# கொலைக் குற்றவாளி சிபுசோரனுக்கு ஆயுள் தண்டனை.
# கொலைக் குற்றவாளியும் பா.ஜ.க.முன்னாள் எம்.பியுமான நவ்ஜோத் சிங் சித்து ஜாமீனில் விடுதலை.
http://www.dinamalar.com/2007jan13/specialnews1.asp?newsid=3
# நாடாளுமன்றத் தாக்குதல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட அப்ஷல் குருவின் மரண தண்டனையை பரிசீலிக்க வேண்டிய மணுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
http://www.dinamalar.com/2007jan13/court_ind1.asp
# சென்னை மாநகராட்சி தேர்தல்- ஒரே வழக்கிற்கு நீதிபதிகளின் முரண்பட்ட இரு தீர்ப்புகள்!
http://www.dinamalar.com/2007jan13/specialnews1.asp?newsid=1
# நூறு குற்றவாளிகள் தப்பினாலும் ஒரு நிரபராதி அநியாயமாகத் தண்டிக்கப்படக் கூடாது.
# சட்டத்தின் முன் அனைவரும் சமம்!
# வாய்மையே வெல்லும்!!
# ஜெய் ஹிந்த்!!!
மேற்கண்டவற்றிற்கு விபரம் அறிந்தவர்கள் விளக்கம் கொடுக்க முடியுமா?
இந்தப்பதிவிற்கான நோக்கம் புரிகிறது. அது அர்த்தமற்றது!
இந்தப்பதிவிற்கான நோக்கம் புரிகிறது.
மிகுந்த அர்த்தம் பொதிந்துள்ள ஆக்கம். இது தேவையானதே!
# (ஹிந்துத்துவாவின்) நூறு குற்றவாளிகள் தப்பினாலும் (பிற்படுத்தப்பட்ட சமூகத்தின்)ஒரு நிரபராதி கூட அநியாயமாகத் தப்பிவிடக் கூடாது.
# சட்டத்தின் முன் (ஹிந்துத்துவைத் தவிர) அனைவரும் சமம்!
# பொய்மையே வெல்லும்!!
# ஜெய் ஹிந்த்!!!(இதில் மட்டும் எப்பொழுதும் மாற்றமில்லை)
Good. Go Ahead.
வ.வ
பிரபு ராஜதுரை,
இப்பதிவில் என் கருத்தாக எதையுமே சொல்லாதபோது, “இந்தப்பதிவிற்கான நோக்கம் புரிகிறது. அது அர்த்தமற்றது!” என்று ஒற்றைவரியில் பின்னூட்ட்ம் இட்டது ஏமாற்றமளிக்கிறது. கேள்விப்பட்ட செய்திகளை சாதாரண/சாமான்ய குடிமகனின் மனநிலையில் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ள எழுதினேன்.
தாங்கள் சட்டம் பயின்றவர்; நீங்கள் புரிந்து கொண்ட எனது நோக்கத்தில் அர்த்தமற்றதாகக் கருதியதை சுட்டிக்காட்டினால் நன்றாக இருக்கும்.
தமிழ் செல்வன்,
பிரபு ராஜதுரை அவர்களுக்கு நேரெதிர் கருத்தைச் சொல்லியுள்ளீர்கள். உள்குத்து ஏதும் இல்லையே?
சாதாரனத் துறவிகள் பிரேமானந்தா, சதுர்வேதி, யோபு போன்றோருக்கு தகுதிக்கு ஏற்ப தண்டனை! அதேபோன்ற துறவி ஜகத்குருவாக இருந்து போதுமான ஆதாரங்களுடன் குற்றம் சாட்டப்பட்டாலும் காஞ்சியில் இருந்துதான் சாட்சிகளைக் கலைக்கக் கூடாது; கலவையில் இருக்கலாம்!
Nalladiyar, he is out on bail and the case continues.He has not run away anywhere.He is still fighting
the case in courts.The Supreme
Court transferred the case to
Pondicherry.Had he ever tried to
tamper with evidence or harass the
witnesses the bail would have been
cancelled.So stop writing nonsense.
Karunanidhi withdrew criminal cases filed against muslims at the
request of TMMK and others.Is this justified.
If you are so unhappy with Indian legal system you better stop cribbing about it and become a citizen of Saudi or Pakistan.I guess that you are already one.Perhaps for you Taliban’s Afghanistan is the good example for law and justice.
Finally your understanding of
law and justice is so pathetic
that you dont even know the facts
in the cases you are talking of.
நல்ல சிந்தனை. உங்களைப் போன்றோர் நாலு பேர் இருந்தா.. இல்லை இல்லை.. நீர் ஒருத்தர் இருந்தாலே போதும் அரசியல்ல… இந்தியா சோவியத் ருஷ்யா போல பல பிரிவுகளாயிருக்கும்.
இதுல பிரபுகிட்ட கேள்வி வேற…
உங்களை நினைச்சா இரயில் சினேகங்கள் அப்படிங்கற தொலைக்காட்சி தொடர்ல ஒரு பாட்டு வரும்.. அதான் நினைவுக்கு வருது
இந்த வீணைக்கு தெரியாது… இதை செய்தவன் யாரென்று…
……
……
உறக்கம் தேடி அலையும் விழிகள் உறங்காதிருக்க முடியாது
விழித்துக் கொண்டே உறங்கும் உயிரை
எழுப்ப எனக்கு தெரியாது…
வாழ்க வளமுடன்.
//he is out on bail and the case continues.//
சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்றால், சங்கராச்சாரியாருக்கு கொடுக்கப்படும் பெயில் கோவை குற்றவாளிகளுக்கும் கொடுக்கப்பட வேண்டுமே? ஏன் இல்லை?
//He has not run away anywhere.He is still fighting the case in courts.//
பெரியவருடன் கோவித்துக் கொண்டு சில நாட்கள் தலைமறைவாக இருந்தாரே?
//The Supreme Court transferred the case to Pondicherry.//
ஏன் சென்னை உயர் நீதி மன்றத்தில் நீதி கிடைக்காதா? முன்பாவது சிறையில் தள்ளிய ஜெயலலிதா ஆட்சியில் இருந்தார். ஆனால் தற்போது ஜெயேந்திர ஆசி பெற்ற கோ.சி.மணியின் திமுக அல்லவா ஆட்சியில் இருக்கிறது!
//Had he ever tried to tamper with evidence or harass the witnesses the bail would have been
cancelled.//
முன்பு ஜாமின் மறுக்கப்பட்டபோது சொல்லப்படும் காரணம். அதையே வழிமொழிந்தேன். :-)
//So stop writing nonsense. Karunanidhi withdrew criminal cases filed against muslims at the
request of TMMK and others.Is this justified.//
சென்ற தேர்தலில் முஸ்லிம்களை ஜாமீனில் விடச் சொல்லி ஜெயலலிதாவிடம் வேண்டியபோது, என் மீதே கோர்ட் வழக்குகள் நிலுவையில் உள்ளன; சட்டப்படியே எல்லாம் நடக்கும் என்றார். இதே கருணாநிதிதான் அந்த முஸ்லிம்களை உள்ளே தள்ளியவர். கருணாநிதி என்ன ஜனாதிபதியா? பெரிய மனசு பண்ணி பொது மன்னிப்பு கொடுக்க? :-)
//If you are so unhappy with Indian legal system you better stop cribbing about it and become a citizen of Saudi or Pakistan.I guess that you are already one.Perhaps for you Taliban’s Afghanistan is the good example for law and justice.//
இந்திய சட்டங்களை மதிப்பவர்கள் யார் என்பது பாப்ரி மஸ்ஜிதை சட்டப்படி மீட்க முயல்வதிலிருந்து அறிந்து கொள்ளலாம். உங்கள் பரிவாரங்களுக்குத்தான் இந்திய சட்டங்கள் என்றால் அலர்ஜி. ஆக, அவர்களை நேபாளத்துக்கு நாடுகடத்தலாமா? சவூதியில் சிடிசன்ஷிப் கொடுப்பதில்லை; பாகிஸ்தான் வேண்டாம் என்றுதான் 60 வருடங்களுக்கு முன்பே தங்கி விட்டோம். தாலிபான்களின் ஆப்கான்…? எங்கிருக்கு??
//Finally your understanding of law and justice is so pathetic that you dont even know the facts
in the cases you are talking of.//
அதனால்தான் சொன்னேன் அறிந்தவர்கள் விளக்க வேண்டுமென்று!
நல்லடியார் உங்களின் சில கருத்துக்களோடு மாறுபடுகிறேன்.
//சுதந்திரத்திற்காக உயிர் கொடுத்தவர்களின் வழிபாட்டுத்தலம் காட்டிக் கொடுத்தவர்களால் இடிக்கப்பட்டது;//
நீங்கள் காட்டிக் கொடுத்தவர்கள் என்று யாரைக் குறிப்பிடுகிறீர்கள் எனப் புரியவில்லை.
பள்ளிவாசலை இடித்ததில் பகடைகாய்களாக பயன்பட்ட இந்துக்கள் அனைவரையும் குறிப்பிடுகிறீர்கள் எனில் அது தவறு. இந்துக்கள் யாரையும் காட்டிக்கொடுக்கவில்லை. உண்மையான இந்துக்கள் இந்திய நாட்டை தாயை விட மேலாக நேசிப்பவர்கள். பிறந்த நாட்டை நேசிக்கும் எந்த ஒரு இந்துவும் அத்தகைய துரோகச்செயலை செய்யமாட்டான். ஒருவேளை அதற்கான சூழ்நிலை வந்தால் கூட தன் உயிரையே நாட்டிற்காக கொடுப்பான்.
பகத்சிங்கிலிருந்து சுபாஷ் சந்திர போஸ் வரை நாட்டுக்காக உயிர் துறந்த எண்ணற்ற இந்துக்களை நினைவில் கொள்ளுங்கள்.
காட்டிக் கொடுத்தவர்கள் என பள்ளிவாசலை இடிக்க திட்டமிட்டு அப்பாவிகளை பகடைகாய்களாக பயன்படுத்திய சித்பவ பார்ப்பன கூட்டத்தை மட்டும் பெயர் கூறி கூறுவதே மிகச் சரி.
//உயிர் கொடுத்தவர்கள் சட்டப்படி அதை மீட்போம் என்கிறார்கள்.//
நிச்சயமாக. நாட்டின் ஒற்றுமையையும் முன்னேற்றத்தையும் மட்டும் விரும்பும் நாட்டுக்காக உயிர் கொடுத்தவர்களின் வழியில் வந்தவர்கள் சட்டப்படி சக சமூகத்தின் உரிமையை பெறுவதற்கு துணை நிற்போம் என்கின்றனர்.
//காட்டிக் கொடுத்தவர்கள் சட்டம் எங்கள் மயிர் என்கிறார்கள்.//
இந்நாட்டுச் சட்டத்தை மதிக்காத வீணர்களை “தேசதுரோகிகளாக” அடையாளம் கண்டு நாட்டை விட்டு நாடு கடத்த வேண்டும். அதற்கு நாட்டை நேசிக்கும் ஒவ்வொரு குடிமகனும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
//கோவை குண்டு வெடிப்பில் சந்தேகத்தின் பேரில் கைதானவர்களுக்கு குற்றம் நிரூபிக்கப்பட்டால் கிடைத்திருக்கும் தண்டனைக் காலத்தைவிட அதிகமாக சிறையில் கழித்து வருகிறார்கள்.//
பாவம், சிறையை நிரப்புவதற்காக பிறந்தவர்கள். “முஸ்லிம்களுக்கு இவ்வுலக வாழ்க்கை சிறைச்சாலை” என்று என் நண்பர் ஒருவர் கூறினார். அதனை அறிந்து கொண்டவர்கள் முஸ்லிம்களுக்கு அதனை சரிப்படுத்த உதவுகின்றார்களோ என்னமோ? :-)
//ஒரிஸ்ஸா பாதிரியார் கொலையிலும் குஜராத்தில் இனப்படுகொலையிலும் நிரூபனமான கொலைகாரர்கள் குறைந்தபட்ச தண்டனை கூட பெறாமல் விடுதலையானார்கள்.//
அதனை தான் முன்னமே சொல்லி விட்டேனே!
# சட்டத்தின் முன் (ஹிந்துத்துவாவைத் தவிர) அனைவரும் சமம்!
//சாதாரனத் துறவிகள் பிரேமானந்தா, சதுர்வேதி, யோபு போன்றோருக்கு தகுதிக்கு ஏற்ப தண்டனை! அதேபோன்ற துறவி ஜகத்குருவாக இருந்து போதுமான ஆதாரங்களுடன் குற்றம் சாட்டப்பட்டாலும் காஞ்சியில் இருந்துதான் சாட்சிகளைக் கலைக்கக் கூடாது; கலவையில் இருக்கலாம்!//
பிரேமானந்தா, சதுர்வேதி, யோபு போன்றவர்களை உள்ளே நுழைய ஆலோசனை கூற வேண்டியது தானே. அவர்களுக்கு தண்டனை கிடைத்ததில் ரொம்பவே கவலைப்படுகிறீர்களே.
சட்டத்திற்கு கட்டுப்பட வேண்டிய அவசியமில்லாதவர்களுடன் தொடர்பு வைக்க வேண்டாம் என அவர்களிடம் யார் சொன்னது? அப்பொழுதே காமபீடாதிபதியைப் போன்று ஹிந்துத்துவாவில் அங்கத்தினராக இருந்திருக்க வேண்டியது தானே. இந்த கஷ்டமெல்லாம் வந்திருக்காதல்லவா?
//(அப்புறம் அடைப்புக்குறிக்குள் வாசகங்கள் உங்கள் மனதில் அடைபட்டுக் கிடந்தவையா? :)//
என் மனதில் மட்டும் என்ன? இன்று இந்தியாவில் மன இறுக்கத்தில் வாழும் கோடானு கோடி உண்மையான இந்துக்களின் மனதிலும் இதுதான் அடைபட்டுக் கிடக்கிறது.
என்று ஹிந்துத்துவ சாபம் இந்நாட்டை விட்டு அகல்கிறதோ அன்று தான் நாட்டிற்கு விடிவு காலம்.
வ.வ
சட்டம் பற்றி எழுதப்படும் பதிவுகளில் எனக்கு அதிக ஆர்வம் உண்டு. ஆனால், விளக்கமாக பதில் எழுத நேரமில்லையாதலால்…சுருக்கமாக சில சொல்லி அது பிரச்னையாகிறது.
உங்களது நோக்கம் என்று கூறியது நீதிமன்றங்களில் மாறுபாடான தீர்ப்புகள் வருகின்றன என்பதை கூறும் வண்ணம் எழுதப்பட்டிருப்பதை.
அர்த்தமற்றது என்று கூறியது, இந்திய நீதிமன்றங்கள் மீதான தங்களது பயத்தை!
மற்றபடி, உங்களை விட அதிகமாக தீர்ப்புகளை குறை கூறுபவன் நான்…எனது தொழிலே அதுதானே:-))
<<--//He has not run away anywhere.He is still fighting the case in courts.// பெரியவருடன் கோவித்துக் கொண்டு சில நாட்கள் தலைமறைவாக இருந்தாரே? –>>
நல்லடியார் அவர்களே,
உங்கள் வாதத்தின் நேர்மை மேற்கண்ட வார்த்தைகளில் நன்றாக வெளிப்படுகிறது.
இதில் ஒன்றும் ஆச்சரியம் இல்லை. அரபுநாட்டுப் பணத்தில் உண்டு கொழிக்கும் இந்திய தேசவிரோதிகள் எப்பொழுது தான் தங்கள் வார்த்தைகளில் நேர்மையை கடைபிடித்திருக்கின்றனர்?
ஜாமீன் வாங்கிக் கொண்டு பெரியவாள் எங்கும் சென்றுவிடவில்லை. தைரியமாக வழக்கை எதிர்கொண்டு வருகிறாரே எனச்சுட்டிக்காட்டினால், முன்னர் சிறு மனவருத்தத்தின் காரணமாக நடந்த சம்பவத்தை எடுத்து தொடர்பில்லாமல் திணிக்கிறீரே?
கேட்ட விஷயத்திற்கு பதில் இல்லை எனில் இவ்வாறு ஏதாவது வாதத்திற்குதவாத தனிப்பட்ட பழங்கதைகளை எடுத்து விட்டு விஷயத்தை திசைதிருப்புவதே உங்களின் வேலையாகி விட்டது.
வெட்டியாக உங்களுடன் வாதம் செய்வதை விட வேறு ஏதாவது வேலை பார்க்கலாம்.
முதலில் அர்த்தத்தோடு வாதமாடுவதற்காவது தெரிந்து8 கொள்ளுங்கள். அரபுக்களிடமிருந்து கிடைக்கும் பணத்திற்கு கடமைக்காக ஏதாவது எடுத்து விட வந்தால் இவ்வாறு தான் இருக்கும்.
பொய் என்றும் நிலைக்காது.
சத்தியம் வெல்லும்.
பிரபு ராஜதுரை,
//அர்த்தமற்றது என்று கூறியது, இந்திய நீதிமன்றங்கள் மீதான தங்களது பயத்தை!//
நேற்றைய செய்தியாக 69% இட ஒதுக்கீடு பற்றிய உச்சநீதிமன்ற தீர்ப்பு குறித்த முதல்வர் கருணாநிதியின் கருத்து “உச்சநீதி மன்ற தீர்ப்பு இறுதியல்ல” என்றார். சிவில் வழக்கில் சொல்லப்படும் உச்சநீதிமன்ற தீர்ப்பே இறுதியல்ல என்று சொல்லப்படும் போது, மரணதண்டனைக்கான தீர்ப்புகள் மட்டும் விதிவிலக்கா? அந்த அர்த்தத்தில்தான் வெவ்வேறு வழக்குகளின் வெவ்வேறு தீர்ப்புகளைச் சுட்டி எழுதினேன்.
பெரும்பாலான குற்றவாளிகளைத் தீர்மானிக்கும் தீர்ப்புகள் சாட்சிங்கள் மற்றும் சந்தர்ப்பத்தைப் பொருத்தே அமைந்திருப்பதை நடைமுறையில் காண்கிறோம். அதனால் ஏற்பட்ட பயமாக இருக்கலாம்.
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
//சிறு மனவருத்தத்தின் காரணமாக நடந்த சம்பவத்தை எடுத்து தொடர்பில்லாமல் திணிக்கிறீரே?//
விஷ்வா,
ஜாமீனில் வெளிவந்தால் சங்கராச்சாரி எங்கும் ஓடிஒளியப்போவதில்லை என்றதற்கு “வழக்கு இல்லாத காலத்திலேயே” ஓடிஒளிந்த பின்னனியைச் சுட்டினால் எமது நேர்மையையும் தேசப்பற்றையும் திட்டி எழுதுகிறீர்.
சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்றால் எல்லாக் குற்றவாளிகளுக்கும் பிணையில் வெளிவர அனுமதிக்க வேண்டியதுதானே. பாஷாவும் மதானியும் பிணையில் வந்து சாட்சிகளைக் கலைத்து விடுவார்கள் என்று சொல்லும் நீதிமன்றம் சங்கராச்சாரியாருக்கு மட்டும் ஏன் சொல்லவில்லை? உங்களின் நேர்மையான பதிலை முதலில் வைத்து விட்டு என் நேர்மையைச் சாடலாம்.
வேழம்,
தங்களின் வாழ்த்துக்கு நன்றி.
//வேழம் என்றால் யானை. யானை வலியது.. உடலிலும் மனதிலும். இருந்து மற்றவர்களுக்கு தீங்கிழைக்காது. //
இது உங்கள் பதிவின் முன்குறிப்பில் கண்டது. சீரியசாக் சொல்றீங்களா யானை மற்றவர்களுக்கு தீங்கிழைக்காது என்று? :-)
// If you are so unhappy with Indian legal system you better stop cribbing about it and become a citizen of Saudi or Pakistan.I guess that you are already one.Perhaps for you Taliban’s Afghanistan is the good example for law and justice.
Finally your understanding of
law and justice is so pathetic
that you dont even know the facts
in the cases you are talking of.
//
ஒரு சட்டத்தின் மீதுள்ள அதிருப்தியை எல்லோரும் எல்லா சமயத்திலும் வெளிப்படுத்தத் தான் செய்கிறார்கள். அதிலும் நல்லடியார் கூறியவை – அனைத்தும் பத்திரிக்கைகளில் செய்திகளாக வந்தவை – பலராலும் பல சமயத்திலும் விவாதிக்கப்பட்டவையே. வழங்கப்ப்படும் தீர்ப்புகளிலோ அல்லது நடைமுறைப்படுத்தப்படும் சட்டங்களிலோ உள்ள முரண்பாடுகளைச் சுட்டிக் காட்டியதினால், ஒருவர் ஒரு நாட்டை விட்டு வெளியேறிவிட வேண்டுமென்பது உங்கள் தர்மமானால், இன்று இந்தியா ஒரு சுடுகாடாக மாறிவிட்டிருக்கும்.
நல்லடியாரை அவர் முஸ்லிம் என்ற காரணத்தினால், சவுதிக்கோ, பாக்கிஸ்தானுக்கோ போய்விடுங்கள் என்றால், இதே சட்டத்தின் மீது அதிருப்தியுற்று, போராடும் இந்து நண்பர்களை எங்கே போகச் சொல்வீர்கள்? நீதித் துறையை விமர்சிப்பது தான் எனது தொழிலே என்று சொல்லும் நண்பர் ராஜதுரை போன்ற வக்கீல்களை எல்லாம் எங்கே போகச் சொல்வீர்கள்?
இது எனது சொத்து – நான் கை காட்டினால் நீங்கள் எல்லாம் வெளியேறிட வேண்டும் என்ற உங்கள் ஆணவம் தான் – உங்களை அழிவுப் பாதையில் அழைத்துச் செல்கிறது என்பதை உணருங்கள்.
அரபு பாலைவனங்களில் உழைக்கும் இஸ்லாமியர்களின் தொகையை விட, இங்கு வாய்ப்பிற்காக வந்திருக்கும் இந்து சகோதரர்களின் எண்ணிக்கை அதைவிட அதிகமிருக்கிறது என்பதையும் தெரிந்து கொள்ளுங்கள்.
உங்களுடைய வன்முறையான கருத்துகளால், நீங்கள் அவமதிக்க நினைப்பது இஸ்லாமியர்களை மட்டுமல்ல, ஆயிரக்கணக்கான இந்து சகோதரர்கள் மீதும் தான் என்று தெரிந்து கொண்டு செய்யுங்கள். ஆமாம், இந்த சகோதரர்கள் கடினமான கட்டுமானப்பணியிலும் அதைச் சார்ந்த தொழிலிலும் தானே இருக்கிறார்கள் – உங்களைப் போன்ற மடாதிபதி துதிபாடும் ஆசாமிகள் இல்லை தானே – அதனால் தான் அத்தனை எளிதாக அரபு நாட்டு சம்பாத்யத்தை இகழத் துணிந்து விட்டீர்கள் போலும்.
– நண்பன்
//பிரபு ராஜதுரை அவர்களுக்கு நேரெதிர் கருத்தைச் சொல்லியுள்ளீர்கள். உள்குத்து ஏதும் இல்லையே?//
உள்குத்தா? அப்படியென்றால்…?
இப்பதிவிற்கான நோக்கம் புரிகிறது என நான் கூறியது: நீதிமன்ற தீர்ப்புக்கள் சிலவேளைகளில் முன்னுக்குப்பின் முரணாக அமைகின்றன என்பதையே.
பதிவில் தனிப்பட்ட கருத்தாக நீங்கள் எதுவும் கூறாததால்,
மிகுந்த அர்த்தம் பொதிந்துள்ள ஆக்கம் எனக் கூறினேன்.
நீண்ட பதிவாக எழுதி படிப்பதற்கு போரடிக்க வைக்காமல் வெகு எளிமையாக சில மேற்கோள்களை மட்டும் காட்டி ஒருசில வரிகளில் முடித்த இதுபோன்ற ஆக்கங்கள் தேவையானதே என்றேன்.
பிரபு ராஜதுரை அவர்களின் கருத்துக்கு அடுத்த கருத்தாக என் கருத்து இருவரிகளில் வந்ததால் அவருக்கு நேரெதிர் கருத்து கூறியதாக நீங்கள் நினைத்துள்ளீர்கள் போலும்.
தமிழ்செல்வன்
//பாஷாவும் மதானியும் பிணையில் வந்து சாட்சிகளைக் கலைத்து விடுவார்கள் என்று சொல்லும் நீதிமன்றம் சங்கராச்சாரியாருக்கு மட்டும் ஏன் சொல்லவில்லை?//
முன்னவர்கள் “பிற்படுத்தப்பட்டவர்கள்”
பின்னவர் (ஹிந்துத்துவ)”முற்படுத்தப்பட்டவர்” என்பதனால்.
# (ஹிந்துத்துவாவின்) நூறு குற்றவாளிகள் தப்பினாலும் (பிற்படுத்தப்பட்ட சமூகத்தின்)ஒரு நிரபராதி கூட அநியாயமாகத் தப்பிவிடக் கூடாது.
# சட்டத்தின் முன் (ஹிந்துத்துவைத் தவிர) அனைவரும் சமம்!
ரிப்பீட்டேய்.
வ.வ
//ஜாமீனில் வெளிவந்தால் சங்கராச்சாரி எங்கும் ஓடிஒளியப்போவதில்லை என்றதற்கு “வழக்கு இல்லாத காலத்திலேயே” ஓடிஒளிந்த பின்னனியைச் சுட்டினால//
ஜாமீனில் வெளிவந்து மாதங்கள் பல ஆகிவிட்டன. இதுவரை எங்கும் ஓடிஒழியாமல் தைரியாமாகவே நேர்மையான முறையில் வழக்கை எதிர்கொண்டு வருகிறார்.
அப்படியிருக்கும் பொழுது முன்பு தனிப்பட்ட சொந்த வாழ்வில் நடந்த விஷயத்தை கூற வேண்டிய அவசியமில்லை என்பதாலேயே சுட்டிக் காட்டினேன்.
முதலில் தனிமனித வாழ்க்கையில் தலையிடும் பண்பை நிறுத்துங்கள். உங்கள் மார்க்கம் இதுதான் உங்களுக்கு கற்றுத்தருகிறது போலிருக்கிறது.
//பாஷாவும் மதானியும் பிணையில் வந்து சாட்சிகளைக் கலைத்து விடுவார்கள் என்று சொல்லும் நீதிமன்றம் சங்கராச்சாரியாருக்கு மட்டும் ஏன் சொல்லவில்லை?//
சர்வதேச தீவிரவாத இயக்கங்களுடன் தொடர்புடைய அதிபயங்கர தீவிரவாதிகளுக்கும் ஒரு கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட(இதுவரை நிரூபிக்கப்படவில்லை) 80 கோடி இந்துக்கள் தலைவணங்கும் பெரியவருக்கும் வித்தியாசம் இல்லையா?
முதலில் தேசவிரோதம் என்றால் என்ன என்பதை அறிந்தவர்களுடன் கேட்டு தெரிந்து கொண்டு பேசுங்கள்.
“Finally your understanding of
law and justice is so pathetic
that you dont even know the facts
in the cases you are talking of.”
அர்த்தமற்றது என்று கூறியது, இந்திய நீதிமன்றங்கள் மீதான தங்களது பயத்தை!
I agree with this 100%.Nalladiyar
please try to know the facts before writing like this.
நேற்றைய செய்தியாக 69% இட ஒதுக்கீடு பற்றிய உச்சநீதிமன்ற தீர்ப்பு குறித்த முதல்வர் கருணாநிதியின் கருத்து “உச்சநீதி மன்ற தீர்ப்பு இறுதியல்ல” என்றார். சிவில் வழக்கில் சொல்லப்படும் உச்சநீதிமன்ற தீர்ப்பே இறுதியல்ல என்று சொல்லப்படும் போது, மரணதண்டனைக்கான தீர்ப்புகள் மட்டும் விதிவிலக்கா? அந்த அர்த்தத்தில்தான் வெவ்வேறு வழக்குகளின் வெவ்வேறு தீர்ப்புகளைச் சுட்டி எழுதினேன்.
If you read the full statement
given by him you will understand
what he has meant.You try to understand words and ideas out
of the context.His statement
is so clear that it is difficult
to misunderstand that, if one
knows the issue he is talking
of.Perhaps you are not and that
has created a confusion in your
mind.And from that you jump to
conclusions.
விஷ்வா,
//ஒரு கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட(இதுவரை நிரூபிக்கப் படவில்லை) 80 கோடி இந்துக்கள் தலைவணங்கும் பெரியவருக்கும் வித்தியாசம் இல்லையா? //
ஜனாதிபதியாகவே இருந்தாலும் வெரும் காலுடன் வந்து தரையில் அமர்ந்து ஆசி வாங்கும் அளவுக்கு செல்வாக்கு உண்டு எனும்போது, ஜெயேந்திரருக்கு அரசியல்வாதிகளின் பாதுகாப்பு இருப்பதால் எங்கும் ஓடி ஒழிய வேண்டிய அவசியமில்லை. வாதம் பண்ண வேண்டும் என்பதற்காக பூசி மெழுகாதீர்கள்.
80 கோடி இந்துக்களில் சங்கர ராமனும் அடங்குவார்தானே? ஏன் காஞ்சிபுரம் இடைத் தேர்தலில் ஜெயேந்திரரை சிறைக்கு அனுப்பிய ஜெயலலிதாவுக்கு ஓட்டுப் போட்டவர்கள் நீங்கள் சொல்லும் 80 கோடி இந்துக்களில் உண்டா இல்லையா? அனுராதா ரமணனும் அவரின் பக்ததயாக இருந்த இந்துதானே? சங்கராச்சாரியாராக இருந்தால் சட்டத்திற்கு அப்பாற்பட்டவர் என்று கருத மநுநீதியில் வேண்டுமானால் விலக்கு இருக்கலாம் நண்பரே. சங்கராச்சாரியாருக்காக கொதிக்கும் ரத்தம் சங்கர ராமனுக்காக கொதிக்க மறுப்பது ஏன்?
குற்றம் சுமத்தப்பட்டவர்தான் ஆனால் நிரூபிக்கப்படவில்லை என்கிறீர்கள். சட்டப்படி போராடி தன்னை நிரபராதி என நிரூபிக்க வழங்கப்படும் வாய்ப்பு மற்ற வழக்குகளில் குற்றம் சுமத்தப் பட்டவர்களுக்கும் வழங்கப்பட வேண்டும் என்பதே என் வாதம்.