Featured Posts

திரைப்படங்களில் முஸ்லிம்கள் நிலை!

அலிபாபா, சிந்துபாத், அலாவுதீன் போன்ற சாகாசக் கதாபத்திரங்களுக்கு அடுத்தபடியாக தெனாலிராமன், மரியாதை ராமன் கதைகளுக்கு இணையாக முல்லா நஸ்ருதீன் என்ற கதாபாத்திரத்தை நம்மில் பெரும்பாலோர் அறிந்திருப்போம். மேற்சொன்ன இரு ராமன்களும் சமயோஜிதமாக செயல்பட்டு கதாபாத்திரங்களுக்கு உறுதுனையாக இருப்பர்.ஆனால் முல்லா நஸ்ருதீன் முட்டாள்தனமாகச் செயல்பட்டாலும் அதை சமாளித்து தன்னை அறிவாளியாகக் காட்டிக் கொள்வதாகச் சொல்லப்படும்.

அதுபோலவே, சமீப வருடங்கள் முன்புவரை சினிமாக்களிலும் முஸ்லிம் கதாபாத்திரங்கள் அப்பாவித்தனமாகவே சித்தரிக்கப்பட்டிருக்கும். பெரும்பாலும் நகைச்சுவை நடிகர்களுக்கு துருக்கி குல்லாவும் குஞ்சத் தாடியும் வைத்து கலர் கைலியை ஏற்ற இறக்கமாக அணிந்து வெள்ளை அல்லது பச்சை ஜிப்பா அணிந்தவாறு இடம்பெறுவர்.

தங்கவேலு அல்லது தேங்காய் சீனிவாசன் முஸ்லிம் வேடம் அணிந்து குதிரை வண்டி ஓட்டுபவராகவோ அல்லது கசாப்புக்கடை பாயாகவோ இருப்பார். பிரியானி, சாம்பிரானி தொடர்புடைய தொழில் செய்வார். கதாநாயகனோ அல்லது கதாநாயகியோ அளவுக்கு அதிகமாக சோகத்தில் தவிக்கும்போது, இளகிய மனம் கொண்ட ஒரு முஸ்லிம் கதாபாத்திரம் மனம் உருகி “யா அல்லாஹ்” என்று வானத்தை நோக்கி இருகரமேந்தி பிரார்த்தனை செய்வதாகக் காட்டி, சோகக்காட்சிக்கு மெருகூட்டப்படும்.

பெண்வேடமணிந்து தப்பிக்க (!?) எம்.ஜி.ஆர் முதல் சத்யராஜ்வரை உடல் முழுவதையும் மூடி புர்கா அணிந்தவாறு வில்லன்களை ஏமாற்றிச் செல்வர். வில்லனால் கற்பழிக்கப்படும் பெண்ணைக் காப்பாற்ற கதாநாயகன் தனது வேஷ்டியை உருவி அண்டர்வேருடன் நின்றுகொண்டு பாதிக்கப்பட்ட பெண்ணை தனது வேஷ்டியால் முழுக்கப் போர்த்தி கற்பை பாதுகாப்பார்.

அத்தி பூத்தாற்போல் ராம்-ராபர்ட்-ரஹீம், சங்கர்-சலீம்-சைமன், அமர்-அக்பர்-அந்தோனி போன்ற மதநல்லிணக்க பெயர்களைச் சொல்லும் தலைப்புகள் வைக்கப்பட்டன. இவையெல்லாம் தவிர்க்கப்பட்டதற்கு அவுட் ஆஃப் ஃபேசன் அல்லது அவுட் ஆஃப் ட்ரெண்ட் என்ற வர்த்தகக் காரணம் சொல்லலாம்.

மற்ற மதம்சார்ந்த கதாபாத்திரங்கள் தங்கள் மதச்சடங்குகள் வழிபாடுகளைச் சரியாகச் செய்யும் போது முஸ்லிம் கதாபாத்திரம் நேரெதிராக அல்லது அரைகுறையாகச் செயல்படுவதுபோல் காட்டப்படும். திருமண மந்திரம் ஓதும் இந்து புரோகிதர் நிஜத்தில் காணும் புரோகிதர் மாதிரியே நடைஉடை பாவனைகள் இருக்கும். பாதிரியாராக வரும் கதாபாத்திரமும் அவ்வாறே கச்சிதமாக நிஜத்தில் காண்பது போன்றே படத்திலும் இருப்பார்.

ராஜ்கிரன், அப்பாஸ் போன்ற முஸ்லிம் கதாநாயகர்கள் கூட நெற்றியில் குங்குமத்துடனும், புதுமாப்பிள்ளையாக அக்னியை வலம் வருவதிலும், அம்மனுக்கு தேர் இழுப்பதில் கனகச்சிதமாக நடிப்பர். ஒரு முஸ்லிம் கதாபாத்திரம் தொழுவது மாதிரியான காட்சிகளில் தரையில் தலைதாழ்த்தி சுஜூது செய்து எழும்போது கையேந்தி துஆச் செய்தவாறு எழுவார். அதேபோல் பாங்கு எனும் தொழுகைக்கான அழைப்பொலி தொழுது முடிந்ததும் பின்னணிப் பாடலாகக் காட்டப்படும்.

இஸ்லாத்தை நன்கு அறிந்தவர்கள் சினிமா போன்ற பொழுதுபோக்கு ஊடகங்களில் இல்லாதது இதற்கு முக்கியக் காரணம் எனலாம்.எதற்கு இவற்றைக் குறிப்பிடுகிறேன் என்றால் இவ்வாறாக ஊடகங்களில் நகைச்சுவைக்கும், நேர்மைக்கும், அப்பாவித்தனத்திற்கும் சேர்க்கப்பட்ட முஸ்லிம் கதாபாத்திரங்கள் இன்று எப்படி சித்தரிக்கப் படுகின்றனர்!

ஒரு முஸ்லிமுக்கு அடையாளமாகக் காட்டப்படும் தொப்பி,தொழுகை,புர்கா போன்றவற்றில் கவனம் செலுத்தாத இயக்குனர்கள், குண்டு வைக்கும் முஸ்லிம் வில்லன் நீண்ட,அடர்ந்த தாடியுடனும், மீசையின்றியும் தொழுகையைச்

6 comments

  1. படத்தின் பெயர் “டௌரி கல்யாணம்”, விசு அவர்கள் தன் மகளின் கல்யாணத்திற்காக நம்பியார் அவர்களிடம் (முஸ்லீம் கதாபாத்திரம்) உதவி கேட்டிருப்பார்,
    விசு அவர்களின் மகளரின் கல்யாணத்திற்கு மளிகை சாமான்கள் அத்தனையும் தன் கடையில் இருந்த இலவசமாக தருவதாக நம்பியார் அவர்கள் வாக்களித்திருப்பார்கள், கல்யாணத்திற்கு முதல் நாளன்று நம்பியார் அவர்கள் இறந்து விடுவார்கள்,
    மறுநாள் விசு அவர்களின் வீட்டு வாசலில் நம்பியார் அவர்களின் பத்து வயது மதிக்கத்தக்க மகன் ஒருவர் உட்கார்ந்து இருப்பார், விசு வந்த நோக்கம் பற்றி வினவும் போது, மகன் சொல்லி காட்டுவார், நம்பியார் அவர்கள், “வாக்கு தவறக் கூடாது”, என்று தன் மகனிடம் “விசு அவர்களின் மகளது திருமணத்திற்கு வேண்டிய அனைத்து மளிகை பொருள்களும் நம் கடையில் இருந்து தான் செல்ல வேண்டும்” என்பதாக உறுதி மொ௯ழி வாங்கி விட்டு இறந்து விடுவார்.
    அழகிய சிறுகதை போல் இருக்கும் இந்த கதையில் உண்மை முஸ்லீம் மரண தருவாயிலும் வாக்கு தவறக் கூடாது என்ற கருத்து வலியுறுத்தப் படுகிறது,
    சிறப்பாக காட்சியமைத்த விசு அவர்களை பாராட்டாமல் இருக்க முடியாது.

    ஒருவர் குருவியை பிடித்து கையில் வைத்து கொண்டு முல்லா நசுரிதீனிடம், “என் கையில் ஒரு குருவி உள்ளது, அது உயிரோடு உள்ளதா? அல்லது செத்து போய் விட்டதா?” என்று கேட்டாராம், முல்லா உயிரோடு தான் உள்ளது என்றால் குருவியை நசுக்கி சாகடித்து விட வேண்டியது, முல்லா செத்து விட்டது என்று கூறினால் குருவியை பறக்க விட்டு விட வேண்டியது, இது தான் திட்டம், முல்லா சொன்னாராம், “குருவி உயிரோடு இருப்பதும் செத்து விடுவதும் உன் கையில் தானப்பா உள்ளது” என்று.
    எவ்வளவு அற்புதமான பதில், நான் என் மாணவரிடம் கூட சொல்வதுண்டு. நன்றி நாகூர் இஸ்மாயில்

  2. இந்திய சரித்திரத்தில் மறைக்கப்பட்டு பிரிட்டீஸ் ஆவணங்களில் இடம் பெற்றுள்ள சுதந்திரப் போராட்ட வீரன் மருதநாயகம் என்ற கான்சாகிப் பற்றிய வரலாற்றுப் படத்தை பிரம்மாண்டமான விளம்பரங்களுடன் தொடங்கிய கமலஹாசன் பின்னர் மிரட்டப்பட்டு நடுநிலையாளராகக் காட்ட ‘ஹே ராம்!’ என்ற படம் எடுக்க நிர்ப்பந்திக்கப்பட்டார்.

    Today is not April 1st.You can reserve your stupid ideas for
    that day.Kamal could not
    mobilize the money and had to
    stop the work.None forced him
    to film Hey Ram or abandon
    Maruthanayagam.You seem to
    be so uninformed about films
    that you better know some facts
    before repeating the same set
    of lies.

  3. திருவடியான்

    இதைப்பற்றி நானும் வெகு காலம் யோசித்துப் பார்த்திருக்கிறேன். எப்பொழுது பார்த்தாலும் முஸ்லிம்கள் தமிழைக் கடித்துக் கடித்துப் பேசுவதாகவும், மல்டி கலரில் ஒரு நீண்ட அங்கியும் வித்தியாசமான தாடியும் வைத்திருப்பதகாவும் ஆதிகாலத்திலிருந்து காட்டிவருகின்றனர். உமறுப்புலவர் சீறாப்புராணம் எழுதிய நாடு நம் தமிழ்நாடு. நான் கண்ட வரையில் வெகு சுத்தமாக தமிழ் பேசும் தமிழ் முஸ்லிம்களையே நான் காண்கிறேன். ஏன் இந்த விரோதப் போக்கு? முஸ்லிம்கள் சினிமாவில் இல்லை என்பதெல்லாம் ஒரு சப்பக்கட்டு, அவ்வளவுதான். தற்போது அந்த ட்ரெண்டு மாறியிருக்கிறது என்றுதான் நினைக்கிறேன்.

  4. நல்லடியார்

    Tamilreber,

    கமலஹாசனின் மருத நாயகம் சூட்டிங்கை தடுப்போம் என்று சில வருடங்களுக்கு முன் தனித் தமிழர் சேனா தலைவர் நகைமுகன் மிரட்டியதை நாளிதழ் செய்தியில் படித்திருக்கிறேன். தன் நடுநிலையைக் காட்டவே ஹேராம் படத்தில் முஸ்லிம்கள் வன்முறையாளர்களாகக் காட்டப்பட்டார்கள் என்பதும் ஊரறிந்த உண்மை.

    அப்புறம், தமிழ் ரிபர் என்று பெயர் வைத்துக் கொண்டு ஆங்கிலத்தில் பிணாத்துகிறீர்களே. நியாயமா?

  5. நல்லடியார்

    //கமலஹாசனின் மருத நாயகம் சூட்டிங்கை தடுப்போம் என்று சில வருடங்களுக்கு முன் தனித் தமிழர் சேனா தலைவர் நகைமுகன் மிரட்டியதை நாளிதழ் செய்தியில் படித்திருக்கிறேன்//

    எந்த நாளிதழ் என்று நினைவில் இல்லை. அன்பார்கள் சுட்டிக் காட்டினால் நன்று.

  6. கரு.மூர்த்தி

    இந்த நிலையை தடுக்கதான் டெல்லியிருந்து 2 பேர் ரயில புடுச்சு வரப்பாத்தாங்க , அதுக்குள்ள வந்தேறி டெல்லி போலீசு பயங்கரவாதிகள்ன்னு புடிச்சிருச்சு , ஒரு 2 கிலோ ஆடியெக்ஸும் நாலு ஏகே 47 ம் வச்சிருந்த்து ஒரு பெரிய தப்பா ?

    //சிறப்பாக காட்சியமைத்த விசு அவர்களை பாராட்டாமல் இருக்க முடியாது.//

    அது வேறொன்றுமில்லை ,பார்ப்பன சதி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *