2001 வருடம் முதல் செப்டம்பர் மாதம் என்றாலே ‘தீவிரவாதம்’ பற்றியும் , உலகில் தீவிரவாதம் எங்கு நடந்தாலும் அதனோடு இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் தொடர்பு படுத்தி பேசுவதில் சிலருக்கு கொள்ளைப் பிரியம்.
ஒரு மாற்றத்திற்கு செப்டம்பர்-5 அன்று அணுசரிக்கப்படும் ஆசிரியர் தினம் பற்றியும், கல்விக்கும் ஆசிரியர்களுக்கும் அளிக்க வேண்டிய மரியாதையை இஸ்லாம் எப்படி வலியுறுத்துகிறது என்றும் பார்ப்போம். வளர்ந்து ஆளாகியதும், உயிருக்கு உயிராய் உச்சி மோர்ந்து வளர்த்த பெற்றோர்களையே நினைக்க நம்மில் பலருக்கு நேரமில்லாத போழ்து, கல்வி கற்றுக் கொடுத்த ஆசிரியரை நினைக்க எங்கு நேரமிருக்கப் போகிறது?
”உங்களில் இறைநம்பிக்கையாளர்களுக்கும், கல்வி கொடுக்கப்பட்டவர்களுக்கும் பல படித்தரங்களை அல்லாஹ் உயர்த்துகிறான். அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை நன்கு அறிபவன்.” (திருக்குர்ஆன் 58:11)
‘நிச்சயமாக அல்லாஹ்வின் அடியார்களில் அவனை அஞ்சுபவர்கள்தாம் அறிஞர்கள்” (திருக்குர்ஆன் 35:28)
மேலும் அல்லாஹ் கூறினான் ‘அதனை அறிஞர்களைத் தவிர (வேறெவரும்) புரிந்து கொள்ள மாட்டார்கள்.” (திருக்குர்ஆன் 29:43)
மேலும் அல்லாஹ் கூறினான்: ‘நாங்கள் (செவி தாழ்த்திக்) கேட்டிருந்தாலோ, அவற்றைப் புரிந்து கொண்டிருந்தாலோ (இன்று) நரக வாசிகளாய் நாங்கள் இருந்திருக்க மாட்டோம் என்று (நிராகரிப்பாளர்கள் மறுமையில்) கூறுவார்கள்.” (திருக்குர்ஆன் 67:10)
மேலும் கூறுகிறான்: ”அறிந்தவர்களும் அறியாதவர்களும் சமமாவார்களா?’ (திருக்குர்ஆன் 39:09) “
மனிதனுக்கு நன்றி செலுத்தாதவன், இறைவனுக்கு நன்றி செலுத்தியவனாக மாட்டான்” என்ற நபிமொழியை நம்மில் எத்தனை பேர் பின்பற்றுகிறோம்?
கல்விக்கும் இஸ்லாத்திற்கும் இருக்கும் நெருங்கிய பிணைப்பை நம்மில் எத்தனை பேர் அறிவோம்? “சீனம் சென்றேனும் ஞானம் கல்” என்ற இஸ்லாமிய பழமொழி எத்தனை பேருக்குத் தெரியும்?
இருண்ட ஐரோப்பிய நூற்றாண்டுகளில் கல்வி ஒளியை ஏற்றிய இஸ்லாமியர்களை எத்தனை பேர் அறிவோம்?
இஸ்லாமிய சாம்ராஜ்யம் அரசோட்சிய நாட்களில் இஸ்லாமிய நாடுகளின் தலைநகரங்களில் பொது நூலகங்கள் இருந்து வந்துள்ளன. ஸ்பெயினின் கார்டோபா மற்றும் ஈராக்கின் பாக்தாத் ஆகிய நகரங்களில் இருந்த பொதுநூலகங்களில் 4 லட்சத்திற்கும் அதிகமான நூல்கள் இருந்து வந்துள்ளன.
உலகின் மிகப்பெரும் கல்வி நூலகங்களை நிறுவியவர்கள் இஸ்லாமியர்கள் என்றும் இஸ்லாமியருக்கு எதிராக நடத்தப்பட்ட சிலுவை யுத்தங்களில் இஸ்லாமிய நூலகங்களைக் கைப்பற்றி அதிலுள்ள அரிய நூல்களை எரித்து சாம்பலாக்கி அராபிய நதிகளின் நிறம் கருப்பாக ஓடிய உண்மையாவது நமக்குத் தெரியுமா?
அரிஸ்டாட்டில், பிளாட்டோ, பைதோகோரியன், கிரேக்க வானியல் போன்ற மொழிபெயர்ப்பு பணிகளின் மூலமாக, அரபி மொழியானது அன்றைய நாட்களில் முக்கியமான அறிவியல் மொழியாகப் பயன்பட்டுள்ளது நோக்கத்தக்கது. மேற்கூறியவர்களின் கருத்துக்களை ஆய்வு செய்து அதனை இமாம் கஸ்ஸாலி தனது தஹாபுத்துல் ஃபலாசிஃபா என்ற நூலின் மூலமாகவும், இமாம் இப்னு தைமிய்யா அவர்கள் தனது கிதாபுல் இப்தல் என்ற நூலின் மூலமாகவும் மறுப்புரை வழங்கியுள்ளார்கள்.
உலக மதங்களில் கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கும் மதங்களில் தலையாயது இஸ்லாம். கல்வி கற்பதை ஆணுக்கும் பெண்ணுக்கும் அடிப்படை உரிமையாக்கி வைத்திருக்கின்றது இஸ்லாம். ஆனால் இதை உணராத இந்திய முஸ்லிம் ச
மூகம் மற்ற சமூகங்களை விடப் கல்வியில் மிகவும் பின் தங்கி இருக்கின்றது.
இஸ்லாம் பெண்களுக்கு பூரண கல்வி கற்கும் உரிமை வழங்கி இருக்கின்றது. ஆனால் மற்ற சமுதாயங்கள் தங்களது நிலையை மாற்றிக் கொண்டு, வயது வந்த பெண்களை கல்வி கற்க அனுப்புகின்றது. ஆனால் நம்முடைய சமுதாயம் வயதுக்கு வந்தவுடனேயே பெண்களின் கற்கும் உரிமையைப் பறித்து விடுகின்றது.
‘ஒருவருக்கு அல்லாஹ் வழங்கிய செல்வத்தை அவர் நல்ல வழியில் செலவு செய்தல்; இன்னொருவருக்கு அல்லாஹ் அறிவு ஞானத்தை வழங்கி, அதற்கேற்ப அவர் தீர்ப்பு வழங்குபவராகவும் கற்றுக் கொடுப்பவராகவும் இருப்பது ஆகிய இரண்டு விஷயங்களைத் தவிர வேறு எதிலும் பேராசை கொள்ளக் கூடாது’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்” என அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத்(ரலி) அறிவித்தார். – புகாரி
இன்றைக்கு முஸ்லிம்கள் உலகின் மற்றைய பாகங்களை விட அதிகமான அளவில் படிப்பறிவற்றவர்களை அதிகமாகக் கொண்டிருக்கின்றது. படிப்பறிவற்ற தன்மை நிலவக் கூடாது என்பதற்காக இறைத்தூதர் (ஸல்) அவர்களே நேரடியாக நடவடிக்கை எடுத்த சம்பங்கள் இங்கு நோக்கத்தக்கது.
பத்ர் யுத்தக் கைதிகள் தங்களை விடுவித்துக் கொள்வதற்கு செலுத்த வேண்டிய பணத்திற்குப் பகரமாக, முஸ்லிம்களின் குழந்தைகளில் பத்துக் குழந்தைகளுக்கு கல்வி அறிவை ஊட்டி, அதன் மூலம் ஒரு கைதி தனது விடுதலையைப் பெற்றுக் கொள்ளட்டும் என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
கல்வி கற்க வேண்டியதன் அவசியம், அதன் முக்கியத்துவத்தைப் பற்றி இறைத்தூதர் (ஸல்) அவர்களின் நபிமொழிகள் பல நமக்கு விளக்குகின்றன.
உங்களில் சிறந்தவர் யாரெனில், கல்வியைக் கற்பவரும், அதனைப் பிறருக்குக் கற்றுக் கொடுப்பவருமே என்றார்கள். இன்னும் திர்மிதியில் அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றதொரு நபிமொழியில், ‘யாரொருவர் கல்வியைக் கற்றுக் கொள்ளச் செல்கின்றாரோ, அத்தகையவர் திரும்பும் வரை அவர் அல்லாஹ்வின் பாதையில் (போரடக் கூடிய போராளியாக) இருக்கின்றார். ”அபூஹூரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.
நபி (ஸல்) அவர்கள் பின்வருமாறு நவின்றுள்ளார்கள். (ஒரு மனிதன் மரணித்து விட்டால் அவனுடைய அனைத்துச் செயல்களும் துண்டிக்கப்பட்டு விடுகின்றன. ஆனால் மூன்று விஷயங்கள் மட்டுமே எஞ்சியிருக்கும்””.
- நிலையான தான தர்மம் (ஸதகத்துல் ஜாரியா)
- பயனளிக்கக் கூடிய அறிவு
- தனக்காகப் பிரார்த்திக்கக் கூடிய சிறந்த பிள்ளை- ஆதாரம் : முஸ்லிம்.
இந்த ஹதீஸ் முஸ்லிம் (3:1631), அபூதாவூத் (3:2880), ஸுனன் அத்திர்மிதி (3:1376), ஸுனன் அந்நஸாயீ (6:3549), முஸ்னத் அஹ்மத் (2:316) ஆகிய நூல்களிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது
கற்றலின் அவசியத்தைச் சொல்லும் ஒரு இஸ்லாமியச் சம்பவம்:
கி.பி.1048 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம்.கஜ்னா நகரில் அல் பிரூனி மரணப் படுக்கையில் இருந்தார். அப்போது அபுல் ஹஸன் என்னும் மார்க்க அறிஞர் அவரைக் காணச் சென்றார். இருவரும் நெடுநாளைய நண்பர்கள். அல் பிரூனியால் சரியாகப் பேசக் கூட முடியவில்லை! மூச்சுத் திணறிக் கொண்டிருந்தது. தம் நண்பரை அருகில் அழைத்து, தட்டுத் தடுமாறி கேள்வி ஒன்றைக் கேட்டு முடித்தார்.
”அபுல் ஹஸன், இறந்தவரின் சொத்திலிருந்து அவரின் தாயைப் பெற்ற பாட்டிக்குக் கிடைக்க வேண்டிய பங்கு என்னவென்று முன்பு சொன்னீர்? அதை மறுபடியும் சொல்லும்!” என்ற
‘சர்வபள்ளி’ இராதாகிருஷ்ணன் அவர்கள் இந்தியாவின் இரண்டாவது குடியரசுத் தலைவர். செப்டம்பர்-5, 1888 ஆம் ஆண்டு திருத்தனியில் (சென்னையிலிருந்து 40 கி.மீ) பிறந்தார்கள்.
1952 முதல் 1962 வரை இந்தியாவின் துணை ஜனாதிபதியாகவும், 1962 இல் ஜனாதிபதியாகவும் பதவி வகித்தார்கள். இடையில் டெல்லிப் பல்கலைக்கழகத்தின் வேந்தராகவும் மிகச்சிறந்த கல்வியாளராகவும் பணியாற்றியுள்ளார்கள்.
‘சர்வபள்ளி’ என்ற பெயர் எப்படி இணைந்தது என்று யாரேனும் அறிந்தவர்கள் (May be Dondu or Dharumi?) தெரியப்படுத்தவும்.
உங்கள் ஆசிரியர்களுக்கு வாழ்த்துக்களைச் சொல்ல இங்கு அழுத்தவும்
நல்லடியார்,
சர்வபள்ளி என்பது அவர் பிறந்த ஊர் என்று நினைக்கிறேன்.
வாங்க காண்டிவிடி! ரொம்ப நாளா ஆளையே காணோமேன்னு நினைத்தேன்.
//சர்வபள்ளி என்பது அவர் பிறந்த ஊர் என்று நினைக்கிறேன்.//
திருத்தனிக்காரர்கள் யாரவது இருந்தால் சொல்லுங்கப்பா!
:-)
ஆசிரியர் என்ற பெயரில் அயோக்கியத்தனம் பன்னும் முல்லமாரிகளுக்கும் இந்த நேரத்தில் எச்சரிக்கை (அ) கடும் சட்டம் போட்டால் நல்லது.
இருண்டகாலம் என சரித்திரப் பேராசிரியர்களால் வர்ணிக்கப்படும் middle ages போது இஸ்லாமியர்கள் அறிவில் சிறந்து விளங்கினர். ஐரோப்பியர்கள் அக்காலத்தில் அறிவில் பின்தங்கியிருந்தனர் என்றே சொல்ல வேண்டும். நிற்க.
நம்ம நியூகாலேஜில் படித்த நல்லடியார் கேட்டதற்காகக் கூக்ளேயில் தேடியதில் சர்வப்பள்ளி என்பது ஒரு ஊரரின் பெயர் எனத் தெரிந்து கொண்டேன். ஊரின் விவரம் கிடைக்கவில்லை. surnames எவ்வாறு கொடுக்கப்படுகின்றன என்பது பற்றி எழுதப்பட்டுள்ளது. கீழே பார்க்க: http://ikashmir.org/Sociology/B.html
“Name of Locality
Name of the locality from which a person’s ancestors had come is also used as a surname. To add the name of locality to one’s name for a better identification is a common practice in South India. Thus the name ‘Shiyali Ramamrita Ranganathan’ is a combination of his Christian name (Ranganathan), his father’s name (Ramamrita) and the name of his ancestoral village (Shiyali). Other names derived from places are Bhatnagar, Malviya and Sarvepalli.”
அன்புடன்,
டோண்டு ராகவன்
middle ages சமயத்தில் இசுலாமியரின் அறிவியல் முன்னேற்றம் சரித்திரத்தில் ஒரு முக்கியப் பங்கு வகிக்கிறது. அறிவை அவர்கள் விடாப்பிடியாகத் தூக்கி வைத்ததால்தான் ஐரோப்பாவில் மறுமலர்ச்சி (renaissance) சாத்தியமாயிற்று.
நல்லடியார் குறிப்பிட்டது போல தற்கால் இந்தியாவில் இசுலாமியர் கல்வியில் பின்தங்கியதற்கு முக்கியக் காரணம் அவர்களுக்கு சரியான வழிகாட்டாமை இல்லாமல் போனதே ஆகும்.
மாறாக “பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் இந்தியா இருந்த பொழுது, வெள்ளையனே வெளியேறு இயக்கத்துக்கு ஆதரவாக ஆங்கிலக் கல்வியைக் கற்க மாட்டோம் என்று கூறி பள்ளி, கல்லூரிகளை விட்டும் வெளியேறிய முஸ்லிம்கள் இன்று வரை, கல்விக் கூடங்களுக்கு வெளியில் தான் நின்று கொண்டிருக்கின்றார்கள். ஏன்? ஆங்கிலக் கல்வியைக் கற்பது ஹராமானது என்று கூட மார்க்க அறிஞர்கள் தீர்ப்பு வழங்கினார்கள்.” என்று நல்லடியார் எழுதியது சிந்திக்கத்தக்கது. இசுலாமிய சகோதரர்கள் படிப்பில் முன்னேற வாழ்த்துக்கள்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
ஆசிரியர் தினத்தில் கல்விக்கு இஸ்லாம் கொடுக்கும் முக்கியத்துவத்தை பதிந்துள்ளீர்கள். சிறந்த பதிவு.
இஸ்லாம் ஆண், பெண் இருவருக்கும் கல்வியைக் கற்பதில் பூரண உரிமையை மட்டும் கொடுக்கவில்லை. மாறாக கல்வி கற்பது இருபாலர் மீதும் கட்டாயக் கடமை என்றே கூறுகிறது.
اطلب العلم فريضة على كل مسلم ومسلمة
”கல்வியை தேடிச் சென்று கற்பது முஸ்லிமான ஆண், பெண் இருவர் மீதும் கட்டாயக் கடமை” என்ற நபிமொழியின் மூலம் இதனை நாம் அறியலாம்.
உண்மையான கல்வி என்பது பகுத்தறிவினைப் பயன்படுத்த உதவும்.எல்லாக்காலத்திற்கும் விதிகள் ஒரு நூலில் கூறப்பட்டுள்ளன என்பதையோ காட்டுமிராண்டித்தனத்தையோ ஆதரிக்க அது உதவாது. ஐரோப்பாவில் புத்தொளிக்காலம் ஏற்பட்ட போது மதம் கேள்விக்குள்ளாக்கப்பட்டது. ஒரு விதத்தில் அறிவு வளர்ச்சி என்பது இறுகிப்போன மதச் சிந்தனைகளுக்கு எதிரான புரட்சியையும் உள்ளடக்கியதே ஆகும்.
இன்று இஸ்லாமிய சமூகம் கல்வியில் ஏன் பின் தங்கியுள்ளது. ஏன் எழுத்தறிவு பெற்ற இஸ்லாமியப்பெண்களின் எண்ணிக்கை ஒப்பீட்டளவில் குறைவாக உள்ளது.
பழம் பெருமை பேசுவதில் பயனில்லை
ரவி ஸ்ரீனிவாஸ்,
//ஒரு விதத்தில் அறிவு வளர்ச்சி என்பது இறுகிப்போன மதச் சிந்தனைகளுக்கு எதிரான புரட்சியையும் உள்ளடக்கியதே ஆகும்.//
வரலாற்றை ஆராய்ந்தால் மூடநம்பிக்கைகளுக்கும் எதிராகப் புரட்சி முழக்கமிட்ட முதல் கொள்கை இஸ்லாமிய தத்துவமே என்பதை நடுநிலையாளர்களும் ஒப்புக் கொண்டுள்ளார்கள். அத்தகையக் கொள்கையை ஆராதிப்பதில் என்ன தவறு?
பழங்கொள்கை கதைக்கு உதவாது என்பது அதனைப் பிரயோகிக்கும் முறையிலேயே உள்ளது.ஐம்பது வருடங்களுக்கு முன் புரட்சிக் கருத்துக்களைச் சொன்ன தந்தை பெரியாரின் கருத்துக்களை பழசு என்று உங்களால் ஒதுக்க முடியாது.இஸ்லாம் ஒரு அறிவியல் மார்க்கமோ அல்லது இனி வரும் ஆராய்சிக்கெல்லாம் இஸ்லாமே மூலகாரணம் என்றோ சொல்லவில்லை. இன்றைய ஊடகங்களில் முஸ்லிம்கள் எவ்வாறு இருட்டடிக்கப் பட்டுள்ளர்கள் என்று சொல்வதே இப்பதிவின் நோக்கம்.
//ஐரோப்பாவில் புத்தொளிக்காலம் ஏற்பட்ட போது மதம் கேள்விக்குள்ளாக்கப்பட்டது//
அத்தகைய மதங்கள் எத்தகைய நம்பிக்கைகளை போதித்தன இஸ்லாம் அதனிலிருந்து எவ்வாறு வேறுபட்டது என்று நோக்கினால் ஐரோப்பிய மதங்கள் கேள்விக்குறியதாக்கப் பட்டதில் வியப்பில்லை.
//இன்று இஸ்லாமிய சமூகம் கல்வியில் ஏன் பின் தங்கியுள்ளது. ஏன் எழுத்தறிவு பெற்ற இஸ்லாமியப்பெண்களின் எண்ணிக்கை ஒப்பீட்டளவில் குறைவாக உள்ளது.//
உலகக் கல்வியென்றும் மார்க்கக் கல்வியென்றும் முஸ்லிம்கள் பிரித்துப் பார்த்தால்தான் இத்தகைய பின்னடைவு என்பது என் தனிப்பட்ட கருத்து.
நல்லடியார்,
சர்வபள்ளி என்பது டாக்டர் இராதாகிருஷ்ணன் அவர்களின் சொந்த ஊர் என்றே நினைக்கிறேன்.
அவர் 103 ஆராய்ச்சி கட்டுரைகள் சமர்ப்பித்தவர் என்பதை அறிவீரா?
நம் பிரதமர் டாக்டர்.மன்மோஹன் அவர்களும் 17 டாக்டர் பட்டங்கள் பெற்றவராம்.
நிற்க,
இன்றைய அறிவியலுக்கு அடிப்படையாகத் திகழ்கிறவற்றுக்கு வித்திட்டவர்கள் முஸ்லிம்களே என்பது யாராலும் மறுக்க இயலாத உண்மையே. ஆனால் காழ்ப்புணர்வும் கசப்புணர்வும் காரணமாக வரலாறுகள் வெகு வேகமாக திரிக்கப்படுகின்றன என்பதற்கு இணையம் கூட இன்றைக்கு உதாரணமாகி விட்டது.
இந்திய சுதந்திரத்துக்கு வித்திட்ட வேலூர் புரட்சிகளுக்கும், மருத நாயகங்களுக்கும் வெறுமே இரண்டு வரிகள் பாட புத்தகங்களில் மட்டும். ஆனால் மங்கள்பாண்டேக்கள் ‘ஹீரோ’ வாகிவிடுகிறார்கள்.
‘வீர’த்தை பெயரளவில் ஒரு ‘அடை’மொழியாக மட்டுமே வைத்துக்கொண்டவர்கள் நாடாளுமன்றத்தின் விதானங்களில் ‘படமாக’ போற்றப்படுகிறார்கள். ‘பாடம்’ படிக்காத உங்கள் சமூகமோ ‘ஆங்கிலம் ஆகாது, மைக் ஆகாது என்று தன்னைத்தானே பின்னுக்குத்தள்ளிக்கொண்டிருக்கிறது.
என்ன ஆங்கிலம் படிக்கணுமா? அறிவியலா?
அறிவுக்கடலே திருக்குர்ரானில் இருக்கும்போது அறிவியல் எதுக்கு? அரபியும் ஆட்டுக்கறியும் போதும் என்பது என் தாழ்மையான கருத்து.
இக்கருத்தை எழுதுபவர் உண்மையான முசுலிம் கிடையாது. இவர் மீது பாத்வா விதிக்கிறேன்.
/அறிவுக்கடலே திருக்குர்ரானில் இருக்கும்போது அறிவியல் எதுக்கு? அரபியும் ஆட்டுக்கறியும் போதும் என்பது என் தாழ்மையான கருத்து./
நன்றி அ மலசிங்,
இணையத்தில் யார் பதிவிலும் சொந்த பெயரில் அல்லது புணைப்பெயரில் பின்னூட்டமிடலாம்.உங்கள் சொந்த பெயரிலேயே என் பதிவில் ‘மல’மிட்டதற்காக உங்களை பாராட்டியே ஆக வேண்டும்.
பிறரையும் அவர் சார்ந்த நம்பிக்கைகளையும் சீண்டித்தான் நீங்கள் கவனிக்கப் பட வேண்டும் என்பது உங்கள் நம்பிக்கையாக இருக்கும்போது நான் என்ன செய்ய முடியும்?
பாவம் நீங்கள், உங்கள் மதத்தில் சொல்வதற்கு நல்ல கருத்துக்களே இல்லை போலும்.
இன்னாபா அ மல சிங்கு,
இசுலாத்துக்கு எதிரா கொரலு குடுத்த ஆசாமிகள் தனியா பொலம்புறாங்களேன்னு அவங்க விட்டத தொடருறியாக்கும்.. பரவாயில்ல மாமே..
புரியுது..
‘நான் வளர்கிறேனே மம்மி’..
உன் பதிவை யாரும் கண்டுகில்லைன்னா இசுலாத்த இப்டித்தான் தூத்தி எழுதணும்.. சரிதான்
ஆனா இதுவரைக்கும் உருப்படியா ஒரு பதிவு போட்டிருக்கியாப்பா நீ?
//* Amala Singh said…
என்ன ஆங்கிலம் படிக்கணுமா? அறிவியலா?
அறிவுக்கடலே திருக்குர்ரானில் இருக்கும்போது அறிவியல் எதுக்கு? அரபியும் ஆட்டுக்கறியும் போதும் என்பது என் தாழ்மையான கருத்து. *//
இந்திய நாட்டுக்காக கல்வியையே தியாகம் செய்த சமுதாயம் இஸ்லாமிய சமுதாயமாக இருப்பதால்தான் இந்த அமலசிங் போன்றோர்கள் எல்லாம் மேற்கண்டவாறு இஸ்லாமியர்களைத் தூற்றுகின்றனர். ஏனென்றால் அவர்கள்தான் ஆங்கிலேயர்களுக்கு காவடி தூக்கியவர்கள் ஆச்சே. அவங்க அப்பன், பாட்டன் செய்ததெல்லாம் இப்ப தன் பங்குக்கு அந்த ஆங்கிலேய நாட்டிற்கேச் சென்று அவனுகளுக்கு சரைச்சிக்கிட்டு இருக்கிறார் போல. அந்த விசுவாசத்தைத் தான் இங்க காட்டுராரு.
இஸ்லாம் என்பது கண்டவர்கள் எல்லாம் அவர்களின் எண்ணத்திற்கேற்ப துற்றப்படுவதற்காக உருவாக்கப்பட்ட மார்க்கமல்ல.. எந்தவொரு மத்த்தையும் தூற்றவோ , பழிக்கவோ எங்களது இஸ்லாத்தில் அனுமதி கிடையாது.. உன்னதமான மார்க்கம் எம் இஸ்லாம்.. அதை சுவைத்தவருக்கு மட்டுமே அதன் பலனை உணர முடியும்.. உங்களுக்கு உங்களது மார்க்கம் எனக்கு என்னுடைய மார்க்கம்… என்றும் ஒற்றுமையுடன் செயற்படுவோம்….