ஜனாதிபதி அப்துல் கலாம் அவர்களின் “2020 ஆம் ஆண்டில் வல்லரசு இந்தியா” கனவு கூடிய விரைவில் நனவாகும் சாத்தியக் கூறுகள் தென்படத் துவங்கியுள்ளன. பாதுகாப்பு ரீதியில் வல்லரசாகும் முன் பொருளாதார ரீதியில் தற்போதைய வல்லரசுகளை இன்னும் பத்தாண்டுகளில் பின்னுக்குத் தள்ளிவிடும் என்ற செய்தி 58 ஆவது குடியரசு தினத்தைக் கொண்டாடும் இந்தியர்களின் காதில் தேன் வார்க்கும் என்றால் மிகையில்லை!
இந்திய பொருளாதாரத்தின் வளர்ச்சி வீதம் 6 சதவீதத்தில் இருந்து 8 சதவீதமாக உயர்ந்து உள்ளது. 11-வது 5 ஆண்டு திட்டத்தில் 10 சதவீதமாக உயர்த்த திட்டமிடப்பட்டு உள்ளது.
இந்திய பொருளாதாரத்தின் மீது வெளிநாடுகள் அபரீதமான நம்பிக்கை கொண்டுள்ளன. இந்தியாவில் தற்போது பணவீக்கம் 4.4 சதவீதமாகவும், பட்ஜெட் பற்றாக்குறை 3.8 சதவீதமாகவும் குறைந்துள்ளது.
வெளிநாட்டு சேமிப்பு 161.9 பில்லியனாகவும், வர்த்தகம் 240 பில்லியனாகவும், அன்னிய முதலீடு 19.7 பில்லியனாகவும் உயர்ந்துள்ளது. இதே வளர்ச்சி வீதத்தில் சென்றால் 2050ல் இந்தியா 2-வது வளர்ச்சி பெற்ற நாடாக விளங்கும்.
பாபர் மசூதி இடிப்பு,மும்பை குண்டு வெடிப்புகள், குஜராத் இனச்சுத்திகரிப்பு போன்ற பிரச்சினைகள் எழுந்திருக்காவிட்டால் அனேகமாக பொருளாதார ரீதியிலும் பாதுகாப்பு ரீதியிலும் ‘அடுத்த பத்தாண்டுகள் கழித்து’ என்ற தாமதம் தற்போதே சாத்தியப்பட்டிருக்கும்! இந்தக் கனவை தள்ளி வைத்தவர்களை நாட்டின் அரசியலிலிருந்து நிரந்தரமாகத் தள்ளிவைக்க, குடியுரசு தின நன்னாளில் உறுதி ஏற்போம்!
இந்தியர் என்பதில் பெருமிதம் கொள்வோம்.