அமெரிக்காவில் விமானத்தில் பயணம் செய்யவிருந்த ஒருதாய், தன் குழந்தைக்கு பாலூட்டிய போது, விமானப் பணிப்பெண் ஒரு சால்வையைக் கொடுத்து மார்பை மறைத்துக் கொண்டு பாலூட்டச் சொன்னாராம். பொது இடத்தில் குழந்தைக்கு பாலூட்டும் உரிமையை யாரும் தடுக்க முடியாது என்று அத்தாய் மறுத்துவிட்டதால், பொது இடத்தில் ஆபாசமாக நடந்ததாகக் கூறி விமானத்திலிருந்து குடும்பத்துடன் இறக்கி விடப்பட்டிருக்கிறார்.
இரண்டு மாதங்களுக்கு முன் நடந்த இச்சம்பவத்தை பாதிக்கப்பட்ட பெண் பெண்ணுரிமை அமைப்புகளிடம் எடுத்துச்சென்று சம்பந்தப்பட்ட விமான நிறுவனத்தை மன்னிப்புக் கேட்க வைத்திருக்கிறார். பெண்ணுரிமை அமைப்பு விமான நிறுவனத்தை மன்னிப்புக் கேட்க கையாண்ட முறை என்ன தெரியுமா? அந்த விமான நிறுவனத்தின் அலுவலகங்களின் முன் சுமார் முப்பது தாய்கள் தங்கள் குழந்தைக்கு பாலுட்டியதுதான்.
ஒரு தாய் தன்குழந்தைக்கு பாலூட்டுவதை யாரும் ஆபாசமாகக் கருதுவது மாட்டார்கள்; எனினும் சபலபுத்திக்காரர்களின் கெட்டப் பார்வையை தவிர்க்க சற்று மறைத்துக் கொண்டு பாலூட்டுவது சிறந்தது.இவ்விடயத்தில் விமானப் பணிப்பெண் செய்தது தவறாகப் படவில்லை. இதைக் காரணம் சொல்லி விமானத்திலிருந்து இறக்கி விட்டது மனிதாபிமானமற்ற செயல்!
இங்கு இன்னொன்றையும் கவனிக்க வேண்டும். அமெரிக்காவில் ஆபாசமாக உடையணிந்து பொதுவில் தோன்றும் எவரும் Indecent Exposure என்ற காரணம் சொல்லி தடுக்கப் படவில்லை. தவிர்க்க முடியாத சூழலில் பொதுவில் பாலூட்டுவதை Indecent Exposure என்றும், தவிர்க்கக் கூடிய சூழலில் உண்மையிலேயே Indecent Exposure ஆக உடையணிந்து வருவதைக் கண்டு கொள்ளாமலும் இருப்பது அமெரிக்கர்களின் மாறுபாட்ட/முரணானக் கண்ணோட்டத்தைக் காட்டுகிறது!
பின்குறிப்பு: பொதுவில் பாலூட்டுவது குறித்த கண்ணோட்டம் நாட்டுக்கு நாடு வேறுபடுகிறது.
===========================செய்தி=============
விமானத்தில் அமர்ந்தபடி குழந்தைக்குத் தாய்ப் பால் கொடுத்த பெண்ணை விமான ஊழியர்கள் இறக்கி விட்டதைக் கண்டித்து, அமெரிக்காவின் முக்கிய நகரங்களில் சம்பந்தப்பட்ட விமான நிறுவன அலுலகங்கள் மன்பு தாய்ப்பால் கொடுத்து பெண்கள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு நிலவியது.
அக்டோபர் 13ம் தேதி பர்லிங்டன் நகரிலிருந்து செல்லும் டெல்டா ஏர்லைன்ஸ் விமானத்தில் பயணிப்பதற்காக 27 வயதாகும் எமிலி கில்லெட் என்ற பெண் தனது கணவர் மற்றும் கைக்குழந்தையுடன் விமானத்தில் அமர்ந்திருந்தார். விமானம் கிளம்ப கால தாமதம் ஆன நிலையில், குழந்தை பசியில் அழ ஆரம்பித்தது. இதையடுத்து தனது குழந்தைக்குத் தாய்ப் பால் கொடுக்க ஆரம்பித்தார் எமிலி.
கைக் குழந்தைக்கு ஒரு தாய் பால் கொடுப்பதை யாரும் ஆபாசாமாக பார்க்கவும் மாட்டார்கள், அதை எதிர்க்கவும் மாட்டார்கள். ஜன்னலோரத்தில் அமர்ந்திருந்த எமிலியும் அதுபோலவே மறைவாக அமர்ந்து பால் கொடுத்தார். ஆனால் அந்த விமானத்தில் இருந்த பணிப் பெண்கள் ஒரு போர்வையுடன் அங்கே விரைந்து வந்தனர்.
இதை வைத்து உங்களையும் குழந்தையையும் மூடிக் கொள்ளுங்கள் என்று கூறியுள்ளனர். போர்வையைப் போட்டு குழந்தையை மூடினால் அதற்கு மூச்சுத் திணறும் என்று கூறிய எமிலி அதை வாங்க மறுத்து விட்டார்.
அவ்வளவுதான், பொது இடத்தில் அநாகரீகமாக நடந்து கொண்டதாக கூறி பால் கொடுத்துக் கொண்டிருந்த எமிலியையும், அவரது கணவரையும் வலுக்கட்டாயமாக விமானத்திலிருந்து இறக்கி விட்டுள்ளனர் அந்த ஊழியர்கள்.
அவமானத்தால் கூனிக் குறுகிப் போன எமிலி அப்போதைக்கு எதுவும் சொல்லாமல் கீழிறங்கியுள்ளார். ஆனால் இதுகுறித்து மனித உரிமை அமைப்பிடம் புகார் கொடு
அமெரிக்கச் சட்டப்படி பொதுவில் பாலூட்டும் உரிமை உள்ளது. இது போன்ற நிகழ்வுகள் மேலைநாடுகளில் அடிக்கடி நிகழ்கிறதைப் பகிர்ந்து கொள்ளவே இப்பதிவு :-)
//இவ்விடயத்தில் விமானப் பணிப்பெண் செய்தது தவறாகப் படவில்லை.//
என்று நீங்கள் எழுதியிருப்பது ஆச்சரியத்தைத் தருகிறது! அவர்களுக்கென்ன? அவர்கள் இவ்வாறு செய்தது டெல்டா நிறுவனத்துக்கு எப்படிப்பட்ட பெயர் வாங்கிக்கொடுத்திருக்கிறது என்று பார்த்தீர்களல்லவா.
//ஜன்னலோரத்தில் அமர்ந்திருந்த எமிலியும் அதுபோலவே மறைவாக அமர்ந்து பால் கொடுத்தார்.//
அப்படியிருக்கும்போது,
//ஆனால் அந்த விமானத்தில் இருந்த பணிப் பெண்கள் ஒரு போர்வையுடன் அங்கே விரைந்து வந்தனர். இதை வைத்து உங்களையும் குழந்தையையும் மூடிக் கொள்ளுங்கள் என்று கூறியுள்ளனர்.//
என்பதை எப்படி உங்களால் நியாயப்படுத்த முடிகிறது என்று தெரியவில்லை.