பக்ரீத் பண்டிகையையொட்டி தமிழகத்தில் குர்பானி கொடுப்பதற்காக ஒட்டகங்களை பலியிடுவதற்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.பக்ரீத் பண்டிகை ஜனவரி 1ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதற்காக ஆடு, மாடுகளை குர்பானி பலியாக கொடுப்பது வழக்கம். அதே போல ஒட்டகங்களும் பலி கொடுக்கப்பட்டு வருகின்றன.
இந் நிலையில் தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகம் 8 ஒட்டகங்களை சென்னைக்குக் கொண்டு வந்துள்ளது. வண்ணாரப்பேட்டை கிழக்கு கல்லறை சாலை பகுதியில் உள்ள மசூதியில் இந்த ஒட்டகங்கள் வைக்கப்பட்டுள்ளன. தமிழகம் முழுவதும் மொத்தம் 92 ஒட்டகங்கள் குர்பானியாக கொடுக்கப்படவுள்ளதாக தமுமுக தொண்டர் அணிச் செயலாளர் முகம்மது ரஃபி கூறியுள்ளார்.
ரஃபி கூறுகையில், கடந்த 3 ஆண்டுகளாகத்தான் இங்கு ஒட்டகங்கள் குர்பானியாக கொடுக்கப்படுகின்றன. ஆந்திராவிலிருந்து ஒரு ஒட்டகம் ரூ. 30,000 என விலை கொடுத்து 8 ஒட்டகங்களை 2 லாரிகளில் கொண்டு வந்தோம்.
ஆந்திர மாநிலத்தில் ராஜஸ்தான் ஒட்டகங்கைள கொண்டு வந்து சந்தை போல நடத்துகிறார்கள். அதேபோல அரசு அனுமதியுடன் அடுத்த ஆண்டு சென்னையிலும் ஒட்டக சந்தை நடத்தத் திட்டமிட்டுள்ளோம் என்றார்.
=====================================================
முஸ்லிம்கள் பக்ரீத் பண்டிகையின் போது ஆடு,மாடு, ஒட்டகங்களை குர்பானி கொடுப்பது வசதியுள்ள முஸ்லிம்களின் கடமை.உலகமெங்குமுள்ள முஸ்லிம்கள் பெருநாள் தொழுகையை தொழுதுவிட்டு தங்கள் தகுதிக்கு ஏற்ப இப்பிரானிகளை இறைவனின் பெயரால் அறுத்து தங்களுக்கும், அண்டை வீட்டார் மற்றும் ஏழைகளுக்கும் வழங்குவது வழக்கம்.
நம் நாட்டில் மாடுகளை அறுத்து பலியிடுவதை அவ்வப்போது மிருக வழிபாட்டாளார்கள் எதிர்த்து வருகின்றனர். அதற்கு ‘ஜீவகாருண்யம் என்ற வெளிக்காரணமும், முஸ்லிம்களைச் சீண்டுவதற்குக் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்வோமே என்ற மறைமுகக் காரணமும் இருந்து வருகிறது. மேலும் தோல்தொழிலில் முன்னனியில் இருப்பதும் முஸ்லிம் வர்த்தகர்கள் என்றால் தேசபக்தர்களுக்கு “ஜீவகாருண்யம்” வராமல் என்ன செய்யும்? வடமாநிலங்களில் உணவுக்காக மாட்டைக் கொன்ற தலித்துக்களை உயிரோடு கொல்லும் அளவுக்கு மிருகாபிமனிகளைக் கொண்டது நம் நாடு!
இந்தியாவிலிருந்து உலகம் முழுவதும் குறிப்பாக வளைகுடாவுக்கு ஏற்றுமதியாகும் இறைச்சியின் மூலம் கனிசமான அண்ணியச் செலவானி கிடைப்பதோடு, உபரியாக இருக்கும் கால்நடைகளின் பெருக்கம் கட்டுக்குள் இருக்கிறது.மேலும் தோல் சார்ந்த தொழிழ்களும் வேலை வாய்ப்புகளும் இதன் மூலம் கிடைக்கிறது என்பதை மிருகநல அமைச்சரைக் கொண்ட பா.ஜ.க வும் உணர்ந்தே இருந்தது.மீசைக்கும் ஆசை! கூழுக்கும் ஆசை!!
இன்னொருபக்கம் பிராணிகளுக்கு கருணை காட்டுகிறேன் என்று,வீதியில் திரியும் வெறி/சொறி நாய்களுக்குக் கூட கருணை காட்டும் மத்திய அமைச்சரையும் சட்டத்தையும் கொண்டது நம் பாரதத் திருநாடு! சமீபத்தில் மூன்று வயதுச் சிறுவனை வெறிநாய்கள் கடித்துக் குதறிய சம்பவத்தை நினைக்கும் போதெல்லாம் இந்த மிருகவெறியர்கள் மீது கோபம் வந்து தொலைக்கிறது.
இந்திய அரசியல் சாசணத்தின் 25 ஆவது பிரிவி வழங்கியுள்ள வழிபாட்டு உரிமையின் படியும், இந்திய வனவிலங்குகள் பாதுகாப்புச் சட்டம் (1972) இல் விலங்குகளை குர்பானி கொடுப்பது பற்றி எந்
த தடையும் விதிக்கவில்லை என்பதும், இந்திய வனவிலங்கு வாரியம் வெளியிட்டுள்ள “பலியிடக் கூடாத விலங்குகள்” பட்டியலில் ஒட்டகம் இடம் பெறவில்லை என்பதும் கவனிக்கத்தது.
பாரதீய பிராணிகள் நல சங்கம் சார்பில் ஒட்டகங்களை பலியிட தடை விதிக்கக் கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை இன்று விசாரித்த உயர்நீதிமன்றம், ஒட்டகங்கள் உரிய அனுமதி இல்லாமல் கொண்டு வரப்பட்டுள்ளதால் அவற்றை வெட்டுவதற்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டதாம். ஆந்திராவும் இராஜஸ்தானும் இந்தியாவில்தானே இருக்கிறது? மேலும் ஒட்டகம் அறுக்க சிறப்பு அனுமதி தேவை என்று எந்தச் சட்டத்தில் உள்ளது என்பது மதசார்பற்ற இந்தியாவின் மாண்புமிகு நீதிபதிகளுக்கே வெளிச்சம்!
சென்ற வருடமும் ஒட்டகம் அறுக்க தடை பற்றி “கோர்ட்டுக்கு வந்த ஒட்டகம்” என்ற பதிவிட்டேன். எதற்கும் அதையும் வாசித்துக் கொள்ளவும்.
இந்த பதிவு தமிழ்மணத்தில் வெளிவந்த போது Blog Counter 29,998 என்று காட்டுகிறது! இதை தனிப்பதிவாக போடலாமா என்று நினைத்தேன். மனசாட்சி Don’t do (டோண்டு) என்று தடுத்ததால் அம்முயற்சியைக் கைவிட்டேன்! :-)
சக வலைப்பதிவர்களுக்கும் நண்பர்களுக்கும் தியாகத் திருநாள் வாழ்த்துக்கள்.
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் என் உள்ளம் கனிந்த ஈதுல் அழ்ஹா வாழ்த்துக்கள்!
சட்டத்தின் கண்களை சாதி மறைத்து விடும் கொடுமை.
ஒட்டகம் வெட்ட தடை விதிக்கப்பட்டதை மறு ஆய்வு செய்யக் கோரியது தொடர்பாக இன்று ஐகோர்ட்டில் விசாரணை நடக்கிறது.பாரதிய பிராணி மித்ர சங் அமைப்பின் நிறுவன தலைவர் கவுஹர் அசிஷ் என்பவர் ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், பக்ரீத் தினத்தை முன்னிட்டு சென்னையிலும் தமிழகத்தின் மற்ற பகுதிகளிலும் உள்ள வழிபாட்டு தலங்களில் ஒட்டகங்களை கொல்வதற்கு தடை விதிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
இம்மனுவை நீதிபதிகள் ஜோதிமணி, சந்துரு ஆகியோர் அடங்கிய “டிவிஷன் பெஞ்ச்’ விசாரித்தது. ஒட்டகங்களை வெட்டுவதற்கு “டிவிஷன் பெஞ்ச்’ தடை விதித்தது. எந்த ஒட்டகமும் கொல்லப்படக் கூடாது என்பதை தமிழக அரசும், போலீசாரும் உறுதி செய்ய வேண்டும் என்றும் “டிவிஷன் பெஞ்ச்’ உத்தரவிட்டது.
ஐகோர்ட் விதித்த தடையை மறு ஆய்வு செய்யக் கோரும் மனுவை விசாரிக்க நேற்று தலைமை நீதிபதி ஏ.பி.ஷாவிடம் வக்கீல் அப்துல்முபின் அனுமதி கோரினார். இதற்கு தலைமை நீதிபதி அனுமதியளித்தார். இந்த முறையீட்டின் மீது இன்று நீதிபதிகள் ஜோதிமணி, சந்துரு ஆகியோர் அடங்கிய “டிவிஷன் பெஞ்ச்’ விசாரணை நடத்துகிறது.
நன்றி- தினமலர்-30/12/2006
‘எங்கள் மத நம்பிக்கையை எந்த நீதி மன்றமும் தடை செய்ய முடியாதுங்க’
எங்கேயோ கேட்ட மாதிரி இருக்கா?