இராக் முன்னாள் அதிபர் சதாம் ஹுசைனை சாகும்வரை தூக்கிலிட இராக் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. பேரழிவு ஆயுதங்களை வைத்துள்ளார் என்ற போலிக் காரணம் சொல்லி அராஜகமாக ஆக்கிரமிக்கப் பட்டுள்ள இராக்கில் அமெரிக்காவின் எடுபிடி அரசின் கீழுள்ள நீதிமன்றத்தின் தீர்ப்பு எதிர்பார்க்கப்பட்ட ஒன்றே. அதுவும் அமெரிக்க உட்கட்சி தேர்தலுக்கு இரண்டு நாள் முன்னதாக பெறப்பட்டிருப்பதின் நோக்கம் தெளிவாகும்.
சர்வாதிகாரி, கொடுங்கோலன் போன்ற பட்டங்களைப் பெற்றுள்ள சதாம் ஹுசைன் 1991 ஆம் ஆண்டுவரை அமெரிக்காவின் செல்லப்பிள்ளையாக வலம் வந்தார். பேரழிவு ஆயுதங்களின் முன்னோடியான அமெரிக்காவின் ஆதரவுடன் இரானை எதிர்த்துப் போரிட்டார். இருபத்து மூன்று வருட ஆட்சியில் பதிமூன்று வருடங்கள் அமெரிக்காவின் மடியில் கொஞ்சித் தவழ்ந்து தனக்கு எதிரான பலரை பரலோகம் அனுப்பியவர் என்பது அறிந்ததே. அத்தகைய சர்வாதிகார கொடுங்கோன்மைக்கு கொஞ்சமும் சளைத்ததல்ல தற்போது அமெரிக்க ஆணவக்காரன் ஜார்ஜ் புஷ்ஷின் அணுகுமுறைகள்.
தற்போதைய இராக்கிய சட்டப்படி, மரண தண்டனைக்கான குற்றங்கள் ஒன்பது பேர் கொண்ட நீதிபதிகளால் பரிசீலிக்கப்படும். இதற்கான காலவரையறை எதுவும் வகுக்கப் படவில்லை. ஆக, இந்த தீர்ப்பினால் சதாம் தண்டிக்கப்படுகிறாரோ இல்லையோ பலன் பெறப் போவது ஜார்ஜ் புஷ்!
ஆணவம் தலைக்கேறி தனது அராஜக அனுகுமுறைகளால் அடுத்தடுத்து மதிப்பிழந்துள்ள ஜார்ஜ் புஷ்ஷுக்கு இந்த தீர்ப்பு அவசியமான ஒன்றாகும். சதாம் ஹுசைன் என்ற நபரால் இனி அமெரிக்காவுக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை என்று சூசகமாகச் சொல்ல இந்தத் தீர்ப்பு உதவும்.
இத்தீர்ப்பு பற்றி சர்வதேச பிரபலங்கள் வெவ்வேறு விதமான கருத்துச் சொல்லியுள்ளார்கள். பிரிட்டன் வெளியுறவுச் செயலர் மார்க்கரெட் பெக்கட், “Appalling crimes were committed by Saddam Hussein’s regime. It is right that those accused of such crimes against the Iraqi people should face Iraqi justice”
சதாம் ஹுசைனின் இருபத்து மூன்று வருட ஆட்சியில் அடைந்த கொடுமைகளை விட பன்மடங்கு கொடுமைகளை கடந்த மூன்றரை ஆண்டுகளில் இராக்கிய பொதுமக்களுக்கு இழைத்துள்ள அமெரிக்க-பிரிட்டன் கூட்டு களவாணிகள் எந்த சட்டத்தின்கீழ் தண்டிக்கப் படுவர் என்பதை இராக்கியர்கள் மட்டுமல்ல மனிதாபிமானமுள்ள அனைவரும் எதிர்பார்க்கிறார்கள்.
