அமானுடக் கேள்விகளும் அரைகுறை ஞானிகளும் தொடரின் முதல் பகுதி பற்றியும் பின்னூட்டங்கள் பற்றியும் சில கருத்துக்களை குறிப்பிட விரும்புகிறேன்.
முதல் பகுதி தமிழோவியத்தில் வெளியானதும், தனி மனித விமர்சனத்தை தவிர்க்க வேண்டுகோள் வைத்த திரு.நேசகுமார் படிப்படியாக தன் நிதானம் இழந்து நாகூர் ரூமியின் மேலுள்ள வெருப்பை இஸ்லாத்தின் மீதான வெருப்பாக பின்னூட்டங்கள் மூலமும் தனிப்பதிவாகவும் கொட்டினார்.
தானும் ஆரோக்கியமும் இஸ்லாத்தின்பால் கொண்டுள்ள துவேசத்தை பாகிஸ்தானில் இந்துக்கள் கொடுமைப்படுத்தப் பட்டதுடனும், குஜராத்தில் நடந்த இன சுத்திகரிப்பை காஷ்மீரிலிருந்து பண்டிட்கள் வெளியேற்றப்பட்டதோடும் ஒப்பிட்டு நியாயப் படுத்தினார்.
அவர் எதிர்ப்பது தீவிரவாதம்தான் என்றால் எல்லாவகை தீவிரவாதங்களையும் எதிர்க்கவேண்டும் அல்லது இதர தீவிரவாதங்களை நியாயப் படுத்தக் கூடாது என்ற வேண்டுகோளைக் கூட ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவம் தனக்கு இல்லை என்று தெளிவுபடச் சொல்லிவிட்டார்.
நானோ அல்லது நாகூர் ரூமியோ, திரு.நேசகுமாருக்கு எதிரியாக இருக்கலாம் அல்லது எனது கொள்கையுடன் அவருக்கு ஒப்புதல் இல்லாமல் கூட இருக்கலாம். இதை தனிப்பட்ட நபர்களுக்குள் இருக்கும் சொந்த பகை அல்லது பரஸ்பர காழ்புணர்ச்சி என்று ஒதுக்கித் தள்ளிவிடலாம். இதற்காக நான் சார்ந்த நம்பிக்கையை அவதூறாக விமரிசித்துதான் தன் ஒருபக்க காழ்புணர்வை வெளிப்படுத்த வேண்டும் என்ற மனநிலையை என்னவென்று சொல்வது?
இதுவரை எனது நம்பிக்கையின் மீதான அவதூறுகளுக்கும் இஸ்லாத்தின் மீதான குற்றச்சாட்டுகளுக்கும் பதிலளித்து வரும் என் போன்றோரை, இந்து மதத்தையும் இந்துக் கடவுளரையும் கேவலமாக எழுதி வருவதாகவும் அவரும் ஆரோக்கியமும் மென்மையாக இஸ்லாத்தின் மீதான விமர்சனங்கள் செய்து வருவதாக திரு.நேசகுமாரால் மட்டும்தான் சொல்ல முடியும்.
இஸ்லாத்தை விமர்சிப்பதை யாரும் எதிர்க்கவில்லை. அறிமுகப்படுத்திய காலத்திலிருந்து இன்றும் இனியும் இஸ்லாம் விமரிசிக்கப்படும். குர்ஆன், ஆதாரப்பூர்வமான ஹதீஸ் இவற்றில் சொல்லப் பட்டவைதான் இஸ்லாம். அவற்றை வைத்து விமரிசிக்கவோ தனது சந்தேகத்தை தெளிவு படுத்திக் கொள்ளவோ முஸ்லிம்கள் மட்டுமல்ல யாரும் தேவையான மொழி பெயர்ப்புகள் மூலம் விளங்கிக் கொள்ளலாம்.
எந்த கருத்தையும் விமர்சிப்பது எளிது. இதில் கற்பனையும் அவதூறும் கலந்து விமரிசித்தால் இன்னும் எளிது. இது பதில் கொடுப்பவரை சோர்வடையச்செய்து தனது கருத்தைத் திணிக்க கையாளப்படும் யுக்தி. திரு. நேசகுமார் மற்றும் அவரின் சகாக்களுக்கு இஸ்லாத்தை விமர்சிப்பது மட்டும் குறிக்கோளாக இருக்கும் போது நியாயமான விமர்சன நாகரிகத்தை எதிர்ப்பார்ப்பதில் அர்த்தமில்லை.
ஒரு ஆப்பிளை இன்னொரு ஆப்பிளோடுதான் ஒப்பிட்டால்தான் நியாயமுண்டு என்று சொன்னதற்குக் கூட, விற்கக் கூடிய ஆப்பிள் சரியானதா என்று ஆராய்ந்து பார்த்தும் வாங்கலாம் என்று ஒருவர் வியாக்கியானம் சொன்னார். வாங்குபவர் விமர்சிக்கலாம் அல்லது ஆராயலாம், இன்னொரு பழத்தை விற்பவர் இதைச் செய்யலாமா?
என்னிடம் உள்ளதைபோல் குறையுள்ள பழம்தான் விற்கப்படுகிறது என்று சொல்லி விட்டு எதை விற்க இந்த அணுகுமுறை? பழம் சரியில்லை என்பவர் மாற்றுப் பழத்தைக் கொடுத்தால்தானே அவரின் கரிசனம் உண்மையாகும். உன்னிடம் இருக்கும் பழம் அழுகியது என்று அதை சுவைத்துச் சாப்பிட்டுக் கொண்டிருப்பவரிடம் சொல்வது என்ன வகை நாகரிகம்?
அமானுடக் க
ேள்விகளும் அரைகுறை ஞானிகளும் தொடரின் இரண்டாம் பகுதியை தமிழ்மணம் வாசகர்களின் பார்வைக்கு வைக்கிறேன்.
அன்புடன்,
நல்லடியார்
********************
யார் இந்த கொயின்ராட் எல்ஸ்ட் (Dr.Koenraad Elst)?
கொயின்ராட் எல்ஸ்ட் ஒரு உளவியல் நிபுணரோ அல்லது மருத்துவரோ அல்லர். இந்தியாவுக்கு வந்த ஒரு சாதாரண பல்கலைக் கழக மாணவர். இவர் சீன ஆய்வுக்கல்வி, இந்தோ-ஈரானிய ஆய்வுக்கல்வி போன்றவற்றைக் கற்று, இந்து மீட்சி குறித்த பொருளில் ஆய்வு செய்து லவனில் உள்ள கத்தோலிக்கப் பல்கலைக்கழகத்தில் டாக்டர் பட்டம் பெற்றவர். முதலில் பாபர் மசூதி பிரச்னையை மையமாக வைத்தே காஷ்மீர் ஹெரால்டில் எழுதி இந்துத்துவா அபிமானிகளின் ஆதரவைப் பெற்றார்.
சீன வரலாறு, ஆரிய ஜாதியக் கொடுமைகள் மற்றும் படையெடுப்பு குறித்த ஆய்வுகள் செய்து இந்திய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியவர். கிறிஸ்தவம், இஸ்லாம் பற்றிய எதிர்மறைக் கண்ணோட்டம் கொண்ட எல்ஸ்ட் இந்தியாவில் இந்து மீட்சி இயக்கங்களின் கவனத்தை ஈர்த்தார். இஸ்லாத்தை இதுவரை ஆரியக் கண்ணோட்டத்தில் விமர்சித்து வந்த இந்த இந்து மீட்சியாளர்களிடம்- டாக்டர். கொயின்ராட் எல்ஸ்ட், பிரான்ஸ்வா கோஷியே (Francois Gautier), மைக்கேல் டேனினோ (Michel Danino) போன்ற மேற்கத்திய சிந்தனையாளர்ககளின் படைப்புகள் மிகுந்த வரவேற்பைப் பெற்றன.
சல்மான் ருஷ்டியின் விரச எழுத்துக்களால் எழுந்த உலகளாவிய எதிர்ப்பு இவர்களுக்கு இருக்காதற்குக் காரணம், ருஷ்டி, முகம்மது நபியின் அந்தரங்க வாழ்க்கையைப் பற்றி விரசமாக எழுதி நடுநிலையாளர்களின் எதிர்ப்பைச் சம்பாதித்தன் மூலம் அவரின் எழுத்துக்கள் எடுபடாமல் போயின. இதனை கருத்தில் கொண்டு மேற்சொன்ன இறக்குமதி செய்யப்பட்ட மேற்கத்திய எழுத்தாளர்கள் இஸ்லாம், கிறிஸ்தவம் மட்டுமின்றி ஒப்புக்கு இந்துத்துவா, ஆரிய படையெடுப்பையும் விமரிசித்து கட்டுரைகள் எழுதி ஒரு நடுநிலை முகமூடியுடன் எழுதும் கூலி எழுத்தாளர்கள்.
டாக்டர் எல்ஸ்டை தாங்கிப் பிடிப்பவர்களின் பின்னணியைக் ஆராய்ந்தால் மறைந்திருக்கும் அவர்களின் இஸ்லாமிய குரோதம் பல்லிளிக்கிறது. (இணைய தளங்களில் டாக்டர். எல்ஸ்டின் படைப்புகளைத் தேடினால் இந்துத்துவா இணையதளங்களும் குழுமங்களும் முந்திக் கொண்டு வருவதிலிருந்தும் இவர்களின் பின்னனி தெளிவாகிறது)
இஸ்லாம் அறிமுகமாகிய காலம் முதல் கடந்த 1400 வருடங்களாகச் சுமத்தப்பட்ட அதே குற்றச்சாட்டை கொஞ்சம் “மேற்கத்திய மனோதத்துவ கண்ணோட்டம்” என்ற புதிய கோப்பையில் கொடுக்க முனைந்துள்ளனர். இதிலும் அவர்களின் அறியாமையும், இஸ்லாத்தைப் பற்றிய அதீத அச்சமும் (phobia) வெட்ட வெளிச்சமாகியுள்ளது.
முதலில் “மனோத்துவம்” என்பதே நிகழ்கால ஆராய்ச்சி. ஒருவனின் வெளிப்புற செயல்பாடுகளையும் ஆழ்மன எண்ணங்களையும் வைத்து அவரின் செயல்பாடுகளை கணிப்பது. 1400 வருடங்களுக்கு முந்தைய மனிதரின் வரலாற்றையும் சாதனைகளையும் வைத்து “மனோதத்துவ ஆய்வு” என்பது ஒரு அனுமானமாகவே இருக்க முடியும் என்பது தெளிவு.
இதுவரை உலக வரலாற்றை மாற்றி அமைத்தவர்களின் முஹம்மது நபி முன்னிலையில் இருப்பதற்கு காரணம் அவரின் பிறப்பு முதல் இறப்பு வரையிலான நிகழ்வுகள் வரலாற்றில் தெள்ளத் தெளிவாகப் பதியப் பட்டுள்ளன. இதற்கா
கவே கிட்டத் தட்ட ஐந்து லட்சம் தனி நபர்களின் வாழ்க்கை நிகழ்வுகள் அலசப் பட்டு, நம்பகத்தன்மை புடம் போடப் பட்டுள்ளது.
இதனாலேயே டாக்டர். எல்ஸ்ட் போன்றவர்கள் எடுத்து வைக்கும் மனோதத்துவ காராணங்கள் எளிதில் நிராகரிக்கப்படும். காரணம் முஹம்மது நபியின் பிறப்பு முதல் இறப்பு வரையான நிகழ்வுகளை ஆராய்ந்தால், எழுதப் படிக்கத் தெரிந்திராத ஒருவரின் கொள்கை எந்த அளவு எதிரிகளையும் ஈர்த்து அவர்களாலே தீவிரமாக எதிர்க்கப்பட்ட அக்கொள்கைகளை பல பிரதேசங்களுக்கும் எடுத்துச் செல்லப்பட்டது என்பதைக் கவனித்தால், டாக்டர் எல்ஸ்டின் அனுமானங்களும் உளவியல் காரணங்களும் கேலிக்குரியவையாகின்றன.
முஹம்மது நபியின் பலதார மணத்தைக் காரணம் சொல்லி கற்பை விமரிசித்தவர்களுக்கு, அத்தகைய திருமணங்களின் காலகட்டம், தேவை, சமூகப் பழக்கவழக்கம் ஆகியவற்றையும், மனைவியரின் நற்சான்றுகளாலும், அத்தகைய குற்றச்சாட்டுகள் எடுபடாமல் போயிற்று.
ஒருவனின் கற்பை குறை சொல்லுவதற்கும் அந்தரங்கத்தை விமரிசிப்பதற்கும் அவரின் மனைவியே தகுதியானவள். ஆனால் திருமணம் செய்த அனைத்து மனைவியரும் முஹம்மது நபியை நேசிக்கக் கூடியவர்களாகவே இருந்துள்ளனர். எந்த அளவுக்கென்றால் தன்னுடன் அதிக நாள் தங்கமாட்டார்களா என்று ஏங்கும் அளவுக்கு அவர்களின் இல்லறம் இருந்துள்ளது.
அன்றைய போர்களைக் காரணம் சொல்லி, ஆதிக்க வெறியர் என்ற குற்றச்சாட்டு, போர்களுக்கான நியாயமான காரணங்களாலும், அத்தகைய போர்களால் ஏற்பட்ட சமூக மாற்றங்களாலும் எடுபடாமல் போயின. அக்கால போர்கள் முஹம்மது நபியின் மீது திணிக்கப்பட்டவையாகவே இருந்ததால், இக்காரணமும் எடுபடாமல் போயிற்று.
குர்ஆன் அது அருளப்பட்ட காலத்தில் வேண்டுமானால் சரியாக இருந்திருக்கலாம், விஞ்ஞானமும் மக்களின் மன நிலையிலும் பெருத்த மாற்றம் ஏற்பட்டுள்ள தற்காலத்திற்கு எப்படிப் பொருந்தும் என்பவர்களால் அதற்கு மாற்றமான சிறந்த கொள்கையை வைக்க முடியாததால், இந்த காரணமும் எடுபடாமல் போயிற்று.
விந்தையிலும் விந்தை என்னவென்றால், புதுமையை விரும்பும் இவர்கள், நியாயமாக இதர பழமைவாத மதங்களுக்குப்பின் தோன்றிய இஸ்லாத்தின் உன்னத கோட்பாடுகளை விமர்சிப்பது காழ்ப்புணர்வேயன்றி வேறென்ன?
சரி, இஸ்லாம் ஓர் இனிமையான அமைதியான மார்க்கம் என்றால் ஏன் இஸ்லாத்தின் பெயரால் குண்டு வெடிப்புகளும் தீவிரவாதமும்? எந்த இஸ்லாமிய நாட்டில் மக்கள் அமைதியாக இருக்கிறார்கள்? என்ற கேள்விகள் எழலாம். உலகில் அன்றாடம் நடக்கும் அநியாயங்களில் 90% இஸ்லாம் அல்லாதவர்களால் நடத்தப் படும் போது, அவர்களின் மதமோ கொள்கையோ முன்னிலைப்படுத்தி விமரிசிக்கப்படுவதில்லை.
இங்கொன்றும் அங்கொன்றும் நடக்கும் அடக்குமுறைக்கு எதிராக பாதிக்கப்பட்டவர்களால் நடத்தப்படும் பயங்கரவாதங்களுக்கு, அந்த அடக்குமுறையாளர்களும், அவர்களின் கொள்கைகளும்தான் காரணமேயன்றி இஸ்லாம் எவ்விதத்திலும் காரணமல்ல. அவ்வாறு தீவிரவாதிகளாக்கப்பட்டவர்கள் துரதிஷ்டவசமாக முஸ்லிமாக இருப்பதுதான், இஸ்லாம் விமரிசிக்கப்பட காரணமேயன்றி வேறில்லை.
நேபாளத்தில் நடக்கும் நக்சலைட்டுகளின் தாக்குதலுக்கும், இலங்கையில் நடக்கும் இனப்போராட்டங்களுக்கும் எப்படி அவர்கள் சார்ந்த மதம் காரணமல்லவோ அதுபோலதான் முஸ்லிம்களால் நடத்தபடும் தீவிரவாதத்திற்கு இஸ்லாம் காரணமல்ல.
எங்கெல்லாம் தீவிரவாதமும் பயங்கரவாதமும் நடைபெறுகிறதோ அவற்றையெல்லாம் தங்களுக்கு சாதகமாக்கி முஸ்லிம்களின் மேல் வெறுப்பும் துவேசமும்
/எங்கெல்லாம் அரசியல், பொருளாதார, ஜாதிய சிந்தனைகளுக்கு இஸ்லாம் தடையாக இருக்கிறதோ அங்கெல்லாம் தீவிரவாதம் இருப்பதாக இதன் பயனாளர்கள் பிரச்சாரம் செய்வார்கள்/
சரியாகச் சொன்னீர்கள் நல்லடியார்.
இந்தியாவில் ஜாதியக் கொடுமைகளால் இந்து மதத்தின் மீது வெருப்புற்று வெளியேறுபவர்களை அரவணைக்கும் தகுதி இஸ்லாத்திற்கு மட்டுமே இருக்கிறது.
இதைத் தாங்கிக் கொள்ள முடியாதவர்களின் உள்மன வெளிப்பாடுதான் திருக்குர்ஆனையும் நபி (ஸல்..) அவர்களையும் அவதூறாக சாடுவது.
பதினான்கு நூற்றாண்டுகளாக தடுக்க முடியாத இஸ்லாத்தை நேசகுமார் போன்ற காளான்களால் தடுக்கமுடியுமா என்ன?
நல்லாடியார் அவர்களே, நேபாளத்தில் நடக்கும் நக்சலைட்டுகளின் தாக்குதலுக்கும், இலங்கையில் நடக்கும் இனப்போராட்டங்களுக்கும் எப்படி அவர்கள் சார்ந்த மதம் காரணமல்லவோ அதுபோலதான் முஸ்லிம்களால் நடத்தபடும் தீவிரவாதத்திற்கு இஸ்லாம் காரணமல்ல.
சரியாக சொன்னீர்கள், தென்னை மரத்தில் தேள் கொட்டினால் பனை பரத்தில் நெறி கட்டுமாம். அதுப்போல கதை இருக்கிறது.
Just passing by your blog and though you’d like this site.