Featured Posts

தீவிர ஜனநாயகவாதிகள்

உங்கள் கைகளில் ஏதேனும் செய்திப் பத்திரிக்கை இருக்கின்றதா? சற்று அதன் பக்கங்களைப் புரட்டிப் பாருங்கள் அல்லது சர்வதேச ஊடகங்கள் உள்ளனவா?. ஏதாவது ஒரு பக்கத்திலாவது, சேனலிலாவது ஜனநாயகம், தீவிரவாதம்,இஸ்லாம் என்ற சொல்லாட்சிகளையும் குறித்ததொரு தகவல் அல்லது விவாதம் அல்லது செய்தி இல்லாமல் இருக்காது.

இந்த வார்த்தைகளைக் கேட்டுக் கேட்டு இப்பொழுது அந்த வார்த்தைகளைக் கேட்டால் எந்த அதிர்ச்சியும் வருவதில்லை. காலப் போக்கில் அவை நமது வாழ்வில் ஒரு அங்கம் என்ற அளவில் நம்மை அது பக்குவப்படுத்தி விட்டது, அல்லது மரத்து விட்டது என்று தான் அர்த்தம்.

சரி..! இந்த மூன்று அம்சங்கள் குறித்தும் விளக்கம் எதுவும் இருக்கின்றதா? ஆம்..! இஸ்லாம் என்ற சொல்லுக்கு கட்டுப்படுதல், அமைதி என்ற பல அர்த்தங்கள் உண்டு. பின் எப்படி அதனுடன் மேலும் இரண்டு வார்த்தைகளை இணைக்க முடிகின்றது. இணைத்துப் பேச முடிகின்றது? ஏன் அந்த வார்த்தைகளுக்கு புது அர்த்தம் எதுவும் கண்டு பிடித்தாகி விட்டதா? அல்லது இஸ்லாம் என்ற பதத்திற்கும் அந்தக் கொள்கையைப் பின்பற்றுகின்றவர்களுக்கும் முரண்பாடுகள் மிகைத்து விட்டதா? எது சரி..?

இதெல்லாம் எங்களுக்கு எதற்கு என்று சோம்பல் முறிக்கின்றீர்களா? முடியாது..! சமூகப் பொறுப்பு என்ற ஒன்று அனைவருக்கும் உண்டு. ஏனெனில் ஜனநாயகம், தீவிரவாதம் என்ற சொல்லாட்சிக்குப் பின்னால் தான் ஹிரோஷிமாவில், நாகசாகியில் அணுகுண்டுகள் போடப்பட்டன.

தீவிரவாதம், ஜனநாயகம் என்ற சொல்லாட்சியைப் பயன்படுத்தித்தான் ஈராக்கின் மக்கள் அபூகிரைப் சித்ரவதைக் கூடத்தில் அலங்கோலப்படுத்தப்பட்டனர். தீவிரவாதம், ஜனநாயகம் என்ற சொல்லாட்சியைப் பயன்படுத்தித் தான் குவாண்டனாமோவில் சித்ரவதைக் கூண்டுகளுக்கு உள்ளே மிருகங்களை விடவும் கேவலமாக மனிதன் நடத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றான். இஸ்லாமிய தீவிரவாதம் என்ற பெயரில் தான் குஜராத்தில் இந்து பயங்கர அரங்கேற்றப்பட்டது.

தீவிரவாதம்..! என்றால் என்ன? இதுவரை எந்த அரசாவது அது பற்றிய விளக்கத்தைக் கொடுத்துள்ளதா? சரி..! குஜராத்.., சபர்மதி எக்ஸ்பிரஸ்.., சரி இதற்கு மேல் விளக்கத் தேவையில்லை, கிட்டத்தட்ட 2000 முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டார்கள். அந்த படுகொலைக்குக் காரணமாகச் சொல்லப்பட்ட ‘சபர்மதி எக்ஸ்பிரஸை பெட்ரோல் ஊற்றி முஸ்லிம்கள் கொளுத்தினார்கள்” என்பதை இன்றைய விசாரணைக் கமிஷன்கள் மறுக்கின்றது.

ஆனால், அந்த ஜனநாயக மோடி அரசு முன்னின்று நடத்திய அந்த இனப்படுகொலைக்குப் பின்னர், மேலும் முஸ்லிம்கள் கைது செய்யப்பட்டார்கள், இன்னும் தடா, பொடா என்ற கொடுஞ் சட்டத்தின் கீழ் இன்றும் கொட்டடிகளில் கிடக்கின்றார்கள். சரி..!

அவர்கள் தீவிரவாதிகள்., அவர்கள் செய்த தவறு தான் என்ன? தங்களது இளவல்களை, பெண்களை, குழந்தைகளை, தாய்மார்களை, தந்தைமார்களை, உற்றார் உறவினர்கள் என்று சங்க பரிவாரக் கும்பல்களின் கொலை பாதகச் செயலுக்கு இரையாக்கினார்கள். அதனால் அவர்கள் மீது தீவிரவாதப் பட்டம். முஸ்லிம்..! தீவிரவாதிகள்.

சரி..! சற்று வெளியில் வருவோம்..! ஈராக்..! அவர்களும் தீவிரவாதிகள்.., எப்படி..? அங்கே ஒரு ஆட்சியாளர், அவர் தான் சதாம் உசேன்.., அமெரிக்காவின் சொல்லுக்கு ஆட மறுத்தார். எண்ணெய் வளங்களை அமெரிக்காவுக்குத் தாரை வார்ப்பதற்குப் பதிலாக தன்னை வளப்படுத்திக் கொள்ளப் பார்த்தார், இன்னும் அரபுக்களின் வளங்களை அரபுக்கள் தான் அனுபவிக்க வேண்டும் என்றார்.

இஸ்ரேல் என்ன வளைகுடாப் பகுதிக்கு என்ன தாதாவா? என்றார். பிடித்த

17 comments

  1. அழகப்பன்

    //எப்பொழுது எந்தக் கொள்கை அரியணை ஏறினாலும் அதன் அடக்குமுறைக்கு முதல் எதிர்ப்பு முஸ்லிம்களிடத்திலிருந்து தான் வரும்.//

    மிகச்சரியான வார்த்தைகள். தலித்துகளாக இருந்த இந்துக்கள் மற்றவர்களின் அடக்குமுறைகளிலிருந்து காப்பாற்றிக் கொள்ள சிறந்த வழி இஸ்லாமே.

  2. தமிழ்மணம் வாசகர்களுக்கு பயனுள்ள கட்டுரை.

    நன்றி!

  3. அப்துல் குத்தூஸ்

    உலக முஸ்லிம்களின் நிலையை மிகச் சரியாக படம்பிடித்துக் காட்டப்பட்டுள்ளது.

  4. நல்லடியார்

    வாங்க அப்துல் குத்தூஸ், ரொம்ப நாளாச்சு உங்களப் பார்த்து !

  5. மக்கள்

    அடக்குமுறையையும் கொடுமைகளையும் எதிர்ப்பவர்கள் பல்வேறு தரப்பிலும் உள்ளனர்.

    அடிமை இந்தியாவின் விடுதலை வீரர்கள் ஆங்கிலேய ஆட்சியாளர்களுக்கு தேசத்துரோகிகளே.

    தற்போதைய இந்தியாவில் நக்ஸலைட்டுகளும் ‘திருத்த முடியாத கொடுமையை அழித்தொழித்தல்’ என்ற சித்தாந்தத்தின்படி செயல்படுபவர்களே.

    பாதிக்கப்பட்ட முஸ்லிம்களின் பதிலடியை தீவிதவாதம் என விமர்சிக்கும் எவரேனும்..அவர்களின் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட ‘அரசு பயங்கரவாதத்தை’ விமர்சித்ததுண்டா?

    கோவை குண்டு வெடிப்பை கண்டித்த எவரும் அதற்க்கு முன்னோடியாய் நடந்த ‘முஸ்லிம் வேட்டையை’ கண்டித்தார்களா?

    பாதிக்கப்பட்டவர்கள் அடியை வாங்கிக் கொண்டு அடித்தவனிடமே முறையிட வேண்டுமா? தன்னைத்தான் காக்க தடியெடுத்தது தவறா?

    இன்னைய சினிமாக்களிலும் கூட சட்டத்தை கையிலெடுத்துக்கொள்ளும் நாயகர்களின் படங்கள் வெற்றியடைவது ஏன்?( இந்தியன்,ரமணா,அந்நியன்,இன்னும் பல). அவன் வரையில் அது நியாயம் என்பதால்தானே?

  6. [dehafk; vd;gNj Nfypf;$j;jhfp tpl;lJ. ,e;j Nghyp [dehafj;Jf;Fj;jhd; kPbahf;fs; cl;gl midtUk; ntQ;rhkuk; tPRfpwhu;fs;. mJjhd; Ntbf;if> tpguPjk;

  7. //ஜனநாயகம் என்ற பெயரில் போலி நாடகம் ஆடுகின்றன. அவர்களது வாயில் ஜனநாயகம் என்று வந்தால், அவர்களது சுய லாபம் எங்கோ பாதிக்கப்பட்டிருக்கின்றது என்று அர்த்தம். அவர்களது வாயில் தீவிரவாதம் என்று வந்தால் எங்கோ அவர்களது சுய லாபம் ஆட்டம் காண்கின்றது என்று அர்த்தம்.//

    சரியாகச் சொன்னீர்கள் நல்லடியார்.
    இது விசயமாக நம்மதியேட்டரில் ஜல்லி அடிக்காமல் விரைவில் புதிய படம் வெளியிடலாம் என்று நினைக்கின்றேன்.

    ஓடுகின்ற தண்ணீரோடு ஓடாமல் எதிர் நீச்சல் போடுவதில் தான் எனக்கும் விருப்பம்.
    நம்ம தியேட்டருக்கு அடிக்கடி வந்து போங்க.

  8. Dear Adiyar
    You explained that what is going on now. In this world no body can give correct meaning of Terriroism. Nethaji-our freedom fighter in India.From our Indian, we called him Freedom Fighter. But in front of British at that time was Terrorist. Same like happened to Osama bin Laden in Afghan,he fought against Russian. Now he is Terrorist List.
    Please keep it up Mr.Adiyaar.

    I appreciate your wordings and it is very good to know everybodies.

    Asalamone
    Bahrain

  9. Dear Adiyar
    You explained that what is going on now. In this world no body can give correct meaning of Terriroism. Nethaji-our freedom fighter in India.From our Indian, we called him Freedom Fighter. But in front of British at that time was Terrorist. Same like happened to Osama bin Laden in Afghan,he fought against Russian. Now he is Terrorist List.
    Please keep it up Mr.Adiyaar.

    I appreciate your wordings and it is very good to know everybodies.

    Asalamone
    Bahrain

  10. நல்லடியார்

    //நல்லடியார் காஷ்மீர் பயங்கரவாத ஆதரவு கட்டுரை ஒன்றை தமது வலைப்பதிவில் பிரசுரித்துள்ளார். காஷ்மீரில் ஹிந்துக்கள் விரட்டியடிக்கப்பட்டது கூட ‘அல்லாவின் அடிமைகளின்’ கடமை போலும் – அரவிந்தன் நீலகண்டன்//

    காஷ்மீர் இந்துக்கள் பாதிக்கப்பட்டால் இஸ்லாமிய பயங்கரவாதம்.குஜராத் முஸ்லிம்கள் பாதிக்கப்பட்டதற்கு என்ன பயங்கரவாதம்?

    காஷ்மீரிலிருந்து விரட்டப்பட்டது ‘அல்லாஹ்வின் அடிமைகளின்’ கடமை போலும் என்றால் குஜராத்திலிருந்து விரட்டப்பட்டது “?????? அடிமைகளின் கடமை என்றும் விளக்குவாரா?

  11. அப்துல் குத்தூஸ்

    நல்லடியாரே, வேலை பளுவின் காரணமாக வேடிக்கை பார்க்க முடிந்ததே தவிர விவாதத்தில் கலந்துக் கொள்ள முடியவில்லை. இதுதான் தாமதத்திற்கு காரணம்.

