Featured Posts

தேசிய ஒருமைப்பாட்டிற்கு தீங்கிழைத்தவர்களுக்கு…

கடந்த 2001 ஆண்டு நமது நாடாளு மன்றத்தில் ஆயுத தாக்குதல் நடந்த போது பாதுகாப்புப் படைவீரர்கள் பதினொரு பேர் கொல்லப் பட்டார்கள். தாக்குதல் நடத்தியவர்களும் அப்போதே சுட்டுக் கொல்லப் பட்டார்கள். இத்தாக்குதலுக்கு பின்னனியில் உடந்தையாக இருந்ததாகக் குற்றம் சுமத்தப்பட்ட முஹம்மது அப்ஷல் குரு என்பவருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை உச்ச நீதி மன்றம் உறுதி செய்துள்ளது.

இதற்கிடையில் அப்ஷலின் மனைவி, குடியரசுத் தலைவருக்கு தன் கணவருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைக்க கருணை மனு செய்துள்ளதை குடியரசு தலைவர் ஏற்றுக் கொண்டுள்ளார். அதேபோல் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர், தண்டனையை குறைக்கக் கூடாது என்று வலியுறுத்திய மனுவையும் குடியரசுத் தலைவர் ஏற்றுக் கொண்டுள்ளார்.

இப்பிரச்சினையில் இந்திய முஸ்லிம்களின் நிலைப்பாட்டை அறிந்து கொள்ள சிலர் ஆர்வமாக இருக்கிறார்கள். குற்றவாளி முஸ்லிமாக இருப்பதால் அவன் எத்தகைய குற்றம் செய்தாலும், மன்னிக்கப்பட வேண்டும் என முஸ்லிம்கள் விரும்பவது போலவும், ஓட்டுக்காக அவர்களின் விருப்பத்தை நிறைவேற்ற மத்திஅய் மாநில அரசுகள் எவ்வித சமரசத்திற்கும் தயாராக இருப்பது போன்ற பாவனையை உருவாக்கி, மீண்டும் இந்திய முஸ்லிம்களை தேசத்திற்கு எதிராகச் சித்தரித்து தனிமை படுத்தி அரசியல் ஆதாயம் பெற விரும்பும் சிலருக்காக இப்பதிவு.

எல்லாவகைக் கொலைக் குற்றவாளிக்கும் சட்டப்படி விதிக்கப்பட்ட தண்டனையில் கருணை காட்டக் கூடாது என்பதில் மாற்றுக் கருத்தில்லை. குறிப்பாக குற்றவாளியை தண்டிப்பதன் மூலம் அத்தகைய குற்றங்களை எவரும் செய்யத் தயங்கும் வகையில் கடுமையாகத் தண்டிக்கப் பட வேண்டும். குற்றவாளியை மன்னிக்கும் உரிமை நேரடியாக பாதிக்கப்பட்டவருக்கே உண்டு என்பதே எமது நிலைப்பாடு

அதேசமயம் அப்ஷலுக்கு விதிக்கப்பட்ட தண்டனையை பரிசீலனை செய்ய வேண்டும் என்று பெரும்பாலான காஷ்மீரிகளும், பாஜக தவிர்த்த அரசியல்வாதிகள் சிலரும் கோரியுள்ளனர். மகாக் குற்றம் செய்த ஒருவனுக்காக ஒரு காஷ்மீரின் அனைத்துப் பிரிவினரும் (பண்டிட்கள் தவிர) ஜனாதிபதியின் கருணையைக் கோருவது அனேகமாக இதுவேயாகும்.

இந்திய அரசியல் சாசணம் வகுத்துள்ள குடியர்சுத் தலைவருக்கான அதிகாரங்களின்படி, மரண தண்டனைக் குற்றவாளிகளை மன்னிக்கும் உரிமையை அரசியல் சட்டத்தின் 72 (1)(c), ஆவது பிரிவு குடியரசுத் தலைவருக்கு வழங்கியுள்ளது. குற்றத்தின் தன்மை,குற்றவாளியின் வயது, தண்டனையின் பின் விளைவுகளைக் கருத்தில் கொண்டு,கருணை மனு பரிசீலிக்கப் படலாம் அல்லது நிராகரிக்கப் படலாம். இதுபோல் சுமார் இருபதுக்கும் அதிகமான கருணை மனுக்கள் முந்தைய குடியரசுத் தலைவர்களால் நிலுவையில் வைக்கப்பட்டு தற்போது ஜனாதிபதி அப்துல் கலாம் அவர்களின் பரிசீலனைக்காகக் காத்திருக்கின்றன.

இது ஒருபக்கம் இருக்க பா.ஜ.க. போன்ற மதவாத அரசியல் கட்சிகள் வழக்கம் போல் இப்பிரச்சினையில் அரசியல் நடத்தத் தொடங்கியுள்ளனர். குற்றவாளி அப்ஷல் தூக்கிலிடப்பட வேண்டும்; நாட்டின் தன்மானத்தின் மீது தாக்குதல் நடத்தியவர்களுக்கு கருணை காட்டக் கூடாது என்று வலியுறுத்துகின்றனர்.

சில வருடங்களுக்கு முன் தனஞ்சய் சட்டர்ஜி என்ற காமக் கொடூரனுக்கு மரண தண்டனை உறுதி செய்யப்பட்டபோது,மனித உரிமை அமைப்புகள் குற்றங்களுக்கு மரண தண்டனை தேவையில்லை; அதிகபட்சம் ஆயுள் தண்டனையே போதும் என்று குரலெழுப்பினார்கள். ஆனால், அப்ஷல் விசயத்தில் அவர்கள் மெளனம் காப்பதாகவே அறிய முடிகிறது. இதில் யாரெல்லாம் குற்றவாளிக்கு ஆதரவாகவோ அல்லது நியாயமாகவோ குரல் கொடுக்கிறார்களோ அவர்களுக்கும் தே
சத் துரோகப் பட்டம் வழங்கப்படும் என்பதால் அனேகமாக மெளனம் காக்கிறார்கள்.

அப்ஷலின் சொந்த மாநிலமான காஷ்மீரில் காங்கிரஸ், தேசிய மாநாட்டுக் கட்சி ஆகியவையும், கம்ப்யூனிஸ்ட்களும் அப்ஷலின் தண்டனை அவசர கோலத்தில் அரைகுறையாக விசாரிக்கப்பட்டு வழங்கப்பட்டுள்ளதாக கருதுகின்றனர். அதே போல் காஷ்மீரிகளும் அப்ஷலுக்கு எதிரான குற்றச் சாட்டில் பல சாட்சிகள் சரிவர விசாரிக்கப்படாமல் தண்டனை உறுதி செய்யப்பட்டதாகக் கருதுகின்றனர்.

இதனால் ஆங்காங்கே ஆர்ப்பாட்டங்கள் நடத்தப் படுகின்றன. சிலர் அப்ஷலின் தண்டனையால் காஷ்மீர் பிரச்சினை இன்னும் மோசமடைந்து, பாகிஸ்தானுடனான பேச்சு வார்த்தை பலவீனம் அடையுமென்று சிலர் கருத்து தெரிவித்துள்ளார்கள். ஒரு குற்றவாளியின் தண்டனையால் ஏறத்தாழ காஷ்மீரின் அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றினைத்துள்ளன.அப்ஷல் துக்கிலிடப்படுவதன் மூலம், இந்தியாவுக்கு எதிராக காஷ்மீரிகளை திருப்ப பாகிஸ்தானுக்கு நல்ல வாய்ப்பாக இருக்கும் என்பதாலும் இத்தீர்ப்பு நிதானமான பரிசீலனைக்கு உட்பட்டது என்பதை இந்திய நலனை விரும்பும் எவரும் மறுக்கக் கூடாது.

குடியரசு தலைவர் என்ன செய்யப் போகிறார்? குற்றம் சுமத்தப் பட்டவருக்கு கருணை காட்டி மரண தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைக்க பரிந்துரைப்பாரா? அல்லது தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்களின் வலியுறுத்தலை ஏற்று கருணை மனுவை நிராகரிப்பாரா? என்பதே தேசிய விவாதமாக இருக்கிறது.

அப்ஷல் பாராளுமன்றத் தாக்குதலில் ஈடுபட்டதற்கான ஆதாரமாக தொலைபேசி உரையாடல் மட்டுமே ஆதாரமாகக் கருதப்பட்டு அதன் அடிப்படையில்தான் விசாரணை நடத்தப் பட்டுள்ளது. இதே வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு பின்னர் நிரபராதி என்று ஜீலாணி என்பவர் விடுவிக்கப் பட்டுள்ளதையும் கவனத்தில் கொண்டு இப்பிரச்சினையை அணுக வேண்டும். தண்டனை விதிக்கப்பட்டிருக்கும் அப்ஷல் நேரடியாக எந்த பாதுகாப்பு வீரரையும் தாக்கவில்லை. மேலும் இதற்கு முன் எவ்வித தீவிரவாதச் செயலிலும் ஈடுபடவோ அல்லது தீவிரவாத குழுக்களுன் தொடர்போ கொண்டிருக்கவில்லை.

வெகு அசாதாரண குற்றங்களில் மட்டுமே இந்திய தண்டனைச் சட்டம் மரண தண்டனையை பரிந்துரைக்கிறது. நாடாளுமன்றத் தாக்குதல் ஒரு நாட்டின் இறையாண்மைக்கு எதிரான குற்றம் என்பதால், இதை அசாதாரணக் குற்றமாகவே கருத வேண்டும். இருந்தாலும் இது மரண தண்டனைக் குறிய குற்றமா என்பதிலுள்ள முரண்பாடுகளையும் கவனத்தில் கொள்ள வேண்டும். அப்ஷல் நேரடியாக ஈடுபட்டிருந்தாலும் இதை இந்தியாவுடனான யுத்தமாகக் கொண்டு, அவன் பின்னனியில் இருப்பவர்களையும் போர்குற்றத்தின் கீழ் தண்டிக்கப்பட வேண்டும்.

நாடாளுமன்றம் தாக்கப்படுவதால் நாட்டின் ஒருமைப்பாட்டிற்கு கேடு ஏற்படுவது போலவே ஒரு சாராரின் வழிபாடுத்தலம் மதவாத சக்திகளால் தாக்கப்பட்ட போதும் ஏற்பட்டது. அக்குற்றம் செய்தவர்கள் அதிகாரத்தைக் கையில் வைத்துக் கொண்டு ஆட்சியிலிருந்த காலத்தில் புத்திசாலித் தனமாக தங்களை விடுவித்துக் கொண்டார்கள். அவர்களும் சட்டத்தின் முன் கொண்டுவரப்படு பாரபட்சமின்றி விசாரித்து சரியான தண்டனை வழங்கப்பட வேண்டுமென்பதே இந்திய அரசியல் சாசனத்தையும் சட்டத்தையும் மதிக்கும் மக்களின் எதிர்பார்ப்பு.

அவர்கள் எப்போது யாரால் தண்டிக்கப்படுவார்கள்?

வெளிச்சுட்டிகள்:

1) Death of Afzal Guru will not solve anything

2) நாடாளுமன்றத் தாக்குதல் – அஃப்ஸலின் கடிதம்!

21 comments

  1. Mr.Nalladiyar, Ramadan Kareem…

    While I surfing on net found the following case history of Afzal Guru. You may also link to your article.
    ———–
    Death sentence has been awarded on circumstantial evidence. No eyewitness could be produced to substantiate allegations against Muhammad Afzal Guru. The sentence is mainly based on confession made by Guru during interrogation under duress. International law does not recognize such confession as admissible. Guru was not given proper and sufficient opportunity of being heard nor he was allowed to choose a lawyer of his own choice to defend himself.

    http://www.kmsnews.org/Kashmir%20News%20Archive/03/News031006-06.htm

  2. சுல்தான்

    நேர்மையான பதிவு.

    அப்ஸல் தவறு செய்திருக்கும் பட்சத்தில் அவருக்கு தண்டணை குறைக்கப்படவோ கருணை காட்டப்படவோ கூடாது என்பதுதான் முஸ்லீம்களின் நிலை. குறைந்த பட்சம் தமிழ் வலையுலகுக்கு வரும் முஸ்லீம்களின் நிலை.

    இந்த நேர்மை வலையுலகுக்கு வரும் பிராமிணர்களுக்கு உண்டா? இதே போன்று அத்வானியும், மோடியும், மற்றவர்களும் விரைவான தனி விசாரணை மூலம் தவறிருந்தால் கடுமையாக தண்டிக்கப் படவேண்டும் என்று விரும்புவார்களா? அந்த விருப்பத்தை பொதுவில் வைப்பார்களா?

  3. //ஒரு குற்றவாளியின் தண்டனையால் ஏறத்தாழ காஷ்மீரின் அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றினைத்துள்ளன.அப்ஷல் துக்கிலிடப்படுவதன் மூலம், இந்தியாவுக்கு எதிராக காஷ்மீரிகளை திருப்ப பாகிஸ்தானுக்கு நல்ல வாய்ப்பாக இருக்கும் என்பதாலும் இத்தீர்ப்பு நிதானமான பரிசீலனைக்கு உட்பட்டது என்பதை இந்திய நலனை விரும்பும் எவரும் மறுக்கக் கூடாது//

    இது போன்ற கற்பனைக்கெல்லாம் செவி சாய்க்க வேண்டிய அவசியமில்லை…

  4. முதல் நான்கு பத்திகளும் மிக நன்றாக் எழுதிவிட்டு, பிறகு வழுக்கி விட்டீர்கள். இப்போதைக்கு நம் முன் உள்ள கேள்வி அப்சலுக்கு தண்டனை சரியா இல்லையா? என்பதுதான்.
    அவனை நிறுத்தச் சொல்; இவரும் நிறுத்துவார் என்பதற்கெல்லாம் இப்போதுதானா நேரம்?

  5. Guru was not given proper and sufficient opportunity of being heard nor he was allowed to choose a lawyer of his own choice to defend himself.//
    பாத்திமா,
    i dont think these legal hair-splitting does not and should hold water here.

  6. சுல்தான்

    //i dont think these legal hair-splitting does not and should hold water here. //
    குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கென்று எந்த உரிமையும் கிடையாதா? மனித உரிமை அல்லது மனித உரிமை மீறல் அவற்றில் இது வராதா?
    பாத்திமா சொல்வதில் தவறென்ன என்று விளக்க முடியுமா தருமி ஐயா?

  7. The sentence is mainly based on confession made by Guru during interrogation under duress. International law does not recognize such confession as admissible. Guru was not given proper and sufficient opportunity of being heard nor he was allowed to choose a lawyer of his own choice to defend himself.

    உங்கள் பதிவில் உள்ள சில வாதங்களை பிறரும் முன்வைத்துள்ளனர்.என் வலைப்பதிவில் அவற்றிற்கு பதில் இருக்கிறது.அப்சல் சதிக்கு உதவியதற்கு போதுமான,பலமான சாட்சியங்கள்
    உள்ளன.தொலைபேசி உரையாடல் அதில் ஒன்றுதான்.தாக்குதல் தொடுத்தோர் கொல்லப்பட்டனர்.சதி திட்டம் தீட்டியவர்கள் பாகிஸ்தானில் இருப்பவர்கள் என்பது அரசு தரப்பு வாதம்.அவர் யார் என்று தெரிந்தாலும் பாகிஸ்தான் அவர்களை இந்தியாவிடம் ஒப்படைக்காது.பின் எதற்காக தண்டனையை நிறுத்தி வைக்க வேண்டும்.சட்டத்தின் முன் குற்றவாளிகள் குற்றவாளிகள்தான்.அது பாராளுமன்ற தாக்குதலாக இருந்தாலும் சரி, பாப்ரி மஸ்ஜித் இடித்தவர்களாக இருந்தாலும் சரி,உரிய தண்டனை தரப்பட வேண்டும்.இதுதான் என் நிலைப்பாடு..

  8. அப்ஷலின் சொந்த மாநிலமான காஷ்மீரில் காங்கிரஸ், தேசிய மாநாட்டுக் கட்சி ஆகியவையும், கம்ப்யூனிஸ்ட்களும் அப்ஷலின் தண்டனை அவசர கோலத்தில் அரைகுறையாக விசாரிக்கப்பட்டு வழங்கப்பட்டுள்ளதாக கருதுகின்றனர். அதே போல் காஷ்மீரிகளும் அப்ஷலுக்கு எதிரான குற்றச் சாட்டில் பல சாட்சிகள் சரிவர விசாரிக்கப்படாமல் தண்டனை உறுதி செய்யப்பட்டதாகக் கருதுகின்றனர்.

    Read the judgment and decide.The
    judgment was given by the highest
    court in the country.If you want to
    defend Afsal defend openly.Dont give such excuses.BJP did not raise the issue, till there was
    opposition to the hanging.When
    the date of hanging was announced
    who opposed it first.Who started protesting in J&K and how.
    Many like me oppose BJP but support the judgment and want the
    punishment to be executed.

  9. மிதக்கும் வெளி

    if absal is terrorist, then who is bastard narendramodi?

  10. நல்லடியார்

    //இது போன்ற கற்பனைக்கெல்லாம் செவி சாய்க்க வேண்டிய அவசியமில்லை… //

    நக்கீரன்,

    எது கற்பனை என்கிறீர்கள்? காஷ்மீரிகள் ஒன்றிணைத்திருப்பதையா? அல்லது அவ்வாறு இந்தியாவிற்கெதிராக காஷ்மீரிகள் ஒன்றிணைந்தால் பாகிஸ்தான் அதன் மூலம் இலாபமடையும் என்பதையா? மரண தண்டனைக்குறிய குற்றவாளிகள் அரசியல் சாகசனம் வகுத்த உரிமைப்படி ஜனாதிபதியின் கருணைக்கு அப்பாற்பட்டவர்கள் என்பதில் நீங்கள் உறுதியாக இருந்தால் எல்லாவகை மரண தண்டனைக் குற்றவாளிகளும் உடனடியாக தண்டிக்கப் பட வேண்டும் என்று குரல் கொடுக்கத் தயாரா?

  11. அட்றா சக்கை

    கோர்ட்டுகளை மதிக்க வேண்டும். உண்மைதான் ஆனால் அரசின் face-saving முயற்சியாகத் தான் இது தெரிகிறது.

    //இப்போதைக்கு நம் முன் உள்ள கேள்வி அப்சலுக்கு தண்டனை சரியா இல்லையா? என்பதுதான்//

    ப்ரொபசர், அதெயேத்தான் நல்லடியாரும் கேட்கிரார்ன்னு நெனக்கிறேன்.

    கண்ண மூடிக்கிட்டு ஒரு குறிப்பிட்ட பிரிவினர் மூர்க்கமாக வலியுறுத்துவதைப் பார்த்தால் தான் சந்தேகம் வருகிறது.

    தனஞ்செய் விஷயத்தில இதே முனைப்பை இவர்கள் காட்டவில்லையே??

  12. //
    தனஞ்செய் விஷயத்தில இதே முனைப்பை இவர்கள் காட்டவில்லையே??
    //

    தனஞ்சை விஷயத்தில் அம்மணி ராயும், கொல்கத்தா மாநகர மக்களுக்காக போராட்டம் நடத்தியதாகத் தெரிவிக்கவில்லையே?

  13. நல்லடியார்

    //Read the judgment and decide.The
    judgment was given by the highest
    court in the country//

    ரவி,

    அப்ஷலுக்கு எதிரான தீர்ப்பின் சில பக்கங்களை மட்டுமே படித்தேன். (http://judis.nic.in/supremecourt/qrydisp.asp?tfnm=27092) முக்கிய தடயமாகக் கருதுவது தீவிரவாதிகள் தாக்குதலுக்கு சில நிமிடங்கள் முன்பு தொடர்பு கொண்ட நம்பர்கள் அப்ஷலுடையது, ஜீலானியுடையதுமாக இருக்கின்றன. (அத்வானிக்கும் ஒரு போன் போட்டிருக்கக் கூடாதா? :-)

    மரணதண்டனைக்குறிய குற்றத்திற்கு தொலைபேசி உரையாடலை போதுமான ஆதாரமாகக் கொள்ள முடியுமா?

    தீர்ப்பின்படி, அப்ஷல் தாக்குதலில் நேரடியாக ஈடுபட்டதற்கான நேரடி குறிப்புகள் இருந்தால் சுட்டவும்.

  14. “எது கற்பனை என்கிறீர்கள்? காஷ்மீரிகள் ஒன்றிணைத்திருப்பதையா?”

    “மகாக் குற்றம் செய்த ஒருவனுக்காக ஒரு காஷ்மீரின் அனைத்துப் பிரிவினரும் (பண்டிட்கள் தவிர) ஜனாதிபதியின் கருணையைக் கோருவது அனேகமாக இதுவேயாகும்.”

    பண்டிட்டுகள் காஷ்மீரில் ஒரு பிரிவினர் இல்லையா?

    பை தி வே அவர்கள் இந்தியாவிலேயே அகதிகளாக இருப்பது பற்றி என்ன கூறுகிறீர்கள்?

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

  15. நல்லடியார்

    //பண்டிட்டுகள் காஷ்மீரில் ஒரு பிரிவினர் இல்லையா?//

    காஷ்மீர் பண்டிட்கள் காஷ்மீரின் ஒரு பிரிவினரே என்பதை நான் மறுக்கவில்லை. அப்ஷலுக்காக காஷ்மீரிகள் அனைவரும் கட்சி பேதமின்றி ஒன்றிணைந்து போராடும்போது பண்டிட்கள் மட்டும் இப்போராட்டத்தை எதிர்ப்பதன் மூலம் அவர்கள்தான் தங்களை காஷ்மீரின் ஒரு பிரிவினராக காட்ட விரும்பவில்லை.

    //பை தி வே அவர்கள் இந்தியாவிலேயே அகதிகளாக இருப்பது பற்றி என்ன கூறுகிறீர்கள்?//

    காஷ்மீரில் எது நடந்தாலும் பாகிஸ்தானின் சதி என்று சொல்பவர்களிடம் இதைக் கேட்டால் சரியான பதிலைச் சொல்லக் கூடும். குஜராத்தில் அகதிகளாக்கப்பட்ட முஸ்லிம்களின் நிலையோடு ஒப்பிட்டால் காஷ்மீர் பண்டிட்களுக்கு மத்திய, மாநில அரசுகள் தேவையான அளவுக்கு உதவி செய்கின்றன.

    காஷ்மீரிகள் அப்ஷலுக்காக ஒன்றினைந்திருக்கும் போது, பண்டிட்கள் மட்டும் எதிர்ப்பது பற்றி என்ன கூறுகிறீர்கள்?

  16. தி.ராஸ்கோலு

    //தனஞ்சை விஷயத்தில் அம்மணி ராயும், கொல்கத்தா மாநகர மக்களுக்காக போராட்டம் நடத்தியதாகத் தெரிவிக்கவில்லையே?
    //

    It seems Vajra has ஜென்மப்பகை against Ms Roy!!

  17. //காஷ்மீரிகள் ஒன்றிணைத்திருப்பதையா?//

    நல்லடியார்.

    இந்த கதைகளையெல்லாம் நம்ப இங்கு யாரும் இல்லை.

    காஷ்மீரிகள் எப்போது ஒன்றாக இருந்தார்கள் இப்போது “ஒன்றினைய?”

    ஷியாக்கள்,சன்னிகள், பண்டிதர்கள், பௌத்தர்கள் என்று ஏகபட்ட மக்கள் இருக்கிறார்கள் அங்கு.

    இதில் ஷியாக்களும், சன்னிகளும் ஆளுக்கு ஒரு நாட்டை ஆதரிக்கின்றனர். பௌத்தர்கள், பண்டிதர்களை பற்றி பேச கூட வேண்டியதில்லை.

    ஸ்ரீநகர் பள்ளதாக்கில் வசிக்கும் சில நூறு கைகூலி இஸ்லாமிஸ்ட்டுகளின் லொள்ளு வேலைகளுக்காக அப்சலை விட முடியாது.

    அய்யோ காஷ்மீரி கத்துகிறான் என்ற கதையெல்லாம் வெறும் ஜல்லி. எதற்க்கு அந்த கதையை துனைக்கு இழுக்க முயற்ச்சி செய்கிறீர்கள்?

  18. // தங்களை காஷ்மீரின் ஒரு பிரிவினராக காட்ட விரும்பவில்லை.
    //

    ஆக, முஸ்லிம்கள் சொன்னபடி கேட்டால் அவன் காஷ்மீரி இல்லையென்றால் அவனுக்கு அந்த அடையாளம் கிடையாது…ஹிஹி நல்லாடியாரே ரொம்ப தான் யோசிக்கறீங்க.

  19. “இந்தியாவுக்கு எதிராக காஷ்மீரிகளை திருப்ப பாகிஸ்தானுக்கு நல்ல வாய்ப்பாக இருக்கும்”

    //என்ன மிரட்டலா? இது போன்ற மிரட்டல்கள் இந்தியாவுக்க்குப் புதிததல்ல…கார்கில்லை மறக்க வேண்டாம்.

    “இது ஒருபக்கம் இருக்க பா.ஜ.க. போன்ற மதவாத அரசியல் கட்சிகள் வழக்கம் போல் இப்பிரச்சினையில் அரசியல் நடத்தத் தொடங்கியுள்ளனர”

    //அப்ப முஸ்லீம் மதத்தினை ஆதரிக்கிறவர்கள் பாகிஸ்தான் போன்ற பேடிகளாக இருந்தாலும் உங்ககளுக்கு நல்லவர்களா?? சில பேரைக்கொண்ட சமுதாயம் இவ்வளவு சலுகைகளை எதிர்பார்க்கும் போது ,பெரும்பான்மை குறைந்தபட்சம் குரல் கூடக்கொடுக்கக்கூடாதா?

    //வழிபாடுத்தலம் மதவாத சக்திகளால் தாக்கப்பட்ட போதும் ஏற்பட்டது.
    அப்ப இந்துக்கள் பழைய வரலாற்றை திருப்பினால் …என்னவாகும் அய்யா??

    //மீண்டும் இந்திய முஸ்லிம்களை தேசத்திற்கு எதிராகச் சித்தரித்து தனிமை படுத்தி அரசியல் ஆதாயம் பெற விரும்பும் சிலருக்காக இப்பதிவு.

    உங்களுக்கு என்னப்பிரச்சனை இந்தியாவில் …நீங்கள் கொள்ளிக்கட்டையை எடுத்து சொறிந்துக்கொண்டால் புண்ணாகத்தான் செய்யும்.
    ஈராக்கைப்பாருங்கள் முஸ்லீம்கள் நிம்மதியாய் இருக்கார்களா?

    அதை விடுங்கள் பாகிஸ்தானைபாருங்கள் …உங்கமனசாட்சிக்கு தெரியுங்க…அதை விட்டு சும்மா கதை பேசிக் கொண்டு இருக்காதீர்.
    ஆக மொத்தம் இது வரை நீங்கள் கூறியது போலவே எந்த முஸ்லீம் அமைப்பும் இது வரை இதனை அதவாது அவரைத் தூக்கில் போடுவது சரியே என குரல் கொடுக்க வில்லை.. அப்ப அவர்கள் தூக்கில் போடுவதை எதிர்க்கிறார்களா> ??? பசப்பாமல் பதில் கூறவும் ..உடனே வெட்டிச் சண்டைப் போடாமல்..

  20. புதுச்சுவடி

    இந்தியாவின் காவல் துறை எப்படி விசாரணை நடத்தும் என்பது நாமெல்லாரும் அறிந்ததே!

    காவல்துறை அப்ஸலை இவ்வழக்கில் எப்படிச் சேர்த்தது என்று அவரது வழக்கறிஞர் வெளிப்படுத்திய அப்ஸலின் கடிதம் காட்டுகிறது.

    ஜெஸிகா வழக்கில் குற்றம் சுமத்தப் பட்டவர்களை விடுவிக்கக் காவல்துறை எப்படியெல்லாம் பாடுபட்டது என்பதும் அவர்களை நீதிமன்றம் குற்றமற்றவர்கள் என்று விடுவித்ததையும் நாம் மீடியாக்கள் மூலம் அறிந்துள்ளோம்..

    எனவே அப்ஸல் வழக்கை மீண்டும் விசாரித்து,அப்ஸலின் தரப்பையும் முழுவதும் கேட்டு, தக்க ஆதாரத்துடன் குற்றத்தை நிரூபித்துத் தூக்கிலிடட்டும். அது நமது நீதித்துறைக்குப் பெருமை சேர்க்கும்.

  21. அட்றா சக்கை

    திரு. நல்லடியார்,

    அப்சலுக்கு நேரடி தொடர்பு இருப்பதாக சுப்ரீம் கோர்ட் தீர்ப்பில் நான் பார்த்த வரையில் கூறப்படவில்லை.

    பாராளுமன்ற தாக்குதல் வழக்கில் அஃப்ஸலுக்கு வெறும் சூழ்நிலை ஒத்துபோகும் காரணங்களை கூறி மரணதண்டனை வழங்கப்பட்டுள்ளது. அஃப்ஸல் தாக்குதலிலோ சதியாலோசனையிலோ நேரடியாக பங்கு கொண்டதாக எந்த நீதிமன்றமும் கூறவில்லை. இப்படிப்பட்ட சூழ்நிலையில் மரண தண்டனை வழங்குவது அசாதாரண சம்பவமாகும்.
    நீதிமன்றத்தில் அஃப்ஸல் குற்றத்தை ஒத்துக் கொண்டதாக கூறப்படுவது தவறான தகவலாகும். விசாரணை நீதிமன்றத்தில் அஃப்ஸல் தன்மீது சுமத்தப்பட்ட குற்றத்தை மறுக்கவும் அரசுதரப்பு வழக்கறிஞரின் வாதங்களை எதிர்க்கவும் செய்திருந்தார். இனி பத்திரிக்கைகளின் முன்னிலையில் அஃப்ஸல் குற்றத்தை ஒப்புக்கொண்டதாக கூறப்படும் காவல்துறையின் வாதம் மட்டுமே மீதம் இருக்கின்றது. ஆனால் இதுவும் பொய்யான தகவல் என அஃப்ஸல் மறுக்கின்றார். அவர் குற்றத்தை மறுத்த பாகத்தை சம்பந்தப்பட்ட பத்திரிக்கைகள் மறைத்துவிட்டதாக அவர் கூறுகிறார். மேலும் இவ்வாதத்தை நீதிமன்றம் ஏற்றுக்கொள்ளவும் இல்லை.

    விசாரணை நீதிமன்றத்தில் அஃப்ஸல் கூறிய பதில்களில் சில:

    கேள்வி: உங்களை ஸ்ரீநகரில் வைத்து காவல்துறை உங்களோடு குற்றம் சுமத்தப்பட்டுள்ள சௌகத் ஹுஸைன் குருவோடு சேர்த்து எச்.ஆர்.38 இ 6733 எண்ணிட்ட ட்ரக்கில் வைத்து கைது செய்யவும் ஒரு லாப்டாப் மற்றும் 10 இலட்சம் ரூபாய் பணமும் கைப்பற்றியது. இது உண்மையா?

    அஃப்ஸல்: என்னை ஸ்ரீநகரில் வைத்து தனியாகத் தான் கைது செய்தனர். என்னிடமிருந்து எதுவும் காவல்துறை கைப்பற்றவில்லை.

    கேள்வி: அதன் பிறகு உங்களை டில்லி காவல்துறை டில்லிக்கு கொண்டு வந்தது. அங்கு போலீஸ் முன்னிலையில் நீங்கள் வாக்குமூலம் கொடுத்தீர்கள்.

    அஃப்ஸல்: என்னை போலீஸ் டில்லிக்கு கொண்டு வந்து சித்திரவதைப்படுத்தி வாக்குமூலம் எழுதி வாங்கினர்.

    கேள்வி: டி.ஸி.பி யின் முன்னிலையில் நீங்கள் வாக்குமூலம் கொடுத்தீர்கள்.

    அஃப்ஸல்: இல்லை. அது பொய்.

    குற்றம் சம்மதித்து வாக்குமூலம் கொடுத்துள்ளதைக் குறித்து மாற்றி மாற்றி கேட்ட கேள்விகளுக்கு தான் அவ்வாறு குற்றம் ஒப்புக்கொண்டு வாக்குமூலம் கொடுக்கவில்லை என அஃப்ஸல் கூறியுள்ளார். எதற்காக தான் கைது செய்யப்பட்டுள்ளேன் என்பதைக் குறித்த முறைப்படி கொடுக்கப்படும் முன்னறிவிப்பை அதிகாரிகள் தனக்குத் தரவில்லை எனவும் அவர் நீதிமன்றத்தில் கூறினார். ஜெ.கெ.எல்.எஃபில் சேர்ந்திருந்ததாகவும் மற்றவர்களுடன் இணைந்து முஸாஃபராபாத்திற்கு சென்றதாகவும் அஃப்ஸல் கூறியுள்ளார். ஆனால், அங்கு வைத்து பாகிஸ்தான் இராணுவத்தினரிடமிருந்து பரிசீலனை பெற்றதாகவும் அவர்களிடமிருந்து பணம் பெற்றதாகவும் கூறப்படும் தகவல் பொய்யானது அவ்வாறு நடக்கவில்லை என அவர் மறுக்கிறார். அதன் பிறகு தான் சரணடைந்ததாகவும் பின்னர் எஸ்.டி.எஃப்பிற்காக தான் பணியாற்றி வந்ததாகவும் அவர் கூறியுள்ளார். எஸ்.டி.எஃப் கேம்பில் வைத்து பழக்கமான தாரீக் மூலம் எஸ்.டி.எஃப்பிற்கான ஏஜண்டாக தான் மாறியதாகவும் அஃப்ஸல் கூறியுள்ளார்.

    அதன் பிறகு ஜெய்ஷே முஹம்மதில் இணைந்ததாகக் கூறப்படுவதும், அதன் சுப்ரீம் கமாண்டர் காஸி பாபாயுடன் இணைந்து பணியாற்றியதாக கூறப்படுவதையும் அவர் நிராகரித்தார். காஸிபாபாவின் கட்டளைக்கிணங்க கிலானி, சௌகத் ஹுஸைன், பாகிஸ்தானிகளான ராஜா, ஹைதர் போன்றவர்களுடன் பாராளுமன்ற கட்டிடத்தை தாக்க சதியாலோசனை செய்ததாக கூறப்படும் குற்றச்சாட்டு அபாண்டமானது என்றும் அவர் கூறினார்.

    குற்றப்பத்திரிக்கை படித்து முடித்த பின் குற்றம் ஒப்புக்கொள்ளவில்லை என மற

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *