பதிவெழுதி ரொம்ப நாளாச்சு! இணையத்தில் மேய்ந்ததில் கிடைத்ததை பகிர்ந்து கொள்கிறேன்.
முழக்கம் # 1: பர்தா – ஆணாதிக்க அடக்குமுறை!
முழக்கம் # 2: “ஆணும் பெண்ணும் சமம்!”
நாட்டு நடப்பு # 3
பதிவெழுதி ரொம்ப நாளாச்சு! இணையத்தில் மேய்ந்ததில் கிடைத்ததை பகிர்ந்து கொள்கிறேன்.
முழக்கம் # 1: பர்தா – ஆணாதிக்க அடக்குமுறை!
முழக்கம் # 2: “ஆணும் பெண்ணும் சமம்!”
நாட்டு நடப்பு # 3
Tags எதிரொலி நல்லடியார் பொதுவானவை
அதுக்கு இப்ப என்ன பண்ணனுங்கிறீங்க? ஆசிரியர்களெல்லாம் பர்தா அணியனுமா? அது அந்த மாணவருடைய ‘உரிமை பறிப்பு’ ஆகி விடுமே? :-(
நாட்டு நடப்பச் சொன்னேன்..! கோவிச்சுக்காதீங்க மரைக்காயர்!!
அந்த மாதிரி கீழ்த்தரமாகப் பார்ப்பவர்களுடைய போட்டோ எடுப்பவர்களுடைய உரிமையைப் பறிப்பதால்தான் பர்தா வேண்டாம் என்று ….
பர்தா அணிவதைப் பற்றி நான் ஒன்றும் சொல்ல வரவில்லை. அது அவரவர் விருப்பம்.
ஆனால் பார்த்தீர்களா? நீங்கள் சொன்ன மூன்றிலும் தவறு செய்தவர்கள் ஆண்களாகவே இருக்கின்றார்களே! அவர்கள் திருந்த வேண்டும் என்று முனைப்பதே சிறந்தது. பாடப் பாட ரோகம். மூட மூட ரோகம் என்பது முதுமொழி.
கருத்தைப் பதிய வேண்டும் என்று தோன்றியது. விவாதத்திற்கல்ல. நன்றி.
இனிய ராகவன்,
ஆண்களெல்லாம் உத்தமர்களென்றும், இஸ்லாம் பெண்களை (கண்ணியமாக ஆடையணியச் சொல்லி….) வற்புறுத்துகிறது என்றும் சொல்லி இஸ்லாத்தை அவ்வப்போது சாடுபவர்கள் மத்தியில் நியாயமான கருத்துக்களை வைக்கும் உங்கள் அணுமுறை எனக்குப் பிடித்த ஒன்று.
நான் கொடுத்த சுட்டிகளிலுள்ள செய்திகள் எதார்த்தமானவை. இந்த எதார்த்த தவறு செய்யும் வாய்ப்பை தவிர்க்கவே இஸ்லாம் விரும்புகிறது. இதை உணர்ந்து கொண்டால் இஸ்லாமிய வழிகாட்டல்களில் குறை சொல்ல முடியாது. இதைச் சொல்லவே இப்பதிவு.
தமிழ் கொஞ்சி விளையாடும் கோ.ராகவனிடம் எழுத்துப் பிழை! அது என்னவென்று சொல்பவர்களுக்கு 1000 செப்புக்காசுகள் பரிசு (ராகவன் தருவார்!:-)
அந்தப் பரிசு எனக்கே :-) தவறைக் கண்டு பிடித்து விட்டேன். பாடப் பாட வருவது ராகம். ரோகமல்ல. :-))))))