  12. அரவிந்தன் நீலகண்டன்

    இன்றைய தேதியில் எத்தனை குஜராத் முஸ்லீம்கள் ஐயா அகதிகளாக இருக்கிறார்கள். அதேசமயம் எத்தனை பத்தாண்டுகளாக காஷ்மிரி ஹிந்துக்கள் அகதிகளாக இருக்கிறார்கள்?
    பங்களாதேஷ் ஹிந்துக்கள்? சங்மா பௌத்த வனவாசிகள்? நல்லடியாரே, நமது குடியரசுத்தலைவர் அப்துல் கலாமை குறித்து குறிப்பிட்டிருந்தீரே, அவர் ‘ராமேஸ்வர கோவிலும் மசூதியிலும் கூறப்படும் பிரார்த்தனைகள் சென்றடையும் இடம் ஒன்றுதான்’ என்கிறாரே இதனை ஏற்கும் அளவாவது உமது இறையியலுக்கு விலாசமடைந்தால் நல்லது. அல்லது பரிணாம அறிவியலின் ஒளியினைப் பொறுக்காமல் ஒழியும் புழுவாக நெளியும் உம்முடைய இறையியல், டார்வினின் அறிவியலின் தரிசனங்களை உள்வாங்கி வளர பார்க்கலாம். அதையெல்லாம் விட்டுவிட்டு சானியா மிர்சாவினை பர்தாவுக்குள் அடைக்கப் பார்க்காதீர். Wish i have a sister like Sania!

  13. நல்லடியார்

    //இன்றைய தேதியில் எத்தனை குஜராத் முஸ்லீம்கள் ஐயா அகதிகளாக இருக்கிறார்கள். //

    நீலகண்டன்,

    உங்கள் வாதப்படி அவர்களில் யாருமே அகதியாக இல்லையென்று வைத்துக் கொண்டாலும், அவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளும், அநியாயங்களும் சரி என்றாகி விடுமா?

    //அதேசமயம் எத்தனை பத்தாண்டுகளாக காஷ்மிரி ஹிந்துக்கள் அகதிகளாக இருக்கிறார்கள்? //

    சில வருடங்கள்வரை உங்கள் அரசுதானே சார் மத்தியில் இருந்தது. அந்த அகதிகளுக்கு மறுவாழ்வு கொடுக்க அவர்களுக்கு ஏன் நேரமில்லை?

    //சானியா மிர்சாவினை பர்தாவுக்குள் அடைக்கப் பார்க்காதீர். Wish i have a sister like Sania! //

    அந்த சகோதரத்துவத்தை கருவைக் கிழித்து கொல்லப்பட்ட குஜராத் சகோதரிக்கும் காட்டியிருக்கலாமே அரவிந்தன்.

  14. அரவிந்தன் நீலகண்டன்

    அன்புள்ள நல்லடியார்,
    அது என்ன ஐயா “உங்கள் வாதப்படியே அவர்களில் யாரும் அகதிகளாக இல்லையென வைத்துக்கொண்டாலும்…” அவர்களில் அந்த வருடமே 90சதவிகிதத்திற்கும் மேலானோர் தங்கள் வீடுகள் திரும்பியதை மனித உரிமை கமிஷனே கூறுகிறதே. ஆனால் காஷ்மிர் பண்டிட்கள் ஆகட்டும் பங்களா தேஷ் தலித்கள் ஆகட்டும் சக்மா வனவாசிகளாகட்டும் அவர்கள் இன்றைக்கும் அகதிகளாக தெருவில் நிற்கவைத்திருப்பது என்ன? ஜிகாதி மதவெறிதானே ஐயா? அதில் என்ன “உங்கள் வாதப்படியே” வாழ்கிறது? யார் ஆட்சி புரிந்தார்கள் என்பதல்ல கேள்வி. இன்றைக்கும் அவர்கள் திரும்ப இயலாமல் இருப்பதற்கு காரணம் ஜிகாதி வெறியர்கள்தாம். குஜராத்தில் நடந்தது கலவரமேயன்றி இன ஒழிப்பல்ல. 750க்கு இஸ்லாமியர்களுக்கு 250 ஹிந்துக்கள் என்கிற ரீதியில் நடந்த கலவரம். ஐயா குஜராத்தை சார்ந்த அதே முஸ்லீம்கள் போலிஸ் தங்களை காப்பாற்றியதைக் குறித்தும் வாக்குமூலம் கொடுத்துள்ளார்களே பார்த்தீர்களா ஆனால் காஷ்மீரில் கதை என்ன? தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்தபடியே பரூக் அப்துல்லா ‘பண்டிட்கள் திரும்ப வந்தால் அவர்கள் விட்டுச்சென்ற சொத்துக்களை கேட்க கூடாது’ என்றார். பாஜக எடுத்த முயற்சிகளுக்கு முட்டுக்கட்டை போட்டார். பின்னால் வந்த முஃப்தி முகமது சையது வெளியில் ஒரு வார்த்தையும் உள்ளே வஞ்சனையுமாக செயல்பட்டார். உலகில் இல்லாத அதிசயமாக காஷ்மிர் பெண்கள் வெளியே திருமணம் செய்தால் சொத்துரிமை இழப்பார்கள் என்றார். ஆனால் பங்களாதேஷில் நடப்பதென்ன ஐயா? உமது இஸ்லாமிய ஆட்சியின் நிதர்சன நீதியல்லவா? ஈராக்குக்காக அமெரிக்காவை திட்டி சந்தடி சாக்கில் காஷ்மீரையும் நுழைத்து மதவெறி வன்முறையை நியாயப்படுத்தும் நீர் அதற்கு பதில் சொல்லாமல் அப்போது நீ என்ன செய்தாய் என்கிறீரே…சவுதி அரசு ஆப்கானிஸ்தானுக்கும் ஈராக்குக்கும் என்ன ஐயா செய்தது? அமெரிக்க இராணுவ காண்டிராக்டுகளில் சவுதி அரசு குடும்பத்திற்கு கிடைத்த/கிடைக்கும் இலாபம் எத்தனை பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஐயா? அதையெல்லாம் பேசிவிட்டல்லவா நீர் ஜனநாயகம்-அமெரிக்காவின் தான்-தோற்றித்தனம் குறித்து பேசவேண்டும்?
    60000க்கும் மேற்பட்ட குடும்பங்கள் சொந்த மண்ணிலிருந்து விரட்டப்பட்டு சொந்த நாட்டிலே அகதிகளாக நிற்க “சில குடுமிகள்” விரட்டப்பட்டால் அதை பெரிது படுத்துவதாக பேச முடிகிற மனப்பாங்குடையவர்களுக்கு எவ்வித நியாய உணர்வும் இல்லாதிருப்பது அதிசயமல்ல. ஆனால் ஐயா நல்லடியாரே உம்மையும் உமது மெமிடிக் க்ளோன்களையும் பார்க்கையில் எனக்கு உண்மையிலேயே டார்வினின் பரிணாம அறிவியலில் ஐயம் வருகிறதையா! பரிணாமத்தில் இப்படியும் உயிரினங்கள் உருவாக முடியுமா என்று! நீரெல்லாம் இயற்கை தேர்வால் உருவானவரல்ல உம்மைப் போன்ற மனிதத்தன்மை சிறிதுமற்ற ஒரு பிரகிருதியை படைக்க அதே அளவு மனிதத்தன்மையற்ற …ஏதோ சொல்வீர்களே…ஏக இறைவனா அவனால்தான் முடியும். அப்புறம் இந்த கருவைக் கொன்ற சமாச்சாரம் குறித்து நானும் கேள்விப்படுகிறேன். அவ்வாறு நிகழ்ந்திருந்தால் அதனை செய்த மனிதத்தன்மையற்ற மிருகங்கள் தண்டனை பெற வேண்டுமென்பதில் இரண்டு வித கருத்துக்கு இடமேயில்லை. ஆனால் இது ஒரு urban legendக்கு அப்பால் போகவில்லை. ஏற்கனவே ஜாப்ரியின் இல்லாத மகள்களை பாலியல் பலாத்காரம் செய்ததாக கதை கட்டிவிட்ட அருந்தததி ராய், வால் அறுந்த நரியாகி மன்னிப்பு கேட்டதும் ஞாபகம் வருகிறது. அடுத்து என்ன நடக்கும் என்றும் என்னால் ஊகிக்க முடியும். உமது பிநாமியான ‘ஆரோக்கியம் உள்ளவன்’ இத்யாதிகளை விட்டு ஆபாசமாக திட்டமுடியும். முகமது காலம் தொட்டு நடக்கிற ஜிகாத் இதுதானே ..நடத்துங்கள்.
    அல்லாவை கற்பனையெனவும்,
    வகாபி இஸ்லாமை தவறெனவும்,
    ஏக
    தேவ வழிபாட்டை இறையியல் பாசிசமெனவும் கருதும்
    -கர்வம் கொண்ட காஃபீர் அரவிந்தன் நீலகண்டன்

  15. நல்லடியார்

    காஷ்மீர் பண்டிட்கள் மறுவாழ்வு பெறுவதற்கு இந்திய முஸ்லிம்கள் எந்தவகையில் தடையாக இருக்கிறார்கள்? இவர்களை அகதியாக்கியது மத்திய-மாநில அரசுகளின் அரசியல்தானே தவிர முஸ்லிம்களல்ல.

    அரவிந்தன் 50 வருடங்களாக காஷ்மீரில் நடக்கும் அட்டூழியங்களுக்கு எந்தவகையில் குஜராத் முஸ்லிம்கள் காரணம் என்று விளக்குவீர்களா? பரிவார ரவுடிகளிடமிருந்து பாதுகாப்பு கொடுத்த மனிதாபிமான குஜராத்திகளே இல்லையென்று சொல்லவில்லை. கலவரத்திற்கு சில வருடங்களுக்கு முன்பு ஏற்பட்ட பூகம்ப பாதிப்பில் சக் இந்துவுக்கு இரத்தக் கொடுத்த முஸ்லிம்களின் ரத்தத்தைத்தானே உங்கள் பரிவாரங்கள் அதே குஜராத்தில் குடித்தார்கள்.

    காஷ்மீர் கலவரத்தில் பாதிக்கப்பட்ட பண்டிட்டுகள் குடும்பம் ஒவ்வொன்றுக்கும் மாதம் 3,000 ரூபாய் உதவித் தொகையும், இலவசமாக ரேஷன் பொருட்களும் வழங்கப்படுகின்றன. டில்லியில் 4,100 காஷ்மீர் பண்டிட்டுகள் தங்கியுள்ளனர். இவர்களுக்கு குடும்பம் ஒன்றுக்கு மாதந்தோரும் 3,200 ரூபாய் உதவித் தொகை வழங்கப்படுகிறது. முகாம்களில் இருக்கும் குடும்பமாக இருந்தால் மாதம் 2,400 ரூபாய் மற்றும் ரேஷன் பொருட்கள் இலவசமாக தரப்படுகின்றன.

    இந்தச் சலுகைகளை ஜம்முவில் வசிக்கும் பண்டிட்டுகள் 34,088 பேரும், டில்லியில் உள்ள பண்டிட்டுகள் 19,338 பேரும், பிற மாநிலங்களில் உள்ள 2,050 பண்டிட்டுகளும் அனுபவித்து வருகின்றனர். இதற்காக மத்திய அரசு 2004-2005 ஆம் ஆண்டில் 32 கோடி ரூபாயும், 2005-06ல் 30 -கோடி ரூபாயையும் ஒதுக்கியுள்ளது. இந்த தகவலை மக்களவையில் மத்திய உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல் தெரிவித்துள்ளார்.

    இந்தத் தகவலைத் தொடர்ந்து பேசிய பாஜக வின் மூத்த தலைவர் மல்ஹோத்ரா, “”காஷ்மீர் பண்டிட்டுகளுக்கு தரப்படும் உதவித் தொகை மிக மிக குறைவானது. இந்தத் தொகையை 5,000 ரூபாயாக அதிகரிக்க வேண்டும்” என்று கேட்டுக் கொண்டார். – நன்றி அவுட்லுக் AUG 29-2005

    அகதிகளாக வெளியேறிய பண்டிட்களுக்கு ஆதரவாக எங்களால் குரல் கொடுக்க முடியும். ஆனால் கடந்த ஐம்பது வருடங்களாக கொல்லப் பட்ட காஷ்மீர முஸ்லிம்களுக்கும் அப்பாவிளுக்கும் என்றைக்காவது நீங்கள் குரல் கொடுத்திருக்கிறீர்களா?

    குஜராத் கலவரத்தில் வீடிழந்தவருக்கு கொடுக்கப்படதொகை எவ்வளவு தெரியுமா? அதிகமில்லை ஜெண்டில்மேன் வெரும் 100 ரூபாய். http://www.onlinevolunteers.org/gujarat/relief/

    மற்றபடி வரிக்குவரி உங்களுடன் வாதிட விரும்பவில்லை. நீங்கள்தான் கர்வம் கொண்டவராச்சே!

  16. அரவிந்தன் நீலகண்டன்

    ஐயா நல்லடியாரே,

    ஒரு உதாரணம். பீபீ பானோ கலவரங்களில் தமது கணவரை இழந்தவர். இவருக்கு அகதி முகாம்களில் நெருக்கமான தன்வீர் அகமது அவரை எரித்து கொல்ல முயன்றிருக்கிறான். தமது கணவரையும் குழந்தைகளையும் இழந்த பீபீ பானோவிற்கு கிடைத்த நிவாரண நிதி எத்தனை தெரியுமா? மூன்றரை இலட்ச ரூபாய். (பார்க்க: பிடிஐ செய்தி : டிசம்பர் 9 2004) அடுத்ததாக காஷ்மீர் பண்டிட்களின் எண்ணிக்கை குறித்து நல்லடியார் கூறியிருப்பதும் கூட மிகக்குறைக்கப்பட்ட எண்ணிக்கைதான். ரீடிப் இணைய தளம் ஜூலை 13 1999 இல் கொடுத்துள்ள புள்ளிவிவரங்களின் படி: ஜம்முவில் அகதி முகாம்களில் வாழ்வோர் 216820, புது டெல்லியில் 143565. இதர மாநிலங்களுக்கு புலம் பெயர்ந்தோர் குறித்து சரியான எண்ணிக்கை தெரியவில்லை என்கிறது. முதல் ஜிகாதி வெறியாட்டத்தின் போது 55000 காஷ்மீரி பண்டிட் குடும்பங்கள் விரட்டப்பட்டன. யூனியன் உட்துறை அமைச்சக தகவலின் படி 250000 பண்டிட்கள் இன்று ஜம்முவிலும் 100000 பேர் டெல்லியிலும் உள்ளனர்.
    இன்றைய தினத்தில் பாரதம் முழுவதுமாக அகதிகளாக வாழும் காஷ்மீரி பண்டிட் குடும்பங்களின் எண்ணிக்கை 56380. ஒரு குடும்பத்துக்கு சராசரியாக ஐந்துபேர் என்றால் கூட எண்ணிக்கையை நீங்களே கணக்கு போட்டுக்கொள்ளலாம். அதுவும் பத்து வருடங்களுக்கு மேலாக. இந்நிலையில் நல்லடியார் ஏதோ மத்திய-மாநில அரசுகளிடையே நடந்த அரசியலின் விளைவு இது என்கிறார். எப்படிபட்ட நயவஞ்சக நேர்மையற்ற பேச்சு இது? காஷ்மீரி பண்டிட்கள் அடித்து விரட்டப்பட்டதன் காரணம் ஜிகாதி வெறி. அதற்கு இத்தனை பூசி மெழுகல். இதில் கூட நல்லடியார் கூறியுள்ள பொய்யினை பாருங்கள். அவர் கூறுகிறார்//இந்தச் சலுகைகளை ஜம்முவில் வசிக்கும் பண்டிட்டுகள் 34,088 பேரும், டில்லியில் உள்ள பண்டிட்டுகள் 19,338 பேரும், பிற மாநிலங்களில் உள்ள 2,050 பண்டிட்டுகளும் அனுபவித்து வருகின்றனர். இதற்காக மத்திய அரசு 2004-2005 ஆம் ஆண்டில் 32 கோடி ரூபாயும், 2005-06ல் 30 -கோடி ரூபாயையும் ஒதுக்கியுள்ளது. இந்த தகவலை மக்களவையில் மத்திய உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல் தெரிவித்துள்ளார்.//
    இதோ பிடிஐ செய்தியை அப்படியே தருகிறேன். “There are 55,476 registered Kashmiri migrant families, 34,088 in Jammu, 19,338 in Delhi and 2,050 in other states, Patil informed the House.” (பிடிஐ: ஆகஸ்ட் 29 2005) குடும்பங்களை தனிமனிதர்களாக்கிவிட்ட நல்லடியாரின் நேர்மையை என்னவென்பது. வார்த்தையை பாருங்கள்: “பண்டிட்கள் அனுபவித்து வருகிறார்களாம்” தங்கள் நிலபுலன்களை ஏறத்தாழ நிரந்தரமாக இழந்து இத்தனை ஆண்டுகளுக்கு பின்னரும் குடும்பத்திற்கு 2400-3500 ரூபாயை வாங்கும் பண்டிட்களுடன்,
    கலவரங்களில் அழிக்கப்பட்ட தம் சொத்துக்களின் மதிப்பிற்கு குறைவாக கிடைத்த பணத்தை பத்தாயிரம் என்கிற
    போதிலும் கூட வாங்காத குஜராத் கலவரங்களால் பாதிக்கப்பட்ட இஸ்லாமியர்களுடன் ஒப்பிட்டு பார்க்கலாம் உதாரணமாக PUCL அறிக்கை கூறுகிறது: “Many reported suffering losses of several hundreds of thousands of rupees and being offered cheques of 10,000 rupees which they had refused on principle. Other women had accepted this as they were too desperate to refuse.” காஷ்மீரில் பல இலட்ச மதிப்புடைய தங்கள் சொத்துக்களை
    அதைவிட முக்கியமாக தமது முன்னோர் நிலத்தை விட்டு இன்று அகதிகளாக பத்தாண்டுகளுக்கும் மேலாக வாழும் காஷ்மீரி அகதிகளுக்கு கிடைக்கும் மாதம் ரூபாய் 2400-3500 ஐ மேல்கூறிய நிலையுடன் ஒப்பிட்டு பாரும் நல்லடியாரே. கலவரங்களில் பாதிக்கப்பட்டவர்கள் இஸ்லாமியரானாலும் ஹிந்துவானாலும் அவர்களுக்கு நீதி கிடைக்கவேண்டும் என்பதில் மறு பேச்சு கிடையாது. ஆனால் காஷ்மீரில் பயங்கரவாதத்தால் வீடிழந்து இன்றும் தெருவில் வாழ்பவர்கள் 3500 ரூபாயை ‘அனுபவித்து’ வருவதாக கூறும் உம் கோணல் பார்வையை என்ன சொல்வது. உமது நிலையில் நின்று பேசினால் வேண்டுமானால் “குஜராத் இஸ்லாமிய சகோதரர்களிடம் ‘தங்கள் சொத்து நாசத்திற்கு பதிலாக 1000
    0 ரூபாய் வாங்கி ‘அனுபவித்து’ போங்களேன் என்று அறிவுரை வழங்கலாமே நல்லடியார்” என்று கூறலாம்…ஆனால் அதிர்ஷ்டவசமாக நான் உம்மை போல ஈமான் கொண்ட முஸ்லீம் அல்ல காஃபீர்.எனவே அவ்வாறு கூறமாட்டேன். கலவரங்களால் பாதிக்கப்பட்ட குஜராத் சகோதரர்களுக்கு கட்டாயமாக நீதி கிடைக்கவேண்டும். பீடித்துண்டால் ரயில் பெட்டி எரிந்ததாக கூறும் ஆசாமிகளால் அது கிடைக்கப்போவதில்லை. அவ்வாறே காஷ்மீரில் இனத்துடைப்பு செய்யப்பட்டுள்ள பண்டிட்களுக்கும் பங்களாதேஷில் அனைத்து வித வன்கொடுமைகளுக்கும் ஆளாகும் ஹிந்து தலித் சமுதாயத்தினருக்கும், சக்மா பௌத்த வனவாசி சமுதாயத்தினருக்கும், ஜமாத்தியாக்களுக்கும், ரியாங்குகளுக்கும் நீதி கிட்டியாக வேண்டும். குஜராத் கலவரங்களை ‘இனப்படுகொலையாக்கிய’ ஊடக வெளிச்சம் குஜராத்தை விட பன்மடங்கு அதிக வன்முறையும் மனிதகுலத்திற்கெதிரான குற்றங்களும் நிகழ்ந்த இடங்களில் இருண்டு போவதில் இருக்கும் வக்கிரத்தையும் கண்டிக்கிறேன்.
    காஃபீர் நீலகண்டன்

  17. I DON’T THINK ARGUING WITH A MAN WHO IS COMPARING GUJARAT GENOSIDES WITH THAT OF KASHMIRI TERRORISM IS USEFUL.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *