டைம்ஸ் ஆப் இந்தியாவில் வந்த இச்செய்தியை படித்ததும் உண்மையில் மனம் நெகிழ்ந்தது. மும்பையில் தொழில் செய்துவரும் குஜராத்தைச் சார்ந்த தொழிலதிபர் தயால் பானுஷாலிக்கு கிட்னி மாற்று சிகிச்சைக்கு மும்பை கடற்படையில் பணியாற்றும் சயீது முஹம்மது கிட்னி கொடுத்து உதவியுள்ளார். அதேபோல் தயாள் பானுஷாலியின் மனைவி தமயந்தி தனது கிட்னியை சயீத் முஹம்மதின் மனைவி ஷமீமுக்கு கொடுத்துள்ளார்.
தம்பதிகளுக்கிடையிலான இதுபோன்ற கிட்னி பரிமாற்றம் இதற்குமுன் சண்டிகரில் ஏப்ரல் 2004 இல் நடந்து தோல்வியில் முடிந்தது. மேற்கண்ட பரிமாற்றத்தில் மொத்தம் நான்கு ரேஷன்களால் இரண்டு குடும்பங்களில் மகிழ்ச்சி திரும்பியுள்ளது. மதஙங்களுக்கு அப்பாற்பட்டு இதுபோன்ற நெகிழ்சியான நிகழ்வுகளுக்கு இந்தியாவில் பஞ்சமில்லை.
இதை மருத்துவ முன்னேற்றத்தின் வெற்றி என்பதா? அல்லது கணவன் – மனைவிக்கு இடையிலான பாசப்பிணைப்பின் வெற்றி என்பதா? அல்லது மதங்களுக்கு அப்பாற்பட்ட மனிதாபிமானத்தின் வெற்றி என்பதா?
சம்பவம் குஜராத்தில் நடந்திருப்பதால் இந்த வெற்றி சமாதான பிரியர்(!??!) மோடிக்கே சொந்தம்.
சம்பவம் நடந்திருப்பது மும்பையில் என்றே நினைக்கிறேன். நர(பலி)ந்திர மோடியை சமாதானப்பிரியர் என்பதை விட “சமாதானவெறியர்” என்றே சொல்லலாம்! :-)