அமெரிக்காவின் செல்லப்பிள்ளையாக இருந்து ஆட்சி அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து கொண்டிருக்கும் அரேபிய மன்னர்களுக்கு சதாம் ஹுசைன் ஒரு நிகழ்கால உதாரணம். சிலைகளுக்கு எதிரான புனிதர்களின் பூமியில் தன் சிலைகளை நிறுவி அழகு பார்த்த சதாம் வளைகுடா ஆட்சியாளர்களுக்கு ஒரு படிப்பினை!!!
(நபியே) நீர் கூறுவீராக: “அல்லாஹ்வே ஆட்சியாளர்களுக்கெல்லாம் அதிபதியே! நீ யாரை விரும்புகிறாயோ அவருக்கு ஆட்சியை கொடுக்கிறாய்; இன்னும் ஆட்சியை நீ விரும்புபவரிடமிருந்து அகற்றியும் விடுகிறாய்! நீ நாடியோரைக் கண்ணியப்படுத்துகிறாய்; நாடியவரை இழிவு படுத்தவும் செய்கிறாய்; நன்மைகள் யாவும் உன் கைவசமேயுள்ளன, அனைத்தின் மீதும் நீ நிச்சயமாக அதிக ஆற்றலுடையவனாக இருக்கிறாய்!” – திருக்குர்ஆன் 03:26
சதாமை முழுக்க மோசமானவர் என்றும் கூறிவிட முடியாது. உயர்கல்வி வரை இலவசமாகத் தந்தவர். அமெரிக்காவின் செல்லப்பிள்ளையாக இருந்த சதாம், எப்போது அவர்களின் எண்ணெய் ஏகபோகத்திற்கு எதிரியாக மாறினாரோ அப்போதே அமெரிக்காவிர்கும் எதிரியாகிவிட்டார். ஆனாலும் காலம் புஷுக்கும் டோனிக்கும் தண்டனை வழங்கும் என்று நம்புவோம்
சதாம் அமெரிக்காவிற்கு ஆதரவாக இருந்ததே தவறு என்பது தான் என் கருத்து, ஒரு வேளை அதற்கான தண்டனையா இது? என்னை பொறுத்த வரை எந்த குற்றத்திற்கும் தூக்கு தண்டனை என்பதில் எனக்கு உடன்பாடு இல்லை.
nagoreismail
http://www.kumudam.com/magazine/Reporter/2006-11-09/pg11.php
BISMILLAHIRRAHUMANIRRAHEEM
SADAM MURDERED 148 CIVILIANS BUT BUSH AND BLAIR MURDERED LAKHS OF CIVILIANS.THE RESISTANCE WAR DOES NOT END BECAUSE OF SADAM HANG PUNISHMENT.INSHA ALLAH VERY SOON IRAQ WILL BE A ISLAMIC STATE.
1982 ஆம் ஆண்டு 140ம் மேற்பட்ட அப்பாவிகளை கொன்றதாக கூறி அமெரிக்காவின் கைப்பாவைகள் இவருக்கு மரணதண்டனை கொடுத்துள்ளனர். ஆனால் இதே அமெரிக்கா ஈரான் மக்களைக் கொல்லச்சொல்லி 1988 ஆம் ஆண்டு இந்த சதாமுக்கு ஆயுதம் வழங்கியது. அப்போ எங்கே சென்றது மனிதாபிமானம். ஏன் அப்பொழுது சாதாம் உத்தமரா? அல்லது அந்த போரைப் பற்றி மனிதக்கரி சாப்பிடும் புஷ் கூட்டத்தினருக்கு தெரியாதா?.
இவர்கள் இந்த ஆயிலுக்காக நடத்திய நாடகம் அப்பப்பா சொல்லி மாளாது.
சாதாம் அன்று செய்த பாவத்திற்கு தண்டனை இன்று கிடைத்து விட்டது அதேபோல் இன்று மனிதக்கரி பிரியர்கள் புஷ் கூற்றத்தினர் செய்யும் மனித உரிமை மீறல்களுக்கு நிச்சயம் தண்டனை கிடைக்கும். இது அரபு ஆட்சியாளர்களுக்கு மட்டும் படிப்பினை இல்லை, இதே பாணியில் அராஜகம் செய்யும் அனைவருக்கும்தான்.
//அமெரிக்காவின் செல்லப்பிள்ளையாக இருந்த சதாம், எப்போது அவர்களின் எண்ணெய் ஏகபோகத்திற்கு எதிரியாக மாறினாரோ அப்போதே அமெரிக்காவிர்கும் எதிரியாகிவிட்டார்//
மிதக்கும் வெளி,
உங்கள் கருத்தோடு உடன்படுகிறேன். குவைத்தை ஆக்கிரமிக்க முதலில் அறிவுறுத்தியவர்களில் இன்றைய ரம்ஸ்பெல்ட்டும் ஒருவர். வளைகுடா பிராந்தியத்தில் அரசியலில் தனி ஆர்வத்தனம் பண்ணிக் கொண்டிருந்த சதாமின் பிராந்திய வல்லறசுக் கனவுக்கு இது ஊக்கமளித்தது. குவைத் ஆக்கிரமிப்புகுப் பின்னர் அமெரிக்க சூழ்ச்சியின் பழிகடாதான் சதாமை இந்த நிலைக்கு ஆளாக்கியது.
//சதாம் அமெரிக்காவிற்கு ஆதரவாக இருந்ததே தவறு என்பது தான் என் கருத்து, ஒரு வேளை அதற்கான தண்டனையா இது? //
இஸ்மாயில்,
அமெரிக்க மக்கள் வெளுத்ததையெல்லாம் பால் என்று நம்புபவர்கள் என்று கேள்விப் பட்டிருக்கிறேன். துரதிஷ்டவசமாக ஆயுத வியாபாரிகள் அவர்களுக்கு ஆட்சியாளர்களாக அமைந்து விட்டனர். அமெரிக்காவின் செல்லப்பிள்ளையாக இருந்து சமீபத்தில் விழித்துக் கொண்டவர் பாகிஸ்தானின் பர்வேஸ் முஷராப். என் சமீபத்திய பதிவில் அதைச் சொல்லியுள்ளேன்.
கொலைக்கு கொலையே சரியான தண்டனை. சம்பந்தப்பட்டவர்கள் மன்னிக்காதவரை!
சின்னபுள்ள,
சுட்டிக்கு நன்றி;அதில் சொல்லப்பட்டவற்றில் கடைசி பத்தி நெத்தியடியாக இருந்தது. “என்றாலும், புஷ் அசராமல் போராடிக்கொண்டிருக்கிறார். அமெரிக்காவுக்குக் கெட்ட பெயர் வந்தாலும் பரவாயில்லை, ஈராக் உருப்பட்டால் போதும் என்று பெருந்தன்மையாகச் சொல்கிறார். ஒரேயடியாக புஷ்ஷை கல்நெஞ்சக்காரர் என்று சொல்வதற்கில்லை. சில, பல தவறுகளை அமெரிக்கா செய்துள்ளது என்பதை தைரியமாக ஒப்புக்கொண்டிருக்கிறாரே! இந்தத் துணிச்சல் எல்லாருக்கும் வந்துவிடாது அல்லவா? “
முஸ்லிமீன்,
ஒரு கொலை செய்தால் தீவிரவாதி. பல கொலைகள் செய்தால் தீவிரவாதத்துக்கு எதிரான போர்! ஒரு கொலை செய்தவனுக்கு மரண தண்டனை; பல கொலைகள் செய்தவனுக்கு பொது மன்னிப்பு. இந்தளவுக்கு நம் மனசாட்சி மரத்துப்போய் விட்டது.
சதாம் தண்டிக்கப்பட சொல்லப்படும் காரணங்கள் ஜார்ஜ் புஸ்ஸுக்கும் நன்கு பொருந்துகிறது. எவராவது அதைச் சுட்டினால் அவ்வளவுதான் அல்காயிதா அல்லது Axis of Evil என்ற பூச்சாண்டிகளை எதிர் கொள்ள வேண்டும்! :-)
//இவர்கள் இந்த ஆயிலுக்காக நடத்திய நாடகம் அப்பப்பா சொல்லி மாளாது.//
சடையப்பா,
எனக்கு வந்த ஒரு மின்மடலில் அமெரிக்காவின் ஆப்கன் ஆக்கிரமிப்பின் பின்னனிக் காரணிகளை எழுதியுள்ளார்கள்.
a.. USA supported Bin Laden and the Taliban for years, and viewed them as freedom fighters against the Russians?
b.. As late as 1998, the US was paying the salary of every single Taliban
official in Afghanistan ?
c.. There is more oil and gas in the Caspian Sea, but you need a pipeline
through Afghanistan to get that out?
d.. UNOCAL, a giant oil conglomerate, wanted to build a 1000 mile pipeline
from the Caspian Sea through Afghanistan to the Arabian Sea ?
e.. UNOCAL spend $ 10,000,000,000 on geological studies for the pipeline
construction, and courted the Taliban for their support in allowing the
construction to begin?
f.. All leading Taliban officials were in Texas negotiating with UNOCAL in
1998?
g. In 1999, Taliban changed its mind and threw UNOCAL out of the country
and awarded the pipeline project to a company in Argentina ?
h.. John Maresca, VP of UNOCAL testified before Congress and said no
pipeline should be set until the Taliban was gone and a more friendly
government was established?
i.. After 1999, the Taliban became the most evil people in the world
j. In 2001, Bush declares war against Afghanistan , though not a single
Afghani was involved in the plane hijacking?
k.. Bush blamed Bin Laden, but did not offer any proof, saying it was
confidential?
l.. Talibans offered to hand over Bin Laden if there was proof, but Bush
bombed Afghanistan instead?
m.. We now have a new government in Afghanistan, which is friendlier?
n.. That the leader of the new government is one gentleman called Hamid
Karzai, who formerly worked for UNOCAL?
o.. Bush appoints a special envoy (Lakhdar Ibrahimi) to represent the US
to deal with the new government. This special envoy was formerly chief
consultant to UNOCAL?
p.. The US government quietly announces in January 2002 that it will
support the Trans-Afghan pipeline construction?
q.. President Musharraf and Hamid Karzai announce agreement in February 2002 to build proposed gas pipeline from Central Asia to Pakistan through Afghanistan ?
……And you thought we were fighting terrorism here, didn’t you?
It is all about OIL……… …….
சதாம் தவறானவராக இருக்கலாம். அவருக்குத் தண்டனை வழங்க இவர்கள் என்ன??? உத்தமர்களா???ஜோர்ச் புஷ் க்கு யார் மரணதண்டனை வழங்குவது.
யோகன் பாரிஸ்
//சதாமை முழுக்க மோசமானவர் என்றும் கூறிவிட முடியாது.//
ஆமாம்.
//அமெரிக்க மக்கள் வெளுத்ததையெல்லாம் பால் என்று நம்புபவர்கள் என்று கேள்விப் பட்டிருக்கிறேன்.//
அமெரிக்கர்கள் வெளியுலகைப்பற்றியே கவலைப்படுவதில்லை. அவர்கள் தங்கள் சுகபோக வாழ்க்கை கிடைத்தால் போதும் என்று காலம் கழிப்பதிலேயே இருகின்றனர். இது ஆபத்தானது. ஒரு நாள் அமெரிக்கா அழிவை சந்திக்கும். அப்பொழுது அவர்களுக்காக கண்ணீர் விட யாரும் இருக்கமாட்டார்கள் என்பது தான் உண்மை.
சத்தாம் ஹுஸைன் ஆட்சிப் பொறுப்பில் இருந்தபோது துஜைல் நகருக்குப் போயிருந்தார். அவரைப் பிடிக்காத ஷிஆ முஸ்லிம்கள் அவரைக் கொல்லத் திட்டமிட்டனர்.
அவர்கள் சத்தாமை மகிழ்ச்சியுடன் வரவேற்பதுபோல் அவரது வருகையைக் கொண்டாடினர். அவர் ஒரு பண்ணையைக் கடந்து செல்லும்போது சாலையில் சத்தாமை வரவேற்ற அவர்கள் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என அமர்க்களப்படுத்தி, தங்களது மகிழ்ச்சியின் அடையாளமாக விருந்துக்காக ஒரு மானை அறுத்துப் பலியிட்டனர். அதன் இரத்தத்தைத் தன் கைகளில் புரட்டிய ஒரு பெண் மகிழ்ச்சியுடன் கூத்தாடுவதுபோல் ஆடித் தன் கையிலிருந்த இரத்தத்தை சத்தாம் பயணித்த வண்டியின் முபுறக் கண்ணாடியில் பதித்தாள்.
வரவேற்பு முடிந்து தம் வண்டியில் ஏறும்போது கண்ணாடியில் இரத்த அடையாளம் கண்ட சத்தாம் வண்டி மாறிப் பயணித்தார். ஆனால் அவர் வண்டி மாறியதை அறியாத கொலையாளிகள் முன் திட்டமிட்டபடி இரத்த அடையாளம் பதிந்த வண்டியைக் குண்டுகளால் தகர்த்து விட்டனர்.
தம்மைக் கொல்ல வஞ்சகமாகத் திட்டமிட்ட அவ்வூராரை சத்தாம் தம் படையினர் மூலம் பழிவாங்கினார்.
அந்தக் கொலைக்குத்தான் இப்போது தண்டனை.
சத்தாமுக்கு ஒரு காரணம் இருந்தது- கொலைச் சதிக்குப் பழிவாங்கல்.
நம்முரில் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் டாக்டர் பட்டம் வாங்கச் சென்ற கருணாநிதிக்கு எதிராகப் பல்கலைக் கழக மாணவர்கள் போராட்டம் நடத்தினர். நாயின் கழுத்தில் “டாக்டர்” என்று எழுதி நடமாட விட்டனர். அத்தனையும் சிரித்த முகத்துடன் சகித்துக் கொண்டு டாக்டர் பட்டத்தையும் வாங்கி ஏற்புரையும் நிகழ்த்திக் கருணாநிதி பல்கலைக் கழக வளாகத்தை விட்டு வெளியேறியதும் தமிழ்நாட்டுக் காவல்துறை கருணாநிதியின் ஏவல்துறையாக மாறிப் பல்கலைக் கழக விடுதியில் புகுந்து மாணவர்களை அடித்துத் துவைத்தது, உதயகுமார் என்ற மாணவனை அடித்துக் கொன்று குளத்தில் வீசியது.”செத்தவன் என் மகனல்லன்” எனச் சொல்ல அவனது தந்தையே மிரட்டப்பட்டார்.
ஜெயலலிதாவுக்கு எதிரான நீதிமன்றத் தீர்ப்பு வந்தபோது கோவை வேளான் கல்லூரி மாணவிகள் பல்கலைக் கழகப் பேருந்தில் எரித்துக் கொல்லப் பட்டனர்.
குஜராத்தில் சட்டம் ஒழுங்கை ஒத்திவைத்துக் காவல்துறையைச் சங்க் பரிவாரின் ஏவல் துறையாக்கி ஆயிரக் கணக்கில் முஸ்லிம்கள் கொல்லப் பட்டனர்.
காஷ்மீரில் தீவிரவாதி வேட்டை என்ற பெயரால் அப்பாவிகள் தினமும் இந்தியப் படையால் கொல்லப் படுகின்றனர்.
சமீபத்தில் பாகிஸ்தானில் ஒரு மதப் பள்ளியில் குண்டு வீசி எண்பது பேரை அமெரிக்கப் படை கொன்றது.
எந்த ஆதாரமும் இல்லாமல் இராக் மீது படையெடுத்து ஆயிரக்கணக்கானவர்களை புஷ்ஷின் படைகள் கொன்றன.
எனவே கருணாநிதி,ஜெயலைதா, ஜெயலலிதா, நர(வேட்டை)மோடி,இந்தியப் பிரதமர், பாகிஸ்தான் அதிபர் மற்றும் புஷ் ஆகியோர் மீது எப்போது கொலை வழக்கும் தீர்ப்பும் வரும்..?