலவந்தமாகத் தள்ளி எரிப்பதை ரிக் வேதம் வலியுறுத்துகிறது. (ரிக் வேதத்தின் சதி ஸ்லோகம்)
“Let these women, whose husbands are worthy and are living, enter the house with ghee (applied) as corrylium ( to
their eyes). Let these wives first step into the pyre, tearless without any affliction and well adorned.”[Rig Veda X.18.7] மற்றும் History of Dharmasashtra’, M.P.V.Kane Vol. IV, Bhandarkar Oriental Research Institute. 1953)
இவையன்றி ‘அந்நியன் புகழ்’ கருடபுராணத்திலும் சதி வலியுறுத்தப்பட்டுள்ளது. இதில் சற்று ஆறுதலான விடயம் யாதெனில் கர்ப்பிணிகள் மற்றும் குழந்தைகளையுடைய தாய்மார்களுக்கு விதிவிலகளிக்கிறது!. உடன் கட்டை ஏறாத பெண் மீண்டும் மீண்டும் பூமியில் பிறந்து அவள் உடன்கட்டை ஏறும்வரை பிறந்து கொண்டே இருப்பாள் என்கிறது. (Garudapurana II.4.91-100). பத்ம புராணத்தின்படி கணவனை இழந்த கைம்பெண் தானாகவே விரும்பி சிதைமீதமர்ந்து உடன்கட்டை ஏறவேண்டும் என்கிறது. விஷ்ணு ஸ்மிருதியின் படி, கணவனை இழந்த பெண் பாலியல் ஆசைகளைக் கைவிட வேண்டும் அல்லது சதி எனும் உடன்கட்டை ஏற வேண்டும் என்ற இரு வாய்ப்புகளை வழங்குகிறது.
“If a woman’s husband dies, let her lead a life of chastity, or else mount his pyre”[Vishnusmrti xxv.14] (Hindu Customs, Manners and Ceremonies’, Abbe J.A.DuBois, transl. by H.K.Beauchamp from French, 3rd ed. Oxford 1906 மற்றும் ` The RigVeda and Vedic Religion’, A.C.clayotn, 1913, 1980 reprt. Bharati Prakashan Varanasi 1980). பிரம்ம புராணத்தில் “It is the highest duty of the woman to immolate herself after her husband, அதாவது
“கணவனை இழந்தப் பெண்ணின் தலையாயக் கடமையானது, தன்னை உடன்கட்டை ஏற்ற அர்ப்பணிப்பதாகும்” என்கிறது (பிரம்ம புராணம் 80.75) மேலும் உடன்கட்டை ஏறிய பெண் சுவர்க்கத்தில் மூன்றரைக் கோடி வருடங்கள் தன் கணவனுடன் இருப்பாள்” என்கிறது.”She [the sati] lives with her husband in heaven for as many years as there are pores in the human body, ie. for 35 million years.”[பிரம்ம புராணம் 80.76, 80.77]. விஷ்ணு தர்ம சாஸ்திரத்தின் படி “கணவனை இழந்த பெண் எஞ்சிய வாழ்நாள் முழுவதும் விதவைக் கோலம் பூண்டிருக்க வேண்டும்; அல்லது எரியும் சிதையில் தீக்குதிக்க வேண்டும்” என்று வழிகாட்டுகிறது!
மேலும் பல ஆரிய இந்து வேதங்களில் உடன்கட்டை ஏறுவதை வலியுறுத்தி அல்லது ஊக்குவித்து பல கட்டளைகள் பரவலாக உள்ளன. அவற்றில் சில:
· கணவனின் சிதையில் குதித்து உடன்கட்டை ஏறிய பெண்கள் சுவர்க்கத்தில் அருந்ததியர்களுக்கு இணையாக கணவனுடன் இருப்பர்.
இவையன்றி கிருஷ்ண பரமாத்மா இறந்த பிறகு (?) அவரின் அந்தப்புர நாயகிகளான ருக்மணி, ரோகிணி,தேவகி, பத்ரா மற்றும் மதுரா உள்ளிட்டோர் தீக்குளித்து இறந்ததாக புராணங்கள் பெருமிதப்படுகின்றன. மேலும் பாண்டுவின் இரண்டாவது மனைவி மாதுரி தீக்குளித்து பின்னர் தெய்வமானதாக மகாபாரதம் கதைக்கிறது.
இவ்வாறாக சதி எனும் உடன்கட்டை ஏறும் கொடிய வழக்கம் ஆரிய இந்துக்களால் அறிமுகப்படுத்தி ஊக்குவிக்கப்பட்டு, இவற்றின் மூலம் கணவனை இழந்த பெண்களை தீயில் தள்ளி ஏராளமான பெண் தெய்வங்களை உண்டாக்கி விட்டனர்.
இவையெல்லாம் பெண்களை ஆராதித்தல் என்ற பெயரில் நடத்தப்பட்ட கொடுமைகள் என்றால், பெண்களுக்காகவே தனியாக தண்டனைச் சட்டங்களும் இருந்ததுதான் ஆரிய இந்து மதத்தின் சிறப்பாகும். பிராமணப் பெண்கள், கணவனின் அனுமதியின்றி வீட்டை விட்டுச் சென்றால், அப்பெண்ணின் மூக்கையும் காதையும் அறுத்து தண்டிக்கப்படுவாள். பெண்கள் செய்யும் சிறு தவறுகளுக்கும் கூட அவர்கள் கொடுமையாகத் தண்டிக்கப்பட்டதற்கு மூக்கறுபட்ட சூர்ப்பனகை சம்பவம் இராமயணத்தில் உள்ளது! இவை மட்டுமா?
“எந்தப் பெண்ணாவது தன் குலம் பற்றியோ அல்லது தன் தகுதி பற்றியோ இன்னொருவனை ஒப்பிட்டு கணவனை பிறர் முன்னிலையில் அவமதித்தால், பொதுமக்கள் முன்னிலையில் அவளின் கால்களில் நாய்களைக் கட்டி இரண்டாக கிழிக்கப்படுவதை உறுதி செய்வது மன்னனின் கடமையாகும்; மேலும் அந்த தீயவன் (அப்பெண்ணால் ஒப்பிடப்பட்டவன்) பழுக்கக் காய்ச்சிய இரும்புக் கட்டிலில் படுக்க வைக்க வேண்டும்” (மநு ஸ்மிர்தி 8:371-372). மேலும்,
“கணவன் வீட்டிலில்லாத போது மனைவியானவள், தன் பெண் உறவினருடன் மட்டுமே உறங்க வேண்டும்” – (வஷிஸ்டரின் பத்ம புராணம்)
“பெண் மக்களை மட்டுமே ஈன்றெடுக்கும் பெண்ணுடன், உடலுற
அய்யா நல்லடியாரு!
நீங்க தமிழோவியத்துல எழுதுனப்ப ஒரு ஆள் நீலமா குண்டா இருப்பாரு எதொதோ சவால்லாம் உட்டாரே அவரு எங்கே போயிட்டாரு?
ஐயா நல்லடியார்,
இஸ்லாத்தில் கணவன் மனைவியரிடையே உள்ள பரஸ்பர உரிமையைப் பற்றி பற்ற வைத்து குளிர் காய்ந்த நேசங்களிடம் இந்த ப் பதிவின் வழியாக ஒரு கேள்வி கேட்க விரும்புகிறேன்.:
சனாதன ஹிந்து மதத்தார் திருமணத்தின் போது சொல்லும் மந்திரம் கல்யாணப்பெண்ணையும் மாப்பிள்ளையையும் மகா மட்டமாக ———— என்று சொல்வதாக முத்துக்குமரன் என்றொரு திராவிடத் தம்பி ஒரு பதிவு போட்டாரே… அப்போது எங்கே முகத்தை வைத்துக்கொண்டிருந்தார்கள் இந்த குமார்கள்? அல்லது அத்தகைய மந்திரத்தை சொல்லாமல் தான் தன் இல்லாளை ஏற்றுக்கொண்டார்களா?
திரு நல்லாடியார் அவர்களே, இந்த வேதங்கள் தமிழில் எங்கு கிடைக்கின்றன. நான் இதுவரைக்கும் வேதங்களைப் படித்ததில்லை. எங்கு கிடைக்கிறது என்று சொன்னால் நன்றியுடையவான இருப்பேன்.
மன்னிக்கவும் இந்த பதிவிற்கு சம்பந்தமில்லாத கேள்வி. இதை பதிக்க ஏது இல்லையென்றால் எனக்கு தனி மின்னஞ்சல் இடவும். என் முகவரி calgarysiva@gmail.com
அட்றா சக்கை (!?)
தமிழோவியத்தில் நேசகுமார் என்ற பெயரில் எழுதியவரின் அபத்தங்களையும் அவதூறுகளையும் என்னால் முடிந்தவரை சுட்டிக்காட்டினேன். நீங்க சொல்றது மாதிரி ‘நீலமா குண்டா’ யாரும் சவால் உ(வி)ட்டதாக எனக்கு நினைவில்லை. தயவு செய்து அவற்றை சுட்டினால் என்னால் முடிந்தவரை (நேரம் கிடைக்கும்) போது சவாலை சந்திக்கிறேன். காசா பணமா?
Raaja,
இந்து மதத்தில் இருக்கும் குறைகளை அம்மதம் சாராதவர்கள் சுட்டிக்காட்டினால் யாரும் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை. ஆனால் உதாரணத்திற்குக் கூட ஒரு முஸ்லிம் ஒப்பிட்டு எழுதினால் அவ்வளவுதான்!
நீங்கள் குறிப்பிடும் நேச குமாரர்களுக்கு ஆரிய இந்து மதத்தில் இருக்கும் நிவர்த்தி செய்யமுடியாத குறைபாடுகள் நன்றாகத் தெரியும். ஆனால் அவருக்கு இட்ட பணி அதே போல் இஸ்லாத்திலும் ஏதாவது கிடைக்குமான்னு தேடிப்பிடித்து தூற்றுவதே; ஒன்றும் கிடைக்காத பட்சத்தில் அவதூறாக எழுதுவார்; அதனை அபூமுஹை, சலாஹுத்தீன் போன்றோர் சுட்டினால் பிறகு எழுதுகிறேன் என்று நழுவுவார். எனக்குத் தெரிந்து நேர்மையான தொடர் விவாதங்களில் உண்மையைச் சொல்லி “அவர்” வாதிட்டதாக அறியவில்லை. தமிழோவியத்தில் நான் அவருக்கு மறுப்பு எழுதிய போது கூட கொலை மிரட்டல் வந்ததாகச் சொல்லி புலம்பினார்.
சிவா,
என் பதிவிலேயே முடிந்தவரை சம்பந்தப்பட்ட பதிப்பகம், ஆசிரியர் விபரம் கொடுத்திருக்கிறேன். கூகில் பண்ணினால் ஆங்கிலத்தில் கிடைக்கலாம்.
நான் பார்த்தவரை குர்ஆன் மற்றும் பைபிள் மட்டுமே இணையத்தில் முழுமையாக கிட்டத்தட்ட அனைத்து உலக மொழிகளிகளிலும் கிடைக்கிறன. இந்து வேதங்களை அவ்வாறு பிரசுரிக்க முடியாமைக்குக் காரணம்:
1) இதுதான் முழு இந்துக்களுக்குமான வேதம் என்று எதிலும் குறிப்பிடப்படப் படவில்லை.
2) வேதங்களைப் படிப்பதும் ஓதுவதும் குறிப்பிட்ட சாதியினருக்கு மட்டுமேயுள்ள ஏகபோக உரிமை என்று சம்பந்தப்பட்ட சாதியினரே பறை சாட்டிக் கொண்டது.
3) சமஸ்கிரதம் தவிர பிற மொழிகளில் நீச மொழிகள் என்ற மொழிவெறி கூட இந்து வேதங்களை பிர மொழிகளில் எடுத்துச் செல்ல முடியாமல் போனதற்குக் காரணமக இருக்கலாம்.
4) நான் சொன்னது போல் சில நல்லக் கருத்துக்களைச் சொல்லும் ஆரிய வேதங்கள் முழுமையையும் மொழிபெயர்க்க முடியாதவாறு ஆபாசங்கள் நிரம்பி இருத்தல் ஆகியவை என நினைக்கிறேன்.
தெரிந்து கொள்வதற்காகக் கேட்கிறேன் (வருத்தப்படாத பட்சத்தில்) ஆரிய இந்து வேதங்களை தமிழில் அறிந்தாலும் அதனை உங்களால் பிறருக்கு, ஏன் நெருங்கியவர்களுக்குக் கூட எடுத்துச் சொல்ல முடியுமா உங்களால்…?
இன்றைய மகளிர் அமைப்புகள் போராடிக் கொண்டிருக்கும் உரிமைகளை இஸ்லாம் 1400 வருடங்களுக்கு முன்பே வழங்கி விட்டது. ஆயினும் இவை எந்த நபித்தோழியருமோ அல்லது மாதர் அமைப்புகளோ போராடிப் பெற்றதல்ல.//
தொழுகைக்குப் பள்ளிவாசல் செல்ல இஸ்லாமிய பெண்கள் போராடியதாக வாசித்த ஞாபகம்.
உங்கள் கருத்து..?
Vedas are available in English.
Tamil translations are also there.
We Hindus are not blind followers
of any book.You are blind followers and you are irrational.
Hindusim may not be perfect, we are willing to understand that
and change our norms and laws.
Can that be said of you.We outlawed
child marriage.We try our best to
eliminate it fully.You muslims
still marry 13/14 year old
girls to old men from gulf.
The plight of those brides
who are often left in lurch
after marriage is too well
known.So keep your mouth
shut and try to do something
positive for your society.
//தொழுகைக்குப் பள்ளிவாசல் செல்ல இஸ்லாமிய பெண்கள் போராடியதாக வாசித்த ஞாபகம்.உங்கள் கருத்து..?//
தருமி,
நானும் படித்திருக்கிறேன். பெண்கள் பள்ளிக்குச் சென்று தொழுவதை இஸ்லாம் தடுக்கவில்லை என்பதை அறிவீர்களோ என்னவோ? நம்புவதற்கு கடினமாக இருந்தால் கால்கேரி சிவா அவர்களிடம் கேட்டு உறுதிப் படுத்திக் கொள்ளவும்.
அட தருமி அய்யா. ஆச்சரியமாக இருக்கிறது! நீங்கள் வலைப்பதிவில் இருக்கிறீர்களா? தவறாக எடுத்துக் கொள்ள வேண்டாம். இதற்கு முந்தைய திரு. நல்லடியார் அவர்களின் “பெண்ணிய” பதிவில் ஏதோ இரண்டு “பகுத்தறிவாள” அரைவேக்காடுகள் உங்களை குறித்து ஏதோ கூறியதாக ஞாபகம். நீங்கள் பதில் கூறுவீர்கள் என எதிர் பார்த்தவர்களில் நானும் ஒருவன்.
இதுவரை அதில் உங்கள் மறுமொழியினை காணாததால் கேட்டேன்.
//Vedas are available in English.
Tamil translations are also there.
We Hindus are not blind followers
of any book.//
அணானி,
திரு.கால்கேரி சிவா அவர்கள் விரும்பியது போல் நீங்கள் அறிந்த தளங்களைச் சுட்டினால் நன்றாக இருக்கும். தனி மடலாகவோ அல்லது பின்னூட்டமாகவோ இடலாமே!
//Hindusim may not be perfect, we are willing to understand that and change our norms and laws.//
இந்து மதம் விமர்சிக்கப்படும் போதெல்லாம் இப்படித்தான் சில சொல்கிறார்கள். எதார்த்தத்தில் அவை உண்மையல்ல! உதாரணத்திற்கு திருமண வைபவங்களில் ஐயரும், வேத மந்திரமும் இலாவிட்டால், அது இந்து திருமணமல்ல “சுயமரியாதை திருமணம்.
//We outlawed
child marriage.We try our best to
eliminate it fully.You muslims
still marry 13/14 year old
girls to old men from gulf.
The plight of those brides
who are often left in lurch
after marriage is too well
known.So keep your mouth
shut and try to do something
positive for your society. //
குழந்தை திருமணங்கள் இன்னும் இந்தியாவில் நடந்து கொண்டுதான் இருக்கின்றன.
http://www.samsloan.com/childmar.htm
அதேபோல் அரேபிய கிழவர்களுக்கு தங்கள் வீட்டு இளங்குமரிகளை மணம் செய்து வைப்பதும் இந்தியாவில் அவ்வப்போது நடந்து கொண்டுதான் இருக்கின்றன. இதற்குக் காரணம் ஆசிய மக்களைப் பீடித்துள்ள வரதட்சினை, இந்தியாவிலிருக்கும் ஏழை முஸ்லிம்களைவும் விட்டு வைக்கவில்லை. அதேபோல் மணமகளுக்கு “மஹர்” கொடுக்க முடியாத அரேபியர்கள் இந்தியா,பாகிஸ்தான், பங்களாதேஷ் போன்ற நாடுகளிலுள்ள முஸ்லிம்களின் ஏழ்மையைப் பயன்படுத்தி குறைந்த மஹருக்கு இளம் குமரிகளை மணந்து கொள்கின்றனர். இவை தற்போது தன்னார்வ விழிப்புணர்வு இயக்கங்களால் அடையாளம் காணப்பட்டு ஓரளவு கட்டுக்குள் வந்துள்ளது. ஆனால் வட இந்தியாவில் பரவலாக உள்ள குழந்தை திருமணத்தை இந்துக்களின் பாதுகாவலர்களான பிஜேபி அரசால் கூட தடுக்க முடியவில்லை என்று முன்னாள் இராஜஸ்தான் முதலமைச்சர் சொல்லி இருந்ததையும் நினைவில் கொள்க!
கவனமான ஆழ்ந்த அலசல்.
பெண்களுக்கு அவர்களுக்கிடையில் என்ன மரியாதை என்பதற்கு திருவாளர் டோண்டு அவர்களின் “பெண் கற்பு நிலை” தொடர் பதிவுகளே தக்க சான்று. அவர்களுக்கு இந்த சிந்தனையை கொடுப்பது அவாள்களால் உருவாக்கப்பட்ட வேதங்கள் தான் என்பதை நன்றாக தோலுரித்துக் காட்டியுள்ளீர்கள். வேதங்கள் இவ்வாறு கூறும் பொழுது திருவாளர் டோண்டு போன்றோர் பெண்களைக் குறித்து இவ்வளவு கீழ்தரமான கருத்துக்களை கொண்டிருப்பதில் வியப்பேதுமில்லை.
உண்மைகளை தோலுரிக்கும் போது கூடவே வரும் வசைகளை நேரிட தயாராக இருக்கவும். சிலவேளை “நாங்கள் எப்படியிருந்தால் உனக்கென்ன; உன் வேலையைப் பார்” போன்ற அன்பான ஆலோசனைகள் கூட வரலாம்.
மறுபுறம் “இதெல்லாம் வேதங்களில் இருப்பதென்னவோ உண்மை தான், ஆனால் அது ஒன்றும் இந்திய அரசியலமைப்புச் சாட்டமில்லையே பின்பற்றுவதற்கு” என்ற அறிவுப் பூர்வமான வாதங்களும் வரலாம்.
குறைந்த பட்சம் மதாடிப்படைவாதி என்ற பட்டமாவது வரும்.
எதற்கும் கிடைப்பதை வாங்கிகட்டிக் கொள்ள தயாராக இருங்கள்.
அன்புடன்
இறை நேசன்.
Your logic is brilliant.According to that any problem in islamic society has nothing to do with islam but with few muslims.Whereas
all problems in hindu society are
because of hindus and hindusim.
you know only one side of hinduism.
you know nothing about upanishads
or hindu theories of logic, metaphysics and perception.
you are a bigot, fit to be
a part of taliban and other
jihadi fundamentalist forces.
நல்லடியார்!
திரு சிவா அவர்களுக்குத் தமிழ் சற்றுத் தகராறு என்றே நினைக்கிறேன்.
உதாரணம்
கனடா = கனாடா
நல்லடியார் = நல்லாடியார்
உமர் =ஒமார்
முத்தவ்வா = முட்டாவா
இது அவருக்கான அக்கறையுடன் கூடிய அறிவுரையே..
//மறுபுறம் “இதெல்லாம் வேதங்களில் இருப்பதென்னவோ உண்மை தான், ஆனால் அது ஒன்றும் இந்திய அரசியலமைப்புச் சாட்டமில்லையே பின்பற்றுவதற்கு” என்ற அறிவுப் பூர்வமான வாதங்களும் வரலாம்.//
இறைநேசன்,
இப்பதிவின் முதல் பகுதியில் இதைப்பற்றி குறிப்பிட்டுள்ளேன். இங்கு ஒப்பிடப்படுவது மதங்களில் பெண்ணியமேயன்றி இந்தியச் சட்டங்களிலுள்ள பெண்ணியமல்ல! இந்து மதச்சட்டங்களைச் சொல்லும் போதெல்லாம் அவற்றை இந்துக்கள் யாரும் பின்பற்றுவதில்லை என்று சொல்லி, இந்தியச் சட்டத்தையே மேற்கோளிடுகின்றனர்.
இந்துச் மதச்சட்டங்களை, இந்தியச் சட்டங்கள் ஏன் Overwrite பண்ணின என்று யாராவது சட்டமறிந்தவர்கள் விளக்கினால் நீங்கள் சொல்வது போன்ற குற்றச்சாட்டுகள் எழாது.
//எதற்கும் கிடைப்பதை வாங்கிகட்டிக் கொள்ள தயாராக இருங்கள்.//
உங்க வாய்க்கு சீனி போடனும்யா இறைநேசரே! குடுகுடுன்னு ஓடி வந்து ஒரு அனானி பட்டம் குடுத்துட்டு போயிருக்காரு, பாத்தீங்களா?
//you are a bigot, fit to be
a part of taliban and other
jihadi fundamentalist forces//
நல்லடியாரே! இதெல்லாம் சும்மா! இன்னும் வரும் பாருங்க!
தமிழ்ச்செல்வன்,
உங்கள் பின்னூட்டம் பார்த்தபின்பே நீங்கள் சொன்னவர்களின் பின்னூட்டம் பார்த்தேன்.
என்ன நீங்க இப்படி சொல்லிட்டீங்க…என் பதிவுகளை எவ்வளவு முழுமையாகப் படித்து வருகிறார்கள் என்று எனக்கு எவ்வளவு சந்தோஷமாயிருக்கு!! அதோடு நதியைக் கடக்க தன் தோளில் பெண்ணைத் தூக்கிச் சென்ற குருவைப்பார்த்து சீடர்கள் கேட்ட கேள்வியும், குருவின் பதிலும் நினைவுக்கு வந்தன.
கவனமான ஆழ்ந்த அலசல்
இது போல் நிறைய வர விரும்புகிறேன்
இன்றைய தேதிவரை ‘சதி’க்கு வெளிப்படையான ஆதரவு பெருந் தலைகளிடமிருந்து கிடைத்தே வருகிறது!.
அந்தக் காலத்தில் ‘சதி’யை முறியடிக்க ராஜாராம் மோகன்ராய் எவ்வளவு கஷ்டப் பட்டிருப்பார்?
அது சரி, ஒரு அனாமேதயம் இங்கிலீசுலே என்னமோ பொலம்புதே, என்னங்க அது?
//தெரிந்து கொள்வதற்காகக் கேட்கிறேன் (வருத்தப்படாத பட்சத்தில்) ஆரிய இந்து வேதங்களை தமிழில் அறிந்தாலும் அதனை உங்களால் பிறருக்கு, ஏன் நெருங்கியவர்களுக்குக் கூட எடுத்துச் சொல்ல முடியுமா உங்களால்…?
//
நான் இதுவரைக்கும் படித்ததில்லை. நான் அறிய தான் கேட்டேன். ஆங்கிலத்தில் இருப்பது கூகுளாண்டவரை அணுகினால் கிடைக்கும்.
ஆரிய வேதங்களை மட்டுமல்ல, ஆபிராகாமிய வேதங்களையும் அடுத்தவரிடம் எடுத்து சொல்ல எனக்கு விருப்பமில்லை.
என்னுடைய கேள்விக்கு பதில் அளித்ததற்கு நன்றி
\\தொழுகைக்குப் பள்ளிவாசல் செல்ல இஸ்லாமிய பெண்கள் போராடியதாக வாசித்த ஞாபகம்.
உங்கள் கருத்து..?\\
As for your demand to know a proof for the permissibility of women going to mosques, the prophet (may peace be upon him) said: “If your women ask permission to go to the mosque at night allow them”, (Sahih Bukhari). He also said: “Do not prevent the maid- servants of Allah from going to the mosques”, (Sahih Muslim). Again it was narrated by Ibn ‘Umar that the Prophet (may peace be upon him) said: “Do not prevent women from going to the mosques at night.” A boy said to Ibn ‘Umar: “We would never let them go out, that they may not be caught in evil.” Ibn ‘Umar reprimanded him and said: “I am saying that the messenger of Allah said this and you say: no, we will not allow it?” (Sahih Muslim).
For more:
http://www.islamonline.net/servlet/Satellite?cid=1123996015442&pagename=IslamOnline-English-AAbout_Islam/AskAboutIslamE/AskAboutIslamE
Some more:
Women: The Spiritual Aspect
By Dr. Jamal Badawi
22/06/2006
http://www.islamonline.net/english/introducingislam/Individual/article05.shtml
//தமிழ்ச்செல்வன்,
உங்கள் பின்னூட்டம் பார்த்தபின்பே நீங்கள் சொன்னவர்களின் பின்னூட்டம் பார்த்தேன்.
என்ன நீங்க இப்படி சொல்லிட்டீங்க…என் பதிவுகளை எவ்வளவு முழுமையாகப் படித்து வருகிறார்கள் என்று எனக்கு எவ்வளவு சந்தோஷமாயிருக்கு!!//
நழுவல் அருமை.
எப்படி உங்களால் மட்டும் இதற்கு முடிகிறது?
“நான் ஏன் மதம் மாறினேன்” என்று காரணங்களை அடுக்குவீர்கள்.
அவைகளில் பல அபத்தங்கள் உள்ளனவே எனச் சுட்டிக் காட்டி கேள்வி கேட்டால், “ஆகா என் பதிவுகளை முழுமையாக படிக்கிறார்கள்” என புழகாங்கிதமடைந்து யாராலும் வழங்க முடியாத அதியற்புத பதிலைத் தருவீர்கள்.
“மதம் மாறிய” தொடர் பதிவுகளின் காரணமென்ன என இப்பொழுது தெளிவாக விளங்குகிறது.
ம்ம்ம்ஹ்ஹ்ஹ்ம்ம்ம்ம் நடத்துங்க.
//அதற்காகவே அந்த மதங்களைப் பற்றி என் ஆய்வை கொஞ்சம் விஸ்தாரமாக வைத்தேன்.//
இது “நான் ஏன் மதம் மாறினேன் – 5” -ல் தருமி வைத்தது.
இவருடைய விஸ்தாரமான ஆய்வில் அவர் கண்டு கொண்ட உண்மை, 1. “இஸ்லாத்தில் முதல் மனிதன் ஆதமுடைய மனைவிக்கு பெயர் இல்லை”
2. “கிறிஸ்தவ கடவுள் இயேசுவை சிலுவையில் அறைந்து கொன்றதாக பைபிளில் வருகிறது”
இதில் முதல் விஷயத்தைக் குறித்து என்ன கூற – சரி இஸ்லாமியரல்லாத அவர் முழுமையாக குரானை ஆய்வு செய்வது சாத்தியமில்லை என விட்டு விடலாம்.
ஆனால் இரண்டாவது விஷயம்!?
பைபிளில் இயேசுவை கர்த்தர் காப்பாற்றியதாக வருகிறதே என கிறிஸ்தவரல்லாத நான் எழுப்பிய கேள்வி இன்னும் தொங்கிக் கொண்டு நிற்கிறது.
அவர் மதம் மாற காரணங்களில் முக்கிய காரணமாக இதனை வேறு படுத்தியுள்ளார். லாஜிக்கே அடிபடுகிறது.
ஒரு கிறிஸ்தவரான அவருக்கே இது தெரியவில்லை எனில் அவருடைய விஸ்தாரமான ஆய்வை குறித்து(தனது வேத புத்தகத்தைக் குறித்தே சரியான பார்வையில்லாத போது) என்ன சொல்ல?
இனி இதற்கு கூட அவரிடமிருந்து ஆழ்ந்த விஸ்தாரமான அபூர்வ பதிலாக, “ஆகா என் பதிவுகளை முழுமையாக படிக்கிறார்கள்” – இதனை எதிர்பார்க்கலாம்.
இவன் என்னடா அவருடைய பதிவில் வைக்க வேண்டிய பின்னூட்டத்தை இங்கு வைக்கிறானே என்றொரு கேள்வி எழலாம்.
நான் இது தொடர்பாக ஏற்கெனவே அவர் பதிவில் வைத்த பின்னூட்டத்தை ஒரு மரியாதைக்கேனும் இதுவரை பிரசுரிக்காத அவருடைய விசால மனதை நம்பி எப்படி அங்கு வைப்பது. அதனால் தான் அவர் புழங்கும் நியாயமான பின்னூட்டங்களை அனுமதிக்கும் இது போன்ற இடங்களில் இதனை பதிப்பித்து போகிறேன்.
வாங்கய்யா தருமி
நல்லடியாரோட இதற்கு முந்தைய பதிவுல உங்களோட மேற்கோள்களைப் போட்டதப் பாத்து அருமையா நழுவி இருக்கீங்க நழுவல் திலகம் அப்டின்னு பேர் குடுக்கலாம் உங்களுக்கு
ஒரு பெண் சீரியலில் நடிக்கும் ஒரே காரணத்திற்காக அவளை மார்க் போட்டு (உங்கள் வயது கருதி ஜொள் என்ற வார்த்தையைத் தவிர்க்கிறேன்) பொதுவில் டிஸ்கஸ் செய்யும் அளவுக்கு உங்களுக்கு உரிமை வந்து விட்டதா?
ஒரு பேச்சுக்கு உங்கள் வீட்டுப் பெண்களில் ஒருவர் இவ்வாறு நடித்திருந்து நீங்கள் போட்டது போல் ஒருவர் பதிவெழுதி அதை நீங்கள் படிக்க நேர்ந்தால் நீங்கள் ஏற்றுக் கொள்வீர்களா?
இதற்கும் ஏதாவது நழுவல் பதில் வைத்திருப்பீர்கள் எனத் தெரியும். வாத்தியாராச்சே!
பெண்ணியம் குறித்து உரத்த குரல் எழுப்பும் போது தான் முதலில் அதைக் கடைபிடிக்கிறோமா என ஒருமுறை கேட்டுவிட்டு பிறருக்குச் சொல்லலாம்.
‘பிறர் கண்ணில் துரும்பு இருப்பதைப் பார்ர்க்குமுன், உன் கண்ணில் கிடக்கும் உத்திரத்தைக் கவனி’ என்கிற ஏசுநாதரின் அறவுரை நினைவுக்கு வருகிறது..
///மாறாக பர்தா,பலதாரமணம் என்று அடிப்படைப் பெண்ணுரிமைகளுக்குச் சம்பந்தம் இல்லாதவற்றைச்//
பர்தா போட்றதும் போடாததும் பெண்கள் விருப்பம் இல்லையா?? அவங்க எதை எக்ஸ்போஸ் பண்ணனும் பண்ணக்கூடாதுன்னு நம்ம எப்படி சொல்ல முடியும். அப்போ பல தார மணம், பெண்ணுரிமைக்கு சம்மத்தமில்லாததுனு சொல்றீங்க. பெண்கள் பல மணம் புரிஞ்சா பொறுத்துக்க முடியுமா???
ஒண்ணு சொல்லணும்னா எது சரி எது தப்புனு காலா காலத்துக்கும் சொல்ல முடியாது. அப்ப இருந்த பிரச்சினைகளை வெச்சு, இதெல்லாம் எழுதி இருக்காங்க..
மொகாலாய மன்னர்கள் வருகைதான் சதியை அதிகப்படுத்தியிருக்கிறது, ஏதோ காணாததை கண்டதைப் போல் பெண்கள் மீது பாய்ந்த மிருகங்களால், பெண்கள் மானம் இழப்பதை விட கணவனுடன் உயிரிழப்பத்தை பெருமையாக கொண்டனர்.
//இஸ்லாமியச் சமூகத்தில் பெண் தாயாக, மகளாக, மனைவியாக, சகோதரியாக, தோழியாக என்று தனித்தனி பரிணாமத்தில் பார்க்கப்படுகிறாள்.///
எனக்கு தெரிஞ்சு எல்லா இடத்திலும் இப்படித்தான், இதில் எப்படி இஸ்லாம் மாறுபடுகிறது?
///பொருள் சார்ந்த கடமைகள் பெண்ணை விட ஆணுக்கு அதிகமாகச் சுமத்தப் பட்டிருப்பதாலேயே, பாகப்பிரிவினையில் பெண்ணை விட ஆணின் பங்கு அதிகம். இதன் மூலம் சகோதரியாக இஸ்லாமியப் பெண் பாதுகாக்கப் படுகிறாள்.///
எனக்கு இது புரியல?? அண்ணன் சொத்தை எல்லாம் பிடுங்கிட்டு தங்கைய விரட்டுனா அங்க எப்படி சகோதரி பாதுகாக்கபடுறாங்க….????
///இந்து மத திருமணங்களில் வரதட்சணை வேதகாலந்தொட்டே இருந்து வருகின்றது. ///
இஸ்லாத்தில் இது தடை செய்யப் பட்டிருக்கா??? மொஹராக்கள் வாங்காம தடை இருக்கா?? இங்க முஸ்லிம்கள் வாங்குற வரதட்ச்சிணை குடுக்க முடியாம தான அரபு கிழவர்கள்கிட்ட சின்ன பொண்ணுங்கள குறைஞ்ச விலைக்கு “விக்குறாங்க”
என்னவோ போங்க!!!!
அழகிய பதிவு. பாராட்டுக்கள்!
சுவனப்பிரியன